யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

இந்தியா 35 ஓட்டங்களால் தோல்வி – சொந்த மண்ணில் ஒருநாள் தொடரையும் இழந்தது!

Recommended Posts

இந்தியா 35 ஓட்டங்களால் தோல்வி – சொந்த மண்ணில் ஒருநாள் தொடரையும் இழந்தது!

aus-ind.jpg

இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ஓட்டங்களால் தோல்வியடைந்து, ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது.

இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரரில் முதல் நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில், 5-வதும் இறுதியுமான போட்டி டெல்லியில் நடைபெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி 9 விக்கெட்களை இழந்து 272 ஓட்டங்களை பெற்றது.

அவ்வணி சார்பாக உஷ்மான் கவாஜா 100 ஓட்டங்களையும் பீட்டர் ஹான்ட்ஸ்கொப் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்களையும், மொஹம்மட் சமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 273 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 237 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 35 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாடத்தில் ரோஹித் சர்மா 56 ஓட்டங்களையும், இறுதி நேரத்தில் சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுத்த புவனேஸ்வர் குமார் 46 ஓட்டங்களையும், கேதர் யாதவ் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில், அடம் சம்பா 3 விக்கெட்களையும், பெட் கம்மிங்க்ஸ்,  ரிச்சட்ஸ்சன், ஸ்டொய்னிஸ், ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை அவுஸ்ரேலிய அணி கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் சதம் பெற்று அணியின் வெற்றிக்கு பங்காற்றிய உஸ்மன் கவாஜா போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் தெரிவானார்.

முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடரை வெற்றி கொண்டிருந்த அவுஸ்ரேலிய அணி, ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது.

D1jVZVUWwAAaLxU.jpg

D1jLAcAWkAA32gf.jpg

D1jLAAeXcAA7yow-1.jpgD1jK_yzXcAA-drg-1.jpg

D1jQTYXW0AAgVoe.jpg

 

 

http://athavannews.com/35-ஓட்டங்களால்-தோல்வி-சொந்/

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • பயங்கரவாத நடவடிக்கைகளோடு நேரடியாக சம்பந்தப்படாமல், போதிய ஆதாரங்களின்றி அவசரகாலச் சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுத்த வேண்டுகோளை சாதகமாக பரிசீலிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பதில் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவிடம் தொலைபேசி ஊடாக பணிப்புரை விடுத்தார்கள். அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களில் குற்றமிழைக்காதவர்கள் என இனம்காணப்பட்டவர்களை விடுக்குமாறு, மூன்று வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற பாதுகாப்பு பேரவைக் கூட்டத்திலும் தாம் கூறியிருந்தாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் இனவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தொடர்பில், முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று சனிக்கிழமை (25) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை அவரது இல்லத்தில் சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடினர். இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் பிரதிநிதிகள் சார்பில், சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதியிடம் விளக்கிக் கூறினார். ஜனாதிபதியுடனான இந்த முக்கிய சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், எம்.எச்.ஏ. ஹலீம், இராஜாங்க அமைச்சர்களான அலிசாஹிர் மெளலானா, எம்.எஸ். அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பெளசி, எம்.எஸ். தெளபீக், எம்.ஐ.எம். மன்சூர், காதர் மஸ்தான், எஸ்.எம்.எம். இஸ்மாயில், பைசர் முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்டனர். தேடுதல் நடவடிக்கைகளின்போது அல்குர்ஆன் பிரதிகள், அரபு மொழியிலான நூல்கள், பத்திரிகைகள் என்பவற்றை தம்வசம் வைத்திருந்தனர் என்ற காரணத்தினால் அப்பாவிகள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புத் தரப்பினருக்கு போதிய தெளிவின்மையால் நடைபெறும் இவ்வாறான கைதுகள் எதிர்காலத்திலும் தொடர இடமளிக்ககூடாதென கூறப்பட்டது. கத்தி மற்றும் வாள் போன்றவற்றை வீடுகளில் வைத்திருப்பவர்கள் பற்றி பேசப்பட்டபோது, ஜனாதிபதி தம்மிடமும் வாள் இருப்பதாகக் கூறினார். பாரதூரமான குற்றச்செயல்களை புரிந்தவர்களுடன், தற்போது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களை ஒன்றாக விளக்கமறியலில் ஒன்றாக தங்கவைப்பதினால் ஏற்படும் விபரீதங்கள் பற்றியும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் போன்றவற்றின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மீதான வழக்குகளை கையாள்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் தனியானதொரு பிரிவை நிறுவுவதாக இதன்போது தீர்மானிக்கப்பட்டது. இப்பேச்சுவார்த்தையின் போது சமூகமளித்திருந்த பொலிஸ் திணைக்கள குறைகேள் அதிகாரி (ஒம்புட்ஸ்மன்) பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.எம்.எம். விக்கிரமசிங்கவுக்கு இது தொடர்பில் கவனிக்குமாறு உத்தரவிடப்பட்டது. முஸ்லிம் பெண்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பொது இடங்களிலும் முகம் தெரியக்கூடிய வகையிலும், காதுகளையும் தலையையும் மறைப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது என்பதால், இதுதொடர்பில் தெளிவூட்டும் வகையிலான உத்தியோகபூர்வ சுற்றுநிருபத்தை வெளியிடுமாறு பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் அந்த அமைச்சின் செயலாளருக்கு உடனடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இதன்போது அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழங்களில் பெண்கள் அணியவேண்டிய ஆடை விவகாரத்தில் விடுத்துள்ள அறிவுறுத்தலை முன்னுதாரணமாக வைத்து செயற்படுமாறு ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். புனித ரமழான் நோன்பின் இறுதிப் பத்து நாட்களிலும் முஸ்லிம்கள் சன்மார்க்க கடமைகளில் அதிகமாக ஈடுபடுவதனால், அவசியமற்ற தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் காரணமாக மக்கள் அசெளகரியத்தை எதிர்நோக்குவதால் அவற்றை தளர்த்துமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை செவிமடுத்த ஜனாதிபதி, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவை தொடர்புகொண்டு அதற்கான பணிப்புரையை விடுத்தார். சில ஊடகங்கள் பொறுப்பற்ற ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான விசமப் பிரசாரத்திலும் செய்திகளை மிகைப்படுத்தி பெரும்பான்மை மக்கள் மத்தியில் வீணான அச்சத்தை உண்டுபண்டும் விதத்தில் நடந்துகொள்ளும் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது. அத்துடன் இனவாதத்தை தூண்டும் விதத்தில் பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவதை தடைசெய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறினார். பெரும்பான்மை இனத்தவர்களின் 4000 பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு அறுவைச்சிகிச்சை மேற்கொண்டதாக சிங்கள தினசரி பத்திரிகையொன்று வியாழக்கிழமை தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் முஸ்லிம் வைத்தியர் ஒருவரின் பெயர் குறிப்பிட்டு சனிக்கிழமை அதே பத்திரிகை தலைப்புச் செய்தி பிரசுரிப்பதையும் சுட்டிக்காட்டப்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இவ்வாறான அறுவைச் சிகிச்சைகளை வைத்தியர் ஒருவர் தனித்துச் செய்வதில்லை. குழுவினராகத்தான் அதனை மேற்கொள்கின்றனர் என்றார். குறித்த வைத்தியர் பெருந்தொகைப் பணத்தை வைத்திருந்தாகக்கூறி தற்போது பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அப்படியானால், இந்த விவகாரத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களமே கையாண்டிருக்க வேண்டும் என்று பிரஸ்தாபிக்கப்பட்டது. ஊடகப்பிரிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் http://globaltamilnews.net/2019/122699/
    • கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல்களை கோரிய போதும் அவற்றை பெற்றுக்கொள்ள முடியாது நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திடம் கடந்த 12-03-2019 அன்று தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் மாவட்டத்தில் கடந்த 2016,2017,2018 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து மில்லியனுக்கு மேற்பட்ட அபிவிருத்திப் பணிகள் என்ன? அவற்றுக்கான கேள்விக் கோரல் எந்த பத்திரிகைகளில் எந்த திகதியில் கோரப்பட்டது? எத்தனை விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன? யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது? என்பன கோரப்பட்டது. ஆனால் இவற்றுக்கு உரிய காலத்தில் எந்த பதிலையும் வழங்காத மாவட்டச் செயலகம் கடந்த 09-05-2019 அன்று 2018 ஆண்டுக்குரியது எனக் கூறப்பட்டு எட்டு ஒப்பந்த பணிகளின் விபரங்களை மாத்திரம் வழங்கியிருந்தது. ஆனால் கடந்த ஆண்டு மாவட்டத்தில் ஐந்து மில்லியன் தொகைக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் ஏராளம் உண்டு. அத்தோடு 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்குரிய தகவல்களை மாவட்டச் செயலகம் வழங்கவில்லை. இதனை தவிர கடந்த 12-04-2019 மற்றும் மாவட்ட கல்வி அபிவிருத்தி நிதியத்தில் எவ்வளவு நிதி காணப்படுகிறது? குறித்து நிதி எவ்வளவு காலமாக திரட்டப்படுகிறது? எவ்வாறு சேகரிக்கப்படுகிறது? இதுவரை என்னென்ன தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது? போன்ற விபரங்கள் கோரப்பட்டிருந்தன. ஆனால் அவற்றுக்கும் இச் செய்தி எழுதப்படும் வரை எந்த பதிலையும் மாவட்டச் செயலகம் வழங்கவில்லை. ஊடகவியலாளர்களால் கோரப்படுகின்ற தகவல்களையே மாவட்டச் செயலகம் வழங்காது சட்டத்தை உதாசீனம் செய்கிறது என்றால் மக்கள் கோருகின்ற தகவல்களுக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலகம் எவ்வாறு நடந்துகொள்ளும் என்பது குறித்து கேள்வி எழுப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2019/122688/
    • தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் எந்த அளவிலும் ஒற்றுமையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், “விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காகத் தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள். எனினும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவரின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது ஒரு பைத்தியக்காரத்தனம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். #ISIS #eastersundayattacklk #LTTE #SLMC #ரவூப்ஹக்கீம் #தமிழீழவிடுதலைப்புலிகள் http://globaltamilnews.net/2019/122675/
    • சரி சரி, அவை முந்தி கட்டினா என்ன பிந்தி கட்டினா என்ன. ஏதோ கட்டி முடிக்கட்டும். 😀 ஆங்கில ஊடகமொன்றில் சீனா இன்னொரு கொள்கலன் முனைய அபிவிருத்தியை செய்வதற்கான உரிமையை கொண்டிருக்கிறது என வாசித்தேன். அது நீங்கள் கூறுவது போல் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியாக இருக்கவும் கூடும்.