Jump to content

மஹாபாரதத்திலிருந்து என்ன கற்கலாம்?

Recommended Posts

மஹாபாரதம்

அரசாளும் குடும்பத்திற்குள் நடந்த ஒரு சண்டை.

அரசாளுபவர்கள் சண்டையிட்டால் மாளுவது சாதாரண மக்கள். போர் யாருக்கும் நல்லது அல்ல.

முடிந்தால் போரை தவிர்ப்பது தான் வீரம். வாய்மையே வெல்லும். வாய்மையை வெல்ல வைக்க சில பொய்கள் அவசியமாகிறது. ஆனால் அப்படி சொல்லப்படாத பொய்களினால் வாய்மையே தோற்கவேண்டி நிலை வந்தால் அது ஆபத்து.

பாண்டவர்கள்

தாய் சொல்லை தட்டாதவர்கள்

சகோதரத்துவத்திற்கு மதிப்பு கொடுத்தவர்கள்

சூதாட்டம் எனும் தவறு செய்ததால் நாட்டை இழந்தவர்கள். அதனால் பல கஷ்டமும் பட்டவர்கள்.

கௌரவர்கள்

சொன்ன வார்த்தையை காப்பாற்றாதவர்கள்.

தந்தை சொல்லையும் தாய் சொல்லையும் மீறியவர்கள்

சூழ்ச்சியினால் நேர்மையை வெல்ல நினைத்தவர்கள்.

பல நேர்மையற்ற காரியத்தை செய்தவர்கள்

ஒரு பெண்ணை அவமானப்படுத்தியவர்கள்.

திரெளபதி

மிகவும் காராசாரமாக இணையத்தில் விவாதிக்கப்படும் ஒரு பாத்திரம்.

அவள் விலைமாதா - இல்லை. காசுக்கு உறவு கொண்டால் தான் ஒரு பெண் விலைமாதாகிறாள்.

அவள் கள்ள உறவு கொண்டவளா - இல்லை. கணவனுக்கு அறியாமல் இன்னொரு ஆண்மகனுடன் உறவு கொண்டால் தான் அது கள்ள உறவு. இங்கு அவள் அந்த ஐவரையும் மணந்தாள். ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருடன் உறவு கொள்ளவில்லை.

ஒரு பெண் 5 பேரை மணப்பதா - ஒரு ஆண் 5 பெண்களை மணக்கும் போது ஒரு பெண்ணும் 5 பேரை மணக்கலாம். சமத்துவும் என்று பார்த்தால் அந்த காலத்திலேயே. ஒரு பெண் பல பேரை மணப்பதா - மீண்டும் நாம் கதை பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நடந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த காலகட்டம் சமூக கட்டமைப்பு அப்படி மணப்பதில் ஏதாவது கட்டுபாடு இருந்து அவள் அந்த கட்டுப்பாட்டை உடைத்தாளா என்று. அப்படி இல்லை. கதைப்படி.

அர்ஜூனன்

கிருட்டிணரிடம் அறிவுரைகள் கேட்கிறார். அதுவே பிறகு பகவத் கீதையாகிறது. அதில் ஒரு மனிதனின் கடமைகளையே விளக்கியுள்ளனர் கிருட்டிணன் வாயிலாக.

பொய் புரட்டு செய்கிறான் பாண்டவர்களை ஜெயிக்க வைக்க

ஒரு வேளை நேர்மையான யுத்தம் பாண்டவர்கள் பூண்டிருந்தால் துரியோதனனின் சூழ்ச்சி வென்று மஹாபாரதத்தையே மாற்றி எழுதியிருப்பான். அதற்காக நேர்மை வெல்ல பொய்மையும் சில நேரம் ஆயுதமாக எடுக்க வேண்டும் என்று பல counter-attacks களை கிருட்டிணர் செய்வதாக கதை.

கர்ணன்

நட்பில் சிறந்தவன். தானத்தில் சிறந்தவன். தானம் கொடுப்பவர்கள் இன்றும் கூட நீ என்ன கர்ணனா என்று சொல்லும் அளவிற்கு காலங்கள் கடந்து மனதில் நின்றவன். தான் பாண்டவர்களுக்கு மூத்தவன் என்று அறிந்தும் பாண்டவர்கள் பக்கம் சேராமல் தன் நண்பனுடன் நின்றவன். இன்று யாராவது நம்மிடம் வந்து நீதான் நிஜமாகவே அம்பானியின் பிள்ளை என்று சொன்னால் நாம் ஓடிப்போய்விடுவோம். நட்புக்கு இலக்கணம் இங்கிருந்து கற்கலாம்.

துரியோதனன்

அவன் கர்ணனை பயன்படுத்தியிருந்தாலும் அவனுக்கு உரிய மரியாதை பெற்றுத் தந்தவன். தன் நண்பனுக்கு தன் மனைவிக்கும் உள்ள நட்பை சந்தேகப்படாமல் இருவர் மீதும் அளிவில்லா நம்பிக்கை கொண்டவன். நண்பனின் மனைவியை எவ்வாறு நடத்த வேண்டும் எனும் பாடம்.

பீஷ்மர்

அதர்மத்தின் பக்கம் இருந்தாலும் நாட்டை காப்பது தன் கடமை என்று துரியோதனின் பக்கமாக நின்று போர் புரிகிறார். தேசப்பற்றுக்கு உதாரணம்.

திருதிராஷ்டிரன்

கண்ணில்லாதவர். மகன் மீது அளிவிலா பாசம் கொண்டவர். தான் அடையாத ராஜ்ஜியத்தை எப்படியாவது தன் மகன் அடைய வேண்டும் என்று ஆசை கொண்டவர். நடப்பது தவறுகள் என்றிருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டே காதையும் மூடிக் கொண்டவர். இவர் ஒரு

துணைபாத்திரம் தான். ஒரு Helpless character depicted nicely. இவர் மனைவி தன் கணவன் பார்க்காத உலகை தானும் பார்க்க மாட்டேன் என்று கண்ணை மூடிக் கொண்டவள். கணவன் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு. நல்ல பட்டிமன்ற தலைப்பு. கண்களை கட்டிக் கொள்ளாமல் தன் கணவனுக்கு சேவை செய்வது தானே நியாயம் என்பார்கள் சிலர்.

குந்தி

தவறாக குழந்தை பெற்றவள். அந்த தவறுக்காக கடைசி வரையில் வாடுகிறாள். கணவனை இழக்கிறாள். பிறகு பிள்ளைகளுடன் அவதிப்படுகிறாள்.

யுத்தம்

யுத்தம் குருக்ஷேத்திரத்தில் நடப்பதாக கதை.

மேலும் பல துணை கதைகள் நீதி நேர்மை வாய்மை இவற்றை அறிவுறுத்துவதாகவே உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒட்டுமொத்தமாக இது ஒரு கற்பனை கதைதான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா! பாரதமும் ராமாயணமும் குழம்பிப் போயிற்று எனக்கு!

Link to comment
Share on other sites

நான் பார்த்த மகாபாரத நாடகத்தில் பாண்டவரின் மனைவி அவமானப்படும் போது கர்ணன் பார்த்து கொண்டுதானிருந்தார். அது எப்படி சரியாகும்? கொடைவள்ளலாக மட்டும் இருந்தால் போதுமா? என்னளவில் அவர் ஒரு மனிதனேயில்லை.

[மனைவியை வைத்து சூதாடியவன் மட்டும் நல்லவனா என கேட்காதீர்கள், இவர்கள் எல்லாம் தீயவர்கள்]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனைக் கதை என்றாலும், தர்மம் வெல்லும் என்று சொல்லப்படுகிறது. நிதி வெல்லும் என்றும் சொல்லப்படுகிறது. கெளரவர் படையில் பல படைசேனைகள் இருந்தாலும், உதவிகள் இருந்தாலும், பாண்டவர் படையே கடைசியில் வென்றது. சிங்கள அரசுக்கு அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா ,இஸ்ரெல் உட்பட பல நாடுகள் உதவி புரிய, அப்பாவித்தமிழர்களை குண்டு போட்டு அழிக்கிறது சிங்களப் படை. என்றாலும் தர்மத்தின் பால் நீதியின் பால் செயற்படும் தலைவர் பிரபாகரன் படை, வெளினாடுகள் உதவி இன்றி பெரும் வெற்றிகளை ஈட்டு ஈழத்தை மீட்பது உறுதி. ஆனால் மகாபாரதம், பகவத்கீதையை நம்புகிற சில ஈழத்தமிழர்கள் எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். சிங்களவரோடு சேர்ந்து வாழலாம் என்று சொல்கிறார்கள். ஆனால் பாரதப்போரில் கெளரவர்களிடம் பாண்டவர்கள், நாடு கேட்டு, ஊர் கேட்டு, 5 வீடுகள் கேட்டு கிடைக்காததினால் உரிமையினை பெறுவதற்காகவே போரிட்டார்கள். அதே போலத்தான் தமிழர்களும் உரிமைகள் கேட்டு ஏலாமல் போரிடத்துணிந்து வீரசாதனை படைத்து வருகிறார்கள். இது பற்றி இந்த ஈழத்தமிழர்களிடம் கேட்டால் அது வேற , இது வேற என்று எதோ கதைக்கிறார்கள்.

பகவத்கீதையில் உள்ள வாக்கியம்' எது நடந்ததோ அது நன்றாக நடந்தது' - இதனை செஞ்சோலையில் இறந்த பிள்ளைகளின் பெற்றோர்களைப் பார்த்துக் கேக்கலாமா?. நடை முறைக்கு இது சாத்தியமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகாபாரதம் என்றொரு மெகாபொய்

மகாபாரதம் உண்மையாக நடந்த வரலாறு என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்து உள்ளதாக உ.பி. அரசு தெரிவித்துள்ளது. பாக்பத் - பர்னாவா இடையேயான 60 கி.மீ. தூரம் இப்போது மகாபாரத காலத்தை நினைவூட்டும் வகையில் இருந்து வரு வதைக் கண்கூடாகக் காணலாம். இருபுறம் திறந்த நிலையில் இப்போதும் நீண்ட குகை மகாபாரதம் கதையல்ல; நிஜம் என்பதை விளக்குவதாக இருக்கிறது.

ஆதாரம் கிடைத்தனவாம்! 12.6.2005 நாளிட்ட 'தினமலர்' - நாளிதழில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. "மகாபாரதம் கற்பனையல்ல; வரலாறு. ஆதாரங்களுடன் உ.பி. அரசு உறுதி இவ்வாறு உ.பி . அமைச்சர் கோகல் ஹமீத் கூறியுள்ளார். இதுதான் 'தினமலர்' செய்தியின் சில பகுதிகள்.

முதன்முதலாகப் பார்த்தபோது. இப்பொழுது, நாம் மகாபாரதம் கற்பனைக் கதையா? வரலாறா? என்பதுபற்றி ஆய்வு முறையில் அலச இருக்கிறோம்.

இந்த மகாபாரதமானது முதலில் அஸ்வலாயனா என்பவரின் 'கிருஹ்ய சூத்ரம்' என்னும் நூலிலும், பாணினியின் 'அஷ்டத்யாயி' என்னும் நூலிலும் குறிக்கப்பட்டுள்ளது. முழுமையாக, மகாபாரதம் என்ற பெயரானது, முதல் தடவையாக குப்தர் காலக் கல்வெட்டில் தான் பொறிக்கப்பட்டுள்ளது.

கண்ணன் இறந்த காலம்: மகாபாரதப் போர், துவாபர யுகத்தின் இறுதியிலும், கலியுகத்தின் தொடக்கத்திலும் நடந்ததாகக் கூறி, இந்நிகழ்வு 5000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்று பழம்பெருமை பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறு, மகாபாரதம் : ஆதிபர்வம் :

அத்தியாயம் - 2; சுலோகம் 10 கூறுகிறது.

இந்தக் கலியுகம் எப்பொழுது தொடங்கியது? கண்ணன் இறந்த அந்த நாளில்!

கண்ணன் இறந்தது எப்பொழுது? மகாபாரதப் போர் முடிந்து, 36 ஆண்டுகளுக்குப் பின் கண்ணன் மடிந்தான்.

இவ்வாறு ஸ்ரீமத் மகாபாகவதம்: முதல் °கந்தம்:

அத்தியாயம் - 15, சுலோகம் - 36 கூறுகிறது.

கலிகாலப் பிறப்பு:கலியுகம் தொடங்கி இப்பொழுது எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?

ஏதாவது ஒரு பஞ்சாங்கத்தை எடுத்துப்புரட்டி பார்த்தால் கலியுகம் தொடங்கி 5107 ஆண்டுகள் ஆகின் றன எனத் தெரிந்து கொள்கின்றன. இந்த 5107-லிருந்து 36 ஆண்டுகளைக் கழித்தால் வருவது 5071.

ஆக, இதிலிருந்து 5071 ஆண்டு களுக்கு முன் மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்பதாகப் பாகவதம் பகர்கிறது.

ஆனால், மகாபாரதக் கணக்குப்படி கண்ணன் உயிருடன் இருந்து மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாய் அதாவது பார்த்த சாரதியாய் இருந்தபோது கலியுகம் பிறந்து விட்டது என்கிறது மகாபாரதம். இரண்டில் எது சரி? எது சரி அன்று? அந்த வியாசருக்குத்தான் வெளிச்சம்!

வேறுபாடு வரலாமா? மகாபாரத நூலையும், பாகவதம் உள்ளிட்ட 18 புராணங்களையும் பாடியவர் இந்தப் பராசரப் புத்திரர் வியாசர்தானே?

ஒருவரே, தாம் எழுதிய இரண்டு நூல்களிலும் கணக்கில் வித்தியாசம் வரும்படி எழுதலாமா? வேதம் வகுத்த வியாச முனிவருக்கு கணக்கில் கலக்கமான அறிவா?

தப்புக்கணக்கு போடுபவர் வேத வியாசர் என்று அழைக்கப்படும் தகுதியுடையவர் ஆவாரா?

ஒத்த கருத்து உண்டா?மகாபாரதப் போர் ஸ்ரீமத் மகாபாகவதப்படி கி.மு. 3007 வாக்கில் நிகழ்ந்தது. அது இருக்கட்டும், இந்தக் கலியுகம் தோன்றியது எப்போது என்பது பற்றிய செய்தியிலிருந்து வடமொழி அறிவாளர் களிடை ஒத்தக் கருத்து உண்டா?

