• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • சாவகச்சேரி வைத்தியசாலையில், இருவர் பணியாளர்களைத் தாக்கி அடாவடி… December 8, 2019 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மருந்து கட்டுவதற்கு  சென்ற இருவர் வைத்தியசாலைப் பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதுடன் தளபாடங்களையும் சேதமாக்கி அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். அடாவடியில் ஈடுபட்ட இருவரும் தப்பிச் செல்ல முற்பட்ட போது, பொதுமக்களால் மடக்கிப் பிடித்து நையப்புடைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் சாவகச்சேரி காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்தச்சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வெட்டுக்காயத்துடன் மருந்து கட்டுவதற்காக இரண்டு இளைஞர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின் மருந்து கட்ட வைத்தியசாலை பணியாளர்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்த போது, அவ்விளைஞர்கள் தமக்கு உடனடியாக மருந்து கட்டவில்லை என்று வைத்தியசாலை பணியாளர்களையும் தாதிய உத்தியோகத்தர்களையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தியதுடன் வைத்தியசாலை தளபாடங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி அங்கு கடமையிலிருந்த பாதுகாப்பு பணியாளர்களையும் இரும்பு கம்பிகளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது அங்கு குழுமிய அப்பகுதி இளைஞர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து நையப்புடைத்து சாவகச்சேரி காவற்துறையினரிடம் ஒப்படைத்தனர். இருந்த போதும் ஒருவர் கைவிலங்கோடு காவற்துறையினரிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளார். எனினும் இளைஞர்கள் மீண்டும் அந்த இளைஞரைப் பிடித்து காவற்துறையினரிடம்  ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் வேறு வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று  காவற்துறையினர்  தெரிவித்தனர்.   http://globaltamilnews.net/2019/134332/  
    • ஐ.நா.பிரே­ர­ணை­யி­லி­ருந்து அரசு வில­கி­விடும்; சர்­வ­தேச உறவில் எவ்­வித பாதிப்பும் ஏற்­ப­டாது என்கிறார் ஜி.எல்.பீரிஸ்   (இரா­ஜ­துரை ஹஷான்) ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களின் பிர­கா­ர­மான  பொறுப்புக்கூறல் கடப்­பாட்டிலிருந்து இலங்கை முழு­மை­யாக வில­கிக்கொள்ளும். எதிர்­வரும்  மார்ச்  கூட்­டத்­தொ­டரில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு முழு­மை­யாக இது­வா­கவே காணப்­படும் என ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் ஜி.எல்.பீரிஸ்  தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,  ஐக்­கிய தேசிய கட்­சியை 2015ஆம் ஆண்டு ஆட்­சிக்கு கொண்டு வரு­வ­தற்கு உதவி புரிந்த சர்­வ­தேச அமைப்­புக்கள், மேற்­கு­லக நாடு­களை திருப்­திப்­ப­டுத்தும் வித­மா­கவே ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேர­வையில் இலங்­கைக்கு எதி­ராக பிரே­ரணை கொண்டு வரப்­பட்­டது. இப்­பி­ரே­ர­ணை­க­ளுக்கு கடந்த அர­சாங்­கத்தில் வெளி­வி­வ­கார அமைச்சர் பதவி வகித்த முன்னாள் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும், பாரா­ளு­மன்­றத்­திற்கும் அறி­விக்­காமல் பொறுப்பு கூறல் விட­யத்­திற்கு தான்­தோன்­றித்­த­ன­மாக இணக்கம் தெரி­வித்தார். ஜெனிவா   மனித உரிமை பேர­வையில்  இலங்கை அர­சாங்கம் பொறுப்பு கூறலை முன்­னெ­டுக்க வேண்­டிய தேவை கிடை­யாது.  ஏனெனில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைகள் சர்­வ­தே­சத்தில் எமது நாட்டு இறை­யாண்­மை­யினை காட்டிக் கொடுப்­ப­தா­கவே கரு­தப்­படும்.எமது நாட்­டுக்கு முற்­றிலும் மாறுப்­பட்ட வித­மா­கவே பிரே­ர­ணையின் உள்­ள­டக்­கங்கள் காணப்­ப­டு­கின்­றது. பொறுப்பு கூறல் விட­யத்­திற்கு  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு  எவ்­வ­கையில் அழுத்­தங்­களை சர்­வ­தேச மட்­டத்தில் இருந்து பிர­யோ­கித்­தாலும் அது பய­ன­ளிக்­காது. எந்த உடன்­ப­டிக்­கை­க­ளுக்கு இணக்கம் தெரி­வித்தும்  புதிய அர­சாங்கம் தோற்­று­விக்­கப்­ப­ட­வில்லை. என்­பதை அனை­வரும் புரிந்துக் கொள்ளல் அவ­சி­ய­மாகும். நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணை­களில் இருந்து அர­சாங்கம் விலகிக் கொள்ளும்  நிலைப்­பாட்­டிலே அர­சாங்கம் உள்­ளது.  மனித உரிமை பேர­வையில் பிரே­ர­ணை­யினை கொண்டு வந்த  அமெ­ரிக்கா  பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை  மனித உரிமை பேர­வைக்கு எதிராக முன்வைத்து விலகிக் கொண்டது.பொறுப்புக் கூறல் விடயத்தில் இருந்து  அரசாங்கம் விலகிக் கொள்வதால் சர்வதேச உறவுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.அனைத்து நாடுகளுடனும்   நல்லுறவினை தொடர்ந்து பேணுவோம் என்றார்.   https://www.virakesari.lk/article/70703
    • சஹ்­ரானை சந்­தைப்­ப­டுத்த முடி­யா­தென்­பதால் முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­ப­டு­கி­றார்கள்: ரிஷாத் பதி­யுதீன் இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் பயங்­க­ர­வாதி சஹ்­ரானால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்­களை  பெரும்­பான்மைச் சமூ­கத்தின் மத்­தியில் எடுத்­து­ரைத்தே  ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்­றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத்  பதி­யுதீன் தெரி­வித்­துள்ளார். எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மீண்டும் சஹ்­ரானை அர­சியல் ரீதியில் சந்­தைப்­ப­டுத்த முடி­யாது என்­பதால் அவர்­க­ளுக்குப் புதிய இலக்­குகள் தேவைப்­ப­டு­கி­றது. ஆகையால் அதற்கு தன்­னையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீ­மையும் இலக்கு வைப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார். கொழும்பில் வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற வெளி­நாட்டுச் செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பின்போதே அவர்­ இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், எங்­களை ஆட்­சி­யா­ளர்கள் இலக்கு வைப்­பது தவ­றா­னது. நாங்கள் ஜன­நா­யக ரீதியில் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள். நாம் எந்­த­வ­கை­யிலும் சஹ்­ரானைப் போன்­ற­வர்­க­ளல்ல. 'ஆட்­சி­யா­ளர்கள் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் வெற்றி பெற்­றார்கள். அவர்கள் விரும்­பி­ய­படி அமைச்­ச­ர­வையை அமைக்­கலாம். அது அவர்­களின் உரிமை. அவர்கள் எங்­க­ளையும் இலங்­கை­யர்­க­ளாகக் கருதி சமத்­து­வ­மாக நடத்­தினால் அதுவே எங்­க­ளுக்­குப்­போதும். வில்­பத்து வனத்தை நான் அழித்­த­தாக  என்­மீது வீண்­பழி சுமத்­து­கி­றார்கள். எனது அதி­கா­ரத்தைத் துஷ்­பி­ர­யோகம் செய்து வில்­பத்து சர­ணா­ல­யத்தின் எந்­த­வொரு பகு­தி­யையும் நான் அழிக்­க­வில்லை. 1990ஆம் ஆண்டு இடம்­பெ­யர்ந்த முஸ்லிம் அக­திகள் தங்­க­ளது சொந்த நிலங்­களில் மீளக்­கு­டி­யே­று­வ­தற்கு 2009ஆம் ஆண்டு வாய்ப்­புக்­கி­டைத்­தது.  உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று  இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து தோன்­றிய சூழ்­நி­லை­களில் முஸ்லிம் அமைச்­சர்­க­ளான நாம் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்தோம். பொலி­ஸாரும், இர­க­சியப் பொலி­ஸாரும் எனக்கும் அந்தப் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுக்கும் தொடர்­பி­ருக்­கி­றதா என்று கண்­ட­றிய விசா­ர­ணை­களை நடத்­தி­னார்கள். சஹ்­ரா­னுடன் எனக்குத் தொடர்­பி­ருக்­கி­றது என்று அதி­கா­ரிகள் சந்­தே­கித்தால் என்­ மீது விசா­ரணை நடத்­துங்கள் என்று வெளிப்­ப­டை­யா­கவே நான் அறி­வித்தேன்.  எனக்­கெ­தி­ராக முறைப்­பா­டு­களைச் செய்­வ­தற்கு இர­க­சியப் பொலிஸார் ஒரு­வார கால­ அ­வ­கா­சமும் வழங்­கினர். இது சகல ஊட­கங்­க­ளிலும் வெளி­வந்­தது. உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்கள் தலை­மை­யி­லான மூன்று விசா­ர­ணைக்­கு­ழுக்­களை பொலிஸ்மா அ­திபர் நிய­மித்தார். உத்­தி­யோ­க­பூர்வ விசா­ர­ணைகள் இறு­தியில் உயிர்த்த  ஞாயி­று­தின தாக்­குதல் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கும், எனக்­கு­மி­டையில் எந்தத் தொடர்­பு­களும் இருந்­தி­ருக்­க­வில்லை என்று நிரூ­பித்­தன. இது­பற்றி சபா­நா­ய­க­ருக்கும் அறி­விக்­கப்­பட்­டது. புத்­த­ளத்தில் வசிக்கும் அக­திகள் ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்கு மன்­னா­ருக்கு பஸ்­களில் பயணம் செய்­தது குறித்து என்­மீது போலி­யான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அவர்கள் புத்­த­ளத்தில் வாழ்ந்­தாலும் அவர்­களின் வாக்­குப்­ப­திவு மன்­னா­ரி­லேயே இருக்­கி­றது. தாங்கள் வாக்­க­ளிப்­ப­தற்கு வச­தி­யாக உகந்த முறையில் வாக்­காளர் இடாப்பில் தங்­களைப் பதிவு செய்ய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பிர­த­ம­ரி­டமும் அவர்கள் வேண்­டுகோள் விடுத்­தார்கள். இலங்கைப் போக்­கு­வ­ரத்­துச்­சபை பஸ்­களில் அந்த வாக்­கா­ளர்­களை புத்­த­ளத்­தி­லி­ருந்து மன்­னா­ருக்கு கொண்­டு­செல்ல என்னால் ஏற்­பாடு செய்­ய­மு­டி­யுமா என்று நான் நிதி­ய­மைச்­ச­ரிடம் அனு­மதி கேட்டேன். அதற்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டது. வட­மா­காண இடம்­பெ­யர்ந்த அக­திகள் அமைப்பும், அதே­போன்ற போக்­கு­வ­ரத்து ஏற்­பாட்டைச் செய்­வ­தற்கு அனு­மதி கேட்டு எமது அமைச்­சிடம் வேண்­டுகோள் விடுத்­தது. அந்த அமைப்பு பஸ் கட்­ட­ணங்­களைச் சேக­ரித்து எமது அமைச்சு கொடுத்­தி­ருந்த பணத்தை உகந்த முறையில் மீளச்­செ­லுத்­தி­யது. அதற்­கு­ரிய முழுச்­செ­ல­வுமே செலுத்­தப்­பட்­டு­விட்­டதால் எமது அர­சாங்­கத்­துக்கோ அல்­லது அமைச்­சுக்கோ செலுத்த வேண்­டிய கட்­ட­ணங்கள் என்று நிலு­வை­யாக எது­வு­மில்லை. இந்தப் போக்­கு­வ­ரத்து ஏற்­பாட்டைச் செய்­தி­ருக்­கா­விட்டால் 12 ஆயிரம் வாக்­கா­ளர்கள் தமது வாக்­கு­களைப் பதி­வு­செய்ய இய­லாமல் போயி­ருக்கும். தனது பிர­ஜைகள் அவர்­களின் வாக்­கு­ரி­மையைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு எப்­போ­துமே உத­வ­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். புத்­தளம் அக­திகள் விட­யத்தில் இலங்கை மக்­க­ளுக்கோ அல்­லது அர­சாங்­கத்­துக்கோ எந்­தச்­சு­மையும் இல்­லாமல் வாக்­கா­ளர்­களைப் புத்­த­ளத்­தி­லி­ருந்து மன்­னா­ருக்கு கொண்­டு­செல்­வ­தற்­கான முழுச்­செ­ல­வையும் வட­மா­காண இடம்­பெ­யர்ந்த அக­திகள் அமைப்­புடன் இணைந்து நாம் பொறுப்­பேற்றோம். நானொரு சிறு­பான்­மை­யி­னத்தின் அர­சியல் தலை­வ­ராக இருக்­கின்ற கார­ணத்­தினால்தான் என்னை இலக்­கு­வைத்து இந்தக் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­ப­டு­கின்­றன என்­பது எனக்கு மிகுந்த கவ­லை­ய­ளிக்­கின்­றது. எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்­ன­தாக ஒரு விரும்­பத்­த­காத சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் என்­னையும், எனது சமூ­கத்­தையும் பகிரங்கமாக தொல்லைகளுக்கு உள்ளாக்குகின்றார்கள். நாட்டில் இனக்கலவரத்தைத் தூண்டிவிடு வதற்கே அவர்கள் முயற்சிக்கின்றார்கள் என்பது தெளிவாகப் புலனாகின்றது. நாட்டில் புதிய ஜனாதிபதியொருவர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருக்கும்போது அவர்கள் இவ்வாறு செயற்படுவது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும். புதிய ஜனாதிபதிக்கும், அவரது உயர்ந்த அந்தப் பதவிக்கும் அவர்கள் எந்தவொரு மதிப்பையும் கொடுக்கவில்லை என்பதே இதன் அர்த்தமாகும்.  இந்த ஆபத்தான போக்கு குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ்ஷ கவனத்திலெடுக்க வேண்டும் என்று அவசரமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.   https://www.virakesari.lk/article/70706  
    • அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை - அருட்தந்தை சக்திவேல்   சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை,  நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் 89 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் அவர்களில் எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என அரசியல் கைதிகளை விடுப்பதற்கு தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட் தந்தை ம. சக்திவேல் தெரிவித்துள்ளார்.' அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள ஏழு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக ஊடகங்களி்ல் வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் அவரிடம் வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக இதுவரை அரசாங்கம் கூட உத்தியோகபூர்வமாக எவ்வித அறிவித்தலையும் வெளியிடவில்லை இந்த நிலையில் சில ஊடகங்கள் எவ்வாறு இச் செய்தியை வெளியிட்டுள்ளனர் என தமக்குத் தெரியாது.  எனவும், விடுவிக்கப்பட்டவர்கள் யார்  என்பது பற்றியும் எவ்வித தகவல்களும் இல்லை ஆனால் சிறைச்சாலைகளில் உள்ள 89 அரசியல் கைதிகளில் நான் அறிய எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று  ஒரு அரசியல் கைதி மாத்திரம் விடுவிக்கப்பட்டார் என்றும் அதனைதவிர இன்று எவரும்விடுவிக்கப்படவி்ல்லை எனவும் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார் https://www.virakesari.lk/article/70707  
    • நியூஸிலாந்தில் குமுறத் தொடங்கியுள்ள எரிமலை ; அவசர நிலை பிரகடனம்! நியூஸிலாந்தின் வடக்கே அமைந்துள்ள 'White Island' என்ற தீவிலுள்ள எரிமலையொன்று இன்று அதிகாலை முதல் வெடித்து, குமுறத் தொடங்கியுள்ளமையினால் அப் பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந் நாட்டு பிரதமர் ஜசிந்த ஆர்டெர்ன், எரிமலையானது வெடித்து, குமுற ஆரம்பித்த வேளையில் 'White Island' இல் அல்லது அதனை அண்மித்த பகுதியில் 100 சுற்றுலாப் பயணிகள் இருந்துள்ளதாகவும் மேலும் பலர் கணக்கெடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். எரிமலை வெடித்து, குமுற ஆரம்பித்த நேரத்தில் வேளையில் மேற்படி தீவில்  மக்கள் இருந்துள்ளதாகவும், இதன்போது சிலர் காயமடைந்துள்ளதாகவும் 'White Island' தீவை அண்மித்த கடற்கரை நகரமான 'Whakatane' மேயர் ஜூடி டர்னர் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் கப்பல்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலமாக குறித்த தீவுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்க்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.   https://www.virakesari.lk/article/70702