Jump to content

மன்னித்துப் பார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

wp-1496838312090.jpeg?resize=400,181

 

மன்னித்துப் பார்

 

வளங்கள் பலவும் பெருகும்
வாழ்வின் அர்த்தங்கள் புரியும்
மன்னித்துப் பார்


இறுகிக் கிடக்கும் பாறையென
இதயம் கனத்துக் கிடக்கிறதா?
பனியாய் உருகி பாசத்ததைப் பகிர்ந்திட
மன்னித்துப் பார்


ஏழு தரமல்ல எத்தனை தரம்
வேணுமென்றாலும்
மன்னித்துப் பார்


மனிதம் புனிதமடையும்
மரணம் கூட மகத்தானதாய் அமையும்
மலரைப்போல மனம்
மென்மையடையும்
மன்னித்துப் பார்


இறுக்கங்கள் தளரும்
இதழ்களில் புன்னகை அரும்பும்
பேச்சினில் இனிமை கூடும்
அணைப்பினில் அன்பு பெருகும்
மன்னித்துப் பார்


மகிழ்வான தருணங்கள்
மனதை வருடும்
புலரும் பொழுதுகள் கூட
புன்னகை பூக்கும்
மன்னித்துப் பார்


மன அழுக்குகள் அனைத்தும்
அகன்றே போகும்
சினம் சீற்றம் எல்லாம்
விலகியே ஓடும்
மன்னித்துப் பார்


பாலைவன வாழ்க்கை
பசும் சோலைவனமாய் மாறும்
வாழ்க்கையை ரசிக்கவும்
ருசிக்கவும் விடைபெறவும் வேண்டுமா
மன்னித்துப் பார்


புகைபோல மறையும் பகை
வாழ்க்கையை வளமாக்கும்
சாபங்களைத் தூரமாக்கும்
மன்னித்துப் பார்


மன்னிப்பதால் நட்டமில்லை
மனம் இறுகிக் கிடப்பதோ
எவருக்கும் இஸ்டமில்லை
ஆமை ஓட்டுக்குள்
அடங்கிக் கிடப்பது போல்
அன்பை அகந்தைக்குள்
அடக்குவதால் பயனென்ன?
அன்பெனும் கரங்களை
அகலத் திறந்து
பண்பெனும் பாதையில்
பாசமுடன் நடக்கலாம்
மன்னித்துப் பார்


விரிசல்களும் வேதனைகளும்
விலகிப் போக வேண்டுமா
உறவுகளுள் உரிமையுடன்
நேசிப்பு வேண்டுமா
மன்னித்துப் பார்


பழிக்குப் பழி என்றும்
இரத்தத்திற்கு இரத்தமென்றும்
பகைமை உணர்வுகள்
பண்பினை அழித்து விடும்
விட்டுக் கொடு
தட்டிக் கொடு
கரம் குலுக்கு
கட்டி அணை
துன்பத்தில் துணைகொடு
இன்பத்தில் பங்கெடு
பாசத்தைப் பகிர்
புன்னகையை வரமாக்கு
புறம் பேசுவதை நிறத்து
பண்பாகப் பழகு
இனம் மதம் இல்லாது செய்
அன்பில்லாத மனம் என்று
ஏதுமில்லை
அன்பால் ஆளுமை செய்
மன்னிக்கும் மனம் மட்டும்
இருந்து விட்டால் உலகில்
போர் பஞ்சம் பகை ஏழ்மை
என்ற அனைத்தும் அகன்று விடும்
மனச் சாளரங்களைத் திறந்து
மழலைகள் போல் மனம் தூய்மைபெற வேண்டுமா
மன்னித்துப்பார்


மன்னிப்பது போல் ஒரு மருந்தில்லை
பகை மறப்பது போல் ஒரு வரமில்லை.
மன்னித்துப் பார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரிசல்களும் வேதனைகளும்
விலகிப் போக வேண்டுமா
உறவுகளுள் உரிமையுடன்
நேசிப்பு வேண்டுமா
மன்னித்துப் பார்

 

இது உறவுகளுக்குள் பகையைப் போக்கி விடும்.அது மட்டும் நிஜம்.......!  😁

நல்ல கவிதை .....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, thulasie said:

மன்னிப்போம் மறப்போம் 

நம் ஸ்ரீ லங்கா 
நமோ நமோ மாதா 

பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம் தீராத கோபம் யாருக்கு லாபம். நன்றிகள் துளசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavallur Kanmani said:

மன்னிப்பது போல் ஒரு மருந்தில்லை
பகை மறப்பது போல் ஒரு வரமில்லை.
மன்னித்துப் பார்

இப்படி ஒரு சொல் இருப்தாலோ என்னவோ
தொர்ந்தும் குற்றங்கள் செய்கிறார்கள்.

sorry plesae

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, suvy said:

விரிசல்களும் வேதனைகளும்
விலகிப் போக வேண்டுமா
உறவுகளுள் உரிமையுடன்
நேசிப்பு வேண்டுமா
மன்னித்துப் பார்

 

இது உறவுகளுக்குள் பகையைப் போக்கி விடும்.அது மட்டும் நிஜம்.......!  😁

நல்ல கவிதை .....!

பதிலுக்குள் புதிர் ஒன்றுமில்லையே சுவி. நன்றிகள்

3 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்படி ஒரு சொல் இருப்தாலோ என்னவோ
தொர்ந்தும் குற்றங்கள் செய்கிறார்கள்.

sorry plesae

இது எமக்குத் தவக்காலம். அதனால் எழுதப்பட்ட கவிதை இது. இதற்குள் வேறு விடயங்களை புகுத்தி விட மாட்டீர்களென எதிர்பார்க்கிறேன். குற்றம் செய்வது மனிதம் மன்னிப்பது தெய்வீகம். நன்றிகள் ஈழப்பிரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்பது என்பது எளிதானதல்ல. ஒருவரினால் உண்டான வலியை விட அதனை மன்னிப்பதால் உருவாகும் வலி கூடுதலாக இருக்கலாம். ஆனால் அந்த வலியைத் தாங்குவதனால் தலை நிமிர்ந்து நிற்கலாம் எனில் மன்னித்துவிடலாம்.

பகை மறக்கும் வரம் எல்லோருக்கும் வாய்த்தும் விடுவதுல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்பதால் கேனைகளாய்த் தான் போவோம்....நாங்கள் என்ன செய்தாலும்,இவர்கள் மன்னித்து விடுவார்கள் என்று மனதில் பட்டால் குற்றங்கள் கூடுமே வழிய,குறையாது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, கிருபன் said:

மன்னிப்பது என்பது எளிதானதல்ல. ஒருவரினால் உண்டான வலியை விட அதனை மன்னிப்பதால் உருவாகும் வலி கூடுதலாக இருக்கலாம். ஆனால் அந்த வலியைத் தாங்குவதனால் தலை நிமிர்ந்து நிற்கலாம் எனில் மன்னித்துவிடலாம்.

பகை மறக்கும் வரம் எல்லோருக்கும் வாய்த்தும் விடுவதுல்லை!

காயத்திற்கு மருந்திடும்பொழுது வலி ஏற்படாமல் குணப்படுத்த முடியுமா? ஆனாலும் காயம் ஆற வேண்டுமென்றால் மருந்திடுவது உசிதமானது. கவிதையைப் படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் கிருபன்.

15 minutes ago, ரதி said:

மன்னிப்பதால் கேனைகளாய்த் தான் போவோம்....நாங்கள் என்ன செய்தாலும்,இவர்கள் மன்னித்து விடுவார்கள் என்று மனதில் பட்டால் குற்றங்கள் கூடுமே வழிய,குறையாது  

மன்னிப்பதனால் குற்றங்கள் கூடுமென்றால் பகையை வளர்ப்பதனால் மட்டும் குற்றங்கள் குறையுமா ரதி. எதுவும்   அவரவர் மனதைப் பொறுத்தது. தெய்வம் என்றால் அது அதய்வம் வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான்....நன்றிகள் ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ரதி said:

மன்னிப்பதால் கேனைகளாய்த் தான் போவோம்....நாங்கள் என்ன செய்தாலும்,இவர்கள் மன்னித்து விடுவார்கள் என்று மனதில் பட்டால் குற்றங்கள் கூடுமே வழிய,குறையாது  

எல்லாவற்றுக்கும் முதல், நான், என்னை மன்னிக்க வேண்டும். அப்படி செய்திருக்கலாமே, இப்படி நடந்திருக்கலாமே என்ற சுயபச்சாபத்தினால் வரும் குற்றஉணர்வுடன் வாழாமல், வெற்றியாளராக நடைபோட, நாம் கடந்து வந்த பாதையில் விட்ட தவறுகளை மன்னிக்க பழக வேண்டும். அப்போது தான் அந்த மன்னிக்கப்பட்ட தவறுகளை மீண்டும் செய்ய மாட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

மன்னிப்பதால் கேனைகளாய்த் தான் போவோம்....நாங்கள் என்ன செய்தாலும்,இவர்கள் மன்னித்து விடுவார்கள் என்று மனதில் பட்டால் குற்றங்கள் கூடுமே வழிய,குறையாது  

இது தான் எனது வாதமும்.நன்றி ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎12‎/‎2019 at 7:49 PM, Kavallur Kanmani said:

 

மன்னிப்பதனால் குற்றங்கள் கூடுமென்றால் பகையை வளர்ப்பதனால் மட்டும் குற்றங்கள் குறையுமா ரதி. எதுவும்   அவரவர் மனதைப் பொறுத்தது. தெய்வம் என்றால் அது அதய்வம் வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான்....நன்றிகள் ரதி.

அக்கா,உங்கள் கவிதையோட உடன்பட முடியா விட்டாலும்,உங்கள் கவி எழுதும் திறனுக்கு ஒரு பச்சை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கலாம் ஆனால் வலிகளை மறக்கமுடியாது....கவிதைக்கு ந‌ன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களை நாம் மன்னித்தாலும் பாதிப்பும் நமக்குத்தான். நாம் மன்னித்துவிட்டோம் என்று தெரிந்த பின்னும் எம்மில் ஏறிச்  சவாரி செய்வதற்குப்பலர் காத்திருக்கிறார்களே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.