யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
தமிழ் சிறி

கலங்கடிக்கும் பொள்ளாச்சி பாலியல் குற்றம்.. கொதிக்கும் தமிழகம்..

Recommended Posts

வà¯à®³à®¿à®¯à®¿à®à®µà®¿à®²à¯à®²à¯

கலங்கடிக்கும் பொள்ளாச்சி பாலியல் குற்றம்.. கொதிக்கும் தமிழகம்.. வேடிக்கை பார்க்கும் நேஷனல் மீடியா!

பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்கள் குறித்து தேசிய ஊடகங்கள் எந்த விதமான செய்திகளும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது. இந்த சம்பவத்தை தேசிய மீடியாக்கள் ஒரு சிறிய செய்தியாக கூட வெளியிடவில்லை.

பொள்ளாச்சியில் 250க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய கும்பல் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறது. அந்த கும்பல் பெண்களை ஏமாற்றி பணம் பறித்து, மோசமாக கொடுமை செய்தது அம்பலம் ஆகி உள்ளது.

இந்த பாலியல் வழக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்து உள்ளது. மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார்கள்.

நிறà¯à®¯ பà¯à®°à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯

பொள்ளாச்சி விவகாரம் பெரிதாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுகுறித்து தேசிய மீடியாக்கள் இதுவரை எந்த செய்தியும் வெளியிடவில்லை. தமிழகமே இங்கு கொதித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் தேசிய ஊடகங்கள் இதுகுறித்து தொடர்ந்து அமைதி காத்து வருகிறது.

à®à®©à¯à®© à®®à¯à®à¯à®à®¿à®¯à®®à¯

தற்போது தேர்தல் நேரம் என்பதால் அதை குறித்த செய்திகளே தேசிய ஊடகங்களில் அதிகம் இடம்பிடித்து இருக்கிறது. வடஇந்திய மக்கள் தேர்தல் குறித்து நிறைய செய்திகளை படிக்கிறார்கள். அதனால் தேசிய ஊடகங்கள், தேர்தல் செய்திகளில்தான் அதிக அளவில் கவனம் செலுத்துகிறது.

தà¯à®°à®¿à®¯à®µà®¿à®²à¯à®²à¯

இதனால் தற்போது இந்த பொள்ளாச்சி சம்பவம் குறித்த எந்த விவரமும் வடஇந்தியர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது. என்ன நடந்தது, தமிழகத்தில் ஏன் கொதிப்பான நிலை நிலவி வருகிறது என்பது குறித்து வடஇந்தியர்களுக்கு எந்த விஷயமும் தெரியாது.

பொதுவாக தேசிய மீடியாக்களில் தமிழர்கள் நிறைய பேர் பணியாற்றுகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த செய்தியாளர்கள்தான் ஊடக துறையில் முக்கிய இடங்களில் இருக்கிறார்கள். இவர்கள் நினைத்தால் இந்த பொள்ளாச்சி பிரச்சனையை தேசிய அளவில் கொண்டு சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/pollachi-sex-crime-why-national-media-keep-mum-the-issue-343718.html

Share this post


Link to post
Share on other sites

தனி à®à®à®¤à¯à®¤à¯à®à¯à®à¯

200க்கும் மேற்பட்ட பெண்களை வேட்டையாடிய மிருகங்கள்.. அப்பாவி பெண்கள் சிக்கியது எப்படி?.. பரபர தகவல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை சேர்ந்த 20 மிருகங்கள் 200-க்கும் மேற்பட்ட பெண்களை எப்படி வேட்டையாடின என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று தங்களிடம் நட்பாக பழகும் பெண்களை தனியாக அழைத்து சென்று கூட்டுப் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் கூறினார்.

இதையடுத்து இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. வீடியோவில் பெண்களின் மரண ஓலங்கள் போல் குரல்கள் கேட்பதால் அதை கேட்போர் மனம் பதைபதைக்க வைக்கிறது. இந்த நிலையில் இவர்களிடம் பெண்கள் கெட்டு சீரழிந்தது எப்படி என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களும் பணம் சம்பாதிப்பதிலேயே முழு நேரமும் குறியாக இருந்தனர். இதில் பார்களை குத்தகைக்கு எடுக்கும் தொழில், வட்டிக்கு பணம் கொடுப்பது என பணம் புழங்கும் தொழில்களையே செய்து வந்தனர். கூடவே பெண்ணாசையும் சேர்ந்து இவர்களுக்கு ஒட்டிக் கொண்டது. அதன் விளைவு பெரிய ராஜா வீட்டு கன்றுக்குட்டிகளை போல் விலையுயர்ந்த கார்கள், உயர்ந்த ஆடைகள் என வளைய வந்துள்ளனர்.

சினிமா நடிகர்கள் போல் போட்டோக்களை எடுத்து பெண்களிடம் உருக்கமாக பேசி தங்கள் வலையில் சிக்க வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் எப்போதும் மூழ்கி போயிருக்கும் பெண்களை வளைப்பது எளிது என்பதால் இவர்கள் அந்த யுத்தியை கையாண்டுள்ளனர்.

பேஸ்புக்கில் பெண்கள் பெயரில் போலி ஐடி தயார் செய்து முதலில் பெண்களுடன் நட்பு ஏற்படுத்தி கொள்வார்கள். பின்னர் அந்த பெண்களின் தனிப்பட்ட விவரங்களை பெற்றுக் கொண்டு, லெஸ்பியன் குறித்து கேள்விகளை எழுப்புவார்கள். தற்போது இளம் பெண்கள் லெஸ்பியன் உறவுகளால் பின்னப்பட்டுள்ளதால் அவர்களும் பதில் கூறுவர். இதையடுத்து அந்த பெண்களை குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைப்பர்.

அங்கு போய் பார்த்து அந்த நபர் ஆண் என தெரிந்ததும் அந்த பெண் எதிர்ப்பு தெரிவிப்பார். பின்னர் லெஸ்பியன் குறித்து அந்த பெண் கூறிய தகவல்களை வெளியிடுவோம் என மிரட்டி விடுவர். இது போல் சிக்கிய பெண்கள் ஏராளம். அவ்வாறு சிக்கும் பெண்களை தனிமையில் அழைத்து சென்று பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுப்பர். பணக்கார பெண்களாக இருந்தால் அவர்களிடம் பணம் பறிப்பதும் ஏழைகளாக இருந்தால் அவர்களை மீண்டும் மீண்டும் தங்கள் இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதையுமே வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/coimbatore/how-girls-trapped-pollachi-incident-343722.html

Share this post


Link to post
Share on other sites

பொள்ளாச்சி வன்கொடுமை: ''பாலியல் துன்புறுத்தல் காணொளியை பரப்பினால் கடும் நடவடிக்கை''

மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கை தமிழக காவல்துறையின் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவவான சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் இளம்பெண்களோடு ஃபேஸ்புக் வழியாக நட்பாக பழகி, அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட நால்வரை காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில், இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, ''இவ்வழக்கை திசைதிருப்ப முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.

இந்த வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினர் மூலமாக புகார் மனுவொன்றை தனக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர், ''இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் தனக்கு திருப்தி அளிப்பதாக அப்பெண் தெரிவித்துள்ளார். ஆனால், அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியாக தனக்கு தொந்தரவுகள் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்'' என்று தெரிவித்தார்.

இவ்வாறான தொந்தரவுகளை கால்துறையினர் தடுத்து நிறுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறினார்.

''இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் ஆரம்பம் முதலே தகுந்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இது மேலும் தொடர வேண்டும்'' என்று அவர் கூறினார்.

இதனிடையே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் அக்கட்சி நடத்த இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களோடு ஃபேஸ்புக் வழியாக நட்பாக பழகி, அவர்களை தனியிடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரீஷ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு சென்ற மாதம் கல்லூரி மாணவி ஒருவரை நட்பாக பேசி, பொள்ளாச்சி அருகில் உள்ள கிராமத்தில் தனி இடத்தில் அழைத்து சென்று, மிரட்டி, அடித்து துன்புறுத்தி தனது நண்பர்களோடு சேர்ந்து ஆபாச வீடியோக்களை உள்ளதாகவும், பின்பு அதனை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவோம் என்று அச்சுறுத்தி பாலியல் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பிப்ரவரி 24ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு சபரீஷ், சதீஷ், வசந்தகுமார் 28ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை மார்ச் 5ம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை , புகார் கொடுத்ததற்காக ஒரு கும்பல் மிரட்டியுள்ளது. அந்த கும்பலை சேர்ந்த செந்தில்,வசந்தகுமார், நாகராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புகார் கொடுத்தவரை தாக்கிய நாகராஜ்

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய நாகராஜ் எனும் நபர் என்றும், பொள்ளாச்சியில் அதிமுக கட்சி பொறுப்பில் இருப்பவர், அதனால் இந்த வழக்கில் ஆளுங் கட்சியின் தலையீடு இருக்கின்றது என பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து நாகராஜை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிக்கை வெளியானது. அதன் பின்பு செய்தியாளர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சந்தித்தார்.

இந்த வழக்கில் எந்தவித அரசியல் தொடர்போ, அழுத்தங்களோ இல்லை என்று அவர் தெரிவித்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை துன்புறுத்தியது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட சபரீஷ்,சதீஷ்,வசந்தகுமார்,திருநாவுக்கரசு ஆகியோரின் மீதுபொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய குற்ற எண்.59/19, u/s. 354(A), 354(B) IPC r/w 66(E) of IT Act 2000 & 4 of Tamil Nadu Women Harassment Act ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

குண்டர் சட்டம்

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் மிரட்டப்பட்டது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட செந்தில், நாகராஜ், வசந்தகுமார் ஆகியோரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

காவல்துறையினர் இந்த நால்வரிடம் இருந்து நான்கு அலைபேசிகளை கைப்பற்றியுள்ளனர். அதில் இதே போல் நான்கு பெண்களின் வீடியோக்கள் இருந்துள்ளது. இரண்டு பெண்களை அடையாளம் கண்டுள்ளனர், மீதி இரண்டு பெண்களையும் அடையாளம் கண்டு அவர்களிடம் முறையாக வாக்கு மூலம் பெற்று குண்டர் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும் என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் வேறு யாரேனும் இருந்தாலும் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கலாம், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை காவல் துறை வெளியிடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு கல்லூரியில் படிக்கும் சமயத்தில் இருந்தே பெண்களிடம் இந்த மாதிரியான அணுகுமுறையோடு நடந்து வந்துள்ளார். ஆனால் , பாதிக்கப்பட்ட பெண்களின் முழுமையான எண்ணிக்கை, விவரங்கள் கிடைக்கவில்லை என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

திருநாவுக்கரசுக்கு உதவிய பெண் தோழி

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ராதிகா என்பவர், 2012ம் ஆண்டில் இருந்து அந்தப்பகுதியில் நடைபெற்ற இளம்பெண்கள் தற்கொலை வழக்கினை மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் பொள்ளாச்சி பகுதியில் தற்கொலை செய்து கொண்ட இளம் வயதுடைய பெண்களின் வழக்குகளில் ஆராய்ந்து அந்த தற்கொலைக்கும், தற்போது கைதாகியுள்ள குற்றவாளிகளுக்கு தொடர்பு உள்ளதா என புலன் விசாரணை மேற்கொண்டு, அப்படி இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் மிக முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்த பொழுது அவரின் பெண் தோழி ஒருவர் உதவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களை வெளியிட இயலாது என்று தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது .இதனால் பாதிக்கப்பட்ட பெண் மன உளைச்சலுக்கு உள்ளாகும் வாய்ப்பு இருப்பதனால் இது தடுக்கப்பட வேண்டும். இந்த வீடியோக்களை பரப்புபவர் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் காவல் துறை முதலில் அளித்த பத்திரிக்கையாளர் குறிப்பில் இருந்தது, பின்பு அது நீக்கப்பட்டது. இது குறித்து கேட்ட போது, இது தவறுதான், தவறுக்கு வருந்துகிறோம் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

பெண்களின் நம்பிக்கையை ஆண்கள் பெறுவது எப்படி?

இந்த சம்பவம் குறித்து மன நல ஆலோசகர் எழில் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இந்த சம்பவங்களுக்கு நமது வீடும் ஒரு காரணம். இந்த நவீன உலகத்தில் அனைவரும் ஓடிக் கொண்டே இருக்கின்றனர். குழந்தைகளுக்கும் , பெற்றோர்களுக்கும் நடுவே உரையாடல்கள் குறைந்துவிட்டன. இந்த பெண் குழந்தைகள் தமக்கு அன்பு கிடைக்கவில்லை என்றே நினைக்கின்றனர். மனரீதியாக அன்பினையும், பாராட்டுக்களையும் இவர்கள் எதிர்பார்க்கின்றனர்'' என்றார்.

''இந்த சூழலில், நீ அழகாக இருக்கிறாய் என்பது வார்த்தைகளால் மகிழ்ச்சி அடைந்து அவர்களோடு பேச ஆரம்பிக்கின்றனர். சின்ன சின்ன அன்பான விசாரிப்புகளில் பெண்கள் பலவீனம் அடைந்து விடுகின்றனர். அந்த ஆண் என்ன சொன்னாலும் செய்யலாம் என்று நம்பிக்கை அவர்களுக்கு வந்துவிடுகின்றது.'' என்று மேலும் கூறினார்.

பெண் குழந்தைகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்க வேண்டும்.அவர்களின் சுய மதிப்பீட்டினை வளர்க்கும் விதமாக பள்ளி கல்லூரிகளில் பல செயல்முறைகளை கொண்டுவர வேண்டும். அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அதன் மூலம் பாராட்டுக்களை அடையும் பொழுது இது போன்ற செயல்களில் ஈடுபட அவர்களுக்கு நேரமோ, ஆர்வமோ இருக்க வாய்ப்பில்லை. எனவே, இது போன்ற சிக்கல்களில் இருந்து பெண்கள் தங்களை விடுவித்துக் கொள்ள பெற்றோர்களும், அரசும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். என்கிறார் எழில்.

இதற்கான தீர்வு என்பது அவர்களுக்கு இன்னும் அதிகமாக கவனிப்பும், கற்பித்தலும் தேவைப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. பெண்களை மதிக்கக் கற்றுத் தரும் கடமை ஆண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அதிகமாக இருக்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-47534131

Share this post


Link to post
Share on other sites

பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்: திரையுலக பிரபலங்கள் 22 பேரின் கொந்தளிப்பு

பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பாக, ட்விட்டர் பக்கத்தில் தமிழ் திரையுலகினர் தங்களுடைய கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி, தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்தச் சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் திரையுலக பிரபலங்களும் தங்களுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளனர்.

அவற்றின் தொகுப்பு:

கார்த்திக் சுப்பராஜ்: கொடூரம், வேதனை, அச்சப்பட வைக்கிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால் இந்த சைக்கோக்கள் இதனை பல வருடங்களாக நிறைய பெண்களுக்கு செய்து கொண்டிருக்கின்றனர். நாம் வாழும் இந்த உலகம் நாம் நினைப்பதைவிட மிகவும் கெட்டுப்போய் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சல் பெற்று மீண்டு வரட்டும். பலாத்காரகர்கள் தண்டனை பெறட்டும். அதுவும் மிகக் கொடூரமான தண்டனை வழங்கப்படட்டும். அதுதான் சரியான வழி.

ரமேஷ் திலக்: உன்ன நம்பிதானடா வந்தேன்... சொல்றத கேட்கும்போது ரொம்ப வலிக்குது. அனைத்து நட்சத்திரங்களின் அன்பான ரசிகர்களே இந்த விஷயத்தில் ஒன்றிணைந்து போராடுங்கள்.#PollachiGangRape #PunishTheRapists

சிபி சத்யராஜ்: இதுபோன்ற செயல்கள் தண்டிக்கப்படாமல் போனால் இந்தியா நிச்சயமாக பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் முதலிடத்துக்கு வந்துவிடும். #PunishTheRapists #PollachiSexualAbuse

வரலட்சுமி சரத்குமார்: என்னை வைத்து விளையாடுகிறீர்களா? மீண்டும் மீண்டும் அதே கொடூர குற்றம். அப்புறம் ஒருபக்கம் மகளிர் தினம் வேறு. இந்தச் சமூகத்திற்கு பெண் என்றால் இதுதான் அர்த்தமா? பொள்ளாச்சி பலாத்காரர்களை தோலுரித்துக் கொல்ல வேண்டும். இந்த மாதிரியான உலகத்தில்தான் நாம் வாழ்கிறோமா?! பலாத்காரத்துக்கு மரண தண்டனை. இது மட்டும்தான் ஒரே வழி. வெறுப்பாக இருக்கிறது.

ஜெயம் ரவி: எனது நிலைப்பாடு எப்போதுமே ஒன்றுதான். எனது படங்களோ அல்லது தனிப்பட்ட கருத்தோ உச்சபட்ச தண்டனையை ஆதரிக்கிறது. ஒரு பெண்ணின் உரிமை, பெண் பிள்ளையின் அறியாமையை சீண்டும் விலங்குகளுக்கு இதுதான் தண்டனையாக இருக்க வேண்டும். #PollachiSexualAbuse #PunishTheRapists

ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர்: நட்பின் எல்லை எது. நம்பிக்கையின் எல்லை எது, சமூக வலைதளத்தினை பதின் பருவத்தினர் எப்படி பயன்படுத்த வேண்டும் என பாடம் புகட்ட வேண்டும். சமூக வலைதளத்தின் வீச்சு மிகக் கொடூரமான எல்லையை எட்டியிருக்கிறது.#PollachiSexualAbuse #heartbroken

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ்: குடல் நடுங்கச் செய்கிறது. இதுபோன்ற அரக்கர்கள் சுதந்திரமாக சுற்றிவர நம்மைப் போன்றோர் கூட்டாக அனுமதியளித்து சமூகப் பொறுப்பிலிருந்து தவறிவிட்டோம். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வருந்துகிறேன். உங்களுக்கு நேர்ந்த கொடூரத்துக்காக வருந்துகிறேன். இப்போதைய தேவை துரிதமான இரக்கமற்ற நீதி.#PunishTheRapists

நடிகர் டேனியல்: மனித வடிவில் திரியும் இந்த மிருகங்களுக்கு இரக்கமும் இல்லை, ஆதரவும் இல்லை. அந்தப் பெண்ணின் குரல் இதயத்தைத் துளைக்கிறது. இந்த இரக்கமற்ற மனிதர்களுக்கு வழங்கப்படும் தண்டனை சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். #PollachiSexualAbuse #ArrestpollachiRapists

இயக்குநர் திரு: இந்த அரக்கர்களைத் தண்டியுங்கள். #PollachiSexualAbuse

இயக்குநர் கார்த்திக் தங்கவேல்: எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் அந்த நபர்களை அவரவர் வீட்டின் முன்னே உயிருடன் எரித்துக் கொல்வேன். அந்தப் பெண்ணின் குரல் என்னை நோகடிக்கச் செய்கிறது. என்னை மீண்டும் மீண்டும் அச்சுறுத்துகிறது. அவர்களை உடனே தூக்கிலிடுங்கள்... #PollachiSexualAbuse #PunishTheRapists

ஹரிஷ் கல்யாண்: இது மீண்டும் நட்ந்து கொண்டே இருக்கக்கூடாது. #PunishTheRapists #PollachiSexualAbuse #brutalpunishment

ராஷி கண்ணா: பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்னை மிகவும் பாதிக்கிறது. நடந்தது எல்லாம் மிகவும் கொடூரமாக இருக்கிறது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அவர்கள் முதுகெலும்பை நொறுக்குவதாக இருக்க வேண்டும். இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

சாந்தனு: இந்தியாவில் மகளிர் தினம் கொண்டாடுவதுகூட இழுக்கு. ஒவ்வொரு முறையும் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கும்போதும் இப்படியான சம்பவங்கள் எல்லாவற்றையும் நொறுக்கிவிடுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்காததற்கு நம் மீது நாமே வெட்கப்பட வேண்டும். #PunishPollachiRapists #PunishTheRapists #PollachiSexualAbuse

ஆரவ்: இது பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக இருக்கிறது. இதைப் போன்றதொரு சம்பவத்தை இதற்குமுன் பார்த்திருக்கவில்லை. இவர்களை விலங்குகளுடன் ஒப்பிட இயலாது. இவர்களைப் போன்ற விலங்குகள் இதற்கு முன் இருந்ததில்லையே. அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள்.

ரா.பார்த்திபன்: பொள்ளாச்சி சம்பவம் கதி கலங்கச் செய்தது! இவ்வன்முறை வருடம் ஒரு முறை வந்தது போய், மாதம் இருமுறையும், வாரம் ஒரு முறையுமாய் வருவது, நீதிமன்றத்தின் கடுமையாக்கப்பட்ட தண்டனைகளால் மட்டுமே மட்டுப்படுத்தப்படும்!

இயக்குநர் பா.இரஞ்சித்: பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தைக் கேள்வி கேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்பு கோரச் சொல்லும், எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் நம் அனைவருக்கும்....நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை. ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூக செயல்பாடு, கலாச்சாரம் பற்றிய  பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும். இல்லையேல் பாதிக்கப்பட்ட,பாதிக்கபடப்போகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கிக் கொண்டுதான் இருக்கும். நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய் கொண்டுதான் இருக்க போகிறோம்.

இயக்குநர் சேரன்: பொள்ளாச்சி சம்பவத்தில் எந்தவிதமான அரசியல் தலையீடுமின்றி இளம் பெண்களை சீரழித்த அனைவருக்கும் சட்டப்படி தண்டனை கிடைக்கவேண்டும்.. (இந்த விசயத்தில் நாம் அரேபிய சட்டத்தைப் பின்பற்றலாம்) மாறாக எது நடந்தாலும் எதிர்த்துப்போராட அனைத்து பெற்றோர்களும் தயாராக இருக்கவேண்டும்..

நடிகர் பாலசரவணன்: பொள்ளாச்சி கொடூரர்களைத் தண்டிக்கவில்லையென்றால் நாம்எ ன்ன செய்வோம். சட்டையைப் போட்டுக்கொண்டு ஓட்டுபோட சென்றுவிடுவோம்..இவர்கள் தண்டிக்கபடவில்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்று சபதமெடுப்போம்.. எப்படி என்றாலும் நாடு நாசமாய் போவது உறுதி. நமது ஓட்டில்லாமலே அது நடக்கட்டும்..#ArrestPollachiRapist

இயக்குநர் சசிகுமார்: சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பெண்களை கொடூரமாக நாசம் செய்திருப்பது குலைநடுங்க வைக்கிறது. உடனடியாக இந்தக் கொடூரர்களை தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும். #ArrestPollachiRapists

விஜயலட்சுமி: யோசிக்கவே வேணாம். நிக்க வெச்சு சுடுங்க. Live telecastல.  பயம் வரட்டும். பண பலம், அதிகாரம், வயசு, குரூர மனசுனு இந்த காம்பினேஷன்ல கால தூக்கி காட்ற கருமாந்ரோலா பயத்துல பொத்திக்கிட்டு பொழப்பப் பாக்கணும் உயிர் பயம் வந்தா தான் உருப்படுவான்க. போட்ருங்க சார்.  உடனே.!!!

இயக்குநர் கரு.பழனியப்பன்: பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கிறார்கள். பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் கொடுத்து ஆண்பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு  விடிவு இல்லை .

ஐஸ்வர்யா ராஜேஷ்:  இனியும் நாம் மவுனம் காக்கத்தான் வேண்டுமா? பதில் சொல்ல வேண்டியவர் யார்...??

 

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26509283.ece?utm_source=HP&utm_medium=hp-cinema

Share this post


Link to post
Share on other sites

 

54257272_2323007621082661_92226417549755

 

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, தமிழ் சிறி said:

தனி à®à®à®¤à¯à®¤à¯à®à¯à®à¯

200க்கும் மேற்பட்ட பெண்களை வேட்டையாடிய மிருகங்கள்.. அப்பாவி பெண்கள் சிக்கியது எப்படி?.. பரபர தகவல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை சேர்ந்த 20 மிருகங்கள் 200-க்கும் மேற்பட்ட பெண்களை எப்படி வேட்டையாடின என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று தங்களிடம் நட்பாக பழகும் பெண்களை தனியாக அழைத்து சென்று கூட்டுப் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் கூறினார்.

இதையடுத்து இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. வீடியோவில் பெண்களின் மரண ஓலங்கள் போல் குரல்கள் கேட்பதால் அதை கேட்போர் மனம் பதைபதைக்க வைக்கிறது. இந்த நிலையில் இவர்களிடம் பெண்கள் கெட்டு சீரழிந்தது எப்படி என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களும் பணம் சம்பாதிப்பதிலேயே முழு நேரமும் குறியாக இருந்தனர். இதில் பார்களை குத்தகைக்கு எடுக்கும் தொழில், வட்டிக்கு பணம் கொடுப்பது என பணம் புழங்கும் தொழில்களையே செய்து வந்தனர். கூடவே பெண்ணாசையும் சேர்ந்து இவர்களுக்கு ஒட்டிக் கொண்டது. அதன் விளைவு பெரிய ராஜா வீட்டு கன்றுக்குட்டிகளை போல் விலையுயர்ந்த கார்கள், உயர்ந்த ஆடைகள் என வளைய வந்துள்ளனர்.

சினிமா நடிகர்கள் போல் போட்டோக்களை எடுத்து பெண்களிடம் உருக்கமாக பேசி தங்கள் வலையில் சிக்க வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் எப்போதும் மூழ்கி போயிருக்கும் பெண்களை வளைப்பது எளிது என்பதால் இவர்கள் அந்த யுத்தியை கையாண்டுள்ளனர்.

பேஸ்புக்கில் பெண்கள் பெயரில் போலி ஐடி தயார் செய்து முதலில் பெண்களுடன் நட்பு ஏற்படுத்தி கொள்வார்கள். பின்னர் அந்த பெண்களின் தனிப்பட்ட விவரங்களை பெற்றுக் கொண்டு, லெஸ்பியன் குறித்து கேள்விகளை எழுப்புவார்கள். தற்போது இளம் பெண்கள் லெஸ்பியன் உறவுகளால் பின்னப்பட்டுள்ளதால் அவர்களும் பதில் கூறுவர். இதையடுத்து அந்த பெண்களை குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைப்பர்.

