Jump to content

கால­அ­வ­கா­சம் வழங்­கு­வ­தால்- நீதி கிடைத்து விடுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கால­அ­வ­கா­சம் வழங்­கு­வ­தால்- நீதி கிடைத்து விடுமா?

பதிவேற்றிய காலம்: Mar 13, 2019

இலங்­கைக்­குக் கால அவ­கா­சம் வழங்­கு­வது தொடர்­பா­கக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள விளக்­கம் ஏற்­றுக் கொள்­ளத்­தக்­க­தா­கத் தென்­ப­ட­வில்லை. கால­அ­வ­கா­சம் வழங்­கி­னால்­தான் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் இலங்கை மீதான கண்­கா­ணிப்பு நீடித்­தி­ருக்­கு­ மெ­னக் கூறப்­ப­டு­வ­தை­ யும் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.

போர் ஓய்ந்து பத்து ஆண்­டு­கள் நிறை­வ­டை­கின்ற நிலை­யில் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளுக்­குப் பொறுப்­புக் கூறு­வ­தி­ லி­ருந்து இலங்கை நழுவி வரு­வ­தையே காண முடி­கின்­றது. ஒவ்­வொரு கூட்­டத் தொட­ரி­லும் கால அவ­கா­சம் வழங்­கு­வது வாடிக்­கை­யா­கவே மாறி­விட்­டது. நடப்­புக் கூட்­டத் தொட­ரி­லும் பிரிட்­டன் தலை­மை­யில் நிறை­வேற்­றப்­ப­ட­வுள்ள தீர்­மா­னத்­தில் இலங்­கைக்கு இரண்டு வரு­டங்­கள் கால அவ­கா­சம் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக நம்­ப­க­மா­கத் தெரிய வரு­கின்­றது. கூட்­ட­மைப்­புக்­குள் இலங்­கைக்­குக் கால அவ­கா­சம் வழங்­கப்­ப­டு­வது தொடர்­பாக முரண்­பாடு தோன்­றி­யுள்­ள­தை­யும் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

 

போர்க்குற்றம் என்பது
ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதொன்று
இறு­திப் போரின்­போது போர்க்­குற்­றங்­க­ளும் மனித உரிமை மீறல்­க­ளும் இடம்­பெற்­றமை தொடர்­பாக உரிய ஆதா­ரங்­க­ளு­டன் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் கவ­னத்­துக்கு ஏற்­க­னவே கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இவை தொடர்­பாக ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் கூட்­டத் தொடர்­க­ளில் ஆரா­யப்­பட்டு இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னங்­க­ளும் நிறை­வேற்றி வைக்­கப்­பட்­டன. ஆனால் இலங்கை இது தொடர்­பாக அலட்­டிக் கொள்­ள­வே­யில்லை. அரச தலை­வர் உள்­ளிட்ட தென்­ப­குதி அர­சி­யல்­வா­தி­கள் படை­யி­னர் மீதான எந்த விசா­ர­ணை­ யும் இடம்­பெ­று­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்­லை­யெ­னக் கூறி வந்­த­னர். பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­கள் தொடர்­பாக இவர்­கள் சிறி­தும் அக்­கறை காட்­ட­வில்லை.

முன்­னாள் அரச தலை­வ­ரான சந்­தி­ரிகா அம்­மை­யார் முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யான சரத் பொன்­சேகா, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோர் போர்க் குற்­றங்­கள் இடம்­பெற்­றதை உறுதி செய்­த­னர். போர்க்­குற்­றங்­கள் இடம்­பெற்­ற­தற்கு இதை­விட வேறு ஆதா­ரங்­கள் தேவை­யில்லை. சரத்­பொன்­சே­காவை அழைத்து விசா­ர­ணை­ களை மேற்­கொண்­டால் குற்­றச் செயல்­க­ளின் பின்­ன­ணி­யில் இருந்­த­வர்­கள் தொடர்­பான விவ­ரங்­க­ ளைத் துல்­லி­ய­மாக அறிந்­து­கொள்ள முடி­யும்.

