பிழம்பு

எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது…:நடிகர் விவேக்

Recommended Posts

ஆயுதப்போராட்ட காலத்தைப் பற்றிய விமர்சனங்கள் ஒரு குறுகிய வட்டத்துள் என்னும் நிற்கின்றது அவற்றைக் கடந்து எம்மால் இன்னும் சிந்திக்க முடியவில்லை. ஒரு விதத்தில் சிந்திக்கவும் முடியாத பலவீனமான இனக் குழுமம்தான் நாம். ஆயுதப்போராட்டத்திற்கு முற்பட்ட எமது சமூகம் ஆரோக்கியமான ஒற்றுமையான சமூகமாக இருந்ததிற்கான எந்த ஒரு வரலாறும் இல்லை. இனம் தேசீயம் என்ற பொது உணர்வற்ற சமூகமாக இருந்தது. கீழ்சாதிப் பிணங்கள் மேல்சாதித் தெருக்களில் எடுத்துப்போவதற்கு எதிராக வன்முறையில் இறங்கிய சமூகம். இதற்காக தனது புத்திஜீவிதத்தை கோட்டிலும் வழக்கிலும் பயன்படுத்திய சமூகம். சாதி மதம் பிரதேசவாதம் புரையோடிப்போன சமூகம். இவற்றைக் கடந்து சிங்கள பேரினவாதம் எம்மை இனமாக பெயரிட்டு அடித்தபோதே அதற்கு எதிர்வினையாற்ற சில இளைஞர்கள் முயன்றார்கள். அந்த இளைஞர்களை இனம்கண்டு பல்வேறு பிரிவுகளாக ஆயுதப்பயிற்சியளித்து வளர்த்து விட்டது இந்திய மத்திய அரசு. ஆயுதப்போராட்டம் தொடர்ந்தது பின்னர் முடிந்தது. அதன் பிறகு ஒரு தசப்பதம் முடிந்த இன்றை நிலையில் மனனாரில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மோதல், யாழில் ஆயுதங்களுக்குப் பதிலாக வாள்கள்,  கசிப்புக்கு பதிலாக கஞ்சா கிழக்கில் இஸ்லாமியர் இந்துக்கள் முறுகல். சாதி மத பிரதேசவாத பிரச்சனை ஆயுதப்போராட்ட காலத்துக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே என்னும் இருக்கின்றது. இனி ஒரு போதும் சிங்களவர்கள் எம்மை இனமாக அணுகிய தவறை செய்ய மாட்டார்கள். மதமாக பிரதேமாக தேவைப்பட்டால் சாதிவாரியாக அணுகுவார்கள். இன அடிப்படையில் நாம் ஒன்றுபட்டு தேசிய எழுச்சிபெற்று இனவிடுதலைக்கான அரசியல் ஆயுதப்போராட்டத்திற்கான எந்த அவசியமும் இனி ஏற்பட வாய்ப்பில்லை. புலியும் ஏனைய இயங்கங்களும் எமது வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எமது சமூகத்தில் தோன்றி மறைந்தவர்கள் தவிர வேறு சமூகத்தை சேர்ந்த அந்நியர்கள் இல்லை. நேற்றும் இன்றும் நாளையும் பானையில் உள்ளதே அகப்பையில் வரும். 

 • Like 7
 • Thanks 2
 • Sad 1

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, சண்டமாருதன் said:

என்ன சாமி,  இப்படி பொசுக்குன்னு குட்டை உடைச்சு 'தமிழர்கள் நண்டுகளின் குழுமம்தான்..!' என கோடிட்டு சொல்லிவிட்டீர்களே..!

சோ சேட்.. tw_cold_sweat:

பரவாயில்லையே, சோழனுக்கு அடுத்து ஈழத்தமிழர்கள், தமிழனுக்கு ஒரு அடையாளத்தை பொறித்திடுவார்களென்ற நம்பிக்கையில் இருந்த எங்களைப் போன்றவர்களின் நினைப்பில் இப்படி மண்ணை அள்ளிப்போட்டுவிட்டீர்களே..? tw_rage:

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
29 minutes ago, ராசவன்னியன் said:

வணக்கம்

சோழர்கள் காலம் வரலாற்றில் ஒரு நிகழ்வாக இருக்கும். சோழரும் பாண்டியரும் சேரரும் தமக்குள் அடிபட்டு அழிந்து போகாமல் இருந்திருந்தால் அக்காலம் இன்று நீட்சியாக இருந்திருக்கும். இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு தேசத்தை உருவாக்கியிருந்தால் அதுவே தமிழனுக்கு நிரந்தர அடயாளமாக இருந்திருக்கும். 

பலமான தேசங்களும் குறிப்பாக  தமது சுயநலன் சுரண்டலுக்காக சிறு இனக் குழுமங்களை அழிப்பது உலகில் புதியதல்ல. ரசியாவை பின்தள்ள  முஜாகுதீன்களை அன்று அமரிக்க உருவாக்கியது இன்றய ஐஎஸ்எஸ் சிரியப் போராளிகளை உருவாக்கியது. பல மில்லியன் மக்களின் சாவும் மில்லியன் குழந்தைகள் அநாதைகளாதலும் அகதியாதலும் என தொடர்கின்றது, இதையே பாகிஸ்தான் உளவுத்துறை காஸ்மீரில் செய்கின்றது. இவ்வாறான அணுகுமுறையைத்தான் இந்தியாவும் இலங்கைப் போராளிகள் விசயத்தில் செய்தது.   இலங்கை அரசும் மதம் கிழக்கு பிரதேசவாதம் மற்றும் படித்த புத்திஜீவிகளை வைத்து நிறைய விசயங்களை தனக்கு சாதகமாக்கியது. நாம் இவற்றுக்கெல்லாம் பலியாகக் கூடிய நிலையில் இருந்தோம் இன்னும் இருக்கின்றோம் என்பதுதான் எமது அழிவினதும் அடயாளங்களை இழப்பதின் சுட்சுமமே தவிர எல்லா பழியையும் தூக்கி புலிமீது போட்டுவிட்டு நாம் யோக்கியர் என்பதும் எமது சமூகத்தில் இருந்து தோன்றி மறைந்த புலிகளை எமது சமூகத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் வைத்து விமர்சிப்பதும் சாத்தியம் என்றால் அதன் பொருள் நாம் ஒரு சமூகமாக கூட என்னும் வளர்ச்சியடையவில்லை என்பதே, இந் நிலையில் நாம் இனம் என்றும் அதற்கு விடுதலையும் சுதந்திரமும் வேண்டும் என்கின்றறோம். 

உண்மையில் சோழர் காலத்திலும் சரி இப்பவும் சரி எமது அடயாளம் சாதியாக மதமாக பிரதேசமாக மட்டுமே முன்நிற்கின்றது. ஆனால் இவை இன்றும் எமக்குள் இருந்தாலும் இனமாக புற உலகத்தினர் எம்மை நோக்க இன்றய காலத்தில் புலிகள் பிரதான காரணமாக அமைந்தார்கள். 

 • Like 5
 • Thanks 2

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, ராசவன்னியன் said:

என்ன சாமி,  இப்படி பொசுக்குன்னு குட்டை உடைச்சு 'தமிழர்கள் நண்டுகளின் குழுமம்தான்..!' என கோடிட்டு சொல்லிவிட்டீர்களே..!

சோ சேட்.. tw_cold_sweat:

பரவாயில்லையே, சோழனுக்கு அடுத்து ஈழத்தமிழர்கள், தமிழனுக்கு ஒரு அடையாளத்தை பொறித்திடுவார்களென்ற நம்பிக்கையில் இருந்த எங்களைப் போன்றவர்களின் நினைப்பில் இப்படி மண்ணை அள்ளிtw_rage:ப்போட்டுவிட்டீர்களே..? 

மனிதரின் தேவைகள்தான் படைப்புக்களாகவும் வடிவங்களாகவும் படைக்க படுகின்றன.
புலிகளின் எழுச்சி வளர்ச்சி என்பது எமது இனத்தின் தேவையாக இருந்தபோதே தோன்றியது 
சாண்டமாருதன் கூறிய அனைத்து பிரிவினையும் கொண்ட ஒரு இனத்தின் வழிகாட்டியாகவும் 
படகோட்டியாகவும் வரும்போது புலிகளின் கடும்போக்கு தேவையானதாக இருந்தது.  என்னையே சுடுவதுக்கு புலிகள் கொண்டு சென்று வைத்திருந்தார்கள் பின்பு எங்கள் எல்லோரையும் விடுதலை செய்தார்கள். நானும் உங்களைப்போல போராடத்தானே போனேன் எனும் ஒருபக்க நியாயம் என்னிடமும் முன்பு இருந்தது புலிகள்மேல் வெறுப்பு பகைமை எல்லாம் எனக்கும் அப்போது இருந்தது. தமிழ் ஈழ விடுதலை என்று வரும்போது 
புலிகள் செய்தது மிக சரியான செயல் மட்டும்மல்ல செய்த நேரம் தான் மிகவும் சரியான நேரம். புலிகள் கொஞ்சம் தாமதித்து இருந்தால்கூட முள்ளிவாய்க்கால் போல் ஒரு பெரிய அழிவை நாம் ஒருவரை ஒருவர் வெட்டி கண்டிருப்போம். இயக்க மோதல் என்பது தொடராகத்தான் தொடர்ந்தது ....... சொந்த இயக்கத்தவரையும் ஏனைய இயக்கததவரையும் சுட்டும் வெட்டியும் கொல்லும் போக்கு புளட்டின் கொள்கையாக மாறி இருந்தது. 7 டெலா  எனும் அமைப்பின் தலைவரையும் (பிரான்சிஸ்) போராளிகளையும் சுட்டு கொன்றார்கள் பின்பு 8 புலி ஆதரவாளர்களை சுதுமலை எனும் இடத்தில் கொன்று புதைத்தார்கள். யாரும்  கேட்கவில்லை. வீணான அழிவு வரும் என்பதால் புலிகள் பொறுமை காத்தார்கள்.( நிறைகுடம் தளம்பாது). பின்பு எமது சொந்த இயக்கமான டெலோ எங்களுக்கு தலைவராக அவரைத்தான் தெரியும் தாஸை சுட்டு கொன்றார்கள் (இவர் புலிகளின் தளபதியான கிட்டுவின் நெருங்கிய நண்பன்). பின்பு பேச்சுவார்த்தை நடத்த வந்த புலிகளின் இன்னொரு தளபதியான லிங்கத்தை கொன்றார்கள். புலி பதுங்குவது பாய்வதுக்குத்தான் என்பது கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் போல ... அவர்கள் எங்கள் முகாம் வாசலில் வந்து நின்றபோதுதான் காலம்தாழ்த்தி புரிந்தது. அப்போது கூட மிகவும் நேர்த்தியாக ஒலிபெருக்கி மூலம்  அறிவிப்பு செய்து  தங்களிடம் வந்து சரண் அடையும்படி நேர அவகாசம் தந்துதான் பின்பு கைது செய்ய வந்தார்கள். கைதுசெய்ய பட்டவன் எனும் அவமானம் எனக்குள் இருந்தாலும் .... ஒரு தமிழனாக புலிகளின் வீரத்தையும் தன்னம்பிக்கையையும் கொள்கை உறுதியையும் பாராட்டியே தீர வேண்டும். காரணம் அப்போது ஆள்பலத்திலோ ஆயுத பலத்திலோ மேல் ஓங்கி நின்றவர்கள் நாம். பொற்கோவிலில் இந்திராகாந்தி  சீக்கியரிடம் இருந்து எடுத்த ஆர்பிஜி , எ கே எல்லாம் எங்களுக்குத்தான் தந்தார்கள். வீரம் தவிர்த்து