Jump to content

40 தொ குதிகளிலும் தனித்து போட்டி ஜெ.தீபா அதிரடி..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: ஜெ.தீபா அதிரடி..!

1546610624-7716.jpg

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தினகரன் அணி, சீமான் கட்சி, கமல் கட்சி ஆகிய ஐந்து முனை போட்டி உறுதியாகியுள்ள நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கட்சியும் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தீபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
வரும் 18.04.2019 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெற உள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஜெ.தீபா அணியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்பமுள்ள கழக உடன்பிறப்புகள், வரும் 16.03.2019 சனிக்கிழமை மற்றும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் தீபாவும் அவருடைய கணவர் மாதவனும் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.

https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/deepa-party-also-contest-in-parliament-election-119031500002_1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வரும் 16.03.2019 சனிக்கிழமை மற்றும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது

அட்றா..  சக்கை, அம்மன் கோயில் புக்கை  எண்டானாம். 
40 தொகுதியிலும் போட்டியிட  தீபாவின் கட்சியில் ஆட்கள் இருக்கிறார்களா?
எத்தனை பேர், தேர்தலில் போட்டியிட   விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கின்றார்கள், என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்.

என்ன இருந்தாலும்... தீபாவின் தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் பாராட்டியே ஆகவேண்டும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அட்றா..  சக்கை, அம்மன் கோயில் புக்கை  எண்டானாம். 
40 தொகுதியிலும் போட்டியிட  தீபாவின் கட்சியில் ஆட்கள் இருக்கிறார்களா?
எத்தனை பேர், தேர்தலில் போட்டியிட   விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கின்றார்கள், என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்.

என்ன இருந்தாலும்... தீபாவின் தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் பாராட்டியே ஆகவேண்டும். :grin:

உனக்கு 20, எனக்கு 18, டிரைவருக்கு 2 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் இன்று ஒரு சலிப்பான மனநிலையில் இருக்கிறார்கள் அதனால் வசதியானவர்களிடம் அன்பளிப்புகளை வாங்கிக் கொண்டு அம்மா தீபாவுக்கு வாக்களிக்கலாம், என்னுடைய தெரிவு அவதான்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2019 at 8:30 AM, Nathamuni said:

உனக்கு 20, எனக்கு 18, டிரைவருக்கு 2 

Image may contain: 2 people, text

கூட்டணி.  கதவு... மூடியாச்சு. :grin:  😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரூவிற்றரில் ரி.ஆர் மகன் குரான் அரசனின் அலப்ஸ்.. 😎

Kuralarasan.jpg

Kuralarasan.jpg

https://tamil.asianetnews.com/cinema/kuralarasan-against-twit-for-actor-ajith-pok23j

டிஸ்கி :

ஒரே டமாஸ்தான்.. 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2019 at 1:00 PM, Nathamuni said:

உனக்கு 20, எனக்கு 18, டிரைவருக்கு 2 

எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க.. தீபாவிடம் விருப்ப மனு கொடுத்த டிரைவர் ராஜா..!

deepa455-1552928456.jpg

சென்னை: தீபா பேரவை சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக டிரைவர் ராஜா பொதுச் செயலாளர் ஜெ.தீபாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கடந்த 2017-ஆம் ஆண்டு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற ஒரு அரசியல் அமைப்பை தொடங்கினார். இதில் உறுப்பினர் படிவம் பெறுவதற்காக பெறப்பட்ட தொகையில் முறைகேடு நடந்துள்ளதாக உறுப்பினர்கள் புகார் செய்தனர்.இதனிடையே டிரைவரும் தீபாவின் நண்பருமான ராஜா பேரவையில் இருப்பதற்கு தீபாவின் கணவர் மாதவன் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சினை எழுந்தது. ஒரு கட்டத்தில் மாதவன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.ஆரம்பமே அபசகுனமா... 

மீண்டும் இணைப்பு

மாதவன் தனிக்கட்சி தொடங்கினார். இந்த நிலையில் டிரைவர் ராஜாவை கட்சி பொறுப்புகளிலிருந்து தீபா நீக்கினார். பின்னர் சிறிது நாட்களில் அவரை மீண்டும் இணைத்துக் கொண்டார்.

கூண்டோடு கலைப்பு

போயஸ் தோட்டத்தில் ராஜாவும் தீபாவும் மாதவனை அடித்துக் கொள்ளாத குறையாக ஊரே பார்க்கும் அளவுக்கு சண்டையிட்டு கொண்டனர். அவ்வப்போது தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையே தகராறு ஏற்படுவதும் அதை ஊரே வேடிக்கை பார்க்கும் அளவுக்கு இருந்ததால் தீபா பேரவை ஆங்காங்கே கூண்டோடு கலைக்கப்பட்டன.

இடைத்தேர்தல்

இந்த நிலையில் அவருக்கு தோன்றும்போது 4 கருத்துகளை கூறுவதும் மற்ற நேரங்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதும்தான் தீபாவின் வேலையாகும். ஆர் கே நகர் இடைத்தேர்தலில் கணவரின் பெயரை தவறாக போட்டதற்காக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

தீபா முக்கிய முடிவு

இந்த நிலையில் அதிமுகவிலிருந்து அழைப்பு வந்ததை அடுத்து அவர் அங்கு தாவுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்ற முக்கிய முடிவை தீபா எடுத்துள்ளார்.

ராஜாவின் விருப்பமனு

அதற்கான விருப்பமனுக்கள் பெறுவதை அவர் தொடங்கினார். முதல் ஆளாக தனக்கு வாய்ப்பு வழங்குமாறு டிரைவர் ராஜா விருப்பமனுவை பெற்றார். இது போல் இந்த தேர்தலில் தீபாவும் மாதவனும் போட்டியிடுகிறார்கள். இதையடுத்து நாளை தீபா தனது விருப்பமனுவை டிரைவர் ராஜாவிடம் கொடுக்கிறார்கள்.

ஆட்கள் தேற்றியாகிவிட்டது

அதற்கு அடுத்த நாள் மாதவன் தனது விருப்பமனுவை தீபா, ராஜாவிடம் கொடுக்கிறார். 3 தொகுதிகளுக்கு ஆட்களை தேற்றியாகிவிட்டது. மற்ற 37 தொகுதிகளுக்கு என்ன செய்வார் என தெரியவில்லை. அது சரி நேர்காணல் எப்படி நடக்கும்? மூன்று பேரும் மியூசிக்கல் சேர் மாதிரி ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டுக் கொள்வர் போலும். இது கூட பரவாயில்லை. இவர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு எப்படி பிரசாரம் செய்ய போகிறார்கள் என்பதை நினைத்தால் பகீர் என்கிறது.

https://tamil.oneindia.com/news/chennai/driver-raja-willing-contest-ls-elections-2019/articlecontent-pf361206-344353.html

டிஸ்கி :

தோழர் ஒரு தீர்க்க தரிசி.. வாயில் சர்க்கரை அள்ளி போடவேண்டும்..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அதற்கு அடுத்த நாள் மாதவன் தனது விருப்பமனுவை தீபா, ராஜாவிடம் கொடுக்கிறார். 3 தொகுதிகளுக்கு ஆட்களை தேற்றியாகிவிட்டது. மற்ற 37 தொகுதிகளுக்கு என்ன செய்வார் என தெரியவில்லை. அது சரி நேர்காணல் எப்படி நடக்கும்? மூன்று பேரும் மியூசிக்கல் சேர் மாதிரி ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டுக் கொள்வர் போலும். இது கூட பரவாயில்லை. இவர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு எப்படி பிரசாரம் செய்ய போகிறார்கள் என்பதை நினைத்தால் பகீர் என்கிறது.

பேசாமல்... கீழ்ப்பாக்க மனநோயாளிகள் மருத்துவமனையிலிருந்து,
சிலரை பிடித்துக் கொண்டு வந்து, மிகுதி 37 தொகுதியிலும்... போட்டியிட வைக்க வேண்டியதுதான். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2019 at 8:30 AM, Nathamuni said:

உனக்கு 20, எனக்கு 18, டிரைவருக்கு 2 

 

On 3/19/2019 at 5:03 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி :

தோழர் ஒரு தீர்க்க தரிசி.. வாயில் சர்க்கரை அள்ளி போடவேண்டும்..😎

Image may contain: 2 people, text

நாளை வரை பொறுத்திருக்கவும்...  :grin:

Link to comment
Share on other sites

வசூல் பண்ணுவதில் பேபிம்மா கெட்டிக்காரி. 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2019 at 9:55 AM, suvy said:

மக்கள் இன்று ஒரு சலிப்பான மனநிலையில் இருக்கிறார்கள் அதனால் வசதியானவர்களிடம் அன்பளிப்புகளை வாங்கிக் கொண்டு அம்மா தீபாவுக்கு வாக்களிக்கலாம், என்னுடைய தெரிவு அவதான்.....!  😁

சிங்கம் எங்கை போய் நிக்குதெண்டு பாத்தியளே?....அட்ரா....அட்ரா 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

சிங்கம் எங்கை போய் நிக்குதெண்டு பாத்தியளே?....அட்ரா....அட்ரா 🤣

ராமன் (அதிமுக) ஆண்டாலென்ன  ராவணன் (திமுக) ஆண்டாலென்ன எதுவாயினும்  கூடவந்த குரங்குதான் (பாஜக) ஆளப்போகுது இதுக்கு பார்க்க லட்ஷனமா அந்தம்மாவின் மூஞ்சதான் இருக்கு வந்துட்டு போகட்டும்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people smiling, text

தீபா.... தனித்து போட்டியிடவில்லையாம்.  அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.