கிருபன்

2019 ஐ.பி.எல். ரி-20 தொடர் செய்திகள்

Recommended Posts

கொல்கத்தாவை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ராஜஸ்தான்

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

A70I1974.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 43 ஆவது லீக் போட்டி கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையே கொல்கத்தாவில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆர்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி 175 ஓட்டங்களை குவித்தது.

A70I1549.jpg

176 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து கொல்கத்தா அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

ராஜஸ்தான் அணி சார்பில் ரகானே 34 ஓட்டத்தையும், சஞ்சு சம்சன் 22 ஓட்டத்தையும், ஸ்டீபன் ஸ்மித் 2 ஓட்டத்தையும், பென் ஸ்டோக்ஸ் 11 ஓட்டத்தையும், பின்னி 11 ஓட்டத்தையும், ஸ்ரேயஸ் கேபால் 18 ஓட்டத்தையும், ரியான் பராக் 47 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் ஆடுகளத்தில் ஜெப்ர ஆர்சர் 27 ஓட்டத்துடனும், உனாட்கட் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

A70I1911.jpg

பந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் சாவ்லா 3 விக்கெட்டுக்களையும், சுனில் நரேன் 2 விக்கெட்டினையும், ரஸல் மற்றும் கிருஷ்னா தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

A70I1796.jpg

நன்றி ; ஐ.பி.எல்.இணையத்தளம்

 

 

http://www.virakesari.lk/article/54702

Share this post


Link to post
Share on other sites

மலிங்கவின் பந்து வீச்சால் 2 ஆவது முறையாகவும் மும்பையிடம் வீழ்ந்தது சென்னை

 

மலிங்கவின் சிறப்பான பந்து வீச்சினால் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 46 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

GAZI_3777.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 44 ஆவது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமானது.

0U5A1748.jpg

இந் நிலையில் இப் போட்டியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. இதனால் மும்பை அணி முதலில் முதலில் துடுப்பெடுத்தடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்கள‍ை குவித்தது.

LC7A1697.jpg

இதையடுத்து 156 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணி 17.4 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுக்களையும்  இழந்து 109  ஓட்டங்ளை மாத்திரம் பெற்று, 46 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

GAZI_3392.jpg

சென்னை அணியின் முரளி விஜய் 38 ஓட்டத்துடனும், வோட்சன் 8 ஓட்டத்துடனும் 8 ஓட்டத்துடனும், ரய்னா 2 ஓட்டத்துடனும், ராயுடு டக்கவுட் முறையிலும், கேதர் யாதவ் 6 ஓட்டத்துடனும், ஷோரி 5 ஓட்டத்துடனும், பிராவோ 20 ஓட்டத்துடனும், சஹார் டக்கவுட் முறையிலும், ஹர்பஜன் சிங் ஒரு ஓட்டத்துடனும், செண்டனர் 22 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க, இம்ரான் தாகீர் எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்காதிருந்தார்.

VRP6440.jpg

பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய மலிங்க 4 விக்கெட்டுக்களையும், குருனல் பாண்டிய மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுக்களையும், பாண்டியா, ரோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

GAZI_3706.jpg

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/54778

 

Share this post


Link to post
Share on other sites

ஐதராபாத்தை ராஜஸ்தான் 7 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது.

April 28, 2019

 

Rajasthan.jpg?resize=275%2C183

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 45 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணியினை 7 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது.நேற்றிரவு ஜெய்ப்பூரில் இரு அணிகளுக்குமிடையில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி அதன்படி ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 8 முடிவில் விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை எடுத்தது

இதனையடுத்து 161 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.1ஓவர்களின் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 161 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியுள்ளது

 

http://globaltamilnews.net/2019/119757/

Share this post


Link to post
Share on other sites

டெல்லியிடம் பணிந்தது பெங்களூரு!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 16 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

DMIPL6181__1_.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 46 ஆவது லீக் போட்டி ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ், விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடைய இன்று மாலை 4.00 மணியளவில் டெல்லியில் ஆரம்பமானது.

DMIPL5425.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, நிர்ணியிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை குவித்தது.

GAZI9780.jpg

188 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பெங்களூரு அணி 20 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால் பெங்களூரு அணி 16 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு அணி சார்பில் பார்தீவ் படேல் 39 ஓட்டத்துடனும் விராட் கோலி 23 ஓட்டத்துடனும், வில்லியர்ஸ் 13 ஓட்டத்துடனும், சிவம் டூப் 24 ஓட்டத்துடனும், கிலேசன் 3 ஓட்டத்துடனும் குர்கீரத் சிங் மன் 27 ஓட்டத்துடனும், வோசிங்டன் சுந்தர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க, ஆடுகளத்தில் ஸ்டோனிஸ் 32 ஓட்டத்துடனும், உமேஷ் யாதவ் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

DMIPL6090.jpg

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் அமித் மிஷ்ரா மற்றும் ரபாடா தலா 2 விக்கெட்டுக்களையும், இஷான் சர்மா, அக்ஸர் படேல் மற்றும் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

GAZI_5570.jpg

நன்றி ; ஐ.பி.எல். இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/54898

Share this post


Link to post
Share on other sites

கொல்கத்தாகவுக்கு சவால் விடுத்தா பாண்டியா, எனினும் வீணானது அவரின் போராட்டம்!

கொல்கத்தாகவுக்கு சவால் விடுத்தா பாண்டியா, எனினும் வீணானது அவரின் போராட்டம்!

ஹர்த்திக் பாண்டியாவின் வேகமான போராட்டம் வீணானதான் காரணமாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 34 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

RON_3956.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 47 ஆவது லீக் போட்டி ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு கொல்கத்தாகவில் ஆரம்பமானது.

A70I2250.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி வீரர்களின் அடுத்தடுத்து அதிரடியான வான வேடிக்கை காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து அதிரடியாக 232 ஓட்டங்களை குவித்தது.

RON_3683.jpg

233 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளும் 6.1 ஓவரில் 58 ஓட்டங்களுக்குள் வீழ்த்தபட்டது (டீகொக் டக்கவுட், ரோகித் சர்மா 12, லிவிஸ் 15, சூரியகுமார் யாதவ் 26).

RON_3774.jpg

எனினும் 5 ஆவது விக்கெட்டுக்காக பொல்லார்டுடன் ஜோடி சேர்ந்த பாண்டிய மைதானத்தில் தொடர்ந்தும் பட்டையைக் கிளப்ப மும்பை அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிரித்தது.

RON_3950.jpg

மைதானத்தில் தொடர்ந்தும் அதிரடிகாட்டிய பாண்டியா 17 பந்துகள‍ை எதிர்கொண்டு 7 ஆறு ஓட்டம், 2 நான்கு ஓட்டம் அடங்களாக வேகமாக அரைசதம் அடித்தார். 

இத் தொடரில் குறைந்த பந்துகளில் வேகமாக அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையையும் இன்றைய தினம் பாண்டியா பெற்றுள்ளார்.

A70I2726.jpg

எனினும் இதன் பின்னர் 13.2 ஆவது ஓவரில் சுனில் நரேனுடைய பந்து வீச்சில் பொல்லார்ட் 20 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, குருனல் பாண்டியா ஆடுகளம் நுழைந்தார்.

இருவரும் இணைந்து துடுப்பெடுத்தாடிவர மும்பை அணி 15 ஓவர்களின் நிறைவில் 140 ஓட்டங்களை பெற்றதுடன் 15.2 ஆவது ஓவரில் 150 ஓட்டங்களை கடந்தது.

ஒரு கட்டத்தில் மும்பை அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 74 என்ற நிலையும் 18 பந்துகளில் 59 என்ற நிலையும் இருந்தது.

எனினும் 18 ஆவது ஓவரை எதிர்கொண்ட ஹர்த்திக் பாண்டியா அந்த ஓவரில் இரண்டு ஆறு ஓட்டங்கள், ஒரு நான்கு ஓட்டம் என்பவற்றை விளாசித் தள்ளி அந்த ஓவரின் இறுதிப் பந்தில் மொத்தமாக 31 பந்துகளை எதிர்கொண்டு 9 ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டம் அடங்களாக 91 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க குருநல் பாண்டியா 19.4 ஓவரில் 24 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து, 198 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 34 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

ஆடுகளத்தில் பேரிண்டர் ஸ்ரான் மூன்று ஓட்டத்துடனும், ராகுல் சாஹர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் ரஸல், சுனில் நரேன் மற்றும் ஹாரி கர்னி தலா 2 விக்கெட்டுக்களையும், பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

A70I2647.jpg

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

 

 

http://www.virakesari.lk/article/54911

Share this post


Link to post
Share on other sites

வாய்ப்பினை தக்க வைத்த ஐதராபாத்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைஸர்ஸ் அணி 45 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

VRP7405.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 48 ஆவது லீக் ஆட்டம் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையில் இன்றிரவு 8.00 மணிக்கு கொல்கத்தா ராஜிவ் காந்தி மைதானத்தில் ஆரம்பமானது.

0U5A2073.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்யஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 212 ஓட்டங்களை குவித்தது.

ஐதராபாத் அணி சார்பில் டேவிட் வோர்னர் 56 பந்துகளில் 2 ஆறு ஓட்டம் 7 நான்கு ஓட்டம் அடங்களாக 81 ஓட்டத்துடனும், விர்டிமன் சஹா 28 ஓட்டத்துடனும், மனீஷ் பாண்டே 36 ஓட்டத்துடனும், மொஹமட் நபி 20 ஓட்டத்துடனும், வில்லியம்சன் 14 ஓட்டத்துடனும், ரஷித் கான் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க  விஜய் சங்கர் 7 ஓட்டத்துடனும் அபிஷேக் சர்மா 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

GAZI_6642.jpg

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் மொஹமட் ஷமி மற்றும் அஷ்வின் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷீத் சிங், முருகன் அஷ்வின் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

GAZI_6453.jpg

213 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து, 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 45 ஓட்டத்தினால் வெற்றிபெற்றது.

VRP7118.jpg

பஞ்சாப் அணி சார்பில் ராகுல் 59 பந்துகளில் 5 ஆறு ஓட்டம், 4 நான்கு ஓட்டம் அடங்களாக 79 ஓட்டத்துடனும், கிறிஸ் கெய்ல் 4 ஓட்டத்துடனும், அகர்வால் 27 ஓட்டத்துடனும், நிக்கோலஷ் பூரண் 21, டேவிட் மில்லர் 11 ஓட்டத்துடனும், சிம்ரன் சிங் 16 ஓட்டத்துடனும், அஷ்வின் மற்றும் முஜிபுர் ரஹ்மான் டக்கவுட் முