யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
புரட்சிகர தமிழ்தேசியன்

இணைய உண்ணாவிரதம் பற்றி தெரிவித்த நடிகர் விவேக் -- குவியும் ஆதரவு ..!

Recommended Posts

'இன்டர்நெட் ஃபாஸ்டிங்' முறை பற்றி முதல் தெரிவித்த நடிகர் விவேக்! குவியும் ஆதரவு!

vivek_1200x630xt.jpg

நவீன தொழில்நுட்ப காலத்தில், அனைத்து வேலைகளும் சுலபமாகி விட்டது. இதன் விளைவு, நாளுக்கு நாள் குழந்தைகள் முதல் இளைஞர்கள் என அனைவரும் செல்போன், இன்டர்நெட் போன்றவற்றிற்கு அடிமையாகி வருகிறார்கள். இதன் மூலம் எதிர்பாராத பல தவறுகளும் நடக்கிறது.  

இந்த நிலையில், அதிகமாக இளைஞர்கள் பயன்படுத்தும் நெட் சேவையை, குறைக்கும் விதமாக  ஜப்பான் நாட்டினர் கையாண்டு வரும் முறை குறித்து, நடிகர் விவேக் முதல் முறையாக ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளது ஜப்பான் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வாரத்தில் இரண்டு நாட்கள் இண்டர்நெட்டை இளையதலை முறையினர் பயன்படுத்த வேண்டாம் என்றும், அந்த இரண்டு நாட்களில் பெற்றோர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் என்றும், விளையாட்டில் ஈடுபடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இதனால் மனம் ரிலாக்ஸ் ஆவதுடன் இண்டர்நெட்டில் அடிமையாகும் ஆபத்தும் நீங்குகிறது, குற்றச்செயல்களும் குறைகிறது என தெரிய வந்துள்ளது. என கூறி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

"கேள்விப்பட்டேன். ஜப்பானில் வாரம் இரு நாட்கள் “ internet fasting” அமுல்படுத்தப் பட்டுள்ளது. அந்த இரு நாட்களில் இளைய சமுதாயம், நெட் பக்கம் போகாமல் பெற்றோர், நண்பர்கள், விளையாட்டு, இயற்கை என்று இருக்க வேண்டுமாம்! Great initiative to come away from cyber addiction"— Vivekh actor (@Actor_Vivek)

https://tamil.asianetnews.com/cinema/actor-vivek-about-internet-fasting-method-pod1km

Share this post


Link to post
Share on other sites

இன்றைய காலத்தில் மனித வாழ்வையும் கலை கலாச்சாரத்தையும் அழிப்பது இணையவசதிகளும் அதனைவைத்து பாவிக்கப்படும் கருவிகளும்  தான். தேவைக்கு மட்டும் பிரயோசனப்படுத்தினால் எல்லாமே நன்று.

  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

என் போன்றவர்களுக்கு இணையம் தான் கதி!
மடிக்கணனி பழுதடைந்தாலோ/ இணைய இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டாலோ மட்டுமே விரதம் சாத்தியம்.

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, ஏராளன் said:

என் போன்றவர்களுக்கு இணையம் தான் கதி!
மடிக்கணனி பழுதடைந்தாலோ/ இணைய இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டாலோ மட்டுமே விரதம் சாத்தியம்.

இல்லை  சகோ

நாம்  வாழ்ந்த பழைய  வாழ்வுக்கு  சில மணித்துளிகளாகவது  திரும்பணும்

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, விசுகு said:

இல்லை  சகோ

நாம்  வாழ்ந்த பழைய  வாழ்வுக்கு  சில மணித்துளிகளாகவது  திரும்பணும்

 நாம் அந்த பழமையிலிருந்து அறிந்தும் அறியாமலும் விலகி/விலக்கப்பட்டுக்கொண்டு போகின்றோமோ என்றொரு அச்சம் அவ்வப்போது வந்து செல்கின்றது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஊரில் என்டால் இணையம் இல்லாமல் இருந்திருப்பேன்...இங்கு என்டால் வலு கஸ்டம் 
 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

ஊரில் என்டால் இணையம் இல்லாமல் இருந்திருப்பேன்...இங்கு என்டால் வலு கஸ்டம் 
 

காரணத்தை நாங்களும் அறியலாமா? 😎

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • இலங்கை தமிழர் மத்தியில் சீமானை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும், இரு சாராருக்குமே எஞ்சி இருப்பது குழப்பமே. 1. தமிழ்தேசியம் தமிழ் நாட்டில் வளர வேண்டியது எம் சுய நல நோக்கில் அவசியம். 2. தமிழ் நாட்டில் திராவிடம் என்பதை மூர்கமாக எதிர்க்காமல், நைசாக திராவிடத்தை தமிழ்தேசியம் பிரதியீடு செய்ய வேண்டும். அதாவது பெரியாரிய கொள்கைகளை வரித்துக்கொண்டு, நாயக்கர்களையும், முதலியாரையும் இதர சாதிகளையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். திராவிட அரசியலை பெரியார்க்கு முன்/பின் எனப் பிரித்து. பெரியார்க்கு பின்னான தலைவர்களை  கட்சிகளை போதுமானா அளவுக்கு விமர்சிக்கலாம். மொழி வழி மாநிலங்கள் அமைந்த பின் நாமும் திராவிட அரசியலை தமிழ்தேசிய அரசியாலக கூர்ப்படைய செய்வதில் தவறில்லை என மக்களை உணரச்செய்ய வேண்டும். கொள்கை ரீதியில் பெரியாரின் பேரன் என்பதற்கு சகல விதத்திலும் உரித்துடையவர்கள் நா.த. ஆனால் இவ்வளவு மூர்கமாக பெரியாரை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. 3. அடுத்தது சீமான் பற்றிய எனது தனிப்பட்ட மதிப்பீடு - இதுவரை இவர் காட்டிய தகிடு தத்தங்கள், புலிகள், பிரபாகரனுடன் தன் நெருக்கம் பற்றி இவர் அள்ளிவிடும் புழுகுகள் - இவரை நிச்சயமாக இன்னொரு கருணாநிதி என்றே எண்ண வைக்கிறது. இப்போ சீமானை நம்பியதை விட கருணாநிதியை அப்போ அதிகம் நம்பியது தமிழ் கூறும் நல்லுலகு. அத்தனையையும் காசாக்கி குடும்பத்தை வாழவைத்தார் அவர். சீமானும் இதையேதான் செய்வார் என்பது என் எதிர்வுகூறல். எதிர்வுகூறல் மட்டுமே.  4. இதில் ஒரே ஒரு நம்பிக்கை -சுயலாபத்துக்காக சீமான் தூண்டிவிடும் இந்த நெருப்பு அவரையும் பொசுக்கி, இந்திய வரைபடத்தை மாற்றி அமைக்க ஒரு வாய்பிருக்கிறது. அப்படி ஒரு நிலைவரும் போது, இந்த நெருப்பில் நீரை வாரி வாரி இறைப்பவர்களில் முதல் ஆளாய் நிக்கப் போவவரும் சீமானே. 5. முன்னேற்றம் என்று பார்தால், சீமானின் வளர்ச்சி கணிசமானதே. தொடர்ந்தும் தனியாக நிப்பது, நீண்ட நோக்கில் பலந்தந்தே ஆகும். சீமான் கபட நாடகம் ஆடினாலும் அவருடன் கூட நிற்பவர்கள் உண்மையானவர்கள். இந்த கட்சிக்கு வேலை செய்ய காசு கிடைக்காது. ஆனாலும் நிக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்தும் நிற்பார்கள், பதவி இல்லை என்றால் தலைவரை நச்சரிக்க மாட்டர்ர்கள். ஆகவே வைகோ போலன்றி சீமான் நீண்ட காலம் தனி ஆவர்த்தனம் வாசிக்கலாம். இதுவே சீமானின் பலம். தினகரனிடம் இந்த பலம் இல்லை. 2 தேர்தலுக்கு மேல் தனியே நிண்டால் கட்சியே காணாமல் போய்விடும். எல்லாரும் பெரிய கட்சிக்கு ஓடி விடுவார்கள். கமலுக்கு இது பெரும் பிரச்சினை இல்லை ஆனால் ரஜனியும் களத்தில் குதித்தால், கமல் எவ்வளவு காலம் தனியே ஓடுவார் என்பதும் கேள்விக் குறியே. ஆகா நீண்ட காலம் தனியே தாக்குப் பிடிக்கும் வல்லமை நா.த வுக்கே இருக்கிறது. சீமானின் போக்கும் 2 வருடத்தில் எவ்வளவோ மாறி விட்டது. இப்போதைக்குச் சொல்லக் கூடியது இவ்வளவே.
    • கொழுவிக்கொண்டு ஓடுறதுகள் தங்கடை சாதிக்கை உள்ளதை இழுத்துக்கொண்டு ஓடினால் பிரச்சனையை இரண்டு பக்க தாய் தேப்பன்மார் போய் சந்திச்சு கதைச்சு ஒரு முடிவுக்கு வரலாம்........ஓட்டக்கேசுகள் வேறை சாதியை எல்லே இழுத்துக்கொண்டு ஓடுதுகள்.பிள்ளையள் சாதியும் மண்ணாங்கட்டியும் எண்டு இருக்கேக்கை தாய் தேப்பன்மாருக்கெல்லே ஏறின பீலிங்கும் இறங்கின பீலிங்கும் தவுசன் வோல்டேச்சிலை கரண்பாயுது
    • அண்ணர் கடித இலக்கியம் உண்மையிலேயே தமிழில் அரியதொன்று. நீங்கள் உங்களுக்கே உரிய நடையில் பின்னுறியள். கார் வேண்ட காசில்லாம, ஆற்றையோ காருக்கு முன்னால நிண்டு போட்டோ எடுத்தவையும் உண்டு. இப்பெல்லாம் பஸ் டக்கு, டக்கெண்டு வருது. அடுத்த பஸ் நேரத்தை போனில பாக்கலாம். முன்னம் எண்டா ஆடிக்கொருக்கா அமவாசைக்கொருக்கா வரும் பஸ்சுக்கு குளிருக்க கால்கடுக்க நிக்கோணும். கூடப் படிச்ச அண்ணரிட்ட கொம்புளைன் பண்ணினா - தம்பி 120 ம் வாய்ப்பாட்டை பாடமாக்கு எல்லாம் மறந்து போகும் என்பார் 😂 (1£=120Rs). 
    • பச்சைகள் தந்த உறவுகள் புங்கை, யெகதா துரை, ராசவன்னியன் அண்ணா, ஏராளன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.
    • இவ்வளவு காலமும் எங்கு போனீர்கள் ராசா?????? கண்டதில் மிக்க மிக்க சந்தோசம். 👍