யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • June 17, 2019 அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை 9 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்துள்ளனர்.   கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களும்,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவ சிறி க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள்,அளகக்கோன் விஜயரெட்னம் கல்முனை மாநகரசபை உறுப்பினர், சந்திரசேகரம் ராஜன் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஆகியோர் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.  #அம்பாறைமாவட்டம் #கல்முனைவடக்குதமிழ்பிரதேசசெயலகம் #சாகும்வரைஉண்ணாவிரதப்போராட்டம் http://globaltamilnews.net/2019/124518/
    • இலங்கையின் சொந்த குடிமக்கள் தனிமனித சுதந்திரமீறல் அரசியல், மதம், மொழி, இன ஒடுக்குமுறை என்பவற்றால் பாதிக்கப்பட்டு அகதிகளாக ஏற்கனவே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குடிபெயர்ந்து வாழ்ந்து வரும் அவலம் தீர்வெதுவுமின்றி நீடிக்கும் இந்நிலையில் வேறு நாடுகளிலிருந்து அதே காரணங்களுக்காக குடிபெயரும் அகதிகளை குடியமர்த்துவதற்கு இலங்கையில் பாதுகாப்பும் பராமரிப்பு வசதிகளும் உண்டென்று நம்பும் மேற்குலகம்  இரட்டைவேடம் போடுகிறது.
    • பக்த மார்க்கண்டேயன்                 திருக்கடையூர்
    • யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் இளம்பெண் விரட்டிச் செல்லப்பட்டு கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். காணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரே இந்த பாதகத்தை அரங்கேற்றினார். அவரது சகோதரர் வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றியவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்தார். காணிப் பிணக்கு காரணமாக உறவினர்களான அயலர்கள் இருவருக்கு இடையே நீண்டகாலமாக பிணக்குக் காணப்பட்டது. அதனைச் சாட்டாக வைத்து பெரிய தந்தையார் கத்தியுடன் சென்று பாடசாலைக்கு முன்பாக வைத்து பெறாமகனுக்கு வயிற்றில் குத்தியுள்ளார் அவர் நிலத்தில் சரிந்து வீழ்ந்தார். அதனால் கத்தியால் குத்தியவர் துவிச்சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குப் புறப்பட்டுள்ளார். வழியில் பெறாமகளைக் கண்டுள்ளார். அவரைக் கத்தியால் குத்த முற்பட்ட போது, அந்தப் பெண் பெரிய தந்தையாரை வீதியில் தள்ளி வீழ்த்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். அந்தப் பெண்ணை பெரியதந்தையார் துரத்திச் சென்றுள்ளார். ஓடிச் சென்ற அந்தப் பெண் தடுமாறி வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளார். அதன்போது அவரை கழுத்து அறுத்து பெரியதந்தையார் கொலை செய்துள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர். https://www.tamilwin.com/srilanka/01/217850?ref=imp-news
    • எனக்குக் கூகுள் ஆண்டவர் தந்த புத்தரின் மறு பெயர்கள்..... இவை தவிர இன்னமும் உள்ளனவாம்.!  1) அகளங்கமூர்த்தி – சூ. 2) அகளங்கன் – தி. 3) அண்ணல் – சூ. தி. 4) அத்வயவாதி – நா. 5) அநந்தலோசனன் – தி. 6) அர்க்கபந்து – நா. 7) அரசுநிழலிருந்தோன் – சூ.😎 அருங்கலைநாயகன் – தி. 9) அருணெறிகாக்குஞ்செல்வன் – தி. 10) அருளறம்பூண்டோன் – ம. 11) அறத்தகைமுதல்வன் – ம. 12) அறம்பகர்ந்தகோன் – வே. 13) அறவாழியாள்வோன் – ம. 14) அறவியங்கிழவோன் – ம. 15) அறவோன் – ம. 16) அறிவன் – பி. 17) ஆதி – சூ. தி. 18) ஆதிதேவன் – சூ. 19) ஆதிபுங்கவன் – பி. 20) ஆதிமுதலவன் – ம. 21) ஆதிமுனிவன் – ம. 22) ஆரியன் – ம. 23) இயல்குணன் – ம. 24) உரகர்துயரமொழிப்போன் – ம. 25) உலோகஜித் – நா. 26) எண்ணில்கண்ணுடையோன் – சூ. 27) எண்பிறக்கொழியவிருந்தோன் – ம. 28) ஏகதேவன் – தி. ம. 29) ஒருவன் – ம. 30) கண்பிறர்க்களிக்குங்கண்ணோன் – ம. 31) கந்தன் – வே. 32) கலைகட்கெல்லாம்நாதன் – சூ. 32) காமற்கடந்தோன் – ம. 33) கௌதமன் – நா. 34) சாக்கியமுனி – நா. 35) சாக்கியன் – சூ. 36) சாக்கியஸிஹ்மன் – நா. 37) சாந்தன் – சூ. தி. பி. 38) சாஸ்தா – நா. 39) சினந்தவிர்ந்தோன் – சூ. 40) சினன் – சூ. தி. பி. 41) சினேந்திரன் – ம. 42) செல்வன் – சூ. 43) சைனன் – சூ. தி. 44) சௌத்தோதனி – நா. 45) தசபலன்- நா. 46) ததாகதன் – சூ. நா. 47) தயாவீரன் – ம. 48) தர்மராஜன் – சூ. நா. 49) தருமதலைவன் – ம. 50) தருமன் – பி. 51) தன்னுயிர்க்கிரங்கான் – ம. 52) தீநெறிக்கடும்பகைகடந்தோன் – ம. 53) தீமொழிக்கடைத்தசெவியோன் – ம. 54) துறக்கம்வேண்டாத்தொல்லோன் – ம. 55) நரகர்துயர்கெடநடப்போன் – ம. 56) நல்லறம்பகர்ந்தோன் – வே. 57) நற்றவமூர்த்தி – தி. 58) நாதன் – ம. 59) பகவன் – சூ. தி. பி. ம. 60) பகவான் – நா. 61) பஞ்சதாரைவிட்டவுணர்க்கூட்டியபெருமான் – சூ. தி. 62) பரதுக்கதுக்கன் – வே. 63) பார் – வே. 64) பார்மிசநடந்தோன் – பி. 65) பாரின்மிசையோன் – தி. 66) பிடகன் – பி. 67) பிணிப்பறுமாதவன் – ம. 68) பிறர்க்கறமருளும்பெரியோன் – ம. 69) பிறர்க்கறமுயலும்பெரியோன் – ம. 70) பிறர்க்குரியாளன் – ம. 71) பிறவிப்பிணிமருத்துவன் – ம. 72) புங்கவன் – தி. 73) புண்ணியமுதல்வன் – சூ. தி. 74) புண்ணியமூர்த்தி – சூ. தி. 75) புத்தஞாயிறு – ம. 76) புத்தன் – தி. நா. 77) புலவன் – ம. 78) புனிதன் – தி. பி. 79) பூமிசைநடந்தோன் – சூ. நா. 80) பெரியவன் – ம. 81) பெருந்தவமுனிவன் – ம. 82) பெருமகன் – ம. 83) பேரறிவாளன் – ம. 84) பொதுவறிவிகழ்ந்து புலமுறுமாதவன் – ம. 85) போதித்தலைவன் – ம. 86) போதிநாதன் – ம. 87) போதிப்பகவன் – ம. 88) போதிமாதவன் – ம. 89) போதிமூலத்துநாதன் – ம. 90) போதியுரவோன் – ம. 91) போதிவேந்தன் – தி. பி. வே. 92) பௌத்தன் – வே. 93) மன்னுயிர்முதல்வன் – ம. 94) மாயாதேவீசுதன் – சூ. நா. 95) மாரனைவென்றவீரன் – ம. 96) மாரஜித் – நா. 97) மிக்கோன் – ம. 98) முக்குற்றங்கடிந்தோன் – தி. 99) முக்குற்றமில்லோன் – தி. 100) முத்தன் – தி. 101) முழுதுமுணர்ந்தோன் – ம. 102) முற்றவுணர்ந்தமுதல்வன் – ம. 103) முன்னவன் – ம. 104) முனி – நா. 105) முனீந்திரன் – சூ. நா. 106) முனைவன் – பி. 107) வரதன் – வே. 108) வரன் – சூ. தி. பி. 109) வாமன் – சூ. தி. பி. ம. 110) வாய்மொழிசிறந்தநாவோன் – ம. 111) விநாயகன் – சூ. நா. 112) ஜினன் – நா. 113) ஸ்ரீகனன் – நா. 114) ஷடபிஜ்ஞன் – நா. 115) ஸந்மார்க்கநாதன் – வே. 116) ஸமந்தபத்ரன் – நா. 117) ஸர்வஜ்ஞன் – நா. 118) ஸர்வார்த்தஸித்தன் – நா. 119) ஸித்தார்த்தன் – வே. 120) ஸூகதன் – நா. ம. ( இன்னும் பலவுள )