யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • "பெரிய கம்பனிகளின் சி.ஈ..ஓக்களுடன் பேசவேண்டும் என்றால் காலை ஏழரை முதல் எட்டு மணிக்குள் அவர்கள் ஆபிசுக்கு போனை போடுவேன். கம்பனிகளுக்கு வரும் முதல் ஆள் சி.ஈ.ஓ தான். அவர்களின் செக்ரட்டரியே கூட லேட்டாக தான் வருவார். அதனால் போனை போட்டால் நேராக அவரிடமே பேசிவிடலாம். ஒரு முறை எனக்கு வேலை போய்விட்டது. ஒரு கம்பனி துவக்கலாம் என நினைத்தேன். பணம் இல்லை. காலையில் ஆறரை மணிக்கு ஒரு காபிகடைக்கு போனேன். பிளாஸ்க் நிறைய காபி, இன்னொரு பிளாஸ்கில் டீ வாங்கினேன். அதன்பின் வால் ஸ்ட்ரீட் போய் ஒவ்வொரு கம்பனியாக நுழைந்தேன். அதிகாலையில் முக்கியமான ஆட்கள் மட்டும் தான் கம்பனியில் இருப்பார்கள் என நினைத்தேன். போய் கம்பனியில் அந்நேரத்துக்கு யார் உட்கார்ந்து இருந்தாலும் "காப்பி வாங்கிட்டு வந்திருக்கேன். வாங்க சாப்பிட்டுட்டே பேசலாம். ஒரு நல்ல பிசினஸ் ஐடியா இருக்கு" என்றேன். ஆறரை மணிக்கு ஒருவன் காபியுடன் வந்து அழைத்தால் யார் மறுப்பார்கள்? ஒரு பெரிய டிரேடிங் கம்பனியின் பார்டன்ருடன் பேசியதில் ஐடியா பிடித்துபோய் பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். அதன்பின் தான் தெரிந்தது..அவரிடம் அப்பாயிண்மெண்ட் வாங்கிக்கொன்டு போய் சந்தித்திருந்தால் ஆறு மாதத்துக்கு அபாயிண்மெண்ட் கிடைத்திருக்காது என. முதலில் அவரது செக்ரட்டரியின் அபாயிண்மெண்டே எனக்கு கிடைத்திருக்காது. ஆறரை மணிக்கு காபியுடன் போனதால் அவரை வளைத்து பிடித்தேன்.  முதலில் அவர் "எனக்கு காபி பிடிக்காது, டீ தான் பிடிக்கும்" என்றார். "இந்த பிளாஸ்கில் டீ இருக்கு" என்றேன். "பால் சேர்த்த டீ தான் வேண்டும்" என்றார். க்ரீமரை பாக்கட்டில் இருந்து எடுத்து காட்டினேன்.."தயாராக தான் வந்திருக்கிறாய்" என சிரித்தபடி என்னுடன் உட்கார்ந்து பேசினார். பணம் கிடைத்தது.கம்பனி துவக்கினேன்..$20 பில்லியன் சம்பாதித்தேன்..இன்று நான் உலக கோடீஸ்வரர்களில் ஒருவன். காரணம் அதிகாலையில் காபி பிளாஸ்குடன் கம்பனி, கம்பனியாக ஏறி முன், பின் தெரியாதவர்களுடன் பேச நான் கூச்சபடாமல் இருந்ததுதான்" -> தொழிலதிபர் ப்ளூம்பெர்க் நியான்டர்செல்வன்
  • பரிஸினை பிளாஸ்ரிக் இல்லாத நகரமாக மாற்ற நடவடிக்கை! பரிஸினை பிளாஸ்ரிக் இல்லாத நகரமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024ஆம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பரிஸ் நகர மேயர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார். பரிஸின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பரிஸை பசுமையாக்கும் திட்டமும், மிதிவண்டிகளுக்கு மேலும் முன்னுரிமை கொடுப்பது உள்ளிட்ட 14 வசதிகள் பரிஸில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அவற்றில் ஒன்று தான் பிளாஸ்ரிக்கை முற்றாக ஒழிக்கும் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இதுகுறித்த திட்ட வரைபுகள் எதிர்வரும் 25ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.   http://athavannews.com/பரிஸினை-பிளாஸ்டிக்-இல்லா/  
  • குடிநீர் பிரச்சினை: தமிழக அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்! தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்காத அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது. அந்த வகையில், வரும் 22ஆம் திகதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு பேட்டிகளில் ஈடுபட்டுள்ளதே தவிர ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முன்வரவில்லை. தண்ணீருக்காக வெற்றுக் குடங்களுடன் அலையும் தாய்மார்களையும், ஆங்காங்கே அமைதி வழியில் மறியலில் ஈடுபடும் போது மக்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர்களும், முதல்வரும் பேட்டியளித்து வருகிறார்கள். உணவகங்கள் மூடப்படுவது, பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீரின்றி தவிப்பது, ஐ.ரி. கம்பனிகள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி புரிய உத்தரவிட்டிருப்பது, பல தங்கும் விடுதிகள் மூடப்படுவது என எங்கு பார்த்தாலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னை மாநகர மக்களும், தமிழகமெங்கும் உள்ள மக்களும் சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகி தினமும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களும் வரலாறு காணாத கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். குடிநீர் இல்லாப் பிரச்சினை எதிர்காலத்தின் மீது மக்களுக்கு பீதியையே ஏற்படுத்தியுள்ளதை இந்த அரசு ஏற்க மறுத்து வருவதுடன், குடிநீர் பிரச்சினையே இல்லை என்று பொறுப்பற்ற விவாதத்தில் ஈடுபட்டுவருகிறது. கடமை தவறிய அ.தி.மு.க. அரசு கண்ணையும் மூடிக்கொண்டிருப்பது தமிழகத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடாக அமைந்துள்ளது. ஆகவே, அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தையும், முதல்வர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரின் நிர்வாக படுதோல்வியையும் கண்டிக்கும் வகையிலும், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையைச் சமாளிக்க உடனடியாக ஆக்கபூர்வமான, போர்க்கால நடவடிக்கைகளில் அ.தி.மு.க. அரசு ஈடுபடவேண்டுமென வலியுறுத்தியும் வரும் 22ஆம் திகதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறவழியில் நடத்தப்படவுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   http://athavannews.com/குடிநீர்-பிரச்சினை-தமிழ/  
  • அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்து வர உதவுங்கள்.. June 20, 2019 இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளை மீள இலங்கைக்கு அழைத்து வர ஐ.நா உதவி புரியவேண்டும் என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜோர்ன் சேரேன்செனிடம் ( Joern Soerensen) கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் Mr.Joern Soerensen, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (20) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். அதன் போதே ஆளூநர் அக் கோரிக்கையை முன் வைத்தார். மேலும், இந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் அவர்களுக்கு விபரிக்கப்பட்டது. போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணமாக வடமாகாணம் காணப்படுவதால் இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை பொருளாதார ரீதியாக உயர்த்தக்கூடிய திட்டங்களை செயற்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார். இதேவேளை, வடமாகாண மக்கள் எதிர்கொண்டுவரும் நீர்ப்பிரச்சனையை தீர்வுக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கும் வடமராச்சிக்களப்பு திட்டம் உள்ளிட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் குறிப்பிட்ட ஆளுநர் அவர்கள் இதற்கு உதவிபுரியுமாறும் கோரிக்கை விடுத்தார். #இந்தியா #இலங்கைஅகதிகள் #சுரேன் ராகவன் #ஐக்கியநாடுகள்அபிவிருத்திநிகழ்ச்சித்திட்டம்   http://globaltamilnews.net/2019/124713/
  • அரசியல் செயற்பாட்டில், எவரையும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை.. June 20, 2019   அரசியல் செயற்பாட்டில் யாராவது ஒத்துழைக்காது விடின்  அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருத வேண்டியதில்லை – எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவிப்பு:- அர சியல் செயற்பாடுகளில் வேலை செய்யும் போது யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருதவேண்டியதில்லை. மக்கள் நலனில் குறிக்கோளாக இருங்கள், என எஸ் டி கப் நிறுவனத்தின் உபதலைவர் பிரட்லி ஒஸ்டின் தெரிவித்தார் ஜெசாக் நிறுவனமானது USAID-SDGAP நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் பெண்களை அரசியலில் பங்காளிகளாக்குகின்ற செயற்பாட்டில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க செய்தல், தொடர்பான செயலமர்வுகள் , பயிற்சிப் பட்டறைகள் கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கம் வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்று வந்தது. இச்செயற் திட்டத்தின் மீளாய்வும் எதிர்கால செயற்பாடுகளும் குறித்த கலந்துரையாடல் சமூக செயட்பாட்டு மையத்தின் இணைப்பாளர். நடராஜா சுகிர்தராஜ் தலைமையில் யாழ்ப்பாணம் அலுவலக மண்டபத்தில் நேற்று [19.06.2019 ] காலை தொடக்கம் மாலை வரை இடம்பெற்றது. இச் செயற்பாட்டில் பங்கு கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரு பெண்மணி நகரசபை தேர்தலில் போட்டியிட தீர்மானித்தார். நிறைய செயற் பாட்டில் ஈடு பட்டார் . ஆனால் அவரிடம் எந்தவிதமான நிதி வசதியும் இல்லை. மக்களுக்கு சேவை செய்வதில் விருப்பம் இருந்தது, . அந்த பெண் நினைத்தார் தன்னுடைய வேலைகள் மூலம் கட் டாயம் தனக்கு அரசியல் பிரதி நிதித்துவம் கிடைக்கும் என்று , அங்குள்ள ஏனைய கட் சிகளின் உறுப்பினர்களை விட சிறப்பாக செயற்பட்டார் . ஆனால் அந்தப் பெண்ணிற்கு இடம் கிடைக்கவில்லை, அவரது கட் சி ஒத்துழைப்பு வழங்கவில்லை, மக்களுக்காக நிறைய நம்பிக்கையுடன் சேவை செய்தார். கட்சியில் எதிர்ப்பு இருந்தாலும் மக்கள் நலனுக்காக போராடி தேர்தலில் நின்றார் . எனவே இப்படி அரசியல் செயற்பாடுகளில் வேலை செய்யும் போது யாராவது ஒத்துழைக்காது விடின் அவர்களை ஒருபோதும் எதிரிகளாக கருதவேண்டியதில்லை. மக்கள் நலனில் குறிக்கோளாக இருங்கள், உங்களின் சக்தி ஆளுமைகளை பார்க்கும் போது உற்சாகமாக உள்ளீர்கள் என்பது தெரிகிறது. நீங்கள் செய்யும் சேவை இந்த நாட்டின் ஜனாதிபதி , பிரதம மந்திரி வெளிநாட்டிற்கு சென்று யாரை சந்தித்தாலும் அவர்கள் செய்யும் கடமைகளை விட பெரியது. அடி மட்ட மக்களின் பிராச்சனைகளை வெளிக்கொண்டு வரும் செயற்பாடுகளில் பெண்களாகிய உங்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. அதனால் நீங்கள் தீவிரமாக செயற்படுகின்றீர்கள். என்றார். மேலும் இக் கலந்துரையாடலில் எஸ் டி கப் நிறுவனத்தின் மீளாய்வு ம் அறிக்கையிடலும் அதிகாரி ஜி . கஜனின் நெறிப்படுத்தலில் வடக்கில் பயிற்சி பெற்ற 125 பெண்களில் தெரிவு செய்யப்பட 25 பெண்கள் பங்கு பற்றி தமது கிராமங்களில் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டனர் என்றும் , அவற்றில் எதிர்கொண்ட சவால்கள், தீர்வுகளும் ., எதிர்கால திட்ட்ங்கள் குறித்தும் விவாதிக்கப் பட்டன. குறிப்பாக. எந்த அரசியல் கட்சியினதும் அடையாளமின்றி பெண்கள் என்ற வகையில் ஒவ்வொரு கிராமங்களிலும் தங்களை அடையாளப் படுத்துவதிலும் , கட் சி சார் அதிகாரங்களின் இடையூறுகள் , இனந்தெரியாதோரின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கும் முகம் கொடுத்த போதும் மக்கள் சேவை என்ற வகையில் துணிந்து செயற்படும் திறனை இங்கு பெற்றுள்ளோம் .என்றும் கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் கட் சியால் பாதிக்கப் பட் ட போது தேர்தலில் பங்கெடுப்பதில்லை என்று முடிவு செய்தேன் , ஆனால் இந்த பயிற்சிகள் ஊக்குவிப்பதாக இருப்பதால் பலதையும் தட்டிக் கேட்கும் தைரியத்தை பெற்று ள்ளோம் அந்தவகையில் அரசியலில் இறங்கி சாதித்து காட்டுவேன் என்று நம்புகின்றேன்,. அத்துடன் பெண் வேட்பாளர்களின் வீதத்தை அதிகரிக்கும் வகையில் செயற்படவுள்ளோம் என்று தமது கருத்துக்களை பலரும் பகிர்ந்து கொண்டனர் . இந் நிகழ்வில் ஆரம்பங்களில் சிறப்பு பேச்சாளராக பிரபல அரசியல் ஆய்வாளர்.நிலாந்தன் கலந்து கொண்டு பெண்களை அரசியலில் ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துக்களை வழங்கியதுடன்  அரசியல் பங்களிப்பில் உள்ள சட்டங்கள் , அடிப்படை பிரச்சனைகள் , பெண்கள் பிரதிநிதி துவத்தின் அவசியம் , சவால்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கொழும்பைச் சேர்ந்த சட்டவாளர் அபிராமி வன்னியசிங்கம் டிசில்வா வும் , ஊடகத் தொடர்பாடல் குறித்து எஸ்.கிஸோனும் , தலைமைத்துவம் குறித்து ந. சுகிர்தராஜ் ஜூம் , ஊடகப் பிரச்சாரம் குறித்து உமாச்சந்திரா பிரகாஷ் ஸும் , பரிந்துரை குறித்து சட் டத்தரணி ரஞ்சித் தும், தகவல் அறியும் உரிமை சட் டம் குறித்து சட் டத்தரணி ஐங்கரனும் , வளவாளர்களாக கலந்து கொண்டு வழிப்படுத்தியமை குறிப்பிடத் தக்கது. யாழ்.தர்மினி பத்மநாதன்   http://globaltamilnews.net/2019/124705/