Jump to content

போன பிறப்புகளில் கழுகுகளாக இருந்திருப்போமோ ??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று SICK  அடிச்சுப் போட்டு வீட்டில Gardening  செய்தது தான்  நினைவுக்கு வருகுது , பின்னால் இணைத்திருக்கும் விடயத்தை இன்றையை லஞ்ச் பிரேக் இல் வாசித்த போது.

PRINCIPLE 5: The Eagle tests before it trusts. When a female eagle meets a male and they want to mate, she flies down to earth with the male pursuing her and she picks a twig. She flies back into the air with the male pursuing her. Once she has reached a height high enough for her, she lets the twig fall to the ground and watches it as it falls. The male chases after the twig. The faster it falls, the faster he chases it. He has to catch it before it falls to the ground. He then brings it back to the female eagle.

The female eagle grabs the twig and flies to a higher altitude and then drops the twig for the male to chase. This goes on for hours, with the height increasing until the female eagle is assured that the male eagle has mastered the art of catching the twig which shows commitment. Then and only then, will she allow him to mate with her. Whether in private life or in business, one should test commitment of people intended for partnership.

வேறொன்றுமில்லை , வீட்டிலே முன்னுக்கு உள்ள Retaining wall  க்கு பின்னால்   நீண்ட காலமாக Maintain பண்ணுப் படாத மரம் ஒண்டு கொஞ்சம் பெரிசா வளர்ந்திருந்தது , போன கிழமை மனுசி  சொல்லிச்சுதுஅப்பா , உந்த Branches ஐ ஒருக்கா வெட்டி விடுங்கோவன்,  நல்ல வளர்ந்து  போச்சுது”  எண்டு

சரி எண்டு நானும் வெட்டி விட்டேன் .

நேற்று SICK  அடிச்சுப் போட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக வீட்டில இருப்பம் எண்டு பார்த்தால் , மனுசி  சொல்லுதுஅப்பா வெட்டின மரத்துக்கு பக்கத்தில இன்னொரு அடிக்கடடை இருக்கு , அதை ஒருக்கா கிளப்பி விடுங்கோவன் , சும்மா தானே இருக்கிறியள்”  எண்டு

ஒரு மாதிரி action  எல்லாம் போட்டு அதை கிளப்பியாயிற்று. (  அது ஒரு பழைய உக்கிப் போன அடிக்கட்டை , அலவாங்கை குடுத்து கிளப்ப வலு Easy  ஆக வந்து விட்டது , ஆனால் கஷ்டப் படுற மாதிரி action  போட மறக்கவில்லை) .  அடியைக் கிளப்பி விட்டு, இல்லாத நெற்றி வேர்வையையும் துடைத்து விட்டு,  மனுசியைப்  பார்த்தால்  அட இவனுக்கும் கொஞ்சம் கெட்டித்தனம் இருக்கும் போல இருக்கே , பரவாயில்லாமல் வேலை செய்யுறான் “  என்ற மாதிரியான எண்ணவோட்டங்கள் ஓடுறது அப்பிடியே தெரிந்தது  . “ அப்பா கோப்பி வேணுமே என்ற பரிவு வேறு அதனை உறுதி செய்தது.

அதுக்குப் பிறகு தான் பிரச்சினையே தொடங்கியது .  அப்பா நீங்கள் ஒரு சூரன் தானே,  அண்டைக்கு Branch  எல்லாம் வெட்டின மரத்திண்ட அடியையும் இப்பிடியே கிளப்பி விடுங்கோவன், வலும் ஈஸியாக செய்து போடுவியள்”   என்று சொல்ல , எனக்கு உள்ளுக்குள்ள போன அரைவாசி கோப்பியும் வெளியால வராத குறை தான்.

அந்த அடிக்கட்டை நல்ல சடைச்சுப் பிடிச்சு  ஒரு  ½  மீட்டர் சுற்றளவில் ஒரு 2 மீட்டர் எண்டாலும் நிலத்துக்குள்ள இறங்கியிருக்கக் கூடிய ஒண்டு. அலவாங்கை  குடுத்துப் பிரட்ட  வெளிக்கிட்டால்  ஒண்டில் அலவாங்கு முறியும் அல்லது என்ர நாரி  முறியும்.  

இருக்கிறது ஓரே ஓரு வழி தான். எங்கேயாவது Site இல இருக்கிற ஒரு Excavator Operator ரகசியமாக வரச் சொல்லி Machine  ஆல கிளப்பி மேலால விட்டு விட்டு  , பிறகு மனுசியின்  முன்னிலையில் அலவாங்கை குடுத்து கிளப்பிக் காட்டுற மாதிரி  காட்ட வேண்டியது தான்.

போன பிறப்புகளில் கழுகுகளாக இருந்திருப்போமோ ??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்படியான வில்லங்கத்துக்காகதான் , எங்கன்ட ஆண் முதாதையர் கல் ஆனாலும்  கணவன் ,புல்லானாலும் புருசன் என்று விசயத்தை கொண்டு போனவையள், இந்த காலத்து பெடிச்சியளை அப்படி சொல்லி மேய்கிறது கஸ்டம் தான்....😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமானியன் என்ன சொல்ல வாறார்.... 

🧐

9 மாதத்தில நாப்பி (டயப்பர்) மாத்தப்போறாரே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

சாமானியன் என்ன சொல்ல வாறார்.... 

🧐

9 மாதத்தில நாப்பி (டயப்பர்) மாத்தப்போறாரே...

கேட்ட படியால் சொல்லுறன்,   மாத்தத்  தொடங்கி இப்ப என்ன இப்ப ஒரு  இருபத்தைஞ்சு  வருடங்களாகுது ।

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் அவரைக் கூப்பிட்டு இஞ்சேருங்கோ அந்த கஷ்டமானதை நான் கிளப்பிப் போட்டன்  இந்த சுலபமானதை நீங்கள் பிரட்டி விடுங்கோ என்று சொல்லி விட்டு நழுவி விடுங்கோ.......!   😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.