Jump to content

இலங்கையில் இந்து ஆலயம் புத்தமயமாகிறது: இராஜசிங்க மன்னன் நிர்மாணித்தது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இந்து ஆலயம் புத்தமயமாகிறது: இராஜசிங்க மன்னன் நிர்மாணித்தது

  •  
பெரண்டி ஆலயம்

இந்து சமயம் இலங்கையின் ஆதி காலம் முதலே காணப்பட்டது என்பதற்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன.

நாட்டை ஆட்சி செய்த பல மன்னர்கள், பல இந்து ஆலயங்களை நிர்மாணித்து, வழிபாடுகளை நடத்தியமைக்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன.

குறிப்பாக மன்னர்கள் சிவ வழிபாட்டிலேயே ஈடுபட்டிருந்ததாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், முதலாம் இராஜசிங்க மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் இந்து ஆலயமொன்று சிதைவடைந்த நிலையில், இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆலயம் கொழும்பின் புறநகர்ப் பகுதியான அவிசாவளையில் அமைந்துள்ளது.

அவிசாவளை நகரிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தல்துவை பகுதியில் இந்த ஆலயம் (பெரண்டி ஆலயம்) அமையப் பெற்றுள்ளது.

சீதாவக்கை அரசை ஆட்சி செய்த மாயாதுன்னை மன்னனின் ஆட்சிக் காலத்தில் அவரது மகனான முதலாம் இராஜசிங்க மன்னனால் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

தனது தந்தையை கொலை செய்து, ஆட்சிப் பீடத்தை கைப்பற்றிய பாவத்திலிருந்து விடுபடும் நோக்கில், மதகுருமார்களின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த ஆலயம் கி.பி. 1581 - 1593 காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலிருந்து சிற்பிகள், வல்லுநர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, பெருமுயற்சி எடுத்து இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெரண்டி ஆலயம்

இவ்வாறு வரழைக்கப்பட்டவர்களில் ஒருவர் அரிட்டுகே என இலங்கை வரலாற்றில் தெரிவிக்கப்படுகிறது.

அரிட்டுகே சிற்பத்துறையில் மாத்திரமன்றி, சாஸ்திரங்களிலும் சிறந்து விளங்கியுள்ளார்.

சீதாவாக்கை ஆற்றை இடைமறித்து, ஆற்றை வேறு திசைக்கு திருப்பி ஆலயம் நிர்மாணிக்கப்பட வேண்டும் என மன்னன், சிற்பத்துறை நிபுணரான அரிட்டுகேவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆற்றை திசை திருப்பி ஆலயம் நிர்மாணிப்பது பாவச் செயல் எனவும், அவ்வாறு ஆறு திசை திருப்பப்பட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் மன்னனிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரிட்டுகேயின் எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ளாத மன்னன், ஆலயத்தை நிர்மாணிக்குமாறு பணித்துள்ளார்.

இதன்படி, சிவனின் வடிவமான பைரவரை மூலக் கடவுளாக கொண்டு இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பெரண்டி ஆலயம்

அரிட்டுகேயின் எச்சரிக்கையை மீறி இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு, குறுகிய காலத்தில் முதலாம் இராஜசிங்கன் இறந்ததாக பிரதேச மக்கள் இன்றும் தெரிவிக்கின்றனர்.

எனினும், இந்த ஆலயத்தில் காளி அம்மன் வழிபாடு நடைபெற்றதாக இலங்கை தொல்பொருள் திணைக்களம் அப்பகுதியில் காட்சிப்படுத்தியது அங்குள்ள தகவல் பலகைமூலம் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், அப்பகுதி மக்கள் இன்றும் அந்த இடத்தில் பைரவர் வழிபாடே இடம்பெற்றதாக நம்பி வருகின்றனர்.

பைரவர் காவல் தெய்வம் என்பதற்காக அந்த பகுதி மக்கள் 'பைரவயா எனவோ" (பைரவர் வாறார்) என இரவு நேரங்களில் கூறி அச்சப்பட்டுள்ளனர்.

இதுவே பிறகு பெரண்டி என பெயர் மருவியதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். சீதாவாக்கை ஆறு ஊடறுத்து செல்லும் சிறிய குன்றுப் பகுதியில் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பெரண்டி ஆலயம்

கருவறை, அர்த்த மண்டபம் ஆகியனவும், சிதைவடைந்த கற்களும், கல்வெட்டுக்களும் இந்த ஆலயத்திற்கான பழமை சான்றுகளை வெளிப்படுத்துகின்றன.

இவ்வாறான வரலாற்று சான்றுகளை கொண்ட இந்த ஆலயம், தற்போது அடித்தளத்தை மாத்திரமே கொண்டுள்ளது.

இந்த ஆலயத்தை இலங்கை தொல்பொருள் திணைக்களம் பாதுகாத்து, பராமரித்து வருகின்றமையையும் காணக்கூடியதாக இருந்தது.

பெரண்டி ஆலயம்

வரலாற்று சிறப்புமிக்க இந்து ஆலய வளாகம், புத்தமயமாகும் விதம்.

இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க இந்த பெரண்டி ஆலயம், இன்று முழுமையாக சிதைவடைந்துள்ள நிலையில், அதனை இலங்கையின் பெரும்பான்மை சமுகமான சிங்கள சமூகம் ஆக்கிரமித்துள்ளதைக் காண முடிகிறது.

அதற்கு சிறந்த ஆதாரமாக, இந்த ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்கும் பகுதியில் புத்தப் பெருமானின் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு அருகில், பௌத்த மதத்தை பிரதிபலிக்கும் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன.

அத்துடன், பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் அங்கு ஒன்று திரண்டு, ஆலயத்தை சூழ பராமரித்தும் வருவதும் காணக்கூடியதாக உள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-47521178

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இது வரலாறுகளை திரிப்பவர்களுக்கான நக்கல் பதிவு. 😀

இஞ்சை...இந்த இடத்திலைதான்.... சரியாய் நட்டுச்சென்ரரிலை அல்லா ஐஞ்சு நேரமும் விழுந்து தொழுதவர்.

பà¯à®°à®£à¯à®à®¿ à®à®²à®¯à®®à¯

யேசுபிரான் ஒரு சிலருக்காக மட்டும் அருள் பாலித்த இடம்.

பà¯à®°à®£à¯à®à®¿ à®à®²à®¯à®®à¯

இந்த இடத்திலை தான் .....அந்த மரத்துக்கு கீழை புத்தர் தேத்தண்ணி வைச்சு குடிச்சவர்.

பà¯à®°à®£à¯à®à®¿ à®à®²à®¯à®®à¯

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

ஆக, இப்போது சிவனின் பலம் குறைந்து, புத்தரின் பலம் கூடிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, thulasie said:

ஆக, இப்போது சிவனின் பலம் குறைந்து, புத்தரின் பலம் கூடிவிட்டது.

புத்தரின் பலம்,சிந்தனைகள் உலகத்தில் உள்ள பிரபலங்களுக்குள் ஊடுருவி விட்டது. உதாரணத்திற்கு பிரபல பாடகி மடோனா போன்ற ஹொலிவூட் நட்சத்திரங்கள் அமைதிக்கும் தியானத்திற்கும் புத்தரின் போதனைகளை கடைப்பிடிக்கின்றனர்.ஆனால் அவர்கள் புத்தரை கடவுளாக வணங்கவில்லை.

Link to comment
Share on other sites

22 minutes ago, குமாரசாமி said:

புத்தரின் பலம்,சிந்தனைகள் உலகத்தில் உள்ள பிரபலங்களுக்குள் ஊடுருவி விட்டது. உதாரணத்திற்கு பிரபல பாடகி மடோனா போன்ற ஹொலிவூட் நட்சத்திரங்கள் அமைதிக்கும் தியானத்திற்கும் புத்தரின் போதனைகளை கடைப்பிடிக்கின்றனர்.ஆனால் அவர்கள் புத்தரை கடவுளாக வணங்கவில்லை.

ஓரிரண்டு பிரபலங்கள், புத்தரின் போதனைகளை பின்பற்றினால் அது உண்மையென்று நம்புவதா?

தியானம், அமைதி எல்லா மதத்திலும் உள்ளதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, thulasie said:

ஓரிரண்டு பிரபலங்கள், புத்தரின் போதனைகளை பின்பற்றினால் அது உண்மையென்று நம்புவதா?

தியானம், அமைதி எல்லா மதத்திலும் உள்ளதுதான்.

 புத்தரின் போதனைகள் உண்மை இல்லை என்பதற்கு ஆதாரம் இருக்கா?

Link to comment
Share on other sites

9 minutes ago, குமாரசாமி said:

 புத்தரின் போதனைகள் உண்மை இல்லை என்பதற்கு ஆதாரம் இருக்கா?

புத்தர் எதை உண்மையில் போதித்தார் என்பது திரிவுபடுத்தப்பட்டிருக்கிறது அல்லது பதியப்படவில்லை என்பதை இலங்கையில் உள்ள புத்த மதப் பண்டிதர்கள் தற்போது சொல்கிறார்கள்.

வெளிப்படையாக இல்லை.

தியானம், அமைதி எல்லா மதத்திலும் உள்ளதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் , இயேசு , காந்தி , சிவன் , அல்லா என எல்லோருக்கும் மூக்கில இப்ப நல்லா உழைஞ்சு கொண்டிருக்கும் , யாழ் திண்ணையில் அவையைப் போட்டு உருட்டுறதைப் பார்க்க.

 ஒன்றை இங்கே குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.  புத்தம் என்பது ஒரு மதமல்ல என்பர்.  மாறாக அது ஒரு தத்துவமே.  மதங்களில் பல தத்துவங்கள் அடங்கியிருப்பதாகவும் சொல்வர்.

என்னோட ஒரு சிங்களப் பொடி ஒண்டு கொஞ்ச காலமாக வேலை செய்து போட்டு இப்ப விட்டுப் போய் விட்டது.  ஏன் என்று கேட்டேன்.  கொஞ்சம் வெளிக்கிற மாதிரி இருக்காம்; தியானம் தத்துவம் என கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டி இருக்காம் எண்டு சொல்லுது . நான் அம்பேல் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சாமானியன் said:

.

என்னோட ஒரு சிங்களப் பொடி ஒண்டு கொஞ்ச காலமாக வேலை செய்து போட்டு இப்ப விட்டுப் போய் விட்டது.  ஏன் என்று கேட்டேன்.  கொஞ்சம் வெளிக்கிற மாதிரி இருக்காம்; தியானம் தத்துவம் என கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டி இருக்காம் எண்டு சொல்லுது . நான் அம்பேல் !!

பெடிக்கு ஒரு நல்ல அழகான சிங்கள பெட்டையை அறிமுக படுத்தியிருந்தால் ....தியானம் செய்ய போயிருக்காது😀

Link to comment
Share on other sites

5 hours ago, சாமானியன் said:

புத்தன் , இயேசு , காந்தி , சிவன் , அல்லா என எல்லோருக்கும் மூக்கில இப்ப நல்லா உழைஞ்சு கொண்டிருக்கும் , யாழ் திண்ணையில் அவையைப் போட்டு உருட்டுறதைப் பார்க்க.

யாழ் திண்ணையில் அவையைப் போட்டு உருட்டுறதை விடவும், சிங்களப் பிக்குகளின் மண்டைகளில்  போட்டு உருட்டலாம். உருட்டினால் அவை அனைத்தையும் சீராக உருட்ட முடியும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆலயத்தில் இந்து வழிபாடுகள் நிகழ்ந்ததா? ஏன் இந்து சமய கலாச்சார அமைச்சு தலையிடவில்லை? இந்துக்கள் ஏன் இதை கோவிலாக தொடர்ந்து பாவிக்கவில்லை? இது சிதிலமடந்து போக காரணம் யார்? ஏன் இதை புனருத்தாரனம் செய்ய இந்துகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை? 

இப்படி கைவிடப்பட்டு கிடப்பதனால்தான் சிங்களவன் புத்தர் சிலைய கொண்டு வந்து வைக்கின்றான். 

நாங்கள் எந்த தற்காப்பு முயற்சியும் எடுக்க மாட்டோம். பிறகு சிங்களவன்  பிடிக்கிறான் என்று ஆ..ஊ..என கத்துகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

கொழும்பான்,

நன்றே சொன்னீர்கள்.  ஆக்கிரமிப்பு அரசாட்சியில் இடம்பெறக்கூடிய மிகக்குறைவான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.  தமிழ் இடம் என்று சொல்லக்கூடிய ஆனானப்பட்ட வாகரை, முல்லைத்தீவு,  கிளிநொச்சி, திருகோணமலை போன்ற இடங்களே கலகலத்துப் போயிருக்கும் போது அவ்வாறு அல்லாத அவிசாவளை போன்ற இடங்களின் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆக்கிரமிப்பு அரசன் கட்டுவித்த மிகப்பெரிய வழிபாட்டுத்தலத்தின் தற்போதைய நிலைமை எப்படி என்று எங்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும் .

 வெறுமனே உணர்ச்சி வசப்பட்டு இருப்பதில் என்ன ஆகப் போகிறது.  கோடுகள் சமன் செய்யப்படும் போது இவை எல்லாம் அர்த்தம் கெட்டுப் போக இருக்கும் நிகழ்வுகளே ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, thulasie said:

ஓரிரண்டு பிரபலங்கள், புத்தரின் போதனைகளை பின்பற்றினால் அது உண்மையென்று நம்புவதா?

தியானம், அமைதி எல்லா மதத்திலும் உள்ளதுதான்.

துளசி
இந்தியாவில் உள்ள திருவண்ணாமலையில் ரமணாச்சிரமத்தில் இருப்பவர்களில் முக்கால்வாசிப்பேர் வெள்ளைகள். அங்கு வீடும் வாங்கி சிவனே கதி என்று கிடக்கிறார்கள்.
பார்க்கப்போனால் இந்தியாவில் அனேகமான இடங்களில் இதுதான்நடக்குது.

Link to comment
Share on other sites

1 hour ago, paandiyan said:

துளசி
இந்தியாவில் உள்ள திருவண்ணாமலையில் ரமணாச்சிரமத்தில் இருப்பவர்களில் முக்கால்வாசிப்பேர் வெள்ளைகள். அங்கு வீடும் வாங்கி சிவனே கதி என்று கிடக்கிறார்கள்.
பார்க்கப்போனால் இந்தியாவில் அனேகமான இடங்களில் இதுதான்நடக்குது.

சிவனே கதி என்று இருக்கிறார்களா?

இந்த வெள்ளைகளில் பெரும்பாலானோர், CIA 😛கூட்டத்தினர்.

இவர்கள் பக்தியில் உச்சத்தில் இருப்பவர்களா?😍😍

Link to comment
Share on other sites

16 hours ago, thulasie said:

சிவனே கதி என்று இருக்கிறார்களா?

இந்த வெள்ளைகளில் பெரும்பாலானோர், CIA 😛கூட்டத்தினர்.

இவர்கள் பக்தியில் உச்சத்தில் இருப்பவர்களா?😍😍

அவரகள் CIA என்பதட்கு என்ன ஆதாரம் உள்ளது ? இங்கு ஆதாரம் இல்லாட்டி யாரும் நம்ப மாட்டார்கள் .....மதிப்புக்குரிய ஜஸ்டின் அவர்கள் எப்பவுமே கேட்பார் .....

Link to comment
Share on other sites

7 hours ago, பிரபாதாசன் said:

அவரகள் CIA என்பதட்கு என்ன ஆதாரம் உள்ளது ? இங்கு ஆதாரம் இல்லாட்டி யாரும் நம்ப மாட்டார்கள் .....மதிப்புக்குரிய ஜஸ்டின் அவர்கள் எப்பவுமே கேட்பார் .....

CIA ஓரிடத்தில் இருந்தால், அதை ஆதாரபூர்வமாக யாரும் வெளியிடமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, thulasie said:

CIA ஓரிடத்தில் இருந்தால், அதை ஆதாரபூர்வமாக யாரும் வெளியிடமாட்டார்கள்.

இதே போல் தான் சிலோனில் நடக்கும் சங்கதிகளும்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.