ஆளுநரின் நியமனம்
சதிச் செயலா?
ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் கூட்­டத் தொட­ரில் அர­சின் சார்­பில் மூவ­ரைக் கொண்ட குழு­வொன்று செல்­ல­வுள்­ள­தாக அரச தலை­வர் கூறி­ யுள்­ளமை கவ­னத்­தில் கொள்­ளத்­தக்­கது. தமி­ழ­ரான வடக்கு ஆளு­நர் சுரேன் ராக­வன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சரத் அமு­னு­கம, மகிந்த சம­ர­சிங்க ஆகிய மூவ­ருமே அந்­தக் குழு­வில் இடம்­பெற்­றுள்­ள­னர். வடக்கு ஆளு­ந­ரைத் தேர்ந்­தெ­டுத்­த­மைக்கு உள்­நோக்­கம் இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது. அவ­ரொரு தமி­ழர் என்­ப­தும் போர் இடம்­பெற்ற வடக்­கின் ஆளு­ந­ரா­கப் பதவி வகிக்­கி­றார் என்­ப­தும் குறிப்­பி­ டத்­தக்க அம்­சங்­க­ளா­கும். வெளி­நாட்டு அழுத்­த­மில்­லாத சூழ­லில் பிரச்­சி­னை க­ளுக்­குத் தீர்­வு­காண வேண்­டு­மென ஜெனி­வா­வில் வைத்து இவ­ரது வாயால் சொல்ல வைப்­பதே அரச தலை­வ­ரின் உள்­நோக்­க­மா­கும்.

ஆனால் ஜெனிவா அமர்­வில் போர்க்­குற்­றங்­கள் தொடர்­பா­கவோ அல்­லது தமி­ழர்­கள் எதிர்­கொண்ட பேர­ழிவு தொடர்­பா­கவே பேசு­வதை அரச தலை­வர் அறவே விரும்­ப­வில்­லை­ யென்­பது தெளி­வா­கத் தெரி­கின்­றது. ‘எமது பிரச்­சி­னை­களை நாமே பார்த்­துக் கொள்­ளு­கின்­றோம், பழை­ய­வற்றை எவ­ருமே கிளற வேண்­டாம்’ என்று அவர் கூறி­ய­தன் மூல­மாக அவ­ரது நோக்­கம் தெளி­வா­கவே தெரி­கின்­றது. போர் இடம்­பெற்று பத்து ஆண்­டு­கள் முடிவ­டைந்­தால் பழைய வடுக்­க­ளைக் கிள­று­வ­தன் மூல­மாக எவ்­வித பய­னு­மில்­லை­யெ­னக் கூறு­கின்ற அரச தலை­வர் இன்­ன­மும் இரண்டு ஆண்­டு­கள் கழிந்­து­விட்­டால் சக­ல­தை­யும் மறக்­கு­மாறு அறி­வுரை கூறு­வா­ரென எதிர்­பார்க்க முடி­யும்.

 

தமிழ்­மக்­க­ளின் ஏக பிர­தி­நி­தி­கள் என்ற வகை­யில் கூட்­ட­மைப்­பி­ன­ ருக்கு முக்­கி­ய­மான கட­மை­கள் உள்­ளன. புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பாக அவர்­கள் கொண்­டி­ருந்த நம்­பிக்கை தகர்ந்­து­போன நிலை­யில் மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்­டும் வகை­யில் செயற்­ப­ட­வேண்­டிய தேவை­யும் தற்­போது எழுந்­துள்­ளது. ஜெனி­வா­வில் இலங்­கைக்­குக் கால அவ­கா­சம் வழங்­கு­வ­தன் பின்­ன­ணி­யில் கூட்­ட­மைப்பு இருப்­ப­தாக மக்­கள் மத்­தி­யில் சந்­தே­கம் எழுந்­துள்ள நிலை­யில் அதை உறுதி செய்­வது போன்று சம்­பந்­தன் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கி­றார்.

ஐ.நா. தீர்­மா­னத்­தைக் குப்­பைத் தொட்­டி­யில் வீசா­மல் இருக்க வேண்­டு­மா­னால் இலங்­கைக்கு கால அவ­கா­சம் வழங்க­வேண்­டு­மென அவர் கூறி­யமை சரி­யா­கத் தெரி­ய­வில்லை. கால அவ­கா­சம் தொடர்ந்து வழங்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருந்­தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­கவே மாட்­டாது. இலங்கை அரசு ஐ.நா. மட்­டு­மல்­லாது பன்­னாட்­டுச் சமூ­கத்­தை­யும் ஏமாற்­று­வ­தற்கு முயற்சி செய்­வதை நாம் முத­லில் புரிந்­து­கொள்ள வேண்­டும். அர­சின் கபட நோக்­கத்­தைப் புரிந்­து­கொண்டு அதை முறி­ய­டிப்­ப­தற்­கான முயற்­சி­களே கூட்­ட­மைப்­புக்கு இன்று தேவைப்­ப­டு­கின்­றது.

 

https://newuthayan.com/story/10/காலஅவகாசம்-வழங்குவ.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.