அங்கு போய் பார்த்து அந்த நபர் ஆண் என தெரிந்ததும் அந்த பெண் எதிர்ப்பு தெரிவிப்பார். பின்னர் லெஸ்பியன் குறித்து அந்த பெண் கூறிய தகவல்களை வெளியிடுவோம் என மிரட்டி விடுவர். இது போல் சிக்கிய பெண்கள் ஏராளம். அவ்வாறு சிக்கும் பெண்களை தனிமையில் அழைத்து சென்று பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுப்பர். பணக்கார பெண்களாக இருந்தால் அவர்களிடம் பணம் பறிப்பதும் ஏழைகளாக இருந்தால் அவர்களை மீண்டும் மீண்டும் தங்கள் இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதையுமே வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/coimbatore/how-girls-trapped-pollachi-incident-343722.html

வீடியோவில் அந்தப் பொண்ணு "உன்னைத் தானே நம்பி வந்தேன் என்னை இப்படி பண்ணிட்டியேடா என்று கேட்கிறா"...இவர்கள் என்ன என்றால் லெஸ்பியனாம்,மண்ணாங்கட்டியாம்...முதலில் இவர்களை பிடித்து தூக்கில் போட வேண்டும் 

தமிழ்,கலாச்சாரம்,பண்பாடு என்று முழங்கும் தமிழகத்தில் இப்படி நடப்பது கேவலம்...பெண்களை பூட்டியும்,ஆண்களை அவிழ்த்து விட்டு வளர்த்தால் இப்படித் தான் 😧
 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
12 minutes ago, ரதி said:

தமிழ்,கலாச்சாரம்,பண்பாடு என்று முழங்கும் தமிழகத்தில் இப்படி நடப்பது கேவலம்...பெண்களை பூட்டியும்,ஆண்களை அவிழ்த்து விட்டு வளர்த்தால் இப்படித் தான் 😧

நீங்கள் இப்போது வெளிவரும் பெரும்பபலன தமிழ் நாட்டு தமிழ் படங்களில், எதாவது ஓர் காட்சியாவது பெண்கள் மது குடிப்பது என்று இருக்கும்.

இதற்காக, பெண்கள் மது குடிக்க கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், தமிழ் கலாசாரத்தில், பெண்கள் மது குடிப்பதை இல்லைதானே.   

இப்பொது ஓவியா எனும் (நடிகைப்) பெண், ஓர் படி மேலே சென்று காமம், பாலியல் என்ற கதைப்பதில் இருந்து விளக்கி வைக்கப்பட்ட விடயங்களை சர்வ சாதாரணமாக பெண்கள்  அனுபவிப்பதை வெளிப்படையாக கதைப்பது கலாசார விரோதமன்று எனும் நிலைக்கு எடுத்து வந்திருக்கிறார்.

பெண்கள் பாலியல், காமம் அனுபவிக்க கூடாது என்று சொல்லவில்லை.

இது எல்லாம் தமிழ் நாட்டு தமிழ் கலாசாரம் எந்த இடத்தில நிற்கிறது என்பதற்கான சுட்டிகள்.   

 

Share this post


Link to post
Share on other sites

ஆர்யாவை தொலைக்காட்சியில் பகிரங்கமாக முத்தமிடும் காட்சியையும் ஓவியாவுக்கு ஆரத் முத்தமிடும் கட்சியையும் குடும்பமாக உதார்ந்து குதூகலத்துடன் பார்கும்போதே உங்கள் வீட்டுப் பொண்ணுங்களை இதற்காக ஆயத்தப்படுத்திவிட்டீர்கள்

இப்போது மையம் எனும் பெயரில் கட்சி நடாத்தும் யோக்கியன் கமல்காசன் மூன்றாவது பொண்டாட்டி போதெள என ரம்ஜ கிருஸ்னனுடன் சிக்மிசம் பண்ணியதுபோக தனது நண்பன் ரகுராம் மாஸ்டரது மகள் காயத்ரி ரகுராமை இப்போது வளைத்து வைத்திருக்கிறார் (மித்திரத் துரோகம்) இப்படியானவர்கள் அரசியலிலும் குவாட்டர் புரியாணி ஆயிரமாயிரம் காசு நோட்டு இவைகளுக்கு ஓட்டுப்போடும் பொதுசனங்கள் இருக்கும்வரைக்கும் இது தொடர்ந்து நடக்கும்

காசுக்கு ஓட்டுப்போட்ட கையோடு உங்கவீட்டுப் பொண்ணுங்களையும் இவைகளுக்கு ஆயத்தப்படுத்தி வையுங்கள்

Share this post


Link to post
Share on other sites
39 minutes ago, Kadancha said:

நீங்கள் இப்போது வெளிவரும் பெரும்பபலன தமிழ் நாட்டு தமிழ் படங்களில், எதாவது ஓர் காட்சியாவது பெண்கள் மது குடிப்பது என்று இருக்கும்.

இதற்காக, பெண்கள் மது குடிக்க கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், தமிழ் கலாசாரத்தில், பெண்கள் மது குடிப்பதை இல்லைதானே.   

இப்பொது ஓவியா எனும் (நடிகைப்) பெண், ஓர் படி மேலே சென்று காமம், பாலியல் என்ற கதைப்பதில் இருந்து விளக்கி வைக்கப்பட்ட விடயங்களை சர்வ சாதாரணமாக பெண்கள்  அனுபவிப்பதை வெளிப்படையாக கதைப்பது கலாசார விரோதமன்று எனும் நிலைக்கு எடுத்து வந்திருக்கிறார்.

பெண்கள் பாலியல், காமம் அனுபவிக்க கூடாது என்று சொல்லவில்லை.

இது எல்லாம் தமிழ் நாட்டு தமிழ் கலாசாரம் எந்த இடத்தில நிற்கிறது என்பதற்கான சுட்டிகள்.   

 

 

39 minutes ago, Kadancha said:

நீங்கள் இப்போது வெளிவரும் பெரும்பபலன தமிழ் நாட்டு தமிழ் படங்களில், எதாவது ஓர் காட்சியாவது பெண்கள் மது குடிப்பது என்று இருக்கும்.

இதற்காக, பெண்கள் மது குடிக்க கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், தமிழ் கலாசாரத்தில், பெண்கள் மது குடிப்பதை இல்லைதானே.   

இப்பொது ஓவியா எனும் (நடிகைப்) பெண், ஓர் படி மேலே சென்று காமம், பாலியல் என்ற கதைப்பதில் இருந்து விளக்கி வைக்கப்பட்ட விடயங்களை சர்வ சாதாரணமாக பெண்கள்  அனுபவிப்பதை வெளிப்படையாக கதைப்பது கலாசார விரோதமன்று எனும் நிலைக்கு எடுத்து வந்திருக்கிறார்.

பெண்கள் பாலியல், காமம் அனுபவிக்க கூடாது என்று சொல்லவில்லை.

இது எல்லாம் தமிழ் நாட்டு தமிழ் கலாசாரம் எந்த இடத்தில நிற்கிறது என்பதற்கான சுட்டிகள்.   

 

ஆகவே இது முழுக்க முழுக்க பெண்களினதும், அவர்களின் பெற்றோர்களினதும் தவறு என்று சொல்கின்றீர்கள்.

பெண்கள் சினிமாவில் குடிக்காமல் இருந்திருந்தால், ஓவியாவை ஆரத் தழுவும் காட்சி போன்றவற்றை காட்டாமல் இருந்திருந்தால்,  கமலகாசன் காயத்திரி ரகுராமை 'வைத்து இருக்கும்' காட்சியை  பக்கத்தில் இருந்து நீங்கள் பார்க்காமல் இருந்திருந்தால் இந்த பெண்கள் வலியச் சென்று தங்களை வல்லுறவு செய்யுங்கள் என்று கெஞ்சி கூத்தாடி வல்லுறவுக்குள்ளாகி இருந்திருக்க மாட்டார்கள் என்று சொல்கின்றீர்கள்.

எப்பவும் எது நடந்தாலும் அதை செய்த அயோக்கிய ஆண் நா**** களை விட்டு விட்டு பெண்களை மட்டுமே குற்றம் சாட்டும் ஆணியச் சிந்தனை தான் இது.

 • Like 4
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

மனம் பதைக்கும் செய்திகள்.. தூக்கமில்லை.

இது போன்ற குற்றங்களுக்கு அரபு நாடுகளின் உடனடி தண்டனையே மிகச் சரியானது.

Share this post


Link to post
Share on other sites

பெண்களைப் பாலியல் வன்முறை செய்து, ஆபாச வீடியோ எடுத்த வழக்கில், பொள்ளாச்சியில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கைதாகியுள்ள நான்கு பேருக்கும் ஆளும்கட்சியினருடன் தொடர்பு இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. அதற்கேற்ப, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி, காவல்துறையிடம் புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனைத் தாக்கிய வழக்கில், பொள்ளாச்சி 34 வது வட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ‘பார்’ நாகராஜ் கைது செய்யப்பட்டார். அவரை உடனே காவல்துறை பிணையில் விடுவித்தது.

அதன் பின்னரே இந்த வழக்கின் பின்னணியில் ஆளும்கட்சியினர் மீதான சந்தேகங்களும் புகார்களும் வலுக்கத் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க சீனியர் தலைவர்களில் ஒருவரும், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களுக்கும் இந்த ஆபாச வீடியோ கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் பரவியது. இதை உடனடியாக மறுத்தார் பொள்ளாச்சி ஜெயராமன். அவருடைய தீவிர ஆதரவாளரும் பொள்ளாச்சி தொகுதி எம்.பி-யுமான மகேந்திரன், கோவை எஸ்.பி பாண்டியராஜனை நேரில் சந்தித்து மனுக் கொடுத்தார். அதில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தாம் வலியுறுத்தியதாக மகேந்திரன் பேட்டியளித்தார்.

பொள்ளாச்சி பாலியல் வன்முறை - கைது செய்யப்பட்டவர்கள்

 

அதற்குப் பின்பும், ஆபாச வீடியோ விவகாரத்தில் ஆளும்கட்சியினர் பலருக்குத் தொடர்பு இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் பரவின. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான திருநாவுக்கரசுவுக்கு, கோவை புறநகர் தெற்கு மாவட்டத் தி.மு.க பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறனுடன் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. திருநாவுக்கரசுவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியது, இதற்கு ஆதாரமாகக் காண்பிக்கப்பட்டது. 

பொள்ளாச்சி சம்பவம் பற்றி தென்றல் செல்வராஜ்இதுகுறித்து தென்றல் செல்வராஜ் கூறுகையில், ‘‘பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, எல்லோரும் வலியுறுத்தி வருகின்றனர். சமூக ஊடகங்களிலும் இதற்கு ஆதரவு பெருகி வருகிறது. தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் போராட்டம் நடத்துவதைப் போலீஸார் தடுத்துவிட்டனர். இந்த விவகாரத்தில், என் மகனை சம்பந்தப்படுத்தி பொள்ளாச்சி ஜெயராமன் பேசியிருக்கிறார். இது அபாண்டமானது. என் மகனை அழைத்து வந்து, உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த நான் தயார். பொள்ளாச்சி ஜெயராமன் தயாரா?’’ என்று கேள்வி எழுப்பினார். 

இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமனிடம் கேட்டதற்கு, ‘‘இப்படி ஒரு தவறு நடந்திருக்கிறது என்று கண்டுபிடித்து, வெளியில் கொண்டு வந்ததே நான்தான். நான் மட்டும் இந்த விவகாரத்தை போலீஸாரிடம் எடுத்துச் செல்லாமல் இருந்திருந்தால், அப்படியே அமுங்கிப் போயிருக்கும். என் மீது பழி போடுவது எந்த வகையிலும் நியாயமில்லை. இப்படி ஒரு பெண் பாதிக்கப்பட்டிருப்பதாக, மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் போனில் சொன்னபோது, நான் சென்னையில் இருந்தேன். நான்தான் போலீஸில் பேசி, புகார் கொடுக்க வைத்தேன்.

பொள்ளாச்சி சம்பவம் பற்றி துணை சபாநாயகர்அதன் பிறகு, பிப்ரவரி 27-ம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக இதுபற்றி போலீஸாரிடம் நான்தான் பேசி வருகிறேன். ஒரு குற்றவாளி தலைமறைவாக இருப்பதாகத் தெரிவித்ததும், அவனையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, எஸ்.பி-யைச் சந்திக்குமாறு பொள்ளாச்சி எம்.பி-யை நான்தான் அனுப்பி வைத்தேன். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் கைது செய்துவிட்டனர். அதற்குப் பிறகு, கனிமொழி இங்கே வந்து போராடுவது எதற்காக? மு.க.ஸ்டாலின், சபரீசன் போன்றோர்தான் என் மீதான பொய்ப்புகாருக்குப் பின்னணியாக உள்ளனர். தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்கள் என்று சொன்னது குற்றமா?

 

 

எனக்கோ, என்னுடைய மகன்களுக்கோ தொடர்பு இருப்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா. பாதிக்கப்பட்ட பெண், நாங்கள் செய்த உதவி பற்றி மேடையிலேயே சொல்வதற்குத் தயாராக இருக்கிறார். ஆனால், நாங்கள்தான் வேண்டாமென்று கூறிவிட்டோம். ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு உதவி செய்யச் சென்றவர் மீது இப்படிப் பழிபோடுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை; நீதியுமில்லை. இப்படி உதவி செய்வோர் மீது பழி போட ஆரம்பித்தால், எதிர்காலத்தில் யாரும் எதற்காகவும் உதவ முன் வரமாட்டார்கள். தென்றல் செல்வராஜ் என்ன வேண்டுமானாலும் பேசுவார். உண்மை அறியும் சோதனைக்கு மட்டுமில்லை. சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ, இன்டர்போல் யாரை வைத்து விசாரித்தாலும் அதற்கு நானும் என் மகன்களும் தயார்’’ என்றார்.

இந்த விவகாரத்தில் அரசியல்ரீதியான மோதல்கள் வலுத்து வருவது, தேர்தலை மையப்படுத்தியே என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்களின் அரசியலால் இந்த ஆபாச அரக்கர் கும்பலில் உள்ள யாரும் தப்பிவிடக் கூடாது என்பதே தமிழக மக்களின் ஒரே கவலை.

https://www.vikatan.com/news/tamilnadu/152120-we-are-ready-to-face-any-trials-in-pollachi-sexual-abuse-case-deputy-speaker-pollachi-jayaraman.html

 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

பெண்களைப் பாலியல் வன்முறை செய்து, ஆபாச வீடியோ எடுத்த வழக்கில், பொள்ளாச்சியில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கைதாகியுள்ள நான்கு பேருக்கும் ஆளும்கட்சியினருடன் தொடர்பு இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. அதற்கேற்ப, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி, காவல்துறையிடம் புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனைத் தாக்கிய வழக்கில், பொள்ளாச்சி 34 வது வட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ‘பார்’ நாகராஜ் கைது செய்யப்பட்டார். அவரை உடனே காவல்துறை பிணையில் விடுவித்தது.

 

 

https://www.vikatan.com/news/tamilnadu/152120-we-are-ready-to-face-any-trials-in-pollachi-sexual-abuse-case-deputy-speaker-pollachi-jayaraman.html

 

இவரும் இவர் சார்ந்த அ.தி.மு.க வும் எந்தளவுக்கு இரட்டை வேடம் போடுகின்றனர் என்பதை விகடனில் வந்த இன்னொரு கட்டுரை காட்டமாக வெளிப்படுத்துகின்றது.

பொள்ளாச்சி வல்லுறவு... 4 வீடியோக்கள் மட்டுமா... கோவை எஸ்.பி-யின் ‘பிளான்’ என்ன?

 

விஷயம் வெளியில் வந்து தங்களது பெயர் அடிபட்ட உடன், தங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே அ.தி.மு.க-வினர் அதிக கவனம் செலுத்துகின்றனர். மேலும், இந்த வழக்கில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த நாகராஜ் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியும், அப்போதே ஏன் அவரைக் கட்சியிலிருந்து நீக்கவில்லை?

பொள்ளாச்சி வல்லுறவு... 4 வீடியோக்கள் மட்டுமா... கோவை எஸ்.பி-யின் ‘பிளான்’ என்ன?

தென்னைக்கும் கொங்குத் தமிழுக்கும் பெயர் பெற்ற பொள்ளாச்சி, தற்போது பெண்களின் பாலியல் வீடியோக்களால் பதறிக் கொண்டிருக்கிறது. பொள்ளாச்சி தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு தகவலும் அங்குள்ள மக்களிடம் பெரும் ரணத்தை ஏற்படுத்தி வருகின்றன. வழக்கில் காவல்துறையினர் மீது மட்டுமன்றி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் மீதும் பல சந்தேகங்கள் எழுகின்றன.

பொள்ளாச்சி

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பேசினோம், “இந்த நபர்கள் கைது செய்யப்படுவதற்கு 10 நாள்களுக்கு முன்பே, இந்த விஷயத்தை மையமாக வைத்து பொள்ளாச்சியில் பல்வேறு சம்பவங்கள் நடந்துவிட்டன. அந்தப் பெண்ணின் அண்ணன் தன் நண்பர்களுடன் நேரில் சென்றார். அதில் ஒருவர், திருநாவுக்கரசிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். அதைத் திருப்பிக் கொடுப்பதாகச் சொல்லித்தான் திருநாவுக்கரசை வரவைத்தோம். அப்போது, அவர்களை அடித்துதான் வீடியோ வாங்கியிருக்கிறார்கள். இதன் பிறகு, கைகலப்பு ஆகிவிட்டது. அன்றைய தினமே விஷயம் காவல்நிலையத்துக்குச் சென்றுவிட்டது. அப்போதே, இந்த வீடியோவை வைத்து புகார் கொடுத்தும், ஆறு நாள்களுக்கு  புகாரை எடுக்கவில்லை. இந்த வழக்கு அவ்வளவுதான் என்று சோர்ந்துவிட்டோம்.

 

இந்த வழக்கை வைத்து போலீஸ் தரப்பிலும் சிலர் நன்கு காசு பார்த்துவிட்டனர். பிறகுதான், டி.எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தோம். அதைத்தொடர்ந்துதான் கைது நடவடிக்கை எல்லாம் சென்றது. திருநாவுக்கரசு முக்கிய குற்றவாளிதான். ஆனால், இந்த வழக்கில் தொடர்புள்ள பலரது பெயர்கள் வெளியில் வரவில்லை. மணிகண்டன் அந்த வீடியோவிலும் வருகிறார். அடிதடி வழக்கிலும் அவர் பெயர் உள்ளது. ஆனால், பெண் தொடர்பான வழக்கில் அவரது பெயர் இல்லை. கெரோன் மற்றும் ஜிம் வசந்த் ஆகிய இரண்டு பேருக்கும் இதில் முக்கிய தொடர்புள்ளது. மணிகண்டன் தலைமறைவாக இருக்கிறார்.

இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்த, பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என்று பலருக்கும் மிரட்டல்கள் வந்துள்ளன. அதனால்தான், இதைப்பற்றி வெளிப்படையாகப் பேச யாரும் முன்வருவதில்லை” என்றனர்.

தற்போது, ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாகத்தான், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பில்லை என்ற ஆடியோ வெளியாகியுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால், அந்த ஆடியோவில் பேசுபவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடன் பிறந்த சகோதரர் இல்லை. அவரின் உறவினர் என்று கூறுகின்றனர்.  அந்தப் பெண்ணை வைத்தும் தங்கள் மீதான களங்கத்தைத் துடைக்க ஆளுங்கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர். அதுதான் சில மணி நேரத்துக்கு முன்பு வாட்சாப் ஆடியோவாக வெளியானதாகவும் சொல்லப்படுகிறது.

பாலியல்

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் இரண்டாவது மகன் பிரவீன் மற்றும் தி.மு.க–வின் கோவை புறநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறன் ஆகிய இரண்டு பேருமே திருநாவுக்கரசுக்கு நண்பர்கள்தான் என்று கூறப்படுகிறது. இதில், பிரவீன் மீது ஏற்கெனவே ஒரு குற்றச்சாட்டு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவினாசி சாலையில் பிரவீன் கார் ஓட்டிச் சென்றபோது நடந்த விபத்தில் சுரேகா என்ற கல்லூரி மாணவி பலியானார். பிரவீன் உட்பட மேலும் சில மாணவிகள் காயமடைந்தனர். இதுதான், பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீது சந்தேகங்கள் வலுக்க முக்கியக் காரணம். அது மட்டுமல்லாமல், இதில் சம்பந்தப்பட்ட நபர்களின் முகநூல் கணக்குகளில் சில புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன. சிலர், கைது செய்யப்பட்டுள்ள நபர்களைத் தங்களது நட்புப் பட்டியலில் இருந்து ‘அன்ஃபிரண்ட்’ செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தைரியமாகக் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சொன்னதே நான்தான்” என்று பொள்ளாச்சி ஜெயராமன் சொல்கிறார். எம்.பி மகேந்திரன் மூலம் போலீஸ் எஸ்.பி-யைச் சந்தித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னதையும் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர். பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகராக இருக்கிறார். மகேந்திரன் பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இருவரும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள். எதிர்க்கட்சிகளைப்போல, மனுக்கொடுத்தோம், போராட்டம் நடத்தினோம் என்று ஓர் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சொல்வது அபத்தத்திலும் அபத்தம். அவர்கள் நினைத்திருந்தால், முதல்வர், டி.ஜி.பி வரை விஷயத்தைக் கொண்டு சென்றிருக்க முடியும். உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், விஷயம் வெளியில் வந்து தங்களது பெயர் அடிபட்ட உடன், தங்களைப் பாதுகாத்துக்கொள்வதிலேயே அ.தி.மு.க-வினர் அதிக கவனம் செலுத்துகின்றனர். மேலும், இந்த வழக்கில் `அ.தி.மு.க-வைச் சேர்ந்த நாகராஜ் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியும், அப்போதே ஏன் அவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை?’ என்ற கேள்வியை அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட முடியாது.

திருநாவுக்கரசு

அதேபோல, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கைது செய்யப்படுவதற்கு முன்பு, வெளியிட்ட ஓர் ஆடியோவில், ``இந்த வழக்கில் பல முக்கிய பிரமுகர்களுக்குத் தொடர்பு இருக்கிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் எனக்குத் துணையாக இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். பொள்ளாச்சி அளவில் தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தாலும், மு.க. ஸ்டாலின் அறிக்கை விட்டது நேற்றுதான். பொள்ளாச்சி தி.மு.க இத்தனை நாள்களாக, ஏன் இதை மு.க.ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லவில்லை?

ஏழாண்டுகளாக இவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டு வருவதாகப் போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். இத்தனை நாள்களாக ஒருவர்கூடவா புகார் கொடுக்கவில்லை... உண்மையில் புகார்கொடுக்கவில்லையா அல்லது புகாரை இவர்கள் ஏற்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

கோவை போலீஸ் எஸ்.பி-யின் பேட்டியிலும் நிறைய சந்தேகங்கள் உள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் 2012-ம் ஆண்டிலிருந்தே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 200 பெண்கள், 50 வீடியோக்கள் என்று லோக்கல் போலீஸார் கூறினர். 2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாண்டியராஜன், “நான்கு வீடியோக்கள்தான். அனைத்துமே சமீபத்தில் எடுக்கப்பட்டவை” என்கின்றார்.

“பாதிக்கப்பட்டவர்களே இந்த வழக்கில் பலரது பெயர்கள் விடுபட்டுள்ளன. அரசியல் தலையீடு இருக்கிறது” என்று கூறுகின்றனர். பாண்டியராஜனோ, “கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரைத் தவிர, வேறு யாருக்கும் தொடர்பில்லை. அரசியல் தலையீடு இல்லை. 100 சதவிகிதம் அரசியல் வாரிகளுக்குத் தொடர்பில்லை” என்று அழுத்தமாகச் சொல்கிறார்.

பாண்டியராஜன்

இந்த வழக்கில் இவர்களைத் தவிர, வேறு யாருக்கும் சம்பந்தம் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லும், பாண்டியராஜன், எவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பணம், நகை பறிப்பு தொடர்பாக எந்த விவரங்களையும் சொல்லவில்லை. இதில், வைத்தே இந்த வழக்கு எந்த அளவுக்கு விசாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், அவர் சற்று நீளமாகச் சொன்ன தகவல், ‘அரசியல் தலையீடு இல்லை’ என்பது மட்டும்தான். செய்தியாளர்களின் மற்ற கேள்விகளுக்குப் பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளில்தான் பாண்டியராஜன் பதில் அளித்தார். இப்படி, பல்வேறு சந்தேகங்கள் இருக்கும்போது, எதற்காக அவசர அவசரமாகக் குற்றவாளிகள் மீது குண்டாஸ் போடப்படுகிறது. இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த விஷயமும் வெளிவரக் கூடாது என்பதற்காகவா?

இந்தச் சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கம் அளிக்காமல், இவர்கள் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வார்களேயானால், மக்கள் தங்களது வாக்குகளால் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள் என்பது நிச்சயம்.

https://www.vikatan.com/news/coverstory/152083-suspense-over-pollachi-arrests.html

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ராசவன்னியன் said:

இது போன்ற குற்றங்களுக்கு அரபு நாடுகளின் உடனடி தண்டனையே மிகச் சரியானது.

இலங்கை இந்தியாவில் குற்றங்கள் பெரிய இடம் வரை தொடர்புள்ளதால் கீழுழ்ழவர்கள் என்ன தான் செய்ய முடியும்.

கொஞ்சநாள் போக இதைவிட ஒரு பிரச்சனை வர இது மறைந்துவிடும்.

Share this post


Link to post
Share on other sites

à®à®©à®¾à®²à¯ à®à®²à¯à®²à¯

2 ஆண்டுகளுக்கு முன்பே மாட்டினோம்.. போலீஸ் விசாரிக்கவில்லை.. பொள்ளாச்சி கேங் பரபர வாக்குமூலம்!

பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்களை செய்த கும்பல் இரண்டு வருடங்களுக்கு முன்பே போலீசில் சிக்கி தப்பித்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. நாளுக்கு நாள் இது குறித்து வெளியாகும் உண்மைகள் மனதை பதைபதைக்க வைக்கிறது.

இரண்டு நாட்கள் முன் வெளியான வீடியோ காரணமாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு விஸ்வரூபம் எடுத்து உள்ளது.மொத்தம் 253க்கும் அதிகமான பெண்கள் இது போல பாலியல் துன்பத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இந்த கேங் இரண்டு வருடங்களுக்கு முன்பே போலீசில் ஒருமுறை சிக்கி இருக்கிறார்கள். பெண் ஒருவரை ஏமாற்றி அவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். ஆனால் அப்போது போலீஸ் இவர்களை சரியாக விசாரிக்கவில்லை என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அப்போது எஸ்கேப் ஆன இவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களை செய்து வந்து இருக்கிறார்கள்.

இது குறித்து இந்த பொள்ளாச்சி கேங் போலீஸ் வாக்குமூலத்தில் தகவல் தெரிவித்து இருக்கிறது. போலீஸ் வாக்குமூலத்தில் அவர்கள் ஏமாற்றிய பெண்கள் குறித்த தகவல்களை வாக்குமூலம் அளித்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீஸ் பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசியமாக விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கேங் பெண் மருத்துவர் ஒருவரை சென்னையில் ஏமாற்றியது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது. அந்த பெண் மருத்துவரிடம் இவர்கள் பல லட்சம் மிரட்டி வாங்கி இருக்கிறார்கள் என்றும் பரபர தகவல்கள் வந்துள்ளது. இதுகுறித்துதான் அந்த பெண் மருத்துவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். ஆனால் இரண்டு வருடம் முன்பு கொடுத்த இந்த புகாரில் அப்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சரியான ஆதாரம் இல்லை என்று இவர்கள் எஸ்கேப் ஆகி உள்ளனர். இதுகுறித்தான் தற்போது இவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த பெண்ணிடம் புகார் வாங்க போலீசார் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சிபிஐ இந்த வழக்கை கையில் எடுக்க உள்ள நிலையில் இந்த வாக்குமூலம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/pollachi-gang-rape-case-pollachi-gang-managed-escape-from-police-case-two-years-ago-343819.html

 

அட... இவர்களிடம்,  பெண் மருத்துவர் கூட மாட்டுப் பட்டுள்ளார் எனும் போது,
எப்படிப் பட்ட  எமகாதகர்களாக இருப்பார்கள்?

Share this post


Link to post
Share on other sites

பணà¯à®£à¯ வà¯à®à¯

திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் போலீஸ்.. வீட்டை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஆணுறைகள்..!

திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டில் ஏராளமான ஆணுறைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

400 பெண்களை சீரழித்தவர்களில் கைதானவர்கள் 4 பேர்! அந்த 4 பேரில் திருநாவுக்கரசுதான் கேங் லீடர்! பண்ணை வீட்டுக்கு சென்ற ஏராளமான இளம் பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் அத்துமீறல் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் மற்றும் கார் வாங்கி விற்பனை செய்வதுதான் திருநாவுக்கரசின் வேலையே!

ஆனால் இதெல்லாம் பார்ட் டைம் ஜாப் போல இருக்கிறது. அழகான பெண்கள் கண்ணில் பட்டுவிட்டால் போதும், அவர்களிடம் பேசி செல்போன் நம்பரை வாங்கி அதை சபரியிடம் தருவதுதான் திருநாவுக்கரசின் முக்கியமான வேலை.

சபரி அந்த நம்பரில் பேசி, மயக்கும் வார்த்தைகளை பேசி வலையில் வீழ்த்திவிடுவாராம். சபரி என்ற பெயர் இளம் பெண்களிடம் சொல்ல தயங்கி, தன் பெயரை ரிஷ்வந்த் என ஸ்டைலாக மாற்றி வைத்து கொண்டார். சிக்கிய இளம் பெண்களை சபரி திருநாவுக்கரசு பண்ணை வீட்டுக்கு அழைத்து வருவார். அங்குதான் எல்லா பலாத்கார கன்றாவிகளும் நடந்துள்ளன. பாலியல் வல்லுறவு நடக்க.. நடக்க.. சபரியின் நண்பர்கள் இதை மறைந்திருந்து வீடியோ எடுப்பார்கள்!

à®à®´à®à®¾à®© பà¯à®£à¯à®à®³à¯

ஆனைமலையில் இருந்து 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம் பகுதியில்தான் திருநாவுக்கரசின் பண்ணை வீடு உள்ளது. இந்த பங்களாவில் நேற்று மாலை போலீசார் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சென்றதாகவும், ஆனால் பண்ணை வீடு பூட்டியிருந்ததாகவும் தெரிகிறது.

அதனால் கதவை உடைத்து உள்ளே சென்று கிட்டத்தட்ட அரை மணி நேரம் சோதனை நடத்தப்பட்டதாகவும், ஏராளமான பாலியல் வீடியோ தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக அந்த வீட்டுக்குள் ஏராளமான ஆணுறைகளை இந்த கும்பல் வாங்கி வைத்திருந்ததை பார்த்ததும் போலீசார் ஷாக் ஆகிவிட்டார்களாம். அந்த பண்ணை வீட்டை சுற்றிலும் ஆணுறைகள் சிதறி கிடந்ததாம்! இந்த விவரங்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டார்களாம்.

à®à®£à¯à®±à¯à®à®³à¯

பொள்ளாச்சி விஷயத்தில் போலீசார் துரிதமான செயல்களில் இறங்கி விசாரணையை ஆரம்பித்துள்ளனர். போலீசாரால் எடுக்கப்படும் வழக்கமான நடவடிக்கையில் ஒன்றுதான் இந்த பண்ணை வீட்டு சோதனை என்பதும்!

அதேபோல, வழக்கு விசாரணை நடக்கும்போது அது சம்பந்தப்பட்ட விவரங்களை வெளியில் சொல்லக்கூடாது என்பதும் போலீசாரின் முக்கிய கடமை ஆகும். எனினும் கிடைக்கப்பட்ட அனைத்து விவரங்கள், தகவல்கள், ஆவணங்களை விரைவில் போலீசார் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/coimbatore/thirunavukarasu-pannai-veedu-343818.html

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
10 hours ago, ரதி said:

வீடியோவில் அந்தப் பொண்ணு "உன்னைத் தானே நம்பி வந்தேன் என்னை இப்படி பண்ணிட்டியேடா என்று கேட்கிறா"...இவர்கள் என்ன என்றால் லெஸ்பியனாம்,மண்ணாங்கட்டியாம்...முதலில் இவர்களை பிடித்து தூக்கில் போட வேண்டும் 

தமிழ்,கலாச்சாரம்,பண்பாடு என்று முழங்கும் தமிழகத்தில் இப்படி நடப்பது கேவலம்...பெண்களை பூட்டியும்,ஆண்களை அவிழ்த்து விட்டு வளர்த்தால் இப்படித் தான் 😧
 

Image may contain: 1 person, text

நேற்று,  ரதி கூறியது... இன்று ஒரு பிரபலத்தின், மீம்சாக... 
 

Edited by தமிழ் சிறி
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

இது ஹிந்தியாவுக்குப் புதிதல்ல. தமிழகத்துக்கும் புதிதல்ல. தமிழகப் பெண்களும் திருந்தின பாடில்லை. எத்தனை சாமியார்கள்.. எத்தனை போலி டாக்டர்கள் இப்படிச் செய்துவிட்டார்கள். இன்னும் இவர்கள் பாடம் படிக்கவில்லை என்றால்.. இந்தப் பெண்களும்.. இந்தக் குற்றங்களுக்கு உடந்தை என்று தானே அர்த்தம்.

எதுஎப்படியோ.. இதை நக்கீரன் கோபால் கையாளும் விதமும் ஆபாசமாகவே இருக்கிறது. அவருக்கு அவரின் பத்திரிக்கைக்கு.. விளம்பரம் வேண்டும். கூட தி மு க ஆதரவையும் காட்டனும்.

இதே தி மு க காவாலிகள் செய்திருந்தால்.. நக்கீரன் மூச். 

ஆக அரசியலுக்கு அப்பால்.. இதனை சமூகப் பிரச்சனையாக பார்ப்பதோடு.. சமூக வலைத்தளங்களை இளையோர் பாவிக்கும் முறை குறித்து கண்காணிப்பதே அதனூடாக நிகழும் இத்தகைய வன்முறைகளை.. சமூகச் சீர்கேடுகளை ஒழிக்க உதவும். இன்றேல்.. இது தொடர் கதை தான். 

இதில் இந்த இளைஞர்கள் மட்டுமல்ல.. அவர்களின் வலையில் தெரிந்து கொண்டே விழும்.. ஆடம்பரம் விரும்பி பெண்களும் இந்த இளைஞயர்களுக்கு  நிகர்த்த குற்றமிளைத்தவராவர். 

Share this post


Link to post
Share on other sites

பலாதà¯à®à®¾à®°à®®à¯

புதிய வீடியோ வெளியானது.. வலுத்தது எதிர்ப்பு.. பார் நாகராஜ் தலைமறைவு?

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக புதிய வீடியோ வெளியானதை அடுத்து பார் நாகராஜ் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் கடந்த 7ஆண்டுகளாக பெண்களை காதல் வலையில் விழ வைத்து கூட்டு பலாத்காரம் செய்து வந்தது. இந்த நிலையில் இதுபோல் காதல் வலையில் சிக்கி பலாத்காரம் செய்யும் கும்பலிடம் மாட்டிக் கொண்ட பெண் ஒருவர் தைரியமாக புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யுமாறு மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் பெண்களை பலாத்காரம் செய்வது தொடர்பான 4 வீடியோக்கள் வெளியானது. அதில் அதிமுகவிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட பார் நாகராஜ் ஒரு வீடியோவில் இருக்கிறார்.

இதையடுத்து பார் நாகராஜின் பாரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். மேலும் பார் நாகராஜை கைது செய்ய வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் விவகாரம் பெரிதாகவே, பார் நாகராஜ் நண்பர் வீட்டில் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/coimbatore/bar-nagaraj-absconded-343910.html

Share this post


Link to post
Share on other sites

சோமாலியா நாட்டில், பத்து வயது சிறிமியை... பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு,  
நீதிபதி கொடுத்த நேரடி தண்டனை.  

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • மக்களவையின் 2ஆம் கூட்டத்தொடர்: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவிப்பிரமாணம் In இந்தியா     June 18, 2019 9:07 am GMT     0 Comments     1140     by : Yuganthini மக்களவையின் இரண்டாவது கூட்டத்தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றனர் 17ஆவது மக்களவையின் இரண்டாம் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பதில் சபாநாயகர் வீரேந்திரகுமார் முன்னிலையில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். குறித்த பதவியேற்பு நிகழ்வில் சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்கான் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க.நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் பாண்டே, தனது பதவியை முதலில் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து சிவசேனா உறுப்பினர் கிருபாள் பாலாஜி மராட்டிய மொழியில் பதவியேற்றார். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சன்னிதியோல் ஆங்கிலத்திலும் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தமிழிலும் பதவியேற்றனர். இவர்களைத் தொடர்ந்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி வீராசாமி (வடசென்னை), தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை), தயாநிதிமாறன் (மத்திய சென்னை), டி.ஆர்.பாலு, (ஸ்ரீபெரும்புதூர்), செல்வம் (காஞ்சிபுரம்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), டொக்டர் செல்லக்குமார் (கிருஷ்ணகிரி), செந்தில்குமார் (தர்மபுரி), விஷ்ணுபிரசாத் (ஆரணி), ரவிக்குமார் (விழுப்புரம்), ஆ.ராசா (நீலகிரி), திருமாவளவன் (சிதம்பரம்), திருநாவுக்கரசர் (திருச்சி), கனிமொழி (தூத்துக்குடி), பாரிவேந்தர் (பெரம்பலூர்), பழனி மாணிக்கம் (தஞ்சாவூர்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), நவாஸ்கனி (இராமநாதபுரம்) ஆகியோர் தமிழில் பதவியேற்றனர். இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்காரி, ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட 313 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  நேற்று பதவியேற்றனர். அந்தவகையில் புதிய சபாநாயகர் தேர்வு நாளை நடைபெறுவதுடன் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று பொருளாதார ஆய்வு அறிக்கை ஜூலை 4ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளது. பின்னர் எதிர்வரும் 5ஆம் திகதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரவு – செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மக்களவையின்-2ஆம்-கூட்டத்/
  • நளினியின் விருப்பத்தை அறிந்து சொல்லுங்கள்: சட்டதரணிக்கு நீதிபதிகள் உத்தரவு! In இந்தியா     June 18, 2019 10:10 am GMT     0 Comments     1117     by : Yuganthini காணொளி ஊடாக வழக்கு விசாரணைகளில் கலந்துகொள்வது தொடர்பான நளினியின் விருப்பத்தை அறிந்து நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துமாறு நளினியின் சட்டத்தரணிகளிடம் தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகவுள்ள நளினி, இங்கிலாந்தில் வசிக்கும் மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணை அனுமதி கோரி தாக்கல் செய்த வழக்கு இன்று (செவ்வாய் கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை கைதிகள் வருடத்துக்கு இரு முறை பிணையில் வெளிவருவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது. ஆனால் கடந்த 28 வருடங்களாக தொடர்ச்சியாக சிறையிலேயே உள்ள தனக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்குமாறு நளினியினால் சட்டத்தரணி ஊடாக மனுவொன்றை உச்ச நீதிமன்றத்தில் அவர் கையளித்திருந்தார். குறித்த மனு மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நளினியை உச்ச நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தினால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகுமென அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையிலேயே நளினி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணியிடம் நீதிபதிகள், நளினியின் விருப்பத்தை அறிந்து நீதிமன்றுக்கு அறியத்தருமாறு உத்தரவிட்டதுடன் விசாரணைகளை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நளினிக்கு-உச்ச-நீதிமன்றம/
  • 19 ஆவது திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி அதிகாரமற்றவர் – மனுஷ நாணயக்கார In இலங்கை     June 18, 2019 11:12 am GMT     0 Comments     1033     by : vithushan 19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் அற்றவர் என பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் கட்டுபடுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமற்றவர். அரசியலமைப்பினூடாக நாட்டினதும் அரசாங்கத்தினதும் தலைவராக, பாதுகாப்பு அமைச்சராக, முப்படை தலைவராக ஜனாதிபதி செயற்படுகிறார். அதற்கமைவாக முப்படைகளின் தலைவராக யுத்தத்துக்கு அறிவித்தல், யுத்ததுக்கு அமைத்தல் போன்ற கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. எனினும் பாதுகாப்பு துறையின் அமைச்சர் என்ற வகையில் முப்படையினருடன் ஜனாதிபதி நெருங்கிய தொடர்பை வைத்துள்ளார். இது அரசியலமைப்பினூடாகவே பரிசீலிக்க வேண்டும். பாதுகாப்புத்துறை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களாகும்” என அவர் குறிப்பிட்டார். http://athavannews.com/19-ஆவது-திருத்த-சட்டம்-இருக/
  • வாகனத்தையும் வீட்டையும் சம்பந்தன் எடுத்துச் சென்றுவிட்டார் – சபையில் மஹிந்த In இலங்கை     June 18, 2019 9:44 am GMT     0 Comments     1589     by : vithushan எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை எதிர்க்கட்சி தலைவராக இருந்த இரா.சம்பந்தன் எடுத்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார் இதன் காரணமாகவே தான் எதிர்க்கட்சி தலைவருக்கான வாகனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களுக்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். எதிர்க்கட்சி தலைவருக்கான வீடு, வாகனம் என்பவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீண்டும் கையளிக்கவில்லை. இந்நிலையிலேயே தான் குறித்த கோரிக்கையை விடுத்ததாக தெரிவித்தார். http://athavannews.com/வாகனத்தையும்-வீட்டையும்/
  • சலசலப்பின்றி நிறைவடைந்தது அமைச்சரவை கூட்டம்! In இலங்கை     June 18, 2019 10:54 am GMT     0 Comments     1076     by : Dhackshala அமைச்சரவைக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே கடந்த வாரம் ஜனாதிபதியினால் அமைச்சரவை ஒத்திவைக்கப்பட்டது என்ற பரவலான கருத்து நிலவிவருகின்ற நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூடியது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள ஸ்தாபிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டிருந்தார். இக்கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டதோடு, இந்தக் கூட்டம் சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றது. இதன்போது சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். வழமையாக அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படுவதைப்போல, அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பாகவே ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். விசேடமாக எந்தவொரு விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவில்லை என்றும் அமைச்சரவை பத்திரங்கள் தொடர்பில் உரிய அமைச்சர்களினால் விளக்கங்கள் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அமைச்சர்களான  லகி ஜயவர்த்தன, அனோமா கமகே மற்றும் காமினி ஜயவிக்ரம ஆகியோரும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கியமாக எதுவும் கலந்துரையாடப்படவில்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அமைச்சரவையில்-சர்ச்சைக்/