Jump to content

ஐ.நாவைச் சீண்டி விடுமா- அரச தலைவரின் சவால்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவைச் சீண்டி விடுமா- அரச தலைவரின் சவால்!!

பதிவேற்றிய காலம்: Mar 13, 2019

ஐ.நாவுக்கே சவால் விடும் வகை­யில் அரச தலை­வர் கருத்து வெளி­யிட்­டுள்­ளார். இலங்­கைக்கு எதி­ராக ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இனி­மேல் தீர்­மா­னம் ஏதா­வது நிறை­வேற்­றப்­பட்­டால் அதை ஏற்­ப­தற்­குத் தாம் தயா­ரில்­லை­யெ­ன­வும் அவர் தெரி­வித்­துள்­ளார். அவ­ரது கருத்­துக்­க­ளைக் கேட்­கும்­போது இலங்கை ஐ.நாவின் ஓர் உறுப்பு நாடா என்ற சந்­தே­கம்­தான் மன­தில் எழு­கின்­றது.

அரச தலை­வர் தெரி­வித்த இன்­னு­மொரு கருத்­தும் சிந்­த­னை­யைத் தூண்­டு­கின்­றது. ஏற்­க­னவே இலங்­கைக்கு எதி­ராக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­கள் கலா­வ­தி­யா­கி­விட்ட நிலை­யில் அவை தொடர்­பாக இனி­யும் பேசிக்­கொண்­டி­ருப்­பது வீண் வேலை என்று குறிப்­பிட்­டுள்­ளார். ஐ.நாவைக் கிள்­ளுக் கீரை­யாக நினைக்­கின்ற அரச தலை­வ­ரின் மனப்­பான்மை இதன் மூல­மா­கத் தெளி­வா­கத் தெரி­கின்­றது.

வல்­ல­ரசு நாடு­க­ளும் வளர்ந்த நாடு­க­ளும் ஐ.நாவுக்கு மதிப்­ப­ளிக்­காத நிலை­யில் இலங்கை போன்ற அபி­வி­ருத்தி காணாத சிறிய நாடு­க­ளும் அந்த வழி­யில் செல்­வதை எந்­த­வ­கை­யி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.

பான் கீ மூன் ஐ.நா. பொதுச் செய­ல­ராக இருந்­த­போது அவர் இலங்­கைக்கு வருகை தந்து போரின் பின்­ன­ரான நில­மை­களை ஆய்வு செய்­தார். அரச தலை­வர் பத­வி­யில் அமர்ந்­தி­ருந்த மகிந்த ராஜ­பக்ச அவ­ருக்­குச் சில உறு­தி­மொ­ழி­க­ளை­யும் வழங்­கி­யி­ருந்­தார். அவற்­றில் எவை­யுமே நிறை­ வேற்­றப்­ப­ட­ வில்லை.

உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ போர்க் குற்­றங்­கள் தொடர்­பா­கத் தம்­மு­டன் எவ­ருமே கலந்­து­ரை­யாட முடி­யா­தென அரச தலை­வர் தெரி­வித்­தமை அவர் இலங்­கை­யின் அரச தலை­வர் பத­வியை இன்­ன­மும் வகிக்­கி­றாரா என்ற சந்­தே­கத்­தைப் பல­ரி­ட­மும் எழுப்­பி­யி­ருக்­கக்­கூ­டும். ஒரு நாட்­டில் நடந்து முடிந்த விட­யம் தொடர்­பாக அந்த நாட்­டின் அரச தலை­வ­ரு­டன் பேசாது வேறு எவ­ரு­டன் பேச முடி­யும்?

இரண்­டா­வது உல­கப் போர் முடிந்த கையோடு இன்­னு­மொரு உல­கப்­போர் இந்­த­வு­ல­கில் இடம்­பெ­றக்­கூ­டாது என்ற நல்ல நோக்­கத்­து­டன் அமைக்­கப்­பட்­டது ஐக்­கிய நாடு­கள் சபை. இரு­நூ­றுக்­கும் மேற்­பட்ட நாடு­கள் இதில் அங்­கம் வகிக்­கின்­றன. மனித உரி­மை­கள் சபை ஐ.நாவின் மிக­வும் முக்­கி­ய­மா­ன­தொரு அமைப்­பா­கும். மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் இதற்­குப் பொறுப்­பா­க­வுள்­ளார்.

