யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
புங்கையூரன்

ஆத்தா.....நானும் பாசாயிட்டேன்!

Recommended Posts

மனதுக்கும்…..உதடுகளுக்கும் ,

தொடுசல் அறுந்து நாளாகி விட்டது!

 

வேடம் போடுவதில்,

நாடக நடிகர்களையும்….,

மிஞ்சியாகி விட்டது!

 

மாடு மாதிரி உழைச்ச,

களைப்புப் போக,

உல்லாசப் பயணம் போனால்…,

அந்தக் கடற்கரை…..,

ஊர்க் கடற்கரையிடம்…,

பிச்சை வாங்க வேண்டும்…,

போலத் தெரிகின்றது!

 

வசதியில்லாததுகள்,

வறுமையில் வாழ்பவர்கள்…,

விற்கின்ற பொருட்களை…,

அறாத விலை பேசி வாங்குவதில்…,

ஒரு திருப்தி…!

உறுத்துகின்ற மனதுக்கு..,

நாங்களும் வாங்கா விட்டால்…,

அதுகள் பட்டினி தான்…,

என்று ஒரு சமாதானம்!

 

வங்கியட்டைகளின் கனதி….,

வீட்டுக்கடனின் பரிமாணம்,

கட்ட வேண்டிய சிட்டைகளின்…,

கடைசித் திகதிகள்!

எல்லாமே மனதை அரித்தாலும்,

போலிக் கௌரவம் …..,

வேலி தாண்டு என்கிறது!

 

அபூர்வமான பொழுதுகளில்…,

அன்றைய வாழ்வின்,

நினைவுகள் வந்து போகும்!

 

இப்போதெல்லாம்…,

தபால் பெட்டியைத் திறக்கையில்..….,

தற்பாதுகாப்புத் தேடி…,

ஓடுகின்றது மனது..!

 

ஆறுதல் தேடி….,

ஊர் தேடிப் போகையில்…,

அங்குள்ள சொந்தங்கள்,

உங்களுக்கு என்ன குறை?

எங்களுக்கும்…,

அங்க வரத்தான் விருப்பம் !

 

உண்மையைச் சொன்னால்….,

நாங்கள் நல்லா வாறது..,

உங்களுக்கு எரிச்சல்...,

எண்டுதுகள்!

 

இப்போதெல்லாம் நானும்…,

உண்மை பேசுவதில்லை!

 

எங்காவது கணனி கிடைத்தால்,

வங்கிக் கணக்கை ஒருக்கால்…,

எட்டிப்பார்க்க வேணும்!

 

நாட்கள் போகப்போக …,

நானும் நல்ல நடிகனாகி விட்டேன்!

 • Like 7

Share this post


Link to post
Share on other sites

ம் நாட்டு நடப்பு இப்ப இப்பிடித்தான் இருக்கு.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, புங்கையூரன் said:

நாட்கள் போகப்போக …,

நானும் நல்ல நடிகனாகி விட்டேன்!

வாழ்க்கை என்பது ஒரு நாடகமேடை தான்.

வந்தவரேல்லாம் விருப்பமோ விருப்பமில்லையோ நடித்தே தீரவேண்டும்.

3 hours ago, புங்கையூரன் said:

வங்கியட்டைகளின் கனதி….,

வீட்டுக்கடனின் பரிமாணம்,

கட்ட வேண்டிய சிட்டைகளின்…,

கடைசித் திகதிகள்!

எல்லாமே மனதை அரித்தாலும்,

போலிக் கௌரவம் …..,

 வேலி தாண்டு என்கிறது!

இதிலே எங்களை விட வெள்ளைகள் ரொம்ப மோசம்.எடுக்கிற சம்பளத்துக்கு முழுக்க ஏதாவது கடனடிப்படையில் வாங்கி வைத்திருப்பார்கள்.தற்செயலாக வேலை போனால் கட்ட வழி இல்லாமல் எல்லாமே போகும்.

Share this post


Link to post
Share on other sites

உண்மை பேசி வாங்கிக் கட்டுறதை விட மௌனம் சர்வார்த்த சாதனம்.......!  😁

நாட்டு நடப்பை கவிதை பேசுது....!

Share this post


Link to post
Share on other sites

இந்த கவிதையை ஏன் யாழின் பிறந்த நாள் பகுதியில் எழுதவில்லை ?

Share this post


Link to post
Share on other sites

வசந்தகாலம் வருகுது. வங்கிக் கடனட்டைகளை  எடுத்து துடைத்து வையுங்கோ.  வெளிநாட்டு நடப்பை நயமாகச் சொல்லியுள்ளது கவிதை. புங்கையூரன் நடிகனாகியது சரி. எப்ப பாசாகினீங்க. 

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, புங்கையூரன் said:

மாடு மாதிரி உழைச்ச,

களைப்புப் போக,

உல்லாசப் பயணம் போனால்…,

அந்தக் கடற்கரை…..,

ஊர்க் கடற்கரையிடம்…,

பிச்சை வாங்க வேண்டும்…,

போலத் தெரிகின்றது!

 

ஆறுதல் தேடி….,

ஊர் தேடிப் போகையில்…,

அங்குள்ள சொந்தங்கள்,

உங்களுக்கு என்ன குறை?

எங்களுக்கும்…,

அங்க வரத்தான் விருப்பம் !

 

உண்மையைச் சொன்னால்….,

நாங்கள் நல்லா வாறது..,

உங்களுக்கு எரிச்சல்...,

எண்டுதுகள்!

அனுபவ வரிகள், புங்கை அண்ணா! வலிகளைக் கவிதையாக்கியுள்ளீர்கள். தொடருங்கள். 😊

1 hour ago, ரதி said:

இந்த கவிதையை ஏன் யாழின் பிறந்த நாள் பகுதியில் எழுதவில்லை ?

அதையே தான் நானும் நினைத்தேன். 😊

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, புங்கையூரன் said:

மனதுக்கும்…..உதடுகளுக்கும் ,

தொடுசல் அறுந்து நாளாகி விட்டது!

 

வேடம் போடுவதில்,

நாடக நடிகர்களையும்….,

மிஞ்சியாகி விட்டது!

 

மாடு மாதிரி உழைச்ச,

களைப்புப் போக,

உல்லாசப் பயணம் போனால்…,

அந்தக் கடற்கரை…..,

ஊர்க் கடற்கரையிடம்…,

பிச்சை வாங்க வேண்டும்…,

போலத் தெரிகின்றது!

 

வசதியில்லாததுகள்,

வறுமையில் வாழ்பவர்கள்…,

விற்கின்ற பொருட்களை…,

அறாத விலை பேசி வாங்குவதில்…,

ஒரு திருப்தி…!

உறுத்துகின்ற மனதுக்கு..,

நாங்களும் வாங்கா விட்டால்…,

அதுகள் பட்டினி தான்…,

என்று ஒரு சமாதானம்!

 

வங்கியட்டைகளின் கனதி….,

வீட்டுக்கடனின் பரிமாணம்,

கட்ட வேண்டிய சிட்டைகளின்…,

கடைசித் திகதிகள்!

எல்லாமே மனதை அரித்தாலும்,

போலிக் கௌரவம் …..,

வேலி தாண்டு என்கிறது!

 

அபூர்வமான பொழுதுகளில்…,

அன்றைய வாழ்வின்,

நினைவுகள் வந்து போகும்!

 

இப்போதெல்லாம்…,

தபால் பெட்டியைத் திறக்கையில்..….,

தற்பாதுகாப்புத் தேடி…,

ஓடுகின்றது மனது..!

 

ஆறுதல் தேடி….,

ஊர் தேடிப் போகையில்…,

அங்குள்ள சொந்தங்கள்,

உங்களுக்கு என்ன குறை?

எங்களுக்கும்…,

அங்க வரத்தான் விருப்பம் !

 

உண்மையைச் சொன்னால்….,

நாங்கள் நல்லா வாறது..,

உங்களுக்கு எரிச்சல்...,

எண்டுதுகள்!

 

இப்போதெல்லாம் நானும்…,

உண்மை பேசுவதில்லை!

 

எங்காவது கணனி கிடைத்தால்,

வங்கிக் கணக்கை ஒருக்கால்…,

எட்டிப்பார்க்க வேணும்!

 

நாட்கள் போகப்போக …,

நானும் நல்ல நடிகனாகி விட்டேன்!

புங்கையூரான்... உங்களது கவிதையில், எதை மேற்கோள் காட்டி  கருத்து கூறுவது... 
என்ற அளவிற்கு முழுவதும், வெளிநாட்டு வாழ்க்கை பற்றிய யதார்த்தமான... அருமையான வரிகள். :)

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ம் நாட்டு நடப்பு இப்ப இப்பிடித்தான் இருக்கு.

நன்றி.....சுமே!

18 hours ago, ஈழப்பிரியன் said:

வாழ்க்கை என்பது ஒரு நாடகமேடை தான்.

வந்தவரேல்லாம் விருப்பமோ விருப்பமில்லையோ நடித்தே தீரவேண்டும்.

இதிலே எங்களை விட வெள்ளைகள் ரொம்ப மோசம்.எடுக்கிற சம்பளத்துக்கு முழுக்க ஏதாவது கடனடிப்படையில் வாங்கி வைத்திருப்பார்கள்.தற்செயலாக வேலை போனால் கட்ட வழி இல்லாமல் எல்லாமே போகும்.

உண்மை தான்.....ஈழப்பிரியன்!

வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்குள்.....காலம் நம்மை முந்தி விடும்!

நன்றி...!

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, suvy said:

உண்மை பேசி வாங்கிக் கட்டுறதை விட மௌனம் சர்வார்த்த சாதனம்.......!  😁

நாட்டு நடப்பை கவிதை பேசுது....!

கிருஷ்ண பரமாத்மா கூட.....சில இடங்களில் பொய் சொல்லுகிறார்!

தருமர் கூட அசுவத்தாமன் கொல்லப்பட்டானா என்ற துரோணரின் கேள்விக்கு...ஆம் என்றே பதிலளிக்கிறார்!

நாங்கள் எம்மாத்திரம்?

நன்றி....சுவியர்!

12 hours ago, ரதி said:

இந்த கவிதையை ஏன் யாழின் பிறந்த நாள் பகுதியில் எழுதவில்லை ?

ரதி....இது அவசரத்தில் எழுத்தப்பட்ட ஒரு கவிதை!

எழுதி முடிந்ததும்....ஏதோ ஒரு...செயற்கைத்தனம்....இருப்பது போல இருந்தது!

அதனாலேயே....அந்தப் பகுதியில்....பதியவில்லை!

ஏதாவது அங்கு பதிய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது!

நன்றி ....!  

Share this post


Link to post
Share on other sites

புலம்பெயர் தமிழனின் துயரக்கவிதை.

Share this post


Link to post
Share on other sites
On 3/12/2019 at 11:04 AM, புங்கையூரன் said:

ஆறுதல் தேடி….,

ஊர் தேடிப் போகையில்…,

அங்குள்ள சொந்தங்கள்,

உங்களுக்கு என்ன குறை?

எங்களுக்கும்…,

அங்க வரத்தான் விருப்பம் !

 

உண்மையைச் சொன்னால்….,

நாங்கள் நல்லா வாறது..,

உங்களுக்கு எரிச்சல்...,

எண்டுதுகள்!

 

இப்போதெல்லாம் நானும்…,

 உண்மை பேசுவதில்லை!

இங்கு வந்து பார்த்த பின் தான் புரியும்.

நல்லதொரு கவிதை, வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • இதேமாதிரி தமிழ்நாட்டவருக்கே முதலிடம் எண்டு சீமான் சொன்னால் இஞ்சையிருக்கிற கொஞ்சச்சனத்துக்கு குடைய வெளிக்கிடும் கண்டியளோ.......
  • அனுராதா: தடைகளை தாண்டி பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றது எப்படி? பிரமிளா கிருஷ்ணன்பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைANURADHA புதுக்கோட்டை மாவட்டத்தில் பேருந்து வசதியே எட்டிப்பார்க்காத நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான அனுராதா பவுன்ராஜ், கடந்த வாரம் நடைபெற்ற 'காமன்வெல்த் வெயிட்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப்' போட்டியில் இந்தியா சார்பாக பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். கடந்த பத்து ஆண்டுகளாக கடினமாக உழைத்து பளுதூக்கும் போட்டிக்காக தன்னை தயார்செய்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த அனுராதா, தஞ்சாவூரில் தோகுர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், விளையாட்டுத் துறையில் இருக்கும் ஆர்வம் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவும் அனுராதாவை வெற்றியை நோக்கி செல்ல உதவியுள்ளது. இளம்வயதில் தந்தை பவுன்ராஜ் இறந்ததால், அண்ணன் மாரிமுத்து படிப்பை நிறுத்திவிட்டு அம்மா ராணியுடன் கூலிவேலைக்கு செல்ல, அனுராதா படிக்கவும், விளையாட்டுத்துறையில் பங்கேற்கவும் சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது. ''பள்ளிப்படிப்பின்போது கைப்பந்து விளையாட்டில் ஆர்வம் இருந்தது. விளையாட்டுத்துறையில், குழு விளையாட்டில் சாதிப்பதைவிட தனி நபராக முயற்சி செய்தால், அரசு வேலை கிடைக்கும் என அண்ணனின் நண்பர்கள் பரிந்துரைத்தனர். கல்லூரியில் படிக்கும்போது, தமிழக அளவில் பளுதூக்கும் போட்டியில் பங்குபெற வாய்ப்புகள் இருப்பதை அறிந்த நான், முயற்சி செய்துபார்க்கலாம் என சேர்ந்தேன், தமிழக அளவில் வென்று இந்திய அளவில் போட்டியிட தேர்வானேன்,'' என்கிறார் அனுராதா. படத்தின் காப்புரிமைANURADHA 2009ல் அனுராதா முதன்முதலில் இந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று 35 கிலோபிரிவில் முதல் இடத்தை வென்றபோது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. ''எங்கள் ஊரில் பயிற்சி மையங்கள் கிடையாது. பளு தூக்கும் விளையாட்டில் பங்கேற்கும் ஆண்களை பார்ப்பது கூட அரிது. எனக்கு பயிற்சி தர ஆசிரியர்கள் இல்லை. முதல்முறை கிடைத்த வெற்றி, நான் மேலும் பளுதூக்கும் போட்டியில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதித்துவிட்டது. பட்டமேற்படிப்பு படிக்கும்போது, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இந்திய அளவிலான கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றேன்,'' என அவரது பதக்க பட்டியலைப் பற்றி பேசினார் அனுராதா. வறுமை, பசி, பல தடைகளை கடந்த தங்கமங்கை கோமதி வாட்டிய வறுமை; சளைக்காமல் போராடி ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற கோமதி ''ஜிம் போக வேண்டும் என முடிவு செய்தபோது மிகவும் தயக்கமாக இருந்தது. எங்கள் ஊரில் பேருந்து வசதி இல்லை. நான்கு கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும். ஜிம்மில் பெண்கள் கிடையாது. ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். தொடக்கத்தில் நான் பயிற்சி முடிக்கும்வரை காத்திருந்து அண்ணன் என்னை அழைத்துச் செல்வார். என் ஊரிலும், வெளியிடங்களிலும் எனக்கு ஏற்படும் தயக்கத்தை நான் துடைத்துவிட்டு முன்னேறவேண்டும் என முடிவுசெய்த பிறகு, என்னை நோக்கி வந்த எல்லா கிண்டல் பேச்சுகளை கையாள தெரிந்துகொண்டேன்,'' என்றார் அனுராதா. உறவினர்கள் பலரும் பளுதூக்கும் போட்டியில் அனுராதா பங்கேற்பதை விமர்சித்தபோதும், அவரது ஊக்கம் குறையவில்லை. ''பளுதூக்கும் போட்டி என்பது ஒரு விளையாட்டு என்ற புரிதல் பலருக்கும் இல்லை. அதிலும் பெண்ணாக இருப்பதால், இதில் பங்கேற்றால், என் உடல் மாறிவிடும் என பலர் குறைகூறுவார்கள். அவர்களின் வார்த்தைகளை சுமப்பதுதான் சில காலம் சிரமமாக இருந்தது. தொடர்ந்து நான் சாதனைகளை குவித்ததால், அவர்கள் மௌனமாகிவிட்டார்கள்,''என்கிறார் அனுராதா. பட்ட மேற்படிப்பை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான மையத்தில் பளுதூக்கும் போட்டிக்கான பயிற்றுநர் பாடதிட்டத்தை படித்தார். 2017ல் உதவிஆய்வாளர் வேலைக்கான தேர்வு வந்தபோது, அதில் தேர்வாகி வேலைக்கு சென்றால், அண்ணன் மற்றும் தாய் ராணிக்கும் உதவமுடியும் என்பதால், தனது விளையாட்டு ஆர்வத்திற்கு விடுப்பு கொடுத்திருந்தார். படத்தின் காப்புரிமைANURADHA ''காவல்துறையில் பணிபுரிவோருக்கான விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் போட்டி இருந்ததால், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. என் திறமையை கேள்விப்பட்ட மூத்த அதிகாரிகள் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நான் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தார்கள். தேசிய அளவில் தங்க பதக்கம் வென்றதால், கமான்வெல்த் போட்டியில் பங்கேற்க அடுத்த வாய்ப்பு என்னை தேடிவந்தது. அடுத்த இலக்கு ஒலிம்பிக்ஸ்தான்,'' என சொல்லும்போதே அனுராதாவின் உறுதி அவரது வார்த்தைகளில் தெரிகிறது. பெண்கள் விளையாட்டுதுறையில், அதிலும் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள் என்று கூறும் அனுராதா, ''பஞ்சாப்பில் படித்த சமயத்தில் அங்குள்ள பதின்பருவ பெண்கள் ஆர்வத்துடன் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்பதை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்ததது. எத்தனை வாய்ப்புகள் உள்ளன, நம் கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் மிகுந்த திறமையுடன் இருந்தாலும், இந்த விளையாட்டை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், கிராமங்களில் முடங்கிவிடுகிறார்கள் என்பதை உணர்ந்தேன்,''என்கிறார். தற்போது அனுராதாவின் வெற்றிகளை கண்ட அவரது நெம்மேலிப்பட்டி கிராமத்தில் பெண்குழந்தைகளை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்த பெற்றோர்கள் தயக்கம் காட்டுவதில்லை என்று கூறும் அவர், ''கல்வி என்பது வெறும் ஏட்டுக்கல்வி அல்ல, விளையாட்டும் சேர்த்துத்தான் என்ற புரிதல் குறைவாக உள்ளது. உடல்நலன் இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் ஆரோக்கியத்துடன் இருக்கமுடியும் என்பதை வலியுறுத்தவேண்டும்,''என்கிறார். https://www.bbc.com/tamil/sport-49065142
  • நிஞாயமாய்  பார்த்தால் இந்தமாதிரி கவிதை நான்தான் எழுதி இருக்க வேண்டும். மறந்துபோனன். போகட்டும் பரவாயில்லை , கவிதை நன்றாக இருக்கு....!  👍 
  • உலகிலே உள்ள துர் குணம்களை வைத்துகொண்டு வெளியால் நடிப்பவர்கள் . நாங்கள் கோவில் சென்று கும்பிடபோகும் பொழுது எமக்கு புரியாத மொழியில் இவங்களை யார் கத்த சொன்னது ?