அவர்களிடம்  வேறு எதுவும் இருக்கவில்லை. இப்போது தில்லுமுல்லு செய்துகொண்டு இருந்த ஈ பி ஆர் எல் எப் எனும் அமைப்பின் தலைவரான பட்பநாபா அவர்களுக்கு ஒரு உண்மை தெளிவாக புரிந்தது. டெலோவுக்கும் புலிகளுக்குமான சண்டையில் கூடிய எண்ணையை ஊற்றி புலிகளை அழித்ததால் தான் தனிக்காட்டு ராஜாவாகலாம் என்ற எண்ணம் தோண்றியது. ஆயுதங்களை இறக்கி ஏத்துவது டெலோ போராளிகளை வேறு வேறு இடங்களில்  ஒன்று சேர்ப்பது என்றும் தலைவர் சிறீசபாவை இந்தியா கொண்டு சென்று போரை புதுப்பித்து கொள்ளலாம் என்று களமிறங்கினார்கள். ஈ பி வாகனங்களை பல இடங்களில் புலிகள் டெலோ போராளிகளுடன் வழிமறித்தார்கள் வாய்த்தர்க்கம் நடந்தது .... புலிகள் தமக்கு பயந்து விடுகிறார்கள் என்ற பெருமிதத்தில்தான் அப்போது ஈ பி ஊருக்குள் கதை அளந்தார்கள். எங்கள் மேல் கை வைத்தால் தெரியும் இவர்களுக்கு என்று எமது ஊரிலேயே சொன்னார்களாம். காரணம் அப்போது ஆள்தொகையில் அவர்கள்தான் கூடுதலாக இருந்தார்கள். புலிகள் யார் போராடுவான் என்று பார்த்துதான் ஆள் சேர்ப்பார்கள்... இவர்கள் ரோட்டில் நின்ற எல்லோரையும் ஏற்றி செல்வார்கள். இரண்டு இயக்கத்துடன் ஒரே நேரத்தில் சண்டையை அவர்கள் சாணக்கியமாக தவிர்த்துக்கொண்டு வந்தார்கள்.  இந்த வாய்தர்க்கமும் முரண்பாடும் நாளும் நாளும் கூடியது  தப்பி இந்தியா போனவர்கள் இந்தியாவில் இருந்த டெலோ உறுப்பினர்கள் திடீர் திடீரென யாழ்ப்பாணம் ஈ பி முகாமில் தென்பட்டார்கள் ..... புலிகள் பல முறை பேசினார்கள் வாய்த்தர்க்கம் வரும் சென்று விடுவார்கள். இவர்கள் எம்மில் கை  வைத்தால்தான் புலிகளுக்கு தெரியும் என்று பெருமிதம் கொள்வார்கள். பின்பு ஒருநாள் உண்மையிலேயே ஒலிபெருக்கியுடனும் அறிவிப்புடனும் வந்துவிடார்கள்.
டெலோவுடன் சில இடங்களில் நேரடி மோதல் துப்பாக்கி சண்டை நடந்ததால் புலிகள் கடும்போக்கில் இருந்தார்கள் புலிகளுக்கும் இது புது அனுபவம் எப்படி கையாள்வது என்பதோ அல்லது திட்டம் போட்டு நடந்ததோ இல்லை. ஈ பி ஒரு கேளிக்கை விளையாட்டாக இருந்தது ... காரணம் அதில் இருந்த பெரும்பான்மை இளைஞர்கள் அப்பாவிகள்  பல பேர் ஆயுதங்களை கண்ணால் கண்டதுகூட இல்லை. எமது ஊரில் இருந்துதான்  படகில் ஏற்றி இந்தியா அனுப்பினோம் ஓடி ஓடி வந்துகொண்டே இருந்தார்கள். புலிகளுக்கும் தெரியும் தெரிந்துதான் விட்டார்கள். பின்பு புளட் ... 90 வீதம் பேச்சுவார்த்தை மூலமே முடிந்து விட்ட்து. இது புலிதான் என்பது தெரிந்தபின்பு அவர்களகாவே வாலை  சுருட்டிக்கொண்டு பேசுவது உத்தமம் எனும் முடிவுக்கு வந்தது வரவேற்க கூடியது.

இதுதான் இயக்க மோதலின் சுருக்கம் 
தனி தனியே ஊருக்கு ஊர் ஒரு கதை உண்டு. இதில் சில சம்பவங்களில் இத்தனை வருடம் தாண்டியும் நியாய படுத்த முடியாத சில சம்பவங்களும் தவறுகளும் சில புலி போராளிகள் மேல் உண்டு. புலிகளும் அதை நியாய படுத்த ஒருபோதும்  முனைந்ததில்லை. சில போராளிகளை தண்டித்தார்கள் சிலபேரை பதவி நீக்கம் செய்தார்கள். 

ஏமாற்றம் நம்பிக்கையீனம் என்பது எப்போதும் மனித இனத்தில் வருவதுதான் 
எமக்கு ஒரு பெருத்த பலவீனம் நிலப்பரப்பு தீவாக அமைந்துவிட்டது கடலை கட்டுப்படுத்தினால் 
எம்மை கட்டிவிடும் சாத்தியம் எதிரிக்கு கிடைத்த வரப்பிரதாஸம். இப்போதைய துரோகிகளின் அரசியல் 
மேடை இனத்தை விற்கும் போக்கு என்பதை நான் பாசிட்டிவ் ஆகவே பார்க்கிறேன். இப்போதைய இளைய சமுதாயத்துக்கு புலிகளின் தியாகம் பெரிதாக புரியவில்லை ... இவர்க்ளின் துரோகங்களும் அன்றாட ஏமாற்றங்களும்தான் அவர்களுக்கு சிந்தனையை கொடுக்கிறது. அடுத்தது எமக்கு கிடைக்க கூடியது பொருளாதார  போர்தான் வெற்றி பெற கூடிய அனைத்து சாத்தியங்களையும் நான் பார்க்கிறேன்.
தொலைநோக்கு உடையவர்கள் நகர்ந்துகொண்டு இருக்கிறார்கள். எதிரி இன பரம்பலை உருவாக்கி எமது பிரதேச அங்கீகாரத்தை தகர்க்க திட்டம் போட்டு நகருகிறான் .... இதை கொஞ்சம் நிறுத்தி வைக்க எமக்கு ஒரு அரசியல் பலம் அங்கு தேவை உள்ளது ....... அதை விடுத்து இனி வரும் போர் ... பொருளாதார போர் வெளியில் இருந்தே  இலகுவாக செய்து வெல்ல கூடியது. 

மீண்டும் எழுவோம் எனும் நம்பிக்கை எனக்கு இப்போது உண்டு.
உலக பொருளாதார போக்கு பாரிய மாற்றம் காண்கிறது உலக வங்கிக்கு சமமாக 
சீன வங்கி மூன்றாம் உலகுக்கு கடன் கொடுக்கிறது. டாலரில் வணிகம்  கிரெடிட் கார்டு போன்றவைக்கே ஆப்பு  வரும் அளவுக்கு எலெட்ரோனிக் பணம் வளர்கிறது.
எமக்கு புலிகள் போல வழிகாட்ட ஒரு நேர்த்தியான தலைமை மட்டும் வேண்டும். இதை காலம் உருவாக்கும். 

 • Like 5
 • Thanks 4

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, Maruthankerny said:

எமக்கு புலிகள் போல வழிகாட்ட ஒரு நேர்த்தியான தலைமை மட்டும் வேண்டும். இதை காலம் உருவாக்கும். 

மீண்டும் புலிகள் வருவதை விரும்புவதை, இயற்கை அன்னைகூட சகித்துக்கொள்ளாது.

தமிழினம் இலங்கையில் பூண்டோடு அழிக்கப்படுவதை பலர் விரும்புவதாகத் தெரிகிறது.

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, thulasie said:

மீண்டும் புலிகள் வருவதை விரும்புவதை, இயற்கை அன்னைகூட சகித்துக்கொள்ளாது.

தமிழினம் இலங்கையில் பூண்டோடு அழிக்கப்படுவதை பலர் விரும்புவதாகத் தெரிகிறது.

ஒரு செயற்கை அன்னையை உருவாக்கி பேட்டரியை கழட்டிவிட்டால் 
சகித்துக்கொண்டு இருப்பார்.

anymore questions? 

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, சண்டமாருதன் said:

சோழர்கள் காலம் வரலாற்றில் ஒரு நிகழ்வாக இருக்கும். சோழரும் பாண்டியரும் சேரரும் தமக்குள் அடிபட்டு அழிந்து போகாமல் இருந்திருந்தால் அக்காலம் இன்று நீட்சியாக இருந்திருக்கும். 

சேரன் மலையாளியாமே?

4 minutes ago, Maruthankerny said:

ஒரு செயற்கை அன்னையை உருவாக்கி பேட்டரியை கழட்டிவிட்டால் 
சகித்துக்கொண்டு இருப்பார்.

anymore questions? 

இலங்கை இராணுவமே சகிக்காது.

இந்திய அரசும் சகிக்காது.

இயற்கை அன்னை எங்கே சகிக்கப் போகிறாள்?

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, thulasie said:

இலங்கை இராணுவமே சகிக்காது.

இந்திய அரசும் சகிக்காது.

இவர்களுக்காக சகிக்க சொல்லி 
வங்காளதேச இராணுவத்துக்கு ஒரு ஈமெயில் அனுப்புவோம் 
வேற என்ன செய்யிறது? 

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
7 minutes ago, Maruthankerny said:

இவர்களுக்காக சகிக்க சொல்லி 
வங்காளதேச இராணுவத்துக்கு ஒரு ஈமெயில் அனுப்புவோம் 
வேற என்ன செய்யிறது? 

Text message is better than e-mail.

ஆயுள்காலம் முழுக்க கனவுலகில் சஞ்சரிப்பதைவிட,  ஒரு நாளாவது நனவுலகில் வாழ்ந்து பழகுவதுதான், தமிழினத்திற்கு இப்போது தேவை.

Edited by thulasie

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, thulasie said:

Text message is better than e-mail.

ஆயுள்காலம் முழுக்க கனவுலகில் சஞ்சரிப்பதைவிட,  ஒரு நாளாவது நனவுலகில் வாழ்ந்து பழகுவதுதான், தமிழினத்திற்கு இப்போது தேவை.

ஆயுள்காலம் முழுவதும் 'எல்லோரும் வாழ்க' என்று கடவுளை வேண்டுவதை விட்டு நாங்களும் வாழவேண்டும் என்று வேண்டுவோம்.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Paanch said:

ஆயுள்காலம் முழுவதும் 'எல்லோரும் வாழ்க' என்று கடவுளை வேண்டுவதை விட்டு நாங்களும் வாழவேண்டும் என்று வேண்டுவோம்.

எல்லாரும் வாழ்க என்றால், எம்மையும் சேர்த்துத்தான்.!

Share this post

Link to post
Share on other sites
On 3/17/2019 at 10:54 AM, சண்டமாருதன் said:

உண்மையில் சோழர் காலத்திலும் சரி இப்பவும் சரி எமது அடயாளம் சாதியாக மதமாக பிரதேசமாக மட்டுமே முன்நிற்கின்றது. ஆனால் இவை இன்றும் எமக்குள் இருந்தாலும் இனமாக புற உலகத்தினர் எம்மை நோக்க இன்றய காலத்தில் புலிகள் பிரதான காரணமாக அமைந்தார்கள். 

அருமையாதொரு விளக்கம்.

Share this post

Link to post
Share on other sites
On 3/17/2019 at 6:54 PM, சண்டமாருதன் said:

உண்மையில் சோழர் காலத்திலும் சரி இப்பவும் சரி எமது அடயாளம் சாதியாக மதமாக பிரதேசமாக மட்டுமே முன்நிற்கின்றது. ஆனால் இவை இன்றும் எமக்குள் இருந்தாலும் இனமாக புற உலகத்தினர் எம்மை நோக்க இன்றய காலத்தில் புலிகள் பிரதான காரணமாக அமைந்தார்கள். 

நீங்கள் இப்படி எல்லாம் உண்மைகளைப் புட்டுப் புட்டு எழுதக்கூடாது சண்டமாருதன் அவர்களே..! 'உண்மை சுடும்' உண்மையின் சூட்டைத் தாங்கமுடியாது எங்கள் களத்தில்கூட சிலர் வெந்து நொந்து கருகிப் போய்விடுவார்களே,!!

எல்லோரும் வாழவேண்டும். 🙏

Share this post

Link to post
Share on other sites
On 3/14/2019 at 4:12 PM, ஜீவன் சிவா said:

இப்போது இங்கு ஒரு முன்னாள் போராளிக்கு உதவ ஒரு திரி திறந்து பாருங்கள் 

விசுகுவைத் தவிர அநேகமானவர்கள் ஓடி ஒளிந்து விடுவார்கள்.

ஜீவன், ஊரெல்லாம் சொல்லி செய்வதற்கு பெயர் உதவியல்ல அதை விளம்பரம் என்று நினைப்பவன் நான். எம்மில் பலர் வெளியில் சொல்லாமலேயே முன்னாள் போராளிகளுக்கும் , கஷ்டப்படும்  அவர்களது குடும்பங்களுக்கும் உதவிக்கொண்டுதான் இருக்கிறோம். 

 • Like 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Eppothum Thamizhan said:
  On 3/14/2019 at 3:12 PM, ஜீவன் சிவா said:

இப்போது இங்கு ஒரு முன்னாள் போராளிக்கு உதவ ஒரு திரி திறந்து பாருங்கள் 

விசுகுவைத் தவிர அநேகமானவர்கள் ஓடி ஒளிந்து விடுவார்கள்.

'நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.'

விசுகு அவர்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்.!! 🙏

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
On 3/14/2019 at 11:49 PM, thulasie said:

மாற்று இயக்கங்களின் அட்டூழியங்களை பட்டியலிட்டு, புலிகள் செய்த அட்டூழியங்கள் ஒன்றுமே இல்லையென்று ஆசுவாசப்படுகிறீர்கள்.

புலிகள் செய்த அராஜகங்களை பட்டியல் போட ஏன் உங்களுக்கு தயக்கம்?

ஏன் அவர்கள் செய்தது, பூவுலகத்திற்கு தெரியக்கூடாது என்று உங்கள் ஆழ்மனம் விரும்புகிறது?

என்னமோ மாற்று இயக்கங்களின் அட்டூழியங்களை நான் ஏற்றுக்கொண்டது போலவும், இந்தியாவிற்கு நான் ஆதரவு கொடுப்பவனைப் போலவும் கொக்கரிக்கிறீர்கள்.

புலிகள் எப்படிப்பட்ட மனித விரோதிகளோ, அதுபோலத்தான் மாற்று இயக்கங்களும் இந்திய அரசும். 

மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட காடைத்தனங்கள் வேண்டுமானால் கூட, குறைவாக இருக்கலாம்.

பயங்கரவாதத்தில் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.

ரகு , சில *** கருத்துக்களுக்கு பதில்  எழுதாமல் இருப்பதே சிறந்தது. *** இங்கு கருத்து எழுத வருவதே திரியின் போக்கை மாற்றி புலி  வாந்தி எடுக்கத்தான். விட்டுவிடுங்கள் எடுத்துவிட்டுப்போகட்டும்.  அவர்களுக்கே ஒருநாள் புரியும் வாந்தி எடுத்தது தங்கள்  உடலில்தான் என்று!

Edited by மோகன்
*** நீக்கப்பட்டுள்ளது.

Share this post

Link to post
Share on other sites
On 3/14/2019 at 3:12 PM, ஜீவன் சிவா said:

இப்போது இங்கு ஒரு முன்னாள் போராளிக்கு உதவ ஒரு திரி திறந்து பாருங்கள் 

விசுகுவைத் தவிர அநேகமானவர்கள் ஓடி ஒளிந்து விடுவார்கள்.

இல்லை  சகோ

இது போன்று  ஒருவரை  குறிப்பிட்டு  எழுதுவது கூட

எதிர்மறையான  விளைவையே  தரும்

அனுபவத்தில்  சிறு  துளி  பெருவெள்ளம்

மற்றும் எல்லோரும்  கயிறு   பிடிக்கும் போது ஒரு செயல்  இலகுவாகும்

அதன்படியே முடியுமோ  முடியாதோ

ஓடிச்சென்று  பங்காளியாவது  இலகுவாக்குவதற்கே...

Share this post

Link to post
Share on other sites
On 3/17/2019 at 10:04 PM, ராசவன்னியன் said:

பரவாயில்லையே, சோழனுக்கு அடுத்து ஈழத்தமிழர்கள், தமிழனுக்கு ஒரு அடையாளத்தை பொறித்திடுவார்களென்ற நம்பிக்கையில் இருந்த எங்களைப் போன்றவர்களின் நினைப்பில் இப்படி மண்ணை அள்ளிப்போட்டுவிட்டீர்களே..? tw_rage:

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கீட்டாங்களே சார் - பதில் ??????????

புலிகளும் சரி மற்ற சகல இயக்கங்களும் சரி ஒன்றும் வானில் இருந்து குதித்தவர்கள் இல்லை சார் 

எமது சமுதாயத்தில் பிறந்து தவறான வழிகாட்டலினால் தாமும் அழிந்து மற்றவர்களையும் அழித்து தமிழ் மக்களை நிர்க்கதிக்குள் தள்ளிவிட்டவர்கள்.

இன்றும் புலம்பெயர்ந்திருந்து அந்த எரியும் நெருப்புக்குள் பெட்ரோல் ஊத்தும் அந்த அன்பான பெற்றோல் கான்களை நம்பி மோசம் போக வேண்டாம் - நண்பரே 

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
4 hours ago, ஜீவன் சிவா said:

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கீட்டாங்களே சார் - பதில் ??????????

பதில் ??????????

பொதுவாக கிராமங்களில் நன்றாக படிக்கும் பையன்களைக் கண்டால்ஊரிலுள்ளவர்கள் "என்ன தம்பி நன்றாக படிக்கிறாயா..? படித்து முன்னுக்கு வந்து நம்ம ஊருக்கு பெருமை சேர்க்கணும்..!" என அவனில் அக்கறையுடனும், படிப்பறிவை பார்த்து மதிப்புடனும் சொல்வதுண்டு.

அது ஊக்கப்படுத்தலேயன்றி உசுப்பேற்றுவதல்ல. சிறு கரிசனையுடன் சொல்வதை ஏற்பதும், மறுப்பதும் அந்தப் பையன்களின் விருப்பம், நண்பரே.

Edited by ராசவன்னியன்

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.