"கி.மு. 3102 பிப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலியுகம் தோன்றியது" என்கிறார். கி.பி. 476இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற வானியலார்.

"கலியுகம் கி.மு. 2449 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது" - என்கிறார் வராகமிஹிரர் என்னும் மற்றொரு வானியலார்.

ஆக, மகாபாரதம் - கலியுகம் பற்றி இத்துணை குளறுபடி இருக்கையில் மகாபாரதம் வரலாறு என்பது பொருந்துமா?

என்ன கணக்கு, இந்தக் கணக்கு?குருச்சேத்திரத்தில் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கவுரவரின் 11 அக்ரோணி சேனையும் பாண்டவரின் 7 அக்ரோணி சேனையும் ஆக மொத்தம் 18 அக் ரோணி சேனை ஈடுபட்டதாக மகாபாரதம் கூறுகிறது.

ஓர் அக்ரோணி படை என்பது,

21870 தேர்கள்;

21870 யானைகள்;

65610 குதிரைகள்;

109350 காலாட்படைகள்

அடங்கியது ஆகும்.

18 அக்ரோணி சேனைகள் என்றால்,

21870 ஒ 18 = 393660 தேர்கள் (ரத)

21870 ஒ 18 = 393660 யானைகள் (கஜ)

65610 ஒ 18 = 1180980 குதிரைகள் (துரக)

109350 ஒ 18 = 1978300 காலாட்கள் (பதாதிகள்) அடங்கியது என்பதாகிறது,

தேர் ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால் 3,93,660 தேர்ப்படை வீரர்கள்; யானை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 3,93,660 யானைப் படை வீரர்கள்; குதிரை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 11,80,980 வீரர்கள்.

இத்தோடு, காலாட்படை வீரர்கள் 19,78,300 வீரர்கள்.

இவற்றைக் கூட்டினால் மொத்த நாற்படை வீரர்கள் 39,46,540 எண்ணிக்கையாகிறது.

போரில் பங்குபெற்ற நாற்படை வீரர்கள் ஏறத்தாழ 40 இலட்சம் பேர்; யானைகள் 4 இலட்சம்; தேர்கள் 4 இலட்சம்; குதிரைகள் 1 1/4 இலட்சம்; நம்பமுடியவில்லை, இல்லை!எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு படை வீரர்கள், யானை, தேர், குதிரைகள் நிறுத்தி வைக்க இவ்வளவு பெரிய மைதானம் இருக்க வாய்ப்பு உண்டா?

அவற்றை மோதுமான இடைவெளியில் அணி வகுத்து நிறுத்த இடம் இருக்க முடியுமா?

நிறுத்தி, அணிவகுத்து நிற்கவே இடமிராது என்றால் அப்படையினர் அங்கும் இங்கும் பாய்ந்து திரிந்து ஓடிப் போரிட அத்தனை பெரிய போர்த்திடல் இருக்க வேண்டுமே? அதற்கு வாய்ப்பு உண்டா? இல்லையே!

இத்துணை எண்ணிக்கை நம்பும்படியாக இல்லை; இல்லை; இல்லவே இல்லை!!

எல்லாம் ஒரே 'கப்ஸா' ஆகவல்லவா இருக்கிறது?

இவ்வெண்ணிக்கை, உண்மையாக இருக்க வேண்டும் எனில், படைவீரர்களுக்கும், மொத்த மக்கள் தொகைக்கும் இயல்பான விகிதாசாரப்படி மக்கள் தொகை 20 கோடியாக இருக்கவேண்டும். இது எவ்வகையிலும் சாத்தியமே இல்லை!

எல்லாம் இல்லை மயம்!மகாபாரதம் பற்றி, வரலாற்று அறிஞர் பெருமகன், டி.டி. கோசாம்பி முதலியோர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்போம்.

1. கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான எந்த இலக்கியத்திலும் மகாபாரதம், மகாபாரத யுத்தம் பற்றிய செய்திகளே இல்லை!

2. மகாபாரத யுத்தம் எப்போது நடந்தது? என எவராலும் வரையறுத்துக் கூறப்படவில்லை!

3. இன்றைய அஸ்ஸாம் என்று கருதப்படுகிற மகாபாரத 'பிரஜியோதிஷா' மன்னனைப் பற்றி அஸ்ஸாமிய இலக்கியம், வரலாறு எவற்றிலும் எந்தக் குறிப்புகளும் இல்லை !

4. போரில் கலந்துகொண்ட படைவீரர்கள் எண்ணிக்கை நம்பவே முடியாத கற்பனையாகும்.

5. எல்லாவற்றிற்கும் மேலாக, யுத்தத்தில் பயன்படுத்தப் பட்டதாகக் கூறப்படும் பல ஆயுதங்களைச் செய்வதற்கு, பெருவாரியான இரும்பு தேவைப்பட்டிருக்கும். ஆனால், மகாபாரதம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இரும்பு அரிதாகவே இருந்திருக்கிறது.

(உலகின் இரும்புக் காலம் என்பது, 3300 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன்).

இந்தக் காலகட்டத்தில்தான் இரும்பை உலகில் மனிதன் இனம் மிகுதியாகக் கையாளத் தொடங்கியது என்பது மனித இன வரலாற்றுச் செய்தி. மகாபாரத காலம் எனக் கூறப்படுவதோ கி.மு. 3000 வாக்கில் - (ஆதாரம்: 'சண்டே', 5-11, ஜூன் 1988)

வரலாற்று அடிப்படையற்றது:வரலாற்று ஆய்வு அறிவாளர்களின் கருத்து இவ்வண்ணம் இருக்க, உத்திரபிரதேச அமைச்சர் பெருமகன் மான்புமிகு ஹமீத் பாக்பத் - பர்னாவா இடையேயான 60 கி.மீ. தூரம் இப்போதும் மகாபாரத காலத்தை நினைவூட்டுவதாக இருந்து வருவதாக எதன் அடிப்படையில் இயம்புகிறார்?

தலைமுறை தலைமுறையாக:ஏதோ ஒரு சமயம் குருச்சேத்திரம் எனப்படும் பகுதியில், பாண்டவர் என்பவர்களுக்கும் கவுரவர் என்பவர் களுக்கும் இடையே பங்காளிச் சண்டை என்று சிறிய அளவில் நிகழ்ந்திருக்கலாம். இம்மாதிரியான சண்டை எங்கும் நடப்பது தான்! இயல்பானதுதான்! ஆனால், ஒவ்வொரு தலை முறையினரும், இந்தச் சண்டை நிகழ்ச்சியை அடுத்த தலைமுறையினருக்கு விவரிக்கும்போது பல, புதிய, புதிய தகவல்களைக் காலப் போக்கில் கற்பனை வளம் மிளிர சேர்த்திருக்கின்றனர்.

வளர்த்த கலை மறந்துவிட்டாய் ஏனடா, கண்ணா?"முதன் முதலாக, வியாசர் எழுதிய மகாபாரதக் காவி யத்தில் 8000 செய்யுள்களே இருந்தன. இதற்கு 'ஜெய பாரதம்' எனப் பெயர்! இதுவே, காலப்போக்கில், 24 ஆயிரம் செய்யுள் களையும், பின்னர், 1 லட்சம் செய்யுள்களையும் கொண்ட 'மகாபாரதம்' ஆக வளர்ந்துவிட்டது.

உண்மை ஒருநாள் வெளியானால்?இதுவரை, ஜெயபாரதம் நமக்குக் கிடைக்கவில்லை! அதைப் படித்தால், ஒருவேளை பாரதக் கதையின் உண்மை உருவத்தை நாம் தெரிந்து கொள்ள வழியிருக்கிறது?" என்கிறார், குருச்சேத்திரப் பல்கலைக் கழகத்துத் தொல் பொருள் ஆய்வுத் துறைப் பேராசிரியர் டாக்டர் உதய்வீர் சிங் அவர்கள். இவர், மகாபாரத ஆய்வுப் பணியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருபவர்.

கேள்வி (கேலி)க் குறி:"40 இலட்சம் பேர் கொண்ட பெரிய படைகள் இந்தக் குறுகிய இடத்தில் போரில் எப்படிப் பங்கு கொண்டன? என்பது கேள்விக் குறியான விஷயமாக இருக்கிறது!

இத்தனை பெரிய எண்ணிக்கை, கவியின் கற்பனை யாக இருக்கலாம்" - என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் உதயவீர்சிங்.

ஒன்றும் காணவில்லை!அவர் மேலும் கூறுகிறார்: "குருச் சேத்திரத்திலிருந்து, சுற்றிலும் மேட்டுப் பகுதிகள் இருக்கின்றன.

இங்கிருந்து 2 கல் தொலைவில் அஸ்திபூர் என்று ஓர் இடம் இருக்கிறது. இங்குதான், பாரதப் போரில் உயிரிழந்த போர்வீரர்களின் உடல்கள் எரிக்கப் பட்டன - என்பது அய்தீகம்.

இப்போது, இந்த அஸ்திபூருக்குப் போனால் ஒரு அஸ்திக்குன்றைக் கூட (எலும்புச் சாம்பல் மேடு)ப் பார்க்க முடியாது" - (தகவல்: நூல் - 'கண்ணனைத் தேடி' - டி.கே.வி. இராஜன்)

எதுவும் கிடைக்கவில்லையே?

"மகாபாரதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் அரசர்களின் கல் வெட்டுகளோ, செப்பேடுகளோ, காசுகளோ இதுவரை எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை!" - என்கிறார், மய்ய அரசுத் தொல் பொருள் துறையின் மேனாள் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் பி.பி. வால் அவர்கள்.

பானை ஓடும், பாரத காலமும்:தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங் களை வைத்துக் கொண்டு பார்க்கும் போது, அஸ்தினா புரத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பானை ஓட்டின் காலம் கி.மு. 1100 எனக் கணக்கிடப் பட்டுள்ளது. எனவே, இப்பானை பாரத காலத்தைச் சேர்ந்ததில்லை என்று தெரிய வந்துள்ளது. மகாபாரத காலம் கி.மு. 3000 வாக்கில் - என்பது முன்னர்க் குறிப்பிட்டுள்ளோம்.

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!

மகாபாரதக் கதை நிகழ்வு பற்றிய எந்தத் தடயங்களும் உ.பி. அமைச்சர் கூறும், குருச்சேத்திரப் பகுதியில் அதாவது புதுடில்லியிலி ருந்து 150 கி.மீ. வடமேற்கில் கிடைக்கவில்லை! இந்நிலையில், உ.பி. அமைச்சர் ஹமீத் அவர்கள் எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பாக்பத் - பர்னாலா இடையிலான 60 கி.மீ. தூரம் மகா பாரத காலத்தினை நினைவூட்டுவதாக, ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - என்று கூறுகிறார் என்பது நமக்குத் தெரியவில்லை!

உங்கள் விருப்பம்!

"நீண்ட குகை அப்பகுதியில் இருப்பதால் மகா பாரதம் நிஜம்" என்கிறார் அமைச்சர். அது, மெய்ப் பிக்கப்பட வேண்டாமா? மெய்ப்பிக்கப்பட்டதா? அந்தக் குகை, கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஏதேனும் வரலாற்று அறிவியல் ஆய்வு கூறியுள்ளதா? ஒரு பகுதியில், குகை ஒன்று இருப்பதாலேயே, 'பார், பார்! அது மகாபாரத காலக் குகை!' என்று எப்படிக் கூறலாம்?

வெறும் கற்பனை, யூகத்தை, தன் விருப்பத்தை உண்மை - என்று அவர் எப்படிக் கூறலாம்? இது என்ன 'உங்கள் விருப்பமா'?

கற்பனையின் விற்பனை!

வரலாற்று ஆய்வு முடிபுகளிலிருந்து மகாபாரதம் 'நிஜம்' அல்ல; வரலாறு அன்று; கற்பனைக் கதை என்றுதான் கூறமுடியும். கற்பனையை வரலாறு என்று விற்பனை செய்யலாமா? இது தகுமா? முறையா? சரியா?

காரணம் புரிகிறதா?

"இந்துத்வா என்ற பெயரில் உ.பி.யிலும், மத்தியி லும் ஆட்சி நடத்திய தே.ஜ. அரசு செய்யாத இந்த முயற்சியை சமாஜ் வாடி அரசு செய்ய முன் வந்துள் ளது குறிப்பிடத்தக்கது" - என்று 'தினமலர்'க்காரர் புல்லரித்துப் போய் எழுதுகிறாரே? என் செய்ய?

நமது சமுதாயம் ஏன், பிற்படுத்தப்பட்டு தாழ்த்தப் பட்டுப் போய்க் கிடக்கிறது? என்பதற்கு சமாஜ்வாடிக் கட்சி அரசின் செயல்பாடு உலகுக்குத் தெரிவித்து நிற்கிறதே? இப்படிச் 'சூத்திர' அரசு இந்துத்வாவுக்கு வெண்சாமரம் வீசலாமா? இதைக் கண்டு நாம் வெட்கப்படுகிறோம்!

வேதனைப்படுகிறோம்! வேறு என்ன செய்ய? -

நன்றி: மறுமலர்ச்சி

Link to comment
Share on other sites

மகாபாரதம் உண்மையோ பொய்யோ, அந்தக் கதை மூலம் பல செய்திகளும் , மிக சிறந்த நூலான பகவத் கீதையும் கிடைத்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாபாரதம் உண்மையோ பொய்யோ, அந்தக் கதை மூலம் பல செய்திகளும் , மிக சிறந்த நூலான பகவத் கீதையும் கிடைத்தது

நாங்கள் கொப்பி பெஸ்ட் செய்ய எவ்வளவு விசயம் இருக்கிறது.. இவவர்கள் சும்மா சரி பிழை பார்த்துக்கொன்டுஇருக்கினம்..

..... :D:blink::D:D:D:D

Link to comment
Share on other sites

மஹாபாரதத்திலிருந்து என்ன கற்கலாம்?

மெகா சீரியல்கள் அந்தக்காலத்திலேயும் இருந்திருக்கு :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாபரதம் எங்களின் புத்தகம் தானெ

திரெளபதி.....திருகோனமலை தான் பிறந்தவ.

பான்டவர்கள் ..பன்டதெறிப்பில் பிறந்தவர்கள்

ஏன் மகாபாரத்ப்போர் அனுராதபுரத்தில்தான் நடந்தது .........அன்னியரின் படை எடுப்பால் எல்லாம் மாற்றம் அடைந்து போயிற்றுது.....

கண்ணன் கண்ணாதிட்டியிலேயே அவதரிச்சவர் :P

Link to comment
Share on other sites

மஹாபாரதத்திலிருந்து என்ன கற்கலாம்?

மெகா சீரியல்கள் அந்தக்காலத்திலேயும் இருந்திருக்கு :P

ஆஹா குட்டித்தம்பி என்ன கண்டுபிடிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப குந்தவை குப்பிளானோ?

யாழ் களத்தில குப்பிளான் வாசி இருக்கிறார் கேட்டு சொல்லுறன் ...சில நேரம் அவருடைய வகுப்பில படிச்சிருக்கலாம்........... :D:blink::D:D:D .

கண்ணன் கண்ணாதிட்டியிலேயே அவதரிச்சவர் :P

நான் நினைச்சன் நீங்கள் சொல்லிட்டிங்கள்....... :D:D

சும்மா இதில இருந்து அரட்டை அடிகவேன்டாம்......சைக்கிளில் டபிள்ஸ் வான்கோ யாழ்சந்திக்கு..........

Link to comment
Share on other sites

மகாபாரதம், இராமாயணம் போன்றவைகள் புத்தர் காலத்திலோ அல்லது அதற்கு பின்போ எழுதப்பட்டன என்ற கருத்தும் உண்டு.

புத்தர் உயிர்க்கொலை, வர்ணக்கோட்பாடு போன்றவைகளுக்கு எதிராக செய்த பிரச்சாரத்திற்கு எதிராக, அவைகளை நியாயப்படுத்துவதற்கு எழுதப்பட்ட நூல்களே மகாபாரதம், பகவத்கீதை, இராமாயணம் போன்றன என்று கருதப்படுகிறது.

மகாபாரதம், பகவத்கீதை ஆகியன பிறப்பினால் உருவாகின்ற சாதியத்தை கட்டிக்காக்கின்ற வேலையை செய்கின்றன.

இவைகளில் இருந்து எதையுமே கற்கமுடியாது. ஒரு பரபரப்பான கற்பனைக் கதை என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் சொல்வது சரி ஆனால் அதை ஏற்க கூடிய நிலையில் இந்துவாதிகளாகிய நாம் தயார் இல்லை

இந்து,இந்து,இந்து(இது யார் வைத்த பெயர்)வெள்ளைகாரன் வைத்த பெயர் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாபரதம் எங்களின் புத்தகம் தானெ

திரெளபதி.....திருகோனமலை தான் பிறந்தவ.

பான்டவர்கள் ..பன்டதெறிப்பில் பிறந்தவர்கள்

ஏன் மகாபாரத்ப்போர் அனுராதபுரத்தில்தான் நடந்தது .........அன்னியரின் படை எடுப்பால் எல்லாம் மாற்றம் அடைந்து போயிற்றுது.....

ஹலோ புத்து எடுத்தபாட்டுக்கெல்லாம் விசுக்கோத்துக்கதை கதைக்கக்கூடாது கண்டீரோ?பேந்து உங்களுக்கெதிராய் சர்வசன வாக்கெடுப்பு நடத்தவேண்டிவரும்

Link to comment
Share on other sites

மகாபாரதம், இராமாயணம் போன்றவைகள் புத்தர் காலத்திலோ அல்லது அதற்கு பின்போ எழுதப்பட்டன என்ற கருத்தும் உண்டு.

புத்தர் உயிர்க்கொலை, வர்ணக்கோட்பாடு போன்றவைகளுக்கு எதிராக செய்த பிரச்சாரத்திற்கு எதிராக, அவைகளை நியாயப்படுத்துவதற்கு எழுதப்பட்ட நூல்களே மகாபாரதம், பகவத்கீதை, இராமாயணம் போன்றன என்று கருதப்படுகிறது.

மகாபாரதம், பகவத்கீதை ஆகியன பிறப்பினால் உருவாகின்ற சாதியத்தை கட்டிக்காக்கின்ற வேலையை செய்கின்றன.

இவைகளில் இருந்து எதையுமே கற்கமுடியாது. ஒரு பரபரப்பான கற்பனைக் கதை என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

மகாவம்சமே படிச்சனிங்கள் :P

Link to comment
Share on other sites

ஹலோ புத்து எடுத்தபாட்டுக்கெல்லாம் விசுக்கோத்துக்கதை கதைக்கக்கூடாது கண்டீரோ?பேந்து உங்களுக்கெதிராய் சர்வசன வாக்கெடுப்பு நடத்தவேண்டிவரும்

தாத்தா டைகர்பமிலி அவருக்கு ஆதரவாக தான் வாக்களிக்கும்

:rolleyes:

Link to comment
Share on other sites

மகாபாரதம், இராமாயணம் போன்றவைகள் புத்தர் காலத்திலோ அல்லது அதற்கு பின்போ எழுதப்பட்டன என்ற கருத்தும் உண்டு.

புத்தர் உயிர்க்கொலை, வர்ணக்கோட்பாடு போன்றவைகளுக்கு எதிராக செய்த பிரச்சாரத்திற்கு எதிராக, அவைகளை நியாயப்படுத்துவதற்கு எழுதப்பட்ட நூல்களே மகாபாரதம், பகவத்கீதை, இராமாயணம் போன்றன என்று கருதப்படுகிறது.

மகாபாரதம், பகவத்கீதை ஆகியன பிறப்பினால் உருவாகின்ற சாதியத்தை கட்டிக்காக்கின்ற வேலையை செய்கின்றன.

இவைகளில் இருந்து எதையுமே கற்கமுடியாது. ஒரு பரபரப்பான கற்பனைக் கதை என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

கண்ணன் இறந்த காலம்: மகாபாரதப் போர், துவாபர யுகத்தின் இறுதியிலும், கலியுகத்தின் தொடக்கத்திலும் நடந்ததாகக் கூறி, இந்நிகழ்வு 5000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்று பழம்பெருமை பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறு, மகாபாரதம் : ஆதிபர்வம் :

அத்தியாயம் - 2; சுலோகம் 10 கூறுகிறது.

இந்தக் கலியுகம் எப்பொழுது தொடங்கியது? கண்ணன் இறந்த அந்த நாளில்!

கண்ணன் இறந்தது எப்பொழுது? மகாபாரதப் போர் முடிந்து, 36 ஆண்டுகளுக்குப் பின் கண்ணன் மடிந்தான்.

இவ்வாறு ஸ்ரீமத் மகாபாகவதம்: முதல் °கந்தம்:

அத்தியாயம் - 15, சுலோகம் - 36 கூறுகிறது.

கலிகாலப் பிறப்பு:கலியுகம் தொடங்கி இப்பொழுது எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?

ஏதாவது ஒரு பஞ்சாங்கத்தை எடுத்துப்புரட்டி பார்த்தால் கலியுகம் தொடங்கி 5107 ஆண்டுகள் ஆகின் றன எனத் தெரிந்து கொள்கின்றன. இந்த 5107-லிருந்து 36 ஆண்டுகளைக் கழித்தால் வருவது 5071.

ஆக, இதிலிருந்து 5071 ஆண்டு களுக்கு முன் மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்பதாகப் பாகவதம் பகர்கிறது.

ஆனால், மகாபாரதக் கணக்குப்படி கண்ணன் உயிருடன் இருந்து மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாய் அதாவது பார்த்த சாரதியாய் இருந்தபோது கலியுகம் பிறந்து விட்டது என்கிறது மகாபாரதம். இரண்டில் எது சரி? எது சரி அன்று? அந்த வியாசருக்குத்தான் வெளிச்சம்!

வேறுபாடு வரலாமா? மகாபாரத நூலையும், பாகவதம் உள்ளிட்ட 18 புராணங்களையும் பாடியவர் இந்தப் பராசரப் புத்திரர் வியாசர்தானே?

ஒருவரே, தாம் எழுதிய இரண்டு நூல்களிலும் கணக்கில் வித்தியாசம் வரும்படி எழுதலாமா? வேதம் வகுத்த வியாச முனிவருக்கு கணக்கில் கலக்கமான அறிவா?

தப்புக்கணக்கு போடுபவர் வேத வியாசர் என்று அழைக்கப்படும் தகுதியுடையவர் ஆவாரா?

ஒத்த கருத்து உண்டா?மகாபாரதப் போர் ஸ்ரீமத் மகாபாகவதப்படி கி.மு. 3007 வாக்கில் நிகழ்ந்தது. அது இருக்கட்டும், இந்தக் கலியுகம் தோன்றியது எப்போது என்பது பற்றிய செய்தியிலிருந்து வடமொழி அறிவாளர் களிடை ஒத்தக் கருத்து உண்டா?

"கி.மு. 3102 பிப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலியுகம் தோன்றியது" என்கிறார். கி.பி. 476இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற வானியலார்.

"கலியுகம் கி.மு. 2449 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது" - என்கிறார் வராகமிஹிரர் என்னும் மற்றொரு வானியலார்.

ஆக, மகாபாரதம் - கலியுகம் பற்றி இத்துணை குளறுபடி இருக்கையில் மகாபாரதம் வரலாறு என்பது பொருந்துமா?

என்ன கணக்கு, இந்தக் கணக்கு?குருச்சேத்திரத்தில் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கவுரவரின் 11 அக்ரோணி சேனையும் பாண்டவரின் 7 அக்ரோணி சேனையும் ஆக மொத்தம் 18 அக் ரோணி சேனை ஈடுபட்டதாக மகாபாரதம் கூறுகிறது.

ஓர் அக்ரோணி படை என்பது,

21870 தேர்கள்;

21870 யானைகள்;

65610 குதிரைகள்;

109350 காலாட்படைகள்

அடங்கியது ஆகும்.

18 அக்ரோணி சேனைகள் என்றால்,

21870 ஒ 18 = 393660 தேர்கள் (ரத)

21870 ஒ 18 = 393660 யானைகள் (கஜ)

65610 ஒ 18 = 1180980 குதிரைகள் (துரக)

109350 ஒ 18 = 1978300 காலாட்கள் (பதாதிகள்) அடங்கியது என்பதாகிறது,

தேர் ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால் 3,93,660 தேர்ப்படை வீரர்கள்; யானை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 3,93,660 யானைப் படை வீரர்கள்; குதிரை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 11,80,980 வீரர்கள்.

இத்தோடு, காலாட்படை வீரர்கள் 19,78,300 வீரர்கள்.

இவற்றைக் கூட்டினால் மொத்த நாற்படை வீரர்கள் 39,46,540 எண்ணிக்கையாகிறது.

போரில் பங்குபெற்ற நாற்படை வீரர்கள் ஏறத்தாழ 40 இலட்சம் பேர்; யானைகள் 4 இலட்சம்; தேர்கள் 4 இலட்சம்; குதிரைகள் 1 1/4 இலட்சம்; நம்பமுடியவில்லை, இல்லை!எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு படை வீரர்கள், யானை, தேர், குதிரைகள் நிறுத்தி வைக்க இவ்வளவு பெரிய மைதானம் இருக்க வாய்ப்பு உண்டா?

அவற்றை மோதுமான இடைவெளியில் அணி வகுத்து நிறுத்த இடம் இருக்க முடியுமா?

நிறுத்தி, அணிவகுத்து நிற்கவே இடமிராது என்றால் அப்படையினர் அங்கும் இங்கும் பாய்ந்து திரிந்து ஓடிப் போரிட அத்தனை பெரிய போர்த்திடல் இருக்க வேண்டுமே? அதற்கு வாய்ப்பு உண்டா? இல்லையே!

இத்துணை எண்ணிக்கை நம்பும்படியாக இல்லை; இல்லை; இல்லவே இல்லை!!

எல்லாம் ஒரே 'கப்ஸா' ஆகவல்லவா இருக்கிறது?

இவ்வெண்ணிக்கை, உண்மையாக இருக்க வேண்டும் எனில், படைவீரர்களுக்கும், மொத்த மக்கள் தொகைக்கும் இயல்பான விகிதாசாரப்படி மக்கள் தொகை 20 கோடியாக இருக்கவேண்டும். இது எவ்வகையிலும் சாத்தியமே இல்லை!

எல்லாம் இல்லை மயம்!மகாபாரதம் பற்றி, வரலாற்று அறிஞர் பெருமகன், டி.டி. கோசாம்பி முதலியோர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்போம்.

1. கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான எந்த இலக்கியத்திலும் மகாபாரதம், மகாபாரத யுத்தம் பற்றிய செய்திகளே இல்லை!

2. மகாபாரத யுத்தம் எப்போது நடந்தது? என எவராலும் வரையறுத்துக் கூறப்படவில்லை!

3. இன்றைய அஸ்ஸாம் என்று கருதப்படுகிற மகாபாரத 'பிரஜியோதிஷா' மன்னனைப் பற்றி அஸ்ஸாமிய இலக்கியம், வரலாறு எவற்றிலும் எந்தக் குறிப்புகளும் இல்லை !

4. போரில் கலந்துகொண்ட படைவீரர்கள் எண்ணிக்கை நம்பவே முடியாத கற்பனையாகும்.

5. எல்லாவற்றிற்கும் மேலாக, யுத்தத்தில் பயன்படுத்தப் பட்டதாகக் கூறப்படும் பல ஆயுதங்களைச் செய்வதற்கு, பெருவாரியான இரும்பு தேவைப்பட்டிருக்கும். ஆனால், மகாபாரதம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இரும்பு அரிதாகவே இருந்திருக்கிறது.

(உலகின் இரும்புக் காலம் என்பது, 3300 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன்).

இந்தக் காலகட்டத்தில்தான் இரும்பை உலகில் மனிதன் இனம் மிகுதியாகக் கையாளத் தொடங்கியது என்பது மனித இன வரலாற்றுச் செய்தி. மகாபாரத காலம் எனக் கூறப்படுவதோ கி.மு. 3000 வாக்கில் - (ஆதாரம்: 'சண்டே', 5-11, ஜூன் 1988)

வரலாற்று அடிப்படையற்றது:வரலாற்று ஆய்வு அறிவாளர்களின் கருத்து இவ்வண்ணம் இருக்க, உத்திரபிரதேச அமைச்சர் பெருமகன் மான்புமிகு ஹமீத் பாக்பத் - பர்னாவா இடையேயான 60 கி.மீ. தூரம் இப்போதும் மகாபாரத காலத்தை நினைவூட்டுவதாக இருந்து வருவதாக எதன் அடிப்படையில் இயம்புகிறார்?

தலைமுறை தலைமுறையாக:ஏதோ ஒரு சமயம் குருச்சேத்திரம் எனப்படும் பகுதியில், பாண்டவர் என்பவர்களுக்கும் கவுரவர் என்பவர் களுக்கும் இடையே பங்காளிச் சண்டை என்று சிறிய அளவில் நிகழ்ந்திருக்கலாம். இம்மாதிரியான சண்டை எங்கும் நடப்பது தான்! இயல்பானதுதான்! ஆனால், ஒவ்வொரு தலை முறையினரும், இந்தச் சண்டை நிகழ்ச்சியை அடுத்த தலைமுறையினருக்கு விவரிக்கும்போது பல, புதிய, புதிய தகவல்களைக் காலப் போக்கில் கற்பனை வளம் மிளிர சேர்த்திருக்கின்றனர்.

வளர்த்த கலை மறந்துவிட்டாய் ஏனடா, கண்ணா?"முதன் முதலாக, வியாசர் எழுதிய மகாபாரதக் காவி யத்தில் 8000 செய்யுள்களே இருந்தன. இதற்கு 'ஜெய பாரதம்' எனப் பெயர்! இதுவே, காலப்போக்கில், 24 ஆயிரம் செய்யுள் களையும், பின்னர், 1 லட்சம் செய்யுள்களையும் கொண்ட 'மகாபாரதம்' ஆக வளர்ந்துவிட்டது.

உண்மை ஒருநாள் வெளியானால்?இதுவரை, ஜெயபாரதம் நமக்குக் கிடைக்கவில்லை! அதைப் படித்தால், ஒருவேளை பாரதக் கதையின் உண்மை உருவத்தை நாம் தெரிந்து கொள்ள வழியிருக்கிறது?" என்கிறார், குருச்சேத்திரப் பல்கலைக் கழகத்துத் தொல் பொருள் ஆய்வுத் துறைப் பேராசிரியர் டாக்டர் உதய்வீர் சிங் அவர்கள். இவர், மகாபாரத ஆய்வுப் பணியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருபவர்.

கேள்வி (கேலி)க் குறி:"40 இலட்சம் பேர் கொண்ட பெரிய படைகள் இந்தக் குறுகிய இடத்தில் போரில் எப்படிப் பங்கு கொண்டன? என்பது கேள்விக் குறியான விஷயமாக இருக்கிறது!

இத்தனை பெரிய எண்ணிக்கை, கவியின் கற்பனை யாக இருக்கலாம்" - என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் உதயவீர்சிங்.

ஒன்றும் காணவில்லை!அவர் மேலும் கூறுகிறார்: "குருச் சேத்திரத்திலிருந்து, சுற்றிலும் மேட்டுப் பகுதிகள் இருக்கின்றன.

இங்கிருந்து 2 கல் தொலைவில் அஸ்திபூர் என்று ஓர் இடம் இருக்கிறது. இங்குதான், பாரதப் போரில் உயிரிழந்த போர்வீரர்களின் உடல்கள் எரிக்கப் பட்டன - என்பது அய்தீகம்.

இப்போது, இந்த அஸ்திபூருக்குப் போனால் ஒரு அஸ்திக்குன்றைக் கூட (எலும்புச் சாம்பல் மேடு)ப் பார்க்க முடியாது" - (தகவல்: நூல் - 'கண்ணனைத் தேடி' - டி.கே.வி. இராஜன்)

எதுவும் கிடைக்கவில்லையே?

"மகாபாரதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் அரசர்களின் கல் வெட்டுகளோ, செப்பேடுகளோ, காசுகளோ இதுவரை எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை!" - என்கிறார், மய்ய அரசுத் தொல் பொருள் துறையின் மேனாள் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் பி.பி. வால் அவர்கள்.

பானை ஓடும், பாரத காலமும்:தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங் களை வைத்துக் கொண்டு பார்க்கும் போது, அஸ்தினா புரத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பானை ஓட்டின் காலம் கி.மு. 1100 எனக் கணக்கிடப் பட்டுள்ளது. எனவே, இப்பானை பாரத காலத்தைச் சேர்ந்ததில்லை என்று தெரிய வந்துள்ளது. மகாபாரத காலம் கி.மு. 3000 வாக்கில் - என்பது முன்னர்க் குறிப்பிட்டுள்ளோம்.

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!

மகாபாரதக் கதை நிகழ்வு பற்றிய எந்தத் தடயங்களும் உ.பி. அமைச்சர் கூறும், குருச்சேத்திரப் பகுதியில் அதாவது புதுடில்லியிலி ருந்து 150 கி.மீ. வடமேற்கில் கிடைக்கவில்லை! இந்நிலையில், உ.பி. அமைச்சர் ஹமீத் அவர்கள் எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பாக்பத் - பர்னாலா இடையிலான 60 கி.மீ. தூரம் மகா பாரத காலத்தினை நினைவூட்டுவதாக, ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - என்று கூறுகிறார் என்பது நமக்குத் தெரியவில்லை!

மறுமலர்ச்சி

Link to comment
Share on other sites

மகாபாரதம் நடந்த கதையா? - வன்னியில் இருந்து புலோலியூரான்

மகாபாரதம் உண்மையில் நடந்த கதை என்ற நம்பிக்கை பல பக்தர்கள் மத்தியில் உண்டு. விவாதங்களை நடத்தும் பொழுது மகாபாரத கதாபாத்திரங்களை உதாரணம் காட்டி பேசுகின்ற பழக்கம் கூட இவர்களிடம் உண்டு. மகாபாரதம் உண்மையில் நடந்ததா? இது குறித்து திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி அவர்கள் எழுதிய "கீதையின் மறுபக்கம்" பின்வரும் விடயங்களை சொல்கிறது.

வேதகால இலக்கியங்களில் கவுரவர்கள் மட்டும்தான் குறிப்பிடப்படுகிறார்கள் என்று எட்வேட் ஆங்கின்ஸ் என்று மகாபாரத ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார். பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு வேதகால இலக்கியங்களில் இல்லை. பிராமணங்களிலோ, சூத்திரங்களிலோ பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு எங்குமே காணப்படவில்லை. மார்க்ஸ் முல்லர் என்னும் ஆராய்ச்சியாளரின் கருத்தும் இதேதான். இதிலிருந்து கி.மு 5ஆம் நூற்றாண்டில் பாண்டவர்கள் பற்றிய குறிப்பு இல்லை என்பது தெரிகிறது.

ரிக் வேதத்திலே பரதவர்களின் அரசன் சுதாஸ்கும் ரவி நதிக்கரையில் அமைந்த 10 அரசுகளின் கூட்டாட்சிக்கும் நடைபெற்று போரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிய அளவில் நடைபெற்ற இந்தப் போர் பற்றி குறிப்பிடப்படும் பொழுது, தேசிய அளவில் நடைபெற்றதாக சொல்லப்படுகின்ற மகாபாராப் போர் பற்றி எந்தக் குறிப்பும் ரிக் வேதத்திலே இல்லை. மகாபாராதப் போர் நடைபெற்று இருந்தால் நிச்சயமாக அது ரிக் வேதத்திலோ அல்லது மற்றைய வேத கால இலக்கியங்களிலோ குறிப்பிடப்பட்டு இருக்கும்.

மகாபாரதப் போர் நடைபெற்ற இடம் என்று சொல்லப்படுகின்ற குருத்திரத்தை ஒரு புனித இடம் என்று மட்டுமே வேத இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றனவே தவிர ஒரு போர் நடைபெற்ற இடமாக அது எந்த இடத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை.

இவைகளை விட மகாபாரத பாத்திரங்கள் குறித்தும் மகாபாரதப் போர் குறித்தும் பல முரண்பாடான தகவல்கள் மகாபாரதக் கதையிலும் வேறு இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.

மகாபாரதத்தில் அர்ச்சுனன் இந்திரனின் புதல்வனாவான். ஆனால் சதபத பிராமணத்தில் இந்திரனும் அர்ச்சுனனும் ஒன்றே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை விட போரில் பங்கு பற்றிய படைகள் குறித்து மகாபாரதத்தில் தெரிவிக்கப்படுகின்ற கணக்குகள் மிகவும் வேடிக்கையானவை. மகாபாரதப் போரில் 18 "அக்ரோணிப்" படைகள் பங்குபற்றியதாக மகாபாரதம் கூறுகிறது. இதில் 11 அக்ரோணிப் படைகள் கவுரவரவர்களுடையதும், 7 பாண்டவர்களுடையதும் ஆகும்.

ஒரு அக்ரோணிப் படை என்பது பின்வரும் கணக்கை கொண்டது.

21 870 ரதங்கள்

21 800 யானைகள்

65 610 குதிரைகள்

109 350 கலாட்படையினர்

ஆகவே குருசோத்திரத்தில் அணிவகுத்து நின்ற படைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

21870 ரதங்கள் X 18 = 393 660 ரதங்கள்

21800 யானைகள் X 18 = 392 400 யானைகள்

65610 குதிரைகள் X 18 = 1 180 980 குதிரைகள்

109350 கலாட்படையினர் X 18 = 19 78 300 வீரர்கள்

எந்த ஒரு நாட்டிலாவது இத்தனை பெரிய படைகள் நிற்கக் கூடிய போர்க்கள மைதானம் உண்டா? இத்தனை பெரிய படை கி.மு 5ஆம் நூற்றாண்டில் இருந்திருக்க முடியுமா? கி.மு 5ஆம் நூற்றாண்டில் இருந்த மிகக் குறைந்த மக்கள் தொகையில் இவ்வளவு பேர் படைகளில் இருந்திருக்க வாய்ப்பு உண்டா? அக் காலத்தின் போக்குவரத்து வசதிகள் இத்தனை பெரிய படைகள் வருவதை அனுமதித்து இருக்குமா? ஆகவே மகாபாரதம் என்பது ஒரு அதீத கற்பனை அல்லாமல் வெறு ஒன்றும் இல்லை.

அத்துடன் மகாபாரதப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றி கூறப்பட்டது பகுத்தறிவுக்கு எவ்விதத்தில் ஒவ்வாதது. 1660 மில்லியன் மக்கள் இறந்ததாக குறிப்பிடப்படுகிறது. இது எப்படி சாத்தியமாகும்?

அக் காலத்தில் இருந்த போர்க்கருவிகள் எப்படிப்பட்டவை என்பதை தொல்பொருள் ஆராய்சியாளர்கள் பல சான்றுகளுடன் நிரூபித்திருக்கிறார்கள். ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரீக காலத்தின் ஆயுதங்களாக கற்கருவிகள், கோடரிகள், சிறிய ஈட்டிகள் போன்றவைகள் விளங்குகின்றன. இவ்வாறான நிலையில் குரோசோத்திரப் போர் நடைபெற்று இருந்தால், போர்க்கருவிகளும் இவைகளை விட தரம் குறைந்தவைகளாகவே இருந்திருக்க முடியும்.

"கீதையைப் பற்றிய உண்மைகள்" என்ற ஆங்கில நூல் இன்னும் ஒரு வேடிக்கையான விடயத்தைப் பற்றி கூறுகிறது.

பாரதப் போரில் பங்கு பற்றிய சேனைகள் - 18 ஆக்ரோணிப் படைகள்

போர் நடைபெற்ற நாட்கள் - 18

பாரதப் போர் வர்ணிக்கப்படும் காண்டங்கள் - 18

பகவத் கீதையின் அத்தியாயங்கள் - 18

போரின் பின்பு பாண்டவர் தரப்பில் எஞ்சியவர் - 6 இது 18இல் மூன்றில் ஒரு பங்கு

கவுரவர் தரப்பில் எஞ்சியவர் - 3 இது 18 இல் ஆறில் ஒரு பங்கு

யுதிஸ்டிரர் ஆண்ட ஆண்டுகள் - 36 இது 18இன் இரு மடங்கு

போர் முடிந்து கிருஸ்ணன் வாழ்ந்த ஆண்டுகள் - 36 இதுவும் 18இன் இரு மடங்குகள்.

இப்படி இந்த 18 என்ற இலக்கம் மகாபாரதக் கதையில் முக்கியத்துவம் பெற்ற இலக்கமாக மீண்டும் மீண்டும் சுற்றி வருகிறது. பாரதக் கதை எழுதியவர் எண்ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர் போலும்.

இந்த மகாபாரதம், இராமாயணம் எல்லாமே சுத்தப் புரட்டு என்று தந்தை பெரியார் சொல்வார். இராமாயணம் "திரேதாயுகத்தில்" நடந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு யுகம் என்பது 1 296 000 வருடங்கள் என்று கணக்கு சொல்லப்படுகிறது. ஆனால் ராமன் 5 000 000 வருடங்கள் ஆண்டான் என்று இராமாயணம் சொல்லுகிறது. இப்படி பகுத்தறிவுக்கு எந்த வகையிலும் பொருந்தாத கணக்குகள் மகாபாரதத்தலும் , இராமாயணத்திலும் விரவிக் கிடக்கின்றன.

மகாபாரதம் எழுதப்பட்ட காலம் காட்டுமிராண்டிக் காலம். நீதி, ஒழுக்கம், கற்பு, அகிம்சை போன்ற சிந்தனைகள் வளராத காலம். ஆனால் பிற்காலத்தில் கற்பு, ஒழுக்கம் போன்ற சிந்தனைகள் வளர்ந்தன. இராமாயணம் புனையப்பட்டதன் காரணங்களில் ஒன்றாக இதையும் தந்தை பெரியார் சுட்டிக்காட்டுவார்.

மொத்தத்தில் மகாபாரதமோ, இராமாயணமோ, புராணக் கதைகளோ நடந்த வரலாறுகள் அல்ல. இதை எமது மக்கள் பகுத்தறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

இது சில மாதங்களிற்கு முன்பு வெப்ஈழத்தில் வெளிவந்த கட்டுரை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.