யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
தமிழ் சிறி

கலங்கடிக்கும் பொள்ளாச்சி பாலியல் குற்றம்.. கொதிக்கும் தமிழகம்..

Recommended Posts

பண்ணை வீட்டு, பாலியல் ராட்சதர்கள்..! கடும் நடவடிக்கை எப்போது ?

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

சென்டினல் தீவுக்கு நாடு கடத்துக .. ஆதிவாசிகள் கவனித்து கொள்வார்கள் .. 👌

Share this post

Link to post
Share on other sites

பொள்ளாச்சி வன்கொடுமை: போராட்டத்தில் களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்

  •  
போராட்டத்தில் களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் , இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கல்லூரி மாணவ , மாணவியர் போராடி வருகின்றனர்.

இன்று காலை கோவை அரசு சட்டக்கல்லூரி முன்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலைப்பட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

நேற்று கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், கல்லூரி வாயிலின் முன்பு போராட்டத்தினை நடத்தினர்.

மேலும், நேற்று பொள்ளாச்சியில் ,அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர் , நகராட்சி அலுவலகம் முன்பு திரளாக கூடி, போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு வந்தனர். வஜ்ரா தண்ணீர் பீச்சும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. காவல் துறையினர் மாணவர்களை கலைந்து போகும்படி கூறி பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், மாணவர்கள் போராட்டத்தினை தொடர்ந்ததால் , அவர்களை இழுத்து கூட்டத்தில் இருந்து வெளியேற்றி கூட்டத்தினை கலைத்தது காவல்துறை. மாணவர்கள் நாளையும் போராட்டத்தினை தொடர்வதாக கூறியிருந்த நிலையில் இன்று பொள்ளாச்சி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை , புகார் செய்ததற்காக தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட நாகராஜ் , ஒரே நாளில் பிணையில் வெளியில் விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகராஜை மீண்டும் கைது செய்ய வேண்டும் என்று கோரி பொது மக்கள் சிலர், நாகராஜுக்கு சொந்தமான டாஸ்மாக் பாரை அடித்து நொறுக்கினர்.

போராட்டத்தில் களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்

'பார்' நாகராஜ் உள்ள பாலியல் துன்புறுத்தல் வீடியோ வெளியாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால்,அந்த வீடியோவில் இருப்பது பார் நாகராஜ் அல்ல, பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதாகியுள்ள சதீஷ் என்று தெரிவிக்கப்படுகிறது.

காவல் துறையினர் இந்த வழக்கில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பல தரப்பினரும் கூறி வந்த நிலையில் , இந்த வழக்கு சிபி சிஐடி-க்கு மாற்றப்பட்டது. தற்போது பொள்ளாச்சியில் சிபி சிஐடி பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளை மாலை நான்கு மணி அளவில் பொள்ளாச்சியில் பல அமைப்பினர் இணைந்து நடத்தும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்து, அதனை வீடியோ படமாக எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பிப்ரவரி மாதத்தில் வழக்கு ஒன்று பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் சபரீஷ், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்

இந்த வழக்கில் புகார் தெரிவித்த பூபாலன் என்பவரைத் தாக்கிய வழக்கில் செந்தில், பாபு, மணி, வசந்தகுமார், நாகராஜ் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும் கோபமும் எழுந்தன. மாணவர்களும் சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தின.

பிறகு இந்த வழக்கு மார்ச் 12ஆம் தேதி குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சிபிசிஐடி) மாற்றப்பட்டது. இருந்தபோதும் வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்ற வேண்டுமென கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில் இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பையும் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கு மிகக் கடுமையான குற்றங்களை உள்ளடக்கியதாக இருப்பதாலும் சமூக வலைதளங்களிருந்து ஆதாரங்களைத் திரட்ட வேண்டியிருப்பதாலும் வழக்கை மாநில குற்றப் பிரிவு புலனாய்வுத் துறையிலிருந்து மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/india-47566037

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

ஒவ்வொரு முறையும் இவ்வாறான குற்றங்கள் நடைபெறும் போது துள்ளி குதிப்பதும் பின்பு  சற்று நாட்களில் அதை மறந்து போவதும் தமிழகம், இலங்கை போன்ற நாடுகளில் வழமையாகிவிட்டது. குற்றவாளிகளை தூக்கில் போடவேண்டும், ஆணுறுப்பை அறுக்க வேண்டும், நடுச்சந்தியில் சுட்டு தள்ளவேண்டும் என்பது  போன்ற பல உணர்ச்சிமயமான பதிவுகளை சமூக வலைத்தளங்களிலும் செய்தி ஊடக வலைதளங்களிலும் பார்க்க முடிகிறது. சிலர் இதை சாதகமான பயன்படுத்தி தமது பழமைவாத கண்ணோட்டத்துடன் பெண்பிள்ளைகளுக்கு  இன்னும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்  என கலாச்சார உளறல்கள் செய்வதையும் பார்க்க முடிகிறது. ஆனால் எதிர் காலத்தில் இது போன்ற குற்றங்களை தவிர்க்க எவ்வாறான சமுக மாற்றங்களை எமது சமூகம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற காத்திரமான கருத்து பகிர்வுகள் மிக குறைவாக இருப்பதையே அவதானிக்க முடிகிறது.

பெண்பிள்ளைகளை தைரியசாலிகளாக வளர்ப்பதே இப்படியான குற்றங்களை தடுப்பதற்கான முதல்வழி ஆகும். பெண்பிள்ளைகளை கட்டுப்பெட்டிதனமாக வீட்டுக்குள் பொத்தி பொத்தி வளர்ப்பதும் தமது உதவாக்கரை கலாச்சாரத்தை காக்கும் முழு பொறுப்பையும் பெண்கள் மீது சுமத்துவதும் தான் இப்படியான  பிளாக்மெயில் குற்றங்களுக்கு  சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது.  ஆண் எந்த வன்முறையும் சமூக பிறளவும்  செய்யலாம் ஆனால் ஒரு பெண் சிறிய தவறு செய்தாலே அவளின் வாழ்க்கையே போய்விடும்  என்ற ரீதியிலேயே எமது கலாச்சாரம்   வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேயே பெண்பிள்ளைகளுக்கு காலம் காலமாக சொல்லி வளர்க்கிறது இந்த சமூகம்.   அதனால் சிறிய தவறு செய்தாலும் மானம் போய்விடும் என்று சமூகத்திற்கு பயந்து பயந்து பலவீனமான நிலையில் வாழ்வதால் அவர்களை பிளாக் மெயில் செய்வது  இப்படியான விஷம கும்பல்களுக்கு இலகுவாகிறது. உண்மையில் எமது தமிழ் கலாச்சாரம் இப்படியான ஈனப்பிறவிகளுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். ஒரு பெண் ஒரு அயோக்கியனால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டால் அவள் கெட்டு போய்விட்டாள் என்று  அவளை ஒதுக்கும் சமுதாயம்  அந்த அயோக்கியனையே அவள் கணவனாக ஏற்கவேண்டும் என்று சமூக அடக்குமுறை செய்வதுடன் அதை சிறந்த கலாச்சசாரம் என்று வேறு பீற்றிக்கொள்கிறது. இவ்வாறான பழமை வாத தமிழ் அயோக்கிய கலாச்சாரத்தை பரப்பியதில் தமிழ் திரைப்படங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.  மனிதர்களுக்காக தான் கலாச்சாரமே  தவிர கலாச்சாரத்திற்காக மனிதர்கள் தமது வாழ்வை தியாகம் செய்ய முடியாது. அவ்வாறு எதிர்பார்ப்பது அயோக்கியத்தனம். 

 எதிர் காலத்தில் இவ்வாறான காட்டுமிராண்டி கலாச்சாரம் உடைக்கப்பட்டு பெண்பிள்ளைகள் தைரியசாலிகளாக வளர்க்க‍ப்படல் வேண்டும். அச்சம் ,மடம் நாணம், பயிர்ப்பு போன்ற உதவாக்கரைச் சொற்கள்  தமிழ் அகராதியில் இருந்தே தூக்கி எறிந்து விட்டு, பெண் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருத்து தற்காப்பு பயிற்சிகள்(self-defense) வழங்கப்படல் வேண்டும்.  தம்மீது வன்முறை செய்யும் ஆண்களை  பயப்படாமல் எதிர்ப்பு தெரிவிக்கவும் முடித்தால் திருப்பி தாக்கவும் பெண்கள் தயங்கக்கூடாது. விடலை பருவத்தில் ஹார்மோன்களின் தூண்டுதலால் தவறுகள் செய்வது ஆணுக்கும் பெண்ணுக்கும்  பொதுவானாதே. உலகம் முழுவதும் எல்லா காலங்களில் நடைபெற்ற, நடைபெற்றுக்கொண்டிருக்கும் சாதாரணமான விடயம் தான். சிலவேளை அவ்வாறான சிறு வயது   பாலியல் தவறுகள்(உறவுகள்)நடைபெறும் போது மூடத்தனமான கலாச்சார பார்வையில் அதை பார்க்காது அதில் சம்பந்தப்படும் ஆண் பெண் பிள்ளைகளை  அதை  சர்வ சாதாரணமாக எடுத்து கொண்டு  தவறை திருத்தி தமது வாழ்க்கைப்பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்க செல்ல அவர்களுக்கு சமூகம் உறுதுணையாக நிற்க வேண்டும்.  இதில் வெட்கப்பட  எதுவும் இல்லை  இவை  மனிதவாழ்வில் இயல்பானதே என்ற உண்மையை சமூகம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு சமூகத்தின் பங்களிப்பு மிக அவசியமானது. ஆணோ பெண்ணோ சக மனிதர்களின் உரிமையை அங்கீகரித்து அவர்களுக்கு உரிய கெளரவத்தை கொடுத்து எல்லோரும் இணைவாக சம‍மாக மகிழ்வுடன் வாழ்வதே சிறந்த கலாச்சாரம்  என்பதை ஆண் பெண் பிள்ளைகளுக்கு பாடசாலையில் கற்பிக்க வேண்டும். 