இறு­திப் போர் இடம்­பெற்­ற­போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமி­ழர்­கள் கொன்­றொ­ழிக்­கப்­பட்­ட­து­டன் போர்க்­குற்­றங்­க­ளும், மனி­த­உ­ரிமை மீறல்­க­ளும் தாரா­ள­மா­கவே இடம்­பெற்­றுள்­ளன. ஆனால் இவற்றை மூடி மறைக்­கின்ற செயற்­பா­டு­க­ளில் இலங்கை அரசு மட்­டு­மல்­லாது பெரும்­பான்­மை­யி­னத்­தைச் சேர்ந்த பல­ரும் ஈடு­பட்­டுள்­ள­னர். அரச தலை­வர் இதில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­தைக் காண முடி­கின்­றது. ஐ.நாவின் பல­வீ­னத்தை அவர் நன்­றா­கவே பயன்­ப­டுத்­து­கி­றார். இல்­லா­விட்­டால் ஐ.நா.தொடர்­பாக இறு­மாப்­பு­டன் அவர் கருத்து வெளி­யிட்­டி­ருக்க மாட்­டார்.

 

இதே­வேளை ஐ.நா. மனித உரி­மை­கள் சபைக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தில் இலங்கை மெத்­த­ன­மா­கவே நடந்துள்­ளது. இலங்­கைக்கு எதி­ரா­கக் கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட வேண்­டு­மென ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரான மிச்லே பச்­செ­லெட் அம்­மை­யார் அறிக்­கை­யில் பரிந்­துரை செய்­துள்­ளார். இத­ன­டிப்­ப­டை­யில் இலங்­கைக்கு எதி­ராக நட­வ­டிக்கை மேற்­கொள்ள முடி­யும். இந்த நிலை­யில்­தான் இலங்­கை­யின் அரச தலை­வர் ஐ.நாவுக்­குச் சவால் விடுத்­துள்­ளார்.

ஐ.நா. இனி­யா­வது எந்­த­வொரு நாட்­டின் விவ­கா­ரங்­க­ளி­லும் உறு­தி­யான தீர்­மா­னத்தை மேற்­கொள்­வ­து­டன் உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கும் முன்­வர வேண்­டும். பெரிய நாடு­க­ளின் கைப்பொம்­மை­யாக இருப்­ப­தால் அது அமைக்­கப்­பட்­ட­தன் நோக்­கமே திசை மாறிப்­போய்­விட்­டது. தீர்­மா­னங்­களை நிறை­வேற்றி வைப்­ப­தும் காலத்­துக்­குக் காலம் கால அவ­கா­சத்தை வழங்­கு­வ­தும் மட்­டுமே ஐ.நா. அமைப்­புக்­க­ளின் பணி­யாக இருக்­கக்­கூ­டாது.

நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களை நடை­மு­றைப்­ப­டு­வ­தி­லும் கண்­ணும் கருத்­து­மா­கச் செயற்­பட வேண்­டும். இதில் தவறு ஏற்­பட்­ட­தன் கார­ண­மா­கவே இலங்­கை­யின் அரச தலை­வர் சவால் விடு­ம­ள­வுக்கு நிலைமை எல்லை மீறிச் சென்று விட்­டது. அரச தலை­வர் என்ற வகை­யில் படை­யி­ன­ரால் இழைக்­கப்­பட்ட போர்க் குற்­றங்­க­ளுக்கு மைத்­தி­ரி­பால சிறி­சேன பொறுப்­புக் கூற­வேண்­டும். அதி­லி­ருந்து மைத்­தி­ரி­பால நழுவ முடி­யாது. ஐ.நாவும் அவரை நழுவ அனு­ம­திக்­கக் கூடாது.

 

https://newuthayan.com/story/10/ஐ-நாவைச்-சீண்டி-விடுமா-அர.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.