Sign in to follow this  
சாமானியன்

போன பிறப்புகளில் கழுகுகளாக இருந்திருப்போமோ ??

Recommended Posts

நேற்று SICK  அடிச்சுப் போட்டு வீட்டில Gardening  செய்தது தான்  நினைவுக்கு வருகுது , பின்னால் இணைத்திருக்கும் விடயத்தை இன்றையை லஞ்ச் பிரேக் இல் வாசித்த போது.

PRINCIPLE 5: The Eagle tests before it trusts. When a female eagle meets a male and they want to mate, she flies down to earth with the male pursuing her and she picks a twig. She flies back into the air with the male pursuing her. Once she has reached a height high enough for her, she lets the twig fall to the ground and watches it as it falls. The male chases after the twig. The faster it falls, the faster he chases it. He has to catch it before it falls to the ground. He then brings it back to the female eagle.

The female eagle grabs the twig and flies to a higher altitude and then drops the twig for the male to chase. This goes on for hours, with the height increasing until the female eagle is assured that the male eagle has mastered the art of catching the twig which shows commitment. Then and only then, will she allow him to mate with her. Whether in private life or in business, one should test commitment of people intended for partnership.

வேறொன்றுமில்லை , வீட்டிலே முன்னுக்கு உள்ள Retaining wall  க்கு பின்னால்   நீண்ட காலமாக Maintain பண்ணுப் படாத மரம் ஒண்டு கொஞ்சம் பெரிசா வளர்ந்திருந்தது , போன கிழமை மனுசி  சொல்லிச்சுதுஅப்பா , உந்த Branches ஐ ஒருக்கா வெட்டி விடுங்கோவன்,  நல்ல வளர்ந்து  போச்சுது”  எண்டு

சரி எண்டு நானும் வெட்டி விட்டேன் .

நேற்று SICK  அடிச்சுப் போட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக வீட்டில இருப்பம் எண்டு பார்த்தால் , மனுசி  சொல்லுதுஅப்பா வெட்டின மரத்துக்கு பக்கத்தில இன்னொரு அடிக்கடடை இருக்கு , அதை ஒருக்கா கிளப்பி விடுங்கோவன் , சும்மா தானே இருக்கிறியள்”  எண்டு

ஒரு மாதிரி action  எல்லாம் போட்டு அதை கிளப்பியாயிற்று. (  அது ஒரு பழைய உக்கிப் போன அடிக்கட்டை , அலவாங்கை குடுத்து கிளப்ப வலு Easy  ஆக வந்து விட்டது , ஆனால் கஷ்டப் படுற மாதிரி action  போட மறக்கவில்லை) .  அடியைக் கிளப்பி விட்டு, இல்லாத நெற்றி வேர்வையையும் துடைத்து விட்டு,  மனுசியைப்  பார்த்தால்  அட இவனுக்கும் கொஞ்சம் கெட்டித்தனம் இருக்கும் போல இருக்கே , பரவாயில்லாமல் வேலை செய்யுறான் “  என்ற மாதிரியான எண்ணவோட்டங்கள் ஓடுறது அப்பிடியே தெரிந்தது  . “ அப்பா கோப்பி வேணுமே என்ற பரிவு வேறு அதனை உறுதி செய்தது.

அதுக்குப் பிறகு தான் பிரச்சினையே தொடங்கியது .  அப்பா நீங்கள் ஒரு சூரன் தானே,  அண்டைக்கு Branch  எல்லாம் வெட்டின மரத்திண்ட அடியையும் இப்பிடியே கிளப்பி விடுங்கோவன், வலும் ஈஸியாக செய்து போடுவியள்”   என்று சொல்ல , எனக்கு உள்ளுக்குள்ள போன அரைவாசி கோப்பியும் வெளியால வராத குறை தான்.

அந்த அடிக்கட்டை நல்ல சடைச்சுப் பிடிச்சு  ஒரு  ½  மீட்டர் சுற்றளவில் ஒரு 2 மீட்டர் எண்டாலும் நிலத்துக்குள்ள இறங்கியிருக்கக் கூடிய ஒண்டு. அலவாங்கை  குடுத்துப் பிரட்ட  வெளிக்கிட்டால்  ஒண்டில் அலவாங்கு முறியும் அல்லது என்ர நாரி  முறியும்.  

இருக்கிறது ஓரே ஓரு வழி தான். எங்கேயாவது Site இல இருக்கிற ஒரு Excavator Operator ரகசியமாக வரச் சொல்லி Machine  ஆல கிளப்பி மேலால விட்டு விட்டு  , பிறகு மனுசியின்  முன்னிலையில் அலவாங்கை குடுத்து கிளப்பிக் காட்டுற மாதிரி  காட்ட வேண்டியது தான்.

போன பிறப்புகளில் கழுகுகளாக இருந்திருப்போமோ ??

 

Share this post


Link to post
Share on other sites

உப்படியான வில்லங்கத்துக்காகதான் , எங்கன்ட ஆண் முதாதையர் கல் ஆனாலும்  கணவன் ,புல்லானாலும் புருசன் என்று விசயத்தை கொண்டு போனவையள், இந்த காலத்து பெடிச்சியளை அப்படி சொல்லி மேய்கிறது கஸ்டம் தான்....😀

Share this post


Link to post
Share on other sites

சாமானியன் என்ன சொல்ல வாறார்.... 

🧐

9 மாதத்தில நாப்பி (டயப்பர்) மாத்தப்போறாரே...

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, Nathamuni said:

சாமானியன் என்ன சொல்ல வாறார்.... 

🧐

9 மாதத்தில நாப்பி (டயப்பர்) மாத்தப்போறாரே...

கேட்ட படியால் சொல்லுறன்,   மாத்தத்  தொடங்கி இப்ப என்ன இப்ப ஒரு  இருபத்தைஞ்சு  வருடங்களாகுது ।

 

Share this post


Link to post
Share on other sites

பேசாமல் அவரைக் கூப்பிட்டு இஞ்சேருங்கோ அந்த கஷ்டமானதை நான் கிளப்பிப் போட்டன்  இந்த சுலபமானதை நீங்கள் பிரட்டி விடுங்கோ என்று சொல்லி விட்டு நழுவி விடுங்கோ.......!   😁

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • மிகவும் தரமான ஒரு கதை......கதாசிரியரைப் பாராட்டியே தீர வேண்டும்.....ஈழத்துப்  போர் நிறைய சிறந்த கதாசிரியர்களையும் கவிஞர்களையும் உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையில்லை.....நன்றி கிருபன்......!  👍
    • அது சரி, புகை மட்டும் தான் கண்டோம், நெருப்பை இது வரை கண்டறிய முடியவில்லை என்ற நிலைக்காவது இறங்கி வந்திருக்கிறீர்கள்! 😎 இன்னொரு விடயத்தையும் இங்கே குறிப்பிடலாம்: ஒரு நிபுணத்துவம் கொண்ட ஊடகவியலாளர் எவ்வாறு ஒரு smokescreen ஐ அகற்றி தரவுகளைத் தேடும் வகையிலான கேள்விகளைக் கேட்கிறார் என்று கவனித்தீர்களா? இது தான் ஊடகங்கள் அரசியல் வாதிகளிடம் செய்ய வேண்டியது! இதை ஐ.பி.சி போன்ற ரொய்லற் ஊடகங்களில் பணி புரிவோர் பார்த்துப் பழக வேணும்! 
    • சில வருடங்கள் முன் ஐ.பி.சி சேவை விஸ்தரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் தொடக்க வைபவம் நடைபெற்றபோது வர்த்தக பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் அழைக்கப்பட்டனர். அப்போது பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது ஐ.பி.சி சிறப்பாக நல்ல பல விடயங்களை மக்களுக்கு செய்யும் என்று. இன்று அன்றைய நிகழ்வில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களே ஐ.பி.சி தமிழின் தற்போதைய நிலை கண்டு முகம் சுழிக்கின்றார்கள். ஐ.பி.சியின் சில்லறைத்தனமான ஊடகவியல் செயற்பாடுகள், மற்றும் தரம்கெட்ட வகையில் ஊடகவியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது தவறான வழியில் எமது எதிர்கால சந்ததியை கொண்டு செல்லும். மக்களை மடையர்கள் என நினைத்துக்கொண்டு ஊடகங்கள் தனிப்பட்ட லாபங்களை, தமது குறுகிய நோக்கங்களை அடைய நினைப்பது கேவலமானது. வெளிநாடுகளில் வாழும் பலருக்கும் தெரியும் தத்தம் நாடுகளில் சட்டம், ஒழுங்கு நடைமுறைகளின் நிமித்தம் எது சரி, எது பிழை. எப்படி ஒன்றை செய்யலாம், எப்படி ஒன்றை செய்யக்கூடாது, தவறான செயற்பாடுகளின் பின்விளைவுகள் என பல்வேறு விடயங்கள். ஆனால், இவர்கள் இலங்கை என வரும்போது வழமையான ஒழுங்கமைப்பு, நடைமுறைகளில் இருந்து இருந்து விலகி தான் தோன்றித்தனமாகவும், எதேச்சையாகவும் காரியங்களை முன்னெடுக்கின்றார்கள். அடுத்தவனை துரோகி, ஏமாற்றுக்காரன் என்று கூறுபவர்கள் முதலில் தாங்கள் யார், தங்கள் யோக்கியதை என்ன என்பதை உணர்ந்துகொள்வது  நல்லது. ஒரு சில ஊடகங்கள் செய்கின்ற தவறான செயற்பாடுகள் அனைவரையுமே பாதிக்கும். கடைசியில் எங்களுக்கு ஊடக சுதந்திரம் இல்லை என்று சொல்லி முறைப்பாடு செய்யவேண்டியதுதான்.
    • இவர் சுதந்திர கட்சி சார்பில் தேசிய பட்டியலில் வந்தார். இப்ப அந்த கட்சி தள்ளாடுது. இவர் வரப்போவதில்லை.  😜