(ஒரு காலத்தில் இராணுவ உடையுடன் இருக்கும் போது சமூகத்தால் மதிக்கபட்ட அதே பெண்கள் கலாச்சசார உடைக்கு மாறிய பின்னர் சமூக அடக்குமுறைக்கு உள்ளாவதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்)

Edited by tulpen
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, tulpen said:

நீங்கள் தமிழ்கலாச்சாரத்தை தேவையில்லாமல் இங்கே எள்ளிநகையாடுகின்றீர்கள்.

மேலைத்தேய நாடுகளில் இதை விட மோசமாக நடைபெற்று வருகின்றது. ஜேர்மனியில் சிறுவர்/சிறுமிகளை தொடர்ச்சியாக பாலியல் துர்பிரயோகம் நடந்ததை அண்மையில் கண்டுபிடித்து உள்ளார்கள்.காவல்துறை விசாரித்த ஆவணங்களையே இப்போது காணவில்லையாம்.

Share this post

Link to post
Share on other sites

யோவ் பொள்ளாச்சி ....யாருகிட்ட போய் மாட்டிருக்க பாரு 

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, tulpen said:

பெண்பிள்ளைகளை தைரியசாலிகளாக வளர்ப்பதே இப்படியான குற்றங்களை தடுப்பதற்கான முதல்வழி ஆகும். பெண்பிள்ளைகளை கட்டுப்பெட்டிதனமாக வீட்டுக்குள் பொத்தி பொத்தி வளர்ப்பதும் தமது உதவாக்கரை கலாச்சாரத்தை காக்கும் முழு பொறுப்பையும் பெண்கள் மீது சுமத்துவதும் தான் இப்படியான  பிளாக்மெயில் குற்றங்களுக்கு  சாதகமா சூழலை ஏற்படுத்துகிறது. 

துல்பென் நீங்கள் சொல்லுவதெல்லாம் பிரபாகரன் காலத்துக்கு முன்.

Share this post

Link to post
Share on other sites
On 3/15/2019 at 12:07 AM, குமாரசாமி said:

நீங்கள் தமிழ்கலாச்சாரத்தை தேவையில்லாமல் இங்கே எள்ளிநகையாடுகின்றீர்கள்.

மேலைத்தேய நாடுகளில் இதை விட மோசமாக நடைபெற்று வருகின்றது. ஜேர்மனியில் சிறுவர்/சிறுமிகளை தொடர்ச்சியாக பாலியல் துர்பிரயோகம் நடந்ததை அண்மையில் கண்டுபிடித்து உள்ளார்கள்.காவல்துறை விசாரித்த ஆவணங்களையே இப்போது காணவில்லையாம்.

தேவையில்லாமல் நான் எதையும் கூறவில்லை. இப்படிப்பட்ட பிளாக மெயில் வக்கிரங்களுக்கு  கலாசாரப் போர்வையில் எமது  சமூகத்திற்கு போதிக்கும் பிற்போக்குத்தனமான நடைமுறைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நான் கலாச்சாத்தை குறைகூறுகிறேன் என்பதை விட கலாச்சாரத்தில் வந்து கலந்துவிட்ட தூக்கி வீச வேண்டிய அநீதியான விடயங்களைப் பற்றி மட்டுமே  கேள்வி எழுப்புகின்றேன். உங்களுக்கு தமிழ்க் கலாச்சாரத்தில்  உண்மையான அக்கறை இருக்குமனால் எமது கலாச்சாரத்தில் இருக்கும் அநீதியான விடயங்களை தூக்கி வீசி கலாச்சாரத்தை சுத்தப் படுத்தவே விரும்புவீர்கள். தேங்கிய நாற்றமெடுக்கும் குட்டையாக இல்லாமல் தெளிந்த நதியாக பழையவற்றைக் கழித்து புதிய விடயங்களை தம்முடன் சேர்தது செல்வதே மேன்மையான கலாச்சாரம் ஆகும். பிற போக்குத் தனங்களையும்  அநீதிகளையும் ஆதரிப்பது கலாச்சாரப்பற்று கிடையாது. 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு