யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
சாமானியன்

சோகத்தின் கிறுக்கல்கள்

Recommended Posts

Dr Abdul Kalam அவர்கள்  மறைந்த  நேரம்  வாய்  விட்டு  அழுதேன்.    அந்த  நேரம்   கிறுக்கியது 

 

நானும் இட்ட தீ மூள்க மூள்கவே....

 

இன்றைய  காலை  குளியலின்  வெந்நீர்   சூடு 

காலில்  அறைகின்றது   வழமையை  விட  வேகமான  வெப்பத்துடன்

வெந்நீர்  தூவலுடன்  எந்தன்  கண்ணீரும்  கலந்து அங்கே

யார்  ஐயா  நீங்கள்    மனதில்  ஏன்  ஐயா  எங்களுக்கு  இந்தப்  பாரம் 

 

நாள்  ஒன்றுக்கு  மேல்   நான்  கண்ணீர்   சிந்தியது  இதுவரை 

நான்கு  தடவைகள்  தான்   நேசத்துக்குரியோரை  இழந்த  நேரங்கள்

இப்போது  மீண்டும்  ஒரு  தடவை  அந்த  சோகம் 

யார்  ஐயா  நீங்கள்    மனதில்  ஏன்  ஐயா  எங்களுக்கு  இந்தப்  பாரம் 

 

குழந்தைகள்  இல்லை யே  உங்களுக்கு  என்றார்கள்

ஏன்  ஐயா  நாங்கள்  எல்லோரும்  உங்கள்  செல்வங்கள்  தானே 

தருகி றோம்  ஐயா  மானசீகக்  கொள்ளி 

அமைதியில்  துயில்  கொள்வீர்  ஐயா  ..

 

இல்லை  ஐயா  இல்லை  துயில்  எழுந்து  வாருங்கள்  ஐயா 

வாருங்கள்  எங்களிடையேயே  மீண்டும்  வந்து  சேருங்கள் 

எடுத்த  பணி   முடிக்க  இன்னமும்  உண்டு 

பணி  முடிக்க  மானிடம்  சிறக்க  வந்து  விடுங்கள்  ஐயா  ….

 

 

 

  • Like 7

Share this post


Link to post
Share on other sites

அந்த மா மனிதனின் தகுதிக்கு ஏற்ற கவிதை....பாராட்டுக்கள் சாமானியன் தொடருங்கள்.....! 

Share this post


Link to post
Share on other sites

அந்த மாமனிதனுக்கு எம் கண்ணீரஞ்சலிகளும் சமர்ப்பணம். உங்கள் சோகத்தின் கிறுக்கல்கள் மனதைத் தொட்டது தொடருங்கள் சாமானியன்

Share this post


Link to post
Share on other sites

அப்துல் கலாம்  தமிழன்.

அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானி.

அப்துல்கலாம் பல நற்பணிகளை செய்தவர்

இந்தியாவிற்கு அணுவிஞ்ஞானியின் தந்தை.
மற்றும் படி அவர் தமிழினத்திற்கு எதுவுமேயில்லை.

இது எனது கருத்து மட்டுமே.

மன்னிக்கவும் சாமானியன்.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

அப்துல் கலாம்  தமிழன்.

அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானி.

அப்துல்கலாம் பல நற்பணிகளை செய்தவர்

இந்தியாவிற்கு அணுவிஞ்ஞானியின் தந்தை.
மற்றும் படி அவர் தமிழினத்திற்கு எதுவுமேயில்லை.

இது எனது கருத்து மட்டுமே.

மன்னிக்கவும் சாமானியன்.

இந்தியர்கள் பெருமைப்பட வேண்டிய விஞ்ஞானி. தமிழ் மக்களுக்கு அவர் செய்ததாக எதுவும் இல்லை.

Share this post


Link to post
Share on other sites

எனக்கு மிகவும் பிடித்தமான மனிதர் நல்ல கவிதை சாமானியன்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு