கிருபன்

2019 ஐ.பி.எல். ரி-20 தொடர் செய்திகள்

Recommended Posts

ஐபிஎல் 2019: சென்னை அணி ஹாட்ரிக் வெற்றி - தோனியின் அதிரடி மற்றும் பிராவோ-தாஹீர் இணையின் அபாரம்

ஆதேஷ் குமார் குப்தாபிபிசி
தோனிபடத்தின் காப்புரிமைTWITTER

கடந்த ஆண்டின் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டை போலவே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த அணியின் சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தமுள்ள 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஆட்டத்தின் இறுதி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது.

பிராவோ வீசிய பரபரப்பான அந்த ஓவரின் முதல் பந்தை பென் ஸ்டோக்ஸ் தூக்கி அடிக்க, சுரேஷ் ரெய்னா அதனை லாவகமாக பிடித்தார்.

சென்னை அணி ஹாட்ரிக் வெற்றி: தோனியின் அதிரடி மற்றும் பிராவோ-தாஹீர் இணையின் அபாரம்படத்தின் காப்புரிமைARUN SANKAR

உடனே போட்டி சென்னை அணியின் ஆதிக்கத்துக்கு வந்தது. புதிய பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஷ்ரேயாஸ் கோபாலால் அடுத்த பந்தில் ரன் எடுக்கமுடியவில்லை.

மூன்றாவது பந்தில் ஒரு லெக்-பை ரன் எடுக்கப்பட்டது. மீண்டும் ஓவரின் ஐந்தாவது பந்தை சந்தித்த ஷ்ரேயாஸ் கோபால் இம்முறை தூக்கி அடிக்க இம்ரான் தாஹீர் அதனை பிடித்தார்.

இதன் மூலம் ஆட்டம் முற்றிலும் சென்னை அணியின் வசமானது.

ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேனான ஆர்ச்சர் 24 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பென் ஸ்டோக்ஸ் 46 ரன்கள் எடுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளரான இம்ரான் தாஹீர் 23 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

ஐபிஎல்: சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபடத்தின் காப்புரிமைARUN SANKAR

தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

முன்னதாக, முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், பிராவோவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் துணையுடன் 46 பந்துகளில் தோனி 75 ரன்கள் எடுத்தார்.

https://www.bbc.com/tamil/sport-47769686

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

டோனியின் நிதானம் கலந்த அதிரடி துடுப்பாட்டம்: ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது சென்னை அணி

287280-720x450.jpg

ஐ.பி.எல். தொடரின் 12ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய சென்னை அணி, ஆரம்ப விக்கெட்டுகளை சொற்ப ஓட்டங்களிலேயே பறிகொடுத்திருந்தாலும், டோனியும், ரெய்னாவும் இணைந்து அணிக்கு சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர்.

இதற்கமைய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் இறுதிவரை களத்தில் நின்ற டோனி, ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்செர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியில் உனட்கட் வீசிய இறுதி ஓவரில், 3 சிக்ஸர்கள் அடங்களாக 28 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் மூலம், நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடரில் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் டோனி முதலிடத்தை கொண்டார்.

அத்தோடு, இதுவே டோனி ஐ.பி.எல். தொடரில் பெற்றுக்கொண்ட இரண்டாவது அதிகபட்ச ஓட்டமாகும். இதற்கு முன்னதாக பஞ்சாப் அணிக்காக 79 ஓட்டங்கள் பெற்றதே அவரது சிறந்த ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது.

இதனையடுத்து, 176 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ஓட்டங்ளை மட்டுமே பெற முடிந்தது. இதனால் சென்னை அணி 8 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே வெற்றிபெற்ற சென்னை அணி, 6 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

இதன்போது ராஜஸ்தான் அணி சார்பில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக பென் ஸ்டோக்ஸ் 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் தீபக் சாஹர், சர்துல் தாகூர், இம்ரான் தஹீர் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் போது, சஞ்ச சம்சன் ஐ.பி.எல். போட்டிகளில் 2000 ஓட்டங்களை கடந்தார். இதன்மூலம், அவர் குறைந்த வயதில் 2000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் 24 வயது 140 நாட்களில் இந்த சாதனையை படைத்தார்.

இதற்கு முன்னதாக விராட் கோஹ்லி, 24 வயது 175 நாட்களில் இந்த சாதனையை படைத்திருந்தார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக சென்னை அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி, தெரிவுசெய்யப்பட்டார்.

 

 

http://athavannews.com/டோனியின்-நிதானம்-கலந்த-அ/

Share this post


Link to post
Share on other sites

ஐபிஎல் 2019:8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் - டெல்லி அணி வீழ்ந்த கதை

ஐபிஎல் 2019:8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் - டெல்லி அணி வீழ்ந்த கதைபடத்தின் காப்புரிமைREUTERS

12-ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் திங்கள்கிழமையன்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மொகாலியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரெயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கே. எல். ராகுல் மற்றும் கரண் ஆகிய இருவரும் தொடங்கம் முதலே அதிரடி பாணியை கடைபிடித்தனர்.

ராகுல் 15 ரன்களும், கரண் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய இளமை வீரரான மாயங்க் அகர்வால் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதிரடி வீரர் மில்லர் 30 பந்துகளில் 43 ரன்களை விளாசினார். இதுவே பஞ்சாப் அணிய வீரர்களில் அதிகபட்ச ரன்னாகும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் அதிர்ச்சியை சந்தித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

ஐபிஎல் 2019:8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் - டெல்லி அணி வீழ்ந்த கதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பின்னர் களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் பொறுப்புடன் நிதானமாகவும், வாய்ப்பு கிடைக்கும்போது அதிரடி ஆட்டத்தையும் வெளிப்படுத்தினர். ரிஷப் பந்த் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார்.

16.3 ஓவர்களில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்களுக்கு என்று வலுவாக இருந்த டெல்லி அணி அடுத்த 7 விக்கெட்டுகளை 8 ரன்களுக்கு இழந்ததே தொலைவுக்கு காரணமாக அமைந்தது.

https://www.bbc.com/tamil/sport-47781941

16.3 ஓவர்களில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்களுக்கு என்று வலுவாக இருந்த டெல்லி அணி அடுத்த 7 விக்கெட்டுகளை 8 ரன்களுக்கு இழந்ததே தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Share this post


Link to post
Share on other sites

செம யார்க்கர்; ஐபிஎல் தொடரின் சிறந்த பந்து : ரஸலைக் காலி செய்த ரபாடா யார்க்கர் குறித்து ‘தாதா’ புகழாரம்

Published :  01 Apr 2019  16:04 IST
Updated :  01 Apr 2019  16:04 IST
russelJPG

ரஸல் பவுல்டு ஆன யார்க்கர். | டிவிட்டர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் டெல்லி கேப்பிடல்ஸ் வென்ற அந்தப் போட்டியில் ரபாடா, ஆந்த்ரே ரஸலுக்கு வீசிய யார்க்கர் இதுவரை ஐபிஎல் தொடரின் சிறந்த பந்து என்று கங்குலி பாராட்டியுள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நம்பிக்கை அறிவுரையாளராக இருந்து வரும் கங்குலி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அந்த வெற்றியின் முக்கியத்துவம் பற்றி பேசியுள்ளார்.

சூப்பர் ஓவரில் 10 ரன்களை, அதுவும் ஆந்த்ரே ரஸலுக்கு எதிராகக் கட்டுப்படுத்துவது என்படு அவ்வளவு எளிதான காரியமல்ல, காரணம் ஆந்த்ரே ரஸல் தன் வாழ்நாளின் அதிரடி பார்மில் உள்ளார், முதலில் 19 பந்துகளில் 49, பிறகு அஸ்வின் செய்த மகாபெரிய பீல்டிங் வியூகத் தவறினால் பவுல்டிலிருந்து தப்பிய ரஸல் 17 பந்துகளில் 48 ரன்கள் விளாசித்தள்ளியது கிங்ஸ் லெவனின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.  பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக அன்று 28 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார் ரஸல்.

இந்நிலையில் சூப்பர் ஓவரில் 10 ரன்களை அவரை எடுக்க விடாமல் செய்தது சாதாரணம் அல்ல. ஒவ்வொரு பந்தையும் மிகச்சரியாக மட்டையை கீழிறக்கி கிரீஸ் அருகே தடுத்தாடும் பிளாக் ஹோலில் வீசினார் ரபாடா.

3வது பந்து ரஸலின் பேட்டையும் ஏமாற்றி ஸ்டம்பைப் பெயர்த்தது. இந்தப் பந்து உண்மையில் கங்குலியின் புகழாரத்துக்கு உரியதுதான்.

“ரஸலுக்கு ரபாடா வீசிய அந்த யார்க்கர் இந்த ஐபில் சீசனின் இதுவரையிலான சிறந்த பந்து என்றே கருதுகிறேன். தன் வாழ்நாளின் சிறந்த பார்மில் இருக்கும் ரஸலை விழித்த இப்படிப்பட்ட பந்து நம்ப முடியாத பந்தாகும்.  வெற்றியில் மகிழ்ச்சி, இந்த அணிக்கு இந்த வெற்றி மிகவும் அவசியம். கடந்த வருடம் பெரிதாக சோபிக்கவில்லை.  இப்போது இளம் வீரர்கள் கொண்ட அணியாக உள்ளது.  அதே போல் பிரித்வி ஷாவின் 99 ரன்கள்... அவரது பேட்டிங் தனித்துவமானது.

இப்படிப்பட்ட வெற்றிகள் அணியின் நம்பிக்கையை வேறு தளத்துக்குக் கொண்டு செல்லும். இன்னும் 11 போட்டிகள் உள்ளன.  ஆனல் இந்த வெற்றி வெறும் வெற்றியைத் தாண்டியும் முக்கியமானது” என்றார் கங்குலி.

https://tamil.thehindu.com/sports/article26701120.ece?utm_source=sports&utm_medium=sticky_footer

Share this post


Link to post
Share on other sites

ஐ.பி.எல்.: பரபரப்பான போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தியது பஞ்சாப் அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 13ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், நடப்பு தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் அணி, ஆறு புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

நேற்று மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக டேவிட் மில்லர் 43 ஓட்டங்களையும், சப்ராஸ் கான் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளையும், கார்கிஸோ ரபாடா மற்றும் சந்தீப் லெமச்சேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இதனையடுத்து, 167 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி கெப்பிடல்ஸ் அணியால், 19.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ரிஷப்பந்த் 39 ஓட்டங்களையும், கொலின் இங்ரம் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில், சேம் கர்ரன் ஹெட்ரிக் விக்கெட் அடங்களாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே நடப்பு ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட முதல் ஹெட்ரிக் ஆகும். மேலும், அஸ்வின் மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில், 20 ஓட்டங்களையும், 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சேம் கர்ரன் தெரிவுசெய்யப்பட்டார்.

 

http://athavannews.com/ஐ-பி-எல்-பரபரப்பான-போட்டி/

Share this post


Link to post
Share on other sites

முதல் வெற்றியைப் பதிவுசெய்தது ராஜஸ்தான் அணி

Rajasthan-vs-Bengalure-1-700x450.jpg

நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரின் 14ஆவது போட்டியில் பெங்களூர் அணியை 7 விக்கெட்டுகளால் ராஜஸ்தான் அணி வெற்றிகொண்டது.

ஜெயப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவுசெய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகைளை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.

அணிசார்பில், பார்திவ் பட்டேல் 67 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில், ஸ்ரேயஸ் கோபால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு ஜொப்ரா ஆர்சர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இதையடுத்து 159 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து தனது வெற்றியிலக்கை அடைந்தது.

அணி சார்பில் ஜோஸ் பட்லர் 59 ஓட்டங்களையும், ஸ்டீவன் ஸ்மித் 38 ஓட்டங்களையும், ராகுல் த்ரீபதி 34 ஓட்டங்களையும் மற்றும் ரகானே 22 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் பெங்களூர் அணி சார்பில், சாகல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, மொகம்மட் சிராஜ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி இந்த ஐ.பி.எல். தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த அணி விளையாடிய நான்கு போட்டிகளில் 1 போட்டியில் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலுள்ளது.

இதனிடையே பெங்களூர் அணி இதுவரை நடந்த 4 போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில் புள்ளிகளின் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://athavannews.com/7-விக்கெட்டுகளால்-ராஜஸ்த/

Share this post


Link to post
Share on other sites

சென்னையை வீழ்த்தியது மும்பை

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 37 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

GAZI_3676.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 15 ஆவது லீக் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

0U5A7756.jpg

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை குவித்தது. 

VRP9978.jpg

171 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணிக்கு பெரண்டோப் முதல் ஓவரிலேயே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். 

அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய வோட்சன் முதல் ஓவரின் நான்காவது பந்து வீச்சில் 5 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, ராயுடுவும் 1.2 ஆவது ஓவரில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேய ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் சென்னை அணி 6 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுக்க, 3 ஆவது விக்கெட்டுக்காக கேதர் யாதவுடன் கைகோர்த்தாடிய ரய்னா அதிரகாட்ட ஆரம்பித்தார்.

ஐந்தாவது ஓவரை எதர்கொண்ட ரய்னா அந்த ஓவரின் 3,4, நான்காவது பந்து வீச்சில் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஓட்டங்களை விளாசித் தள்ளியபோதும், இறுதிப் பந்தில் பொலார்ட்டின் அபாரமான பிடியெடுப்பு காரணமாக 15 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

VRP0380.jpg

ரய்னாவின் ஆட்டமிழப்பையடுத்து தோனி களமிறங்கி கேதர் யாதவ்வுடன் பொருமையாக துடுப்பெடுத்தாடிவர சென்னை அணி 7.2 ஓவரில் 50 ஓட்டங்களையும் 13 ஆவது ஓவரின் நிறைவில் 80 ஓட்டங்களையும் பெற்றது.

GAZI_3785.jpg

ஆடுகளத்தில் கேதர் யாதவ் 41 ஓட்டத்துடனும், தோனி 11 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். இதனால் சென்னையின் வெற்றிக்கு 42 பந்துகளில் 91 என்ற நிலையிருந்தது.

15 ஆவது ஓவருக்காக பாண்டியா பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரின் முதல் பந்தில் தோனி ஆட்டமிழந்து சென்னை அணி ரசிகர்களின் வெற்றிக் கனவை தகர்த்தார்.

அது மாத்திரமில்லாது அடுத்து வந்த ஜடேஜாவும் அதே ஓவரன் நான்காவது பந்தில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறி சென்னை அணி 89 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்ககை இழந்தது.

தொடர்ந்து களமிறங்கிய பிராவோவுடன் கைகோர்த்தாட ஆரம்பித்த கேதர் யாதவ 15.1 ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை பெற்று, அரைசதம் கடந்ததுடன் அடுத்த பந்திலும் மேலும் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசினார்.

ஒரு கட்டத்தில் சென்னை  அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 66 ஓட்டம் என்ற நிலை இருந்தது. 

இந் நிலையில் 18 ஆவது ஓவருக்காக மலிங்க பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரின் முதல் பந்தில் கேதர் யாதவ் 58 ஓட்டத்துடனும், பிராவோ 5 ஆவது பந்து வீச்சில் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க சென்னை அணி 115 ஓட்டத்துக்கு 7 விக்கெட்டுக்களை இழந்தது.

VRP0521.jpg

இறுதியாக சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து, 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 37 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய மலிங்க, பாண்டியா தலா 3 விக்கெட்டுக்களையும், பெரண்டோப் 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

நன்றி : ஐ.பி.எல்.இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/53307

Share this post


Link to post
Share on other sites

சிறந்த துடுப்பாட்டம், துல்லியமான பந்துவீச்சு மற்றும் அபார களத்தடுப்பு மும்பையை வெற்றிக்கு அழைத்துச் சென்றது......

Share this post


Link to post
Share on other sites

சுலபமாய் வென்றிருக்கக்கூடிய இலக்கு...... என்னவோ தோனியும்  சரியாக ஆடவில்லை என்றே தோன்றுகிறது. கிளவ்ஸை இழுத்து இழுத்து கட்டின நேரத்துக்கு பாட்டை  தூக்கி நாலு இழுவை இழுத்திருந்தால் வென்றிருக்கலாம்.பிராவோவின் ஆட்டமும் சோபிக்கவில்லை. யாதவ்தான் நல்லா ஆடினார் .....!   😐

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

5 விக்கெட்டுகளால் ஹைதராபாத் அணி வெற்றியை சுவீகரித்தது

Delhi-vs-Hyderabad-2-700x450.jpg

நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரின் 16 ஆவது போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின.

டெல்லியில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி அணி ஹைதராபாத் அணியை 5 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது.

இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவுசெய்தது.

அவ்வகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணிக்கு ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியைக் கொடுத்தனர். அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்த நிலையில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அணி சார்பில், ஸ்ரேயஸ் ஐயர் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில், புவனேஸ் குமார், மொஹம்மட் நபி மற்றும் சித்தார்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அத்துடன் ரசிட் கான் மற்றும் சன்டீப் சர்மா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், 130 என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இதனால் 5 விக்கெட்டுகளால் ஹைதராபாத் அணி போட்டியை வென்றது.

அணி சார்பில் ஜொனி பயர்ஸ்டோவ் 48 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் சன்டீப், அக்ஸர் படேல், ரபாடா, ராகுல் ரெவாரியா மற்றும் இசாந்த் சர்மா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

Delhi-vs-Hyderabad-3.jpg

Delhi-vs-Hyderabad-5.jpg

Delhi-vs-Hyderabad-6.jpg

 

http://athavannews.com/5-விக்கெட்டுகளால்-ஹைதராப/

 

points_1.png

Share this post


Link to post
Share on other sites

ஆர்.சி.பி யை துவம்சம் செய்த ரசுல் ; வெற்றிக் கனியை தட்டிப் பரித்த கொல்கத்தா

பெங்களூருவில் இடம்பெற்ற ஐ.பி.எல் தொடரில் ரசுலின் அதிரடியால் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தியது.

SA-i-KAT_-69432.jpg

ஐ.பி.எல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழட்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

SA-i-KAT_-69410.jpg

இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்திவ் படேல், விராட் கோலி ஆகியோர் இறங்கி தொடக்கம் முதல் இருவரும் அடித்து ஆடினர்.

அணியின் எண்ணிக்கை 64 ஆக இருக்கும்போது பார்திவ் படேல் 25 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.. அவரையடுத்து ஏபி டி வில்லியர்ஸ் களமிறங்கினார்.

SA-i-KAT_-69326.jpg

ஆரம்பம் முதலே விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஜோடி அதிரடி காட்டியது. கொல்கத்தா அணியினரின் பந்து வீச்சை துவம்சம் செய்து சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். 

சிறப்பாக விளையாடிய விராட் கோலி 49 பந்தில் 2 சிக்சர், 9 பவுண்டரியுடன் 84 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதிரடி காட்டிய டி வில்லியர்ஸ் 31 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 63 ஓட்டத்துடன்  வெளியேறினார்.

RON_2387.jpg

இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை எடுத்துள்ளது. ஸ்டோனிஸ் 13 பந்தில் 28 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனையடுத்து 206 ஓட்டங்கள் பெற்றால்  வெற்றி என்ற இளங்குடன் கொல்கத்தா நைட் டர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக லயன் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர்.

RON_2312.jpg

சுனில் நரைன் 10 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில் லயனுடன் உத்தப்பா ஜோடி சேர்ந்து ஆடினர். 33 ஓட்டங்கள் எடுத்து உத்தப்பாவும் 43 ஓட்டங்கள் எடுத்து லயனும் வெளியேறினர். அதையடுத்து ரானா அதிரடியாக விளையாடி 37 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் 17 ஓட்டத்துடன் வெளியேறினார். 

இந்நிலையில் ரசுலின் அதிரடியால் 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ரசுல் 13 பந்துகளில் 7 சிக்சர்கள், 1 பவுண்டரி அடங்கலாக 48 ஓட்டங்களைப் பெற்று  ஆட்டமிழக்காமல் இருந்தார். 

படங்கள் ;- நன்றி ஐ.பி.எல் இணையம்

 

http://www.virakesari.lk/article/53476

Share this post


Link to post
Share on other sites

சென்னை அணி 22 ஓட்டங்களால் அபார வெற்றி

Chennai-vs-Punjab-700x450.jpg

நடைபெற்றுவரும் ஐ.பி.எல்.தொடரின் 18 ஆவது போட்டியில் சென்னை அணி 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

சென்னை அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையிலான இப்போட்டி சென்னை, சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணி சார்பாக டூ பிளஸிஸ் 54 ஓட்டங்களையும், டோனி ஆட்டமிளக்காமல் 37 ஓட்டங்களையும், ஷேன் வொட்ஷன் 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் பஞ்சாப் அணி சார்பாக அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு 161 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணிக்கு சென்னை பந்துவீச்சாளர்கள் நெருக்கடியைக் கொடுத்தனர்.

இதன்படி, பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். எனவே சென்னை அணி 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

பஞ்சாப் அணி சார்பில், சல்பரஷ் கான் 67 ஓட்டங்களையும், லோகோஷ் ராகுல் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், ஹர்பஜன் சிங், ஸ்கொட் குஜ்ஜெலைன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், தீபக் சாகர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

 

http://athavannews.com/சென்னை-அணி-22-ஓட்டங்களால்-அ/

 

Share this post


Link to post
Share on other sites

அல்ஸாரியின் சிறப்பான பந்து வீச்சால் 96 ஓட்டங்களுக்குள் முடங்கியது சன்ரைசர்ஸ்

  ஐதராபாத்தில் இடம்பெற்ற போட்டியில் அல்ஸாரியின் சிறப்பான பந்து வீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. 

201904062335334446_ipl-2019-sunrisers-hy

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.

நாணய சுழட்சியில் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் தலைவர் புவனேஷ்வர் குமார் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

VRP0590.jpg

இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் குயிண்டன் டி கொக்கும் களமிறங்கினர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி மும்பை அணியினர் ஓட்டங்களை  எடுக்க திணறினர்.

VRP0610.jpg

ரோகித் சர்மா 11 ஓட்டத்துடனும் டி காக் 19 ஓட்டத்துடனும், சூர்யகுமார் யாதவ் 7 ஓட்டத்துடனும், இஷான் கிஷன் 17 ஓட்டத்துடனும், குருணால் பாண்டியா 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழ்ந்தனர்.. மும்பை அணி 65 ஓட்டங்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஹர்திக் பாண்டியா 14 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ராகுல் சாஹர் 10 ஓட்டத்துடன் வெளியேறினார்.

பொலார்ட் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களை எடுத்துள்ளது. பொலார்ட் 26 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரியுடன் 46 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

VRP0756.jpg

ஐதராபாத் அணி சார்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டும், மொகமது நபி, சந்தீப் சர்மா, ரஷித் கான், புனவேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்..

இதனையடுத்து 137 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களமிறங்கியது.

மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ஐதராபாத் அணி வீரர்கள் 96 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தனர்..

மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய அல்ஸாரி 3.4 ஓவரில் 12 ஓட்டங்களை மாத்திரம் விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

 

http://www.virakesari.lk/article/53528

 

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி கிருபன்.....!   👍

Share this post


Link to post
Share on other sites

12 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்கள் ஐ.பி.எல் சாதனை.

Share this post


Link to post
Share on other sites

றபாடாவினால் தடுமாறிய பெங்களூர் – டெல்லி அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

virat-koli.jpg

டெல்லி கப்பிடல்ஸ் அணிக்கு 150 ஓட்டங்களை பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐ.பி.எல். தொடரின் 20 ஆவது லீக் போட்டியில் டெல்லி கப்பிடல்ஸ் அணியும் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன.

பெங்களூர் எம்.சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன் பிரகாரம் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக விராத் கோலி 41 ஓட்டங்களையும் மெயின் அலி 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள பந்து வீச்சில் றபாடா 4 விக்கெட்களையும் கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதனை அடுத்து 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி பதிலளித்து ஆடவுள்ளது.

dc.jpg

ali.jpg

Kohli.jpg

 

 

 

http://athavannews.com/பெங்களூர்-தடுமாற்றம்-டெ/

Share this post


Link to post
Share on other sites

ஷிரியாஸ் ஐயரின் அதிரடியில்  வெற்றி வாகை சூடியது டெல்லி

ஷிரியாஸ் ஐயரின் அதிரடியில்  வெற்றி வாகை சூடியது டெல்லி

ஷிரியாஸ் ஐயரின் அதிரடி அரை சதத்தின் உதவியுடன் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்றுள்ளது. இதனால் தொடர் தோல்விகளை பெங்களூர் அணி சந்தித்து வருகின்றது.

GAZI_5927.jpg

ஐ.பி.எல். தொடரின் 20 ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தின..

பெங்களூர் எம்.சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன் படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

GAZI_6030.jpg

அவ்வணி சார்பாக விராத் கோலி 41 ஓட்டங்களையும் மெயின் அலி 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள பந்து வீச்சில் றபடா 4 விக்கெட்களையும் கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

அவ்வணி சார்பாக ஷிரியாஸ் ஐயர் 67 ஓட்டங்களையும், ப்ரித்வி ஷா 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் நவடிப் சைனி 2 விக்கெட்களையும் மோயீன் அலி, பவான் நெஹி, டிம் சவுத்தி, மொஹமட் சிராஜ் ஆகியோர் தல ஒரு விக்கெட்களை வீழ்த்தினார்.

GAZI_6008.jpg

இந்த போட்டியில் பெற்ற வெற்றியினால்  டெல்லி அணி 6 புள்ளிகளை பெற்றுள்ளது, அதேவேளை பெங்களூர் அணி விளையாடிய எந்த போட்டிகளிலும் வெற்றிபெறாமல் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.virakesari.lk/article/53563

Share this post


Link to post
Share on other sites

அசராது போட்டியை முடித்து வைத்தார் ராகுல்

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

9S6A6257.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 22 ஆவது லீக் போட்டி சன் ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கிடையில் இன்றிரவு 8.00 மணிக்கு மொகாலியில் ஆரம்பமானது.

DMIPL_7464.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணியின் தலைவர் அஷ்வின் களத்தடுப்பை தேர்வுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 150 ஓட்டங்களை குவித்தது.

9S6A5673.jpg

151 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான கிறிஸ் கெய்ல் 3.1 ஓவரில் ரஷித் கானுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதனால் ஐதராபாத் அணியின் முதல் விக்கெட் 18 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது. எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்தாடிய கே.எல். ராகுல் மற்றும் அகர்வாலின் பொறுப்பான இணைப்பாட்டத்தினால் பஞ்சாப் அணி முதல் ஐந்து ஓவர்களில் 30 ஓட்டத்தையும் 10 ஓவர்களின் முடிவில் 102 ஓட்டங்களையும் பெற்றது.

DMIPL_8098.jpg

அத்துடன் ராகுல் 34 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம், ஒரு நான்கு ஓட்டம் அடங்களாக அரைசதம் விளாசினார். மறுமுணையில் அகர்வால் 16.2 ஆவது ஓவரில் 40 பந்துகளை எதிர்கொண்டு அவரும் அரை சதமொன்றை பூர்த்தி செய்தார்.

எனினும் அவர் 18 ஆவது ஓவரின் முதல் பந்தில் சண்டீப் சர்மாவுடைய பந்தில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து வந்த மில்லரும் அதே ஓவரின் இறுதிப் பந்தில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி 135 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து.

அவர்களின் ஆட்டமிழப்பையடுத்து மண்டீப் சிங் களமிறங்க, பஞ்சாப் அணிக்கு ஒரு கடத்தில் வெற்றிக்கு 12 பந்துகளில் 16 ஓட்டம் என்ற நிலையிருக்க மண்டீப் சிங் 18 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதனால் போட்டியின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. தொடர்ந்து சாம் கர்ரன் ஆடுகளம் புக, பஞ்சாப் அணிக்கு 6 பந்துகளுக்கு 11 ஓட்டம் என்ற நிலையிருந்தது.

இறுதியாக ராகுல் 19.5 ஆவது பந்தில் போட்டியை முடித்து வைத்தார். அதன்படி ஐதராபாத் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்றது.

DM1L0559.jpg

ஆடுகளத்தில் ராகுல் 71 ஓட்டத்துடனும், சாம் கர்ரன் 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

DMIPL_8006.jpg

பந்து வீச்சில் ஐதராபாத் அணி சார்பில் சண்டீப் சர்மா 2 விக்கெட்டுக்களையும், சித்தார்த் கவுல் மற்றும் ரஷித் கான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

நன்றி : ஐ.பி.எல்.இணையத்தளம்

 

 

http://www.virakesari.lk/article/53633

Share this post


Link to post
Share on other sites

கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை முதலிடம்

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

RON_4606.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 23 ஆவது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், தினேஷ் கார்த்திக்  தல‍ைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணிக்கிடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களை குவித்தது.

A70I6746.jpg

109 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணி சார்பில் வேட்சன் மற்றும் டூப்பிளஸ்ஸி ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாடி வந்த வேளை வேட்சன் 2.2 ஆவது ஓவரில் 17 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ரய்னாவும் 14 ஓட்டத்துடன் 4 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஆட்டமிழக்க சென்னை அணி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

RON_4485.jpg

3 ஆவது விக்கெட்டுக்காக ராயுடு மற்றும் டூப்பிளஸ்ஸி கைகோர்த்தாடி வர சென்னை அணி முதல் 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 57 ஓட்டங்களை பெற்றது.

RON_4538.jpg

ராயுடு மற்றும் டூப்பிளஸ்ஸி தலா 12 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வந்தனர். இந் நிலையில் 14.4 ஆவது ஓவரில் ராயுடு 21 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து கேதர் யாதவ் களமிறங்கி துடுப்பெடுத்தாட சென்னை அணி 16.4 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை கடந்ததுடன் 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து கொல்கத்தா அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை‍ அடைந்தது. 

ஆடுகளத்தில் டூப்பிளஸ்ஸி 43 ஓட்டத்துடனும், கேதர் யாதவ் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேன் 2 விக்கெட்டுக்களையும்  சாவ்லா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

RON_4662.jpg

இந்த வெற்றி மூலம் சென்னை அணி பட்டியல் தர வரிசையில் 10 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

SA-i-KAT_-71161.jpg

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/53725

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வெற்றிக்காக 'வன் மேன் ஆர்மி ' யாக போராடினார் பொல்லார்ட்

 

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பொல்லார்ட்டின் அதிரடி ஆட்டம் காரணமாக மும்பை அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

GAZI_6993.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இன்று இரவு 8.00 மணிக்கு வான்கடே மைதானத்தில் ஆரம்பமானது.

0U5A8613.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் பொல்லார்ட் களத்தடுப்பை தேர்வு செய்ய பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 197 ஓட்டங்களை பெற்றது.

GAZI_6207.jpg

198 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணி சார்பில்  டீகொக் மற்றும் சித்தீஷ் லேட் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாட மும்பை அணியின் முதல் விக்கெட் 28 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது.

அதன்படி சித்தீஷ் லேட் 3.4 ஆவது ஓவரில் 15 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 2 ஆவது விக்கெட்டுக்காக சூரியகுமார் யாதவ் களமிறங்கி டீகொக்குடன் ஜோடி சேர்ந்து ஆடிவர மும்பை அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 50 ஓட்டங்களை பெற்றது.

டீகொக் 16 ஓட்டத்துடனும், சூரியகுமார் யாதவ் 19 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். எனினும் 7.4 ஆவது ஓவரில் சூரிய குமார் யாதவ் 21 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, டீகொக்கும் 8.5 ஆவது ஓவரில் 24 ஓட்டத்துடனும், அடுத்து வந்த கிஷ்ணா 12 ஆவது ஓவரின் நிறைவில் 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர் (94-4).

VRP2022.jpg

தொடர்ந்து 5 ஆவது விக்கெட்டுக்காக பாண்டியாவுடன் கைகோர்த்த ரஸல் அதிரடி காட்ட ஆரம்பிக்க மும்பை அணி 15 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 135 ஓட்டங்களை குவித்தது.

பொல்லார்ட் 41 ஓட்டத்துடனும் பாண்டியா 19 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். இந் நிலையில் பாண்டியா 15.1 ஆவது ஓவரில் மொஹமட் ஷமியின் பந்து வீச்சில் மில்லரிடம் பிடிகொடுத்து வெளியேற, அடுத்து வந்த குர்னல் பாண்டியாவும் ஒரு ஓட்டத்துடன் அதே ஓவரில் ஆட்டமிழந்தார் (140-6).

ஒரு கடத்தில் மும்பை அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 54 ஓட்டங்கள் என்ற நிலையிருந்தது. ஆடுகளத்தில் பொல்லார்ட் மற்றும் அல்ஸாரி ஜோசப் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இந் நிலையில் பொல்லார்ட் 16 ஆவது ஓவரின் முடிவில் மொத்தமாக 22 பந்துகளை எதிர்கொண்டு 7 ஆறு ஓட்டம் ஒரு நான்கு ஓட்டம் அடங்களாக அரைசதம் கடந்தார்.

VRP2135.jpg

அத்துடன் மும்பை அணிக்கு 12 பந்துகளுக்கு 32 ஓட்டம் என்ற நிலையுமிருக்க 19 ஆவது ஓவரை எதிர்கொண்ட பொல்லார்ட் அந்த ஓவரில் மாத்திரம் 17 ஓட்டங்களை விளாசித் தள்ள, இறுதி 6 பந்துகளுக்கு 15 ஓட்டம் என்ற நிலையானது.

20 ஆவது ஓவரின் முதல் பந்தில் ஒரு ஆறு ஓட்டத்தை பொல்லார்ட் விளாசித் தள்ளினார் எனினும் அது நோபாலாக அமைந்தது. இதனிடையே அடுத்த பந்திலும் ஒரு நான்கு ஓட்டத்தை விளா 5 பந்துகளுக்கு 4 ஓட்டம் என்ற நிலையாகியது.

இந் நிலையில் அடுத்த பந்தையும் உயர்த்தியடித்த பொல்லார்ட் மொத்தமாக 31 பந்துகளில் 83 ஓட்டத்துடனும் மில்லிரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் போட்டி மறுபடியும் சூடு பிடிக்க இறுதியாக ஒரு பந்துக்கு இரண்டு ஓட்டம் என்றாக அல்ஸாரி ஜோசப் இறுதிப் பந்தில் இரண்டு ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து மும்பையின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

GAZI_7033.jpg

இறுதியாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து பஞ்சாப் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது. 

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் மொஹமட் ஷமி 3 விக்கெட்டுக்களையும், அஷ்வின், ராஜ்போர்ட் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

நன்றி : ஐ.பி.எல்.இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/53806

Share this post


Link to post
Share on other sites

மிகவும் சிறப்பான விளையாட்டு...... கெய்ல் , ராகுல், மற்றும் பெல்லார்ட்  அருமையான பேட்டிங்.....!   👍

Share this post


Link to post
Share on other sites

பரபரப்பான ஆட்டத்தில் சென்னைக்கு திரில் வெற்றி

ராஜஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இறுதிப் பந்தில் ஆறு ஓட்டத்தை விளாசிய சாண்ட்னர் சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

9S6A7712.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 25 ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு 8.00 மணிக்கு ஜெய்பூர் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.

IMG_1661.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய, ராஜஸ்தான் அணி முதலாவதாக துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை குவித்தது.

9S6A7133.jpg

152 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணியின் முதல் நான்கு விக்கெட்டுக்களும் ராஜஸ்தானின் சிறந்த பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு காரணமாக 24 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

வேட்சன் முதல் ஓவரின் நான்காவது பந்தில் டக்கவுட் முறையில் போல்ட் முறையிலும், ரய்னா 1.5 ஆவது ஓவரில் ரன்அவுட் முறையிலும், டூப்பிளஸ்ஸி மூன்றாவது ஓவரின் இறுதிப் பந்தில் 7 ஓட்டத்துடனும், 5.5 ஆவது ஓவரில் கேதர் யாதவ் ஒரு ஓட்டத்துடன் பென் ஸ்டோக்ஸின் அபார பிடியெடுப்பினால் ஆட்டமிழந்து வெளியேறினர்.

IMG_2386.jpg

இதையடுத்து 5 ஆவது விக்கெட்டுக்காக சென்னை அணித் தலைவர் தோனி மற்றும் ராயுடு ஜேடி சேர்ந்து அதிரடி காட்ட ஆரம்பிக்க சென்னை அணி 15 ஓவர்களின் நிறைவில் 100 ஓட்டங்களை கடந்ததுடன், யாதவ் மொத்மாக 41 பந்துகளை எதிர்கொண்டு 3 ஆறு ஓட்டம், 2 நான்கு ஓட்டம் அடங்களாக அரைசதம் கடந்தார்.

9S6A7561.jpg

எனினும் அவர் 17.4 ஆவது ஓவரில் பென் ஸ்டோக்ஸின் பந்து வீச்சில் 57 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (119 -5).

அவரையடுத்து களமிறங்கிய துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க சென்னையின் வெற்றிக்கு 12 பந்துகளில் 32 ஓட்டம் ஓட்டம் என்ற நிலையிருக்க தோனி, 19.4 ஓவரில் மொத்தமாக 39 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் பெற்றார்.

IMG_2548.jpg

இறுதியாக 6 பந்துகளுக்கு 18 ஓட்டம் என்ற நிலையானது. இறுதி ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஜடேஜா அபாரமாக 6 ஓட்டத்தை விளாசித் தள்ளினார். அத்துடன் இரண்டாவது பந்தும் நோ போலாக அமைந்தது. இதனால் 5 பந்துக்கு 10 என்ற நிலையானது.

IMG_2790.jpg

எனினும் அந்த ஓவரின் 3 ஆவது பந்தில் தோனி போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற ஆட்டம் சூடுபிடித்தது.

தொடர்ந்து மிட்செல் சாண்ட்னர் இறுதிப் பந்தில் 6 ஓட்டத்தை விளாசி அணிக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

DM1L1881.jpg

இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுக்களையும், குல்கரனி, உனாட்கட், ஆர்ச்சர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

நன்றி : ஐ.பி.எல்.இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/53877

Share this post


Link to post
Share on other sites

கடைசி ஓவரை ஸ்ரோக்கை வீச கொடுத்த தலைவன் இருக்கும்வரை எதிரணிக்கு கொண்டாட்டம்தான்.

Share this post


Link to post
Share on other sites

இந்த விளையாட்டில் கண்ணாடிக்காரன்தான்( சாண்ட்னர்) ஹீரோ .......கடைசி பந்தை கடாசி கம்பிரமாய் நிக்கிறான். இன்று தோனி , ராயுடு அபாரம்......!  👍  😁

ஆனால் ராயஸ்தான் ராயல்ஸ் அற்புதமான பீல்டிங். சொல்லி வேல இல்ல.....!  👍

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, சுவைப்பிரியன் said:

கடைசி ஓவரை ஸ்ரோக்கை வீச கொடுத்த தலைவன் இருக்கும்வரை எதிரணிக்கு கொண்டாட்டம்தான்.

Stokes ஐ தவிர Kulkarni, Unadkat இருவரும் தான் வீச கூடியதாக இருந்தது. இவர்கள் இருவரையும் தோனி அடித்து துவம்சம் செய்த வரலாறு உள்ளது. தோனியும் இவர்களில் ஒருவரைத் தான் எதிர்பார்த்திருந்தார்.

