• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • அருமையான கதை சாத்திரி அண்ணா.  குமார கடைசியில் பந்தை சுவரில் அடிக்கும் சத்தம் பலமாக கேட்டது.  
  • 8.  கோவில்களும், திருவிழாக்களும்,, குத்து வெட்டுகளுகளும்  "அத்தான் தீர்த்த  திருவிழாவிற்கு போறதென்றால் நேரா வாகனத்தை கடற்கரை பக்கம் விடுங்கோ.  அங்க முகாமுக்கு முன்னுக்கு வாகனம் விடலாம்.  கோயில்ல இருந்து 5 கிலோ மீட்டர் பிள்ளைகள் 2 மணி சூட்டில் நடந்து போக கடினம்"  வல்லிபுர கோவில் தீர்த்த திருவிழாவிற்கு போகிறேன் என்று கேள்வி பட்டு வட்ஸ் அப்பில் அறிவுரைத்தார் மச்சினர்.  "பொடியளுக்கு பெரிய நகையள் போட வேண்டாம். " முடிவில். தேர் திருவிழாவிற்கு துணைவியின் பாட்டியாரின் துவசம் என்ற படியால் போக முடியவில்லை.  மாமா மட்டும்  தேருக்கு சென்றிருந்தார்.  மறியாடு குட்டி போட்டாலும் என்று மாமி வீட்டில் தங்கினார். நாம் சிறுப்பிட்டி சென்று துணைவியார் வீட்டுக்காரரின் பிள்ளையார் கோவில் சென்று பூசை செய்து, வீட்டில் பக்கத்து வீட்டு பெண்கள் எல்லோரும் ஒன்று கூடி வீட்டில் சமைத்த சாப்பாட்டை ஒரு கை பார்த்து விட்டு, எல்லோரும் வீட்டுக்குள் முடைந்திருக்க  நான் வீட்டு வராந்தாவில் கதிரை போட்டு வாகன ஓட்டுநர் துசாராவுடன்  பாயசம் குடித்து கொண்டே பெருந்தெருவை நோக்கினோம்.  இரண்டு பக்கமும் வாகனங்கள் சீறி பாய்ந்தன. ஒரே பீப் பீப் மயம். "ஒரு துவிச்சக்கர வண்டியையும் காணவில்லை" நான்.  "ம்ம் நான் என்ன தான் அவதானமாக ஓட்டினாலும் ஒரு சின்ன பயம்." தூசார.  "பயப்படாதே துசார.  நாளைக்கு தீர்த்த திருவிழாவிற்கு போக போறம்.  அங்க உன் வாகனம் செலுத்தும் திறமையை சோதித்து பார்க்க போறம்"  பிலத்து சிரித்து கொண்டே சொன்னேன்.   துசார முகத்தில் கவலை. அவர் முன்பு யாழ் வந்திருந்தாலும் ஒரே நாள் சுற்றுலா தான் செய்திருக்கிறார்.  இது தான் முதல் தடவை ஒரு தமிழ் குடும்பத்துடன் 15 நாள் செலவழிக்கிறார்.   "அங்கிள் வடை அண்ட் டீ" எனது மூத்த மகன் துசாரவிற்கும் எனக்கும் தந்தார்.  துணைவி  படையல் சாப்பாடு செமிக்க இஞ்சி தேநீர் கொறிக்க வடை அனுப்பியிருந்தார். "துசார மன்னிக்கவும் வந்த நாள் தொடக்கம் மரக்கறி சாப்பாடு தான்.  நாளையோட சரி." நான்.   "சீ சீ யாழ்ப்பாண வீட்டு சாப்பாடு சாப்பிட நான் குடுத்து வைத்திருக்கிறன் மாத்தையா.  ஒருத்தரும் ஓட்டுனரை இங்கு தங்கள் வீட்டில் தங்க வைத்து தம்முடன் சாப்பிட வைப்பதில்லை."  துசார தொடர்ந்தார். "உங்கள் மகன் என்னை அங்கிள் என்று அழைத்து குடும்பத்தில் ஒருவராக நடத்துகிறார்" மகனை மெச்சினார். "துசார நாங்கள் கனடா போய் முப்பது வருடத்தில் சில நல்ல விடயங்களை கற்று இருக்கிறோம்.  அதில எந்த வேலை செய்கிறார் என்று பார்க்காமல் எல்லாரையும் மதிக்கும் தன்மை ஒன்று.  நாங்கள் எல்லோரும் ஒரு காலத்தில் கோப்பை கழுவியோ எரிபொருள் நிறுவன மலசல கூடம் கழுவி தான்மேல வந்தோம்"  நான். "போர் தமிழ் மக்களை படுத்தி இருக்கிறது.  இல்லையா மாத்தையா?" கேடடார் துசாரபதில் தெரிந்திருந்தும். "அந்த செல்லடி பட்ட தென்னை மரங்களை பார்த்தியா?  அந்த ஓட்டைகளை பார்.  இருபத்தைந்து வருடம் தாண்டியும்  மரம் காய்க்குது.  அப்படி தான் நாங்களும் என்னத்தை இழந்தாலும் முயற்சியை விடமாட்டோம். முன்னேறி கொண்டே இருப்போம்"  எனது மன புழுக்கத்தை வெளியேற்றினேன்.  "முப்பது வருடம் போர் தேசமா இருந்த பூமி இப்போது கொழும்பிற்கு அடுத்த பொருளாதார மையமாக மாறி வருகிறது" தெருவை நோக்கி கையை காட்டுகிறேன்.  சொகுசு வாகனங்கள் அடுத்து அடுத்து சென்று கொண்டிருந்தது. இப்போது சாப்பிட்டு முடித்த சில முதியோர் வெளியே வந்து கதையை திசை திருப்பினார்கள்.  ஊர் கதைகள், பழைய கால கதைகள்.  நிலாவரை கிணத்தில் எலுமிச்சம் பழம் போட்டால் சன்னதி கோவில் கரையில் மிதக்கும் மகிமை  மற்றும் முக்கியமாக கால நிலை மாற்றமும் புரட்டாதி மழை எப்படி வயல்களை முடக்கி விட்டது என்ற தலைப்பு முக்கியம் பெற்றது.    "தம்பி கனடாவில் இந்த காலநிலை பிரச்சினைக்கு என்ன செய்யினம்?" கத்தி கேட்டார் ஒரு பழைய விவசாயி. துணைவியின் பாட்டியின் 92 வயது தம்பி.   "ஆ வரி போடுவினம் அய்யா "  ஆதங்கத்தோடு சொன்னேன் நான்.  "நீங்கள் இங்க முகிலை தொட்டு நின்ற பனை எல்லாவற்றையும் துலைச்சு போட்டு மழை மாறுது என்றால் என்ன சொல்வது?" சிரித்து கொண்டே சத்தமாக கேட்டேன்.   "தம்பி எனக்கு தென்னை தான் வளர்க்க தெரியும்.  பனங்கள்ளு  குடிக்க தான் தெரியும்." சத்தமாக சிரித்தார் தாத்தா.  "கள்ளு அடிப்பீங்களே தம்பி" தாத்தா என்னை கூர்ந்து பார்த்து கேட்டார்.  தனக்கு கூட்டு கேட்பது போல் பட்டது.   "கொஞ்சமா....." ஆவலோடு சொல்லிமுடிக்கும் முன். அடுத்த நாள் திருவிழா பயண ஆரவாரங்களுக்காக வெள்ளன வெளிக்கிட திடடம் போட்டு வெளியே வந்தனர் பெண்கள்  "அங்க நெல்லியடியில ஒரு கடையும் திறந்திருக்காது. கோவிலுக்காக எல்லாம் பூட்டு" நான் தடை போட பார்த்தேன்.  "இல்ல புவனம் அக்கா விட்ட பிள்ளைக்கு சடடை தைக்க குடுத்தனாங்கள்.  போய் எடுக்கோணும்" எனது பலகீனம் தெரிந்து அம்மா பதில் அளித்தார். முதியோரை மீண்டும் சந்திப்பதாக சத்தியம் பண்ணி வெளிக்கிட்டேன். ஞாயிறு காலை வெள்ளன எழும்பி  ஊர் குடும்ப கோவில்களை பார்க்க பின் தீர்த்த திருவிழா. திட்டம்..  சந்தியில் அன்று நடமாட முடிந்தது ஒரு சில கடைகளை தவிர எல்லாம் பூட்டி இருந்தது.  பெரியோயோரும் சிறியோரும் பட்டு பாவாடைகளில் பருத்திதுறை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.   உழவு இயந்திரத்தில் துலா கட்டி பக்தர்கள் துலா காவடிகளாக சென்றனர்.  குழந்தைகள் அத்தனையையும் இரசித்து பார்த்தனர். முதல் எங்கள் வைரவ கோவிலுக்கு சென்றோம்.  நல்லதண்ணி கிணறு இப்பவும் பொது கிணறாக இருந்தது.  பெரிய வேப்பமரத்தை காணவில்லை.  அது ஒரு சின்ன கவலை.  ஆனால் கோவில் பெரிதாக கட்டி வர்ணம் பூசி இருந்தது.   ஒரு பெண்மணி கிரக வாசலில் இருந்து மந்திரம் பாடி கொண்டிருந்தார்.   நாம் கும்பிட்டு சுற்றி வந்து உண்டியலில் காசு போட்டு வெளிக்கிட்டோம்.   அடுத்து தச்சந்தோப்பு பிள்ளையார் கோவில் சென்றோம்.  வழி எல்லாம் பெரிய வீடுகள்.பாதை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது.  வாசலில் காலணிகளை கழட்டி விட்டு குடும்பத்தினர் கோவிலுக்கு உள்ளே சென்றனர்.  எனக்குள் ஒரு பதினான்கு வயது பொடியன் உள் புகுந்திருந்தான்.  கோவிலை சுற்றி ஓட்டமும் நடையுமாக சுற்றி வந்து கை பேசியில் படங்களை தட்டினேன்.   கோவில் கோபுரம் கொஞ்சம் வர்ணம் இழந்திருந்தது ஆனால் இன்னும் மண்டபங்கள் ,கேணி வர்ணம் இழக்காமல் இருந்தது.  பழைய தேர் பின் பக்கம் ஒரு கொட்டிலில் நின்றது.  அதற்கு கீழ் படுத்திருந்த நாய் ஒழும்பி ஓடியது. நான் அந்த தேரை சென்று தொட்டேன்.  முப்பது வருடங்களுக்கு முன் பல பள்ளி சிநேகிதங்கள், சொந்தங்களுடன் சேர்ந்து இழுத்த மகிழ்ச்சியான நினைவுகள் எனக்குள்ளால் ஓடியது. "அந்த பெரிய கட்டிடங்கள் உள் என்ன இருக்கிறது" குழந்தைகள் கேட்டனர்.   "அதெல்லாம் கடவுளின் வாகனங்கள்.  வடமராட்சியில் இங்கு தான் கூட தேர்கள் இருக்கு" பெருமையாக தாயார் சொன்னார்.  "இந்த மணி மண்டபம் எங்கட குடும்பம் கட்டியது" பேர பிள்ளைகளுக்கு பெருமையுடன் காட்டினார்.   "முந்தி தேரும் சப்பறமும் தானே இருந்தது? எப்படி இத்தனை? இவ்வளவு பெரிசு?" கேட்டேன் நான்.  "எல்லாம் வெளிநாட்டு காரர் கட்டி கொடுத்தது" சிரித்து கொண்டே சொன்னார் அம்மா.  "நான், சித்திமார், மாமிமார் எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு வருசமும் ஆறாம் திருவிழாவிற்கு காசு அனுப்பி வாறம்.   அத மாதிரி ஊர் சனம் சேர்ந்து நல்லா கோவிலை வைச்சிருக்கினம்.   கோவில் வாசலில் சில பூசகர்கள் ஒருவருக்கு மந்திரம் சொல்லி கொடுத்திருந்தனர்.  உண்டியலில் காசு போட்டு பிள்ளையாருக்கு கும்பிடு போட்டு அம்மன் கோவில் கிளம்பினோம்.  "இந்த கோவிலுக்கு பேர் கண்ணகி அம்மன்.  இங்க தானாம் கண்ணகி மதுரையை எரித்துவிட்டு வந்து கோபம் ஆறியதெண்டு சொல்லுவினம்."தாயார் பேர பிள்ளைகளுக்கு சொல்லி வந்தார். நாம் குறுக்கு வழியால் தச்சந்தோப்பு வயல் வெளி வந்திருந்தோம்.  கண்ணகி அம்மன் இன்னும் அந்த பூவரசங்காட்டுக்குள்  இளைப்பாறுவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  பெரிய கோவில் கட்டி இருந்தாலும் நான் பூவரசு மரங்கள் ஊடாக பழைய அம்மனிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கினேன்.   அங்கு முன்பு என் பாட்டனாருடன் அடிக்கடி வந்து போவதும் நான் அந்த பூவரசு மரங்களில் தொங்கி திரியும் நினைவுகள் வந்தன.  சின்ன கோவில் பெரிய கோவில் எல்லாம் புகைப்பட கருவிகள் கவனித்துக்கொண்டிருப்பது தான் புதிது மற்றும் படி அந்த பகுதி அப்படியே இருந்ததில் மிக்க மகிழ்ச்சி.  பக்கத்தில் ஒரு காணியில் பெரிய பனங்காடு இருந்தது கொஞ்சம் நிம்மதி தந்தது. வீடு வந்து வந்து வேட்டி சால்வை அணிந்து தயார் ஆனோம்.  மாமனாரும் பன்னிரண்டு மணிக்கு டான் என்று துசாராவுடன் வாசலில் நின்றார்.   எனக்கு மனதுக்குள் குதூகலம்.  முப்பது வருடத்தின் பின் வல்லிபுர கோவில் திருவிழா செல்வது ஒன்று.  குடும்பத்துடன் தாயார், துணைவி குழந்தைகளுடன் செல்வது இன்னொரு மகிழ்ச்சி. "இவங்கள் எங்க வேட்டி எடுத்தவங்கள்?" மகன்களை பார்த்து அதிசயத்தோடு பார்த்தார் மாமா. "எங்கட மாப்பிள்ளை மார்" மாமா பெருமையோடு சிரித்தார்.  " இவங்கள் வெளிநாட்டு பொடியள் பாண்ட் டி சேர்ட் போடுவான்கள் என்று நினைச்சன். " சிரித்து கொண்டே. "இதுகள் பக்கா லோக்கல் கூட்டம்.  கனடாவில இருந்து வேட்டி சட்டை கொண்டு வந்தவங்கள்" எனது தாயார் பெருமையுடன் சொன்னார். மகள் புது சடடையில் பூ மாலை வைத்து வந்து நின்றார்.   "அட இங்க இலட்சுமி வந்து நிக்கிறா" மாமா புகழ்ந்தார்.  "அப்ப எல்லோரும் வெளிக்கிடுவம்.  சனம் கூட முதல் கடற்கரைக்கு போவம்" அவசரப்படுத்தினார் மாமா. வாகனம் பல தண்ணீர் பந்தல்களை தாண்டி சென்றது ஒரே வாகன நெரிசடி.  ஒரு பந்தலில் நின்று சர்க்கரை தண்ணீர் வாங்கி குடும்பத்துடன் பகிர்ந்தேன்.  சர்க்கரை தண்ணி பந்தல் போட்டி பெரிய போட்டியாக இருந்தது.  மின் விளக்கு அலங்காரிப்பும் பக்தி பாடல்களும் போட்டு யார் பந்தல் பெரியது என்ற போட்டி.  பக்தர்கள் கூட்டம் பலர் நடையாக சென்று கொண்டிருந்தனர்.   இலவசமாக கொடுப்பதில் போட்டி என்ற படியால் அவர்கள் பலர் பயன் பெற்றனர். "இந்த முறை பெரிசா தேருக்கு சனம் இல்லை."மாமா கவலையுடன்.   "ஏன்?"வினவினேன்.   "எல்லாம் தம்பி இந்த ஊர் பிரச்சினையால் தான்.  கோவில் நிலம் ஒரு ஊருக்கு சொந்தம்.  கோவில் இன்னொரு ஊருக்கு சொந்தம்.  வெள்ளி கிழமை நில காரரிண்ட திருவிழா அண்டைக்கும் தாங்கள் தான் சுவாமி தூக்க வேணும் எண்டு கோவில் காரர் சிலர் போய் பிரச்சினை செய்திருக்கினம்.  பிறகு இரவு இரண்டு பக்கமும் கத்தி வாளோடு சண்டை.  பத்து பேருக்கு மேல ஆசுபத்திரில.  பொலிஸ் தான் இப்ப விசாரிச்சு வருதாம்" மாமருக்கு சோகம் என்றபடியால் தணிந்த குரலில் சொன்னார்.  வாகனம் முகாம் முன்னால் விட்டு இறங்கி மக்கள் வெள்ளத்துடன் சேர்ந்தோம்.  ஒரு இலட்சம் மக்களுக்கு மேல் எல்லோரும் வேட்டி சடடை சேலை என்று ஒரு வர்ண மாயம்.  சிரிப்பும் செல்பி எடுப்புமாக இளம் பட்டாளம். குழந்தைகள் சுண்டல், குளிர் களி, விளையாட்டு பொருட்கள் வாங்கி மணலில் குடும்பத்துடன் சுற்றி இருந்து விளையாடினார்கள்.    முன்பிருந்த மணல் திட்டுகளில் இரண்டு தான் மிச்சம் இருந்தது அதில் ஏறி மக்கள் வெள்ளத்தை  பார்த்து வியந்தோம்.  சுவாமியும் கோவில் திரும்பி இருந்தார்.  இப்போது ஓலி பெருப்பியில் காணவில்லை அறிவிப்புகள் தொடங்கி இருந்தது.    பௌர்ணமி நிலவு மேலே வந்து கடலில் ஒளி வீசியது.  மக்கள் வீடு திரும்ப தொடங்கினர். நாமும் திரும்பி நடக்க தொடங்கி இருந்தோம்.  முகாம் முன் இராணுவத்தினர் குளிர் பானங்கள் விற்று கொண்டிருந்தனர்.  இன்னும் இரண்டு இராணுவ வாகனங்கள் தாண்டிருந்த பக்தர்களின் வாகனங்களை மீட்டெடுக்க உதவி கொண்டிருந்தன. எனக்குள் எதோ தவறிய விடயம் ஒன்று பூர்த்தியான திருப்தி.  கச்சானை கொறித்து கொண்டு குடும்பத்தை தொடர்ந்தேன்.
  • டம்ளரில்லாத முறையிலும் இடம்பெற்றிருந்தால் வீடியோ கிடைக்குமா? சத்சங்கம் செய்ய ஆசையாக உள்ளது. நித்தியானந்தம் 😋
  • ஏன் அப்படி இருந்தீர்கள்? உங்களை தலைமை வழிநடத்தவில்லையா? அல்லது புலிகளின் தலைமைக்கு மாறாக வழிநடத்திய தலைமையை பின்பற்றியவர்களில் ஒருவரா நீங்கள்?  அப்படியான சூழ்நிலை இருக்கவில்லை என்று தெரிந்தும் போராட்டத்தை தொடர்ந்தால் மக்கள் மடிந்து அழிவர் என்று தலைமைக்கு தெரியவில்லையா?