Sign in to follow this  
கிருபன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவுள்ள புதிய விதிமுறைகள்

Recommended Posts

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவுள்ள புதிய விதிமுறைகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் பல மாற்றங்களை கொண்டுவருவதற்கு எம்.சி.சி., ஐ.சி.சி.யிடம் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. 

crcket.jpg

கிரிக்கெட் ஆட்டங்களில் விதிமுறைகளை மாற்றுவதிலும், புதிய நுணுக்கங்களை புகுத்துவதிலும் லண்டனை மையமாக கொண்டு செயல்படும் எம்.சி.சி. உலக கிரிக்கெட் குழு முக்கிய பங்கு வகிக்கிறது. 

இந்த குழுவில் இந்நாள், முன்னாள் வீரர்கள், நடுவர்களும் இடம் பெற்றுள்ளனர். 

இந் நிலையில் மைக் கேட்டிங் தலைமையிலான எம்.சி.சி. உலக கிரிக்கெட் குழுவின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடந்தன. இதன்போது எம்.சி.சி. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பாக ஐ.சி.சி.யிடம் கீழ் கண்ட பரிந்துரைகளை முன்வைத்தன.

* நேரத்தை கணக்கிட ஸ்கோர் போர்டில் எலக்ட்ரோனிக் கடிகாரம்

clock.jpg

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தாமதமாக பந்து வீசும் புகார் அதிகமாக எழுகிறது. இதை கவனத்தில் கொண்டு நேரத்தை கணக்கிட ஸ்கோர் போர்டில் எலக்ட்ரோனிக் கெடிகாரம் பொருத்தப்படும். 

இதன் மூலம் ஓவர் முடிந்ததும் 45 வினாடியில் இருந்து கவுண்ட்டவுன் ஆரம்பிக்கும். இந்த நேரம், பந்தை எதிர்கொள்ளும் புதிய துடுப்பாட்ட வீரருக்கு 60 வினாடிகளாகவும், மாற்று பந்து வீச்சாளராக வருபவருக்கு 80 வினாடிகளாகவும் அதிகரிக்கப்படும். 

கவுண்ட்டவுன் முடியும்போது போது துடுப்பாட்டம் அல்லது பந்து வீச்சுக்கு இரண்டு அணி தரப்பினரும் தயாராக இருக்க வேண்டும். கவுண்ட்டவுன் முடிந்ததும் ஆட்டத்தை தொடங்காவிட்டால் எச்சரிக்கை விடுக்கப்படும்.

அத்துடன் விதிமீறல் தொடர்ந்து நீடித்தால், சம்பந்தப்பட்ட அணியை தண்டிக்கும் வகையில் எதிரணிக்கு 5 ஓட்டங்கள் வழங்கப்படும். 

மேலும் விக்கெட் வீழ்ச்சியின் போதும் இதேநேரம் முறை பின்பற்றப்படும். ஆனால் ஆடுகளத்தில் இருந்து வீரர்களின் ஓய்வறை இருக்கும் தூரத்தை வைத்து இந்த கால அளவில் மாற்றம் இருக்கும்.

* நோ-பால் வீசினால் பிரீஹிட் 

no_ball.jpg

ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நோ-பால் வீசினால் பிரீஹிட் வழங்கப்பட வேண்டும். 

‘பிரீஹிட்’ வழங்கப்படும் போது, டெஸ்ட் போட்டிலும் நோ-பால் வீசப்படுவது குறையும்.

* ஒரே மாதிரியாக தரமான பந்துகளை பயன்படுத்தல்

K5iLWuz3.jpg

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் எஸ்.ஜி, கூக்கபுரா, டியூக்ஸ் ஆகிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆரம்பமாகவுள்ளதால் அனைத்து டெஸ்ட் போட்டிகளுக்கும் ஒரே மாதிரியாக தரமான பந்துகளை பயன்படுத்த வேண்டும். இதற்காக டியூக்ஸ் வகை பந்தை பரிந்துரைசெய்துள்ளது.

மேற்கண்ட எம்.சி.சி.யின் பரிந்துரைகள் குறித்து ஐ.சி.சி.விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

http://www.virakesari.lk/article/51898

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களிக்காடு பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி அற்ற முறையில் கிரவல் அகழ்வு இடம்பெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், அவ்விடத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் நேற்று சென்றுள்ளனர். குறிப்பாக குறித்த இடத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்று செய்தி சேகரிக்கும் பணியை ஆரம்பித்ததும், அந்த இடத்தில் இருந்த டிப்பர் வாகனங்கள் அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றதோடு மீண்டும் அந்த இடத்திற்கு கிரவல் ஏற்றுவதற்காக வருகைதந்த டிப்பர் வாகனங்களும் திரும்பிச் சென்றுள்ளன சம்பவ இடத்துக்கு சென்றதும் சம்பவத்தை அவதானித்த ஊடகவியலாளர்கள் முள்ளியவளை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கும் வனவள திணைக்கள அதிகாரிக்கும் தகவல் வழங்கி இருந்த போதும் அந்த இடத்தில் இருந்த வாகனங்கள் அனைத்தும் அவ்விடத்தை விட்டு செல்லும் வரை சுமார் அரை மணி நேரமாக அந்த இடத்திற்கு பொலிஸாரோ வனவள அதிகாரிகளோ வருகைதரவில்லை அப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பக்கோ இயந்திரமும் வாகனத்தில் ஏற்றப்பட்டு அந்தஇடத்தில் இருந்து அகற்றப்படும் வரை வனத்துறை அதிகாரிகளும் பொலிசாரும் வரவில்லை. அந்த இடத்திலிருந்து மிகவும் அண்மையில் பொலிஸ் நிலையமும் வனவள அலுவலகமும் இருந்தபோதும் அவர்கள் வருகை தராமல் அந்த இடத்திலிருந்து சட்டவிரோத பணியில் ஈடுபட்டவர்கள் விலகிச் செல்லும் வரை இவர்கள் அவ் இடத்திற்கு வரவில்லை இவ்வாறு சட்டவிரோதமாக கிரவல் அகழ்வு காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக அந்தப் பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் அனைத்தும் உயிரற்ற நிலைக்குச் சென்றுள்ளன. இக் கிரவல் அகழ்வானது ஏற்கனவே பிரதேச சபையுடன் இணைந்து மரநடுகைக்கென சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக பாரியளவிலான விருந்தினர் விடுதி ஒன்றை அமைத்து வரும் அவலோன் நிறுவனத்தினராலேயே ஏற்றிச் செல்லப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றார்கள். அப்பகுதியில் கிரவல் அகழ்வில் ஈடுபட்டவர்களிடம் அனுமதிப்பத்திரங்கள் கேட்ட போது அங்கு நின்றவர்கள் அனுமதிப்பத்திரங்களை வைத்திருக்கவில்லை. இவ்வாறு ஊடகவியலாளர்களை கண்டவுடன் வாகனங்களை எடுத்துச் செல்கிறார்கள் எனில் இங்கு சட்டவிரோத தொழில் இடம் பெறுவது உறுதியாகி இருக்கின்றது. இங்கிருந்து அனைத்து வாகனங்களும் திரும்பி சென்றபின்னர் அந்த இடத்துக்கு வருகைதந்த வனவள அதிகாரி 15 கியூப்க்கு அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்ட போதும் அந்த இடத்தில் சுமார் 150 கியூப்க்கு மேல்நேற்று கிரவல் அகழப்பட்டுள்ளமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக குறித்த பகுதியை அண்டிய பகுதிகளில் அனைத்து வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு பாரியளவிலான மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இவ்வாறாக சட்டவிரோத கிரவல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் தகவல்கள் வழங்கியுள்ளார்கள். இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகாரிகள் பூரண ஆதரவை வழங்குகின்றார்களா என்ற சந்தேகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக குறித்த இடத்திற்கு வருகை தந்த வனவள திணைக்கள அதிகாரி அவ்இடத்திலிருந்து திரும்பி செல்லும் போது, அகழ்வில் ஈடுபட்ட ஒரு நபரை மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் கூட அணியாமல் ஏற்றிச் செல்கின்றார். இவ்வாறான செயற்பாடுகள் இவர்கள் குறித்த நபர்களுடன் என்ன ஒப்பந்தத்தில் இந்த வேலைகளை செய்கின்றார்கள் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்த தவறும் பட்சத்தில் முல்லைத்தீவு வனப்பகுதிகள் அழிந்து உரிய காலத்தில் மழைவீழ்ச்சி இன்றி விவசாயத்தையே நம்பி வாழும் மக்களை பாதிக்கும். எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/144608
    • அலிபாபா பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.
    • தமிழ் அரசியல் அரங்கில் செயற்பட்டுவருகின்ற பல அரசியல் தலைவர்களும் சுமந்திரன் வெளியிட்டு வருகின்ற நிலைப்பாடுகள், கருத்துக்கள் தொடர்பாக மிகப் பெரிய அதிருப்திகளை பதிவுசெய்து வருகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் அங்கம் வகிக்கும் பெரும்பாலான தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் சுமந்திரனின் போக்கு, நிலைப்பாடுகள் தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றார்கள். பெரும்பாலான தமிழ் மக்கள் சுமந்திரனை திட்டி தமது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள். ஏன்? சுமந்திரன் மீது ஏன் இத்தனை விமர்சனங்கள் எழுகின்றன? எதற்காக சுமந்தினை அவரது கட்சியின் சகாக்கள் கூட எதிர்க்கின்றார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுகின்ற 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி இது: https://www.tamilwin.com/politics/01/247671?ref=archive-feed