ஆனால் தோனி மைதானத்திற்குள் போனது தவறு, captain cool lost his cool.

நேற்றைய போட்டியின் சம்பளத்தில் 50% தண்டப்பணம் என்பது கேலிக் கூத்து. இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் தடை கொடுத்திருக்க வேண்டும்.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • ஊரில் இருக்கும் போது குரக்கன் ஒடியல் புட்டுகள் நீத்துப்பெட்டியில் அவித்து பல நாட்களுக்கு வைத்து சாப்பிடுவோம். மதியம் சோறு சாப்பிடும் போது அல்லது இரவு உணவின் போது நீத்துப்பெட்டி உருவில் இருக்கும் புட்டை எடுத்து திருவுவலையில் தேங்காய் திருவுவது போல ஆளாளுக்கு தேவையான அளவு திருவி சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடுவோம். இதில் எனக்கு ஒடியல் புட்டு மிகவும் விரும்பி சாப்பிவேன்.மீன்கறியுடன் நல்ல சுவையாக இருக்கும். இணைப்பு நன்றி.
  • மன்னர் தற்காலிகமாக தான் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார், ஷேக் அப்துல்லாவின் ஒப்புதலோடு. பொது வாக்கெடுப்பு நடத்தி மக்களின் கருத்தை அறிந்த பின்பே நிரந்தரமாக இணைக்கப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும் என கூறினார். நேருவும் மக்களிடையே வாக்கெடுப்பு நடத்திய பின் தான் நிரந்தரமாக இணைக்கப்படும் என கூறினார். பின் அதே நேரு பொதுவாக்கெடுப்பு மேற்கொள்ளாமல் காஷ்மீரை தன்னிச்சையாக இந்தியாவுடன் இணைக்கும் வேலையில் ஈடுபட்டார். சட்டங்களையும் இந்தியாவுக்கு சார்பாக மாற்றியமைத்தார்.  நேரு ஒரு காஷ்மீர் பண்டிட் என்பதால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என கருதியவர். காஷ்மீரை இந்தியா உரிமை கோருவதற்கு காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல. பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தியா காஷ்மீரை ஏமாற்றியது, காஷ்மீர் சட்டதிட்டங்களை மாற்றியது, காஷ்மீரில் பொம்மை அரசை நிறுவியது, இந்திய இராணுவத்தின் அடாவடி போன்றன காரணமாக தான் அங்கு ஆயுதக்குழுக்கள் உருவாகின. இப்பொழுது 370 ஐ நீக்கி காஷ்மீரை இரு யூனியன் பகுதியாக பிரித்து அவற்றை இந்தியாவின் பகுதிகளாக்கி காஷ்மீருக்கு இருந்த மிச்ச சொச்ச உரிமையும் நீக்கியுள்ளது. காஷ்மீர் பண்டிட்கள் என்பவர்கள் பிராமணர்கள் என்பதால் அவர்களை இது பெரிதாக பாதிக்கப்போவதில்லை. முஸ்லிம்களை இந்தியா தொடர்ந்து கொன்று குவிக்கும். பிஜேபி ஆதரவு மனநிலையை விட்டு வெளியில் வந்து பார்த்தால் பல விடயங்கள் புரியும்.
  • Police have charged a New Zealand man with five counts of murder following the mysterious “witchcraft” deaths of a Fijian family last month. Husband and wife Nirmal Kumar, 63, and Usha Devi, 54, their daughter Nileshni Kajal, 34, and Kajal’s daughters Sana, 11, and Samara, eight, were all found dead in the Nausori Highlands in August. According to reports and police testimony, a one-year-old baby was found alive among the bodies. The case has shocked Fijians. With no visible injuries present on the bodies of the five family members, police suspected poisoning as their cause of death. The father of the two dead children told the Fiji Sun that his father-in-law, also among the deceased, was interested in witchcraft. “I never saw anyone or any family so much into witchcraft than my in-laws,” he said. “I used to see my in-laws and other witchdoctors making a doll from dough and poking needles in it. I always took my daughters away into the bedroom. My wife and daughters were obviously also dragged into it.” On Monday, three weeks after the bodies were found and after toxicology reports were ordered, police laid charges. The suspect, who has permanent residency status in New Zealand, and his wife had been questioned by police last month, with court order issued to prevent the pair leaving Fiji. He will appear in a Nadi court later on Monday charged with five murders and one attempted murder. The child found at the scene, referred to in Fijian media as the “miracle baby”, has since been released from hospital. https://www.google.com.au/amp/s/amp.theguardian.com/world/2019/sep/16/new-zealand-man-charged-over-witchcraft-deaths-that-shocked-fiji எனது அலுவலக நண்பர் ஒரு Fiji Indian .. அவர் மூலம் இந்த செய்தியை கேள்விப்பட்டேன்..  இன்னமும் இந்த மூடத்தனமான கொள்கைகளை நம்பும் மனிதர்கள் இருப்பதை நம்ப முடியவில்லை..
  • இது காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒருவர் படம். நேரடியாக இணைக்காமல் இணைப்பை தருகிறேன். பார்க்க தைரியமுள்ளவர்கள் மட்டும் சென்று பாருங்கள்.  https://mk0vinavuu9wl1kmwant.kinstacdn.com/wp-content/uploads/2016/08/kashmiri-struggle-against-indian-oppression-3.jpg  இந்திய இராணுவம் காஷ்மீரில் தங்கியிருந்து அங்குள்ள மக்களை கொல்வதும் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதும் காஷ்மீரை இந்தியா தனது மாநிலமாக்கியதும் காஷ்மீரில் இடம்பெற்ற தேர்தல்களில் குளறுபடிகள் செய்ததும் என இந்தியா தான் அங்கு பிரச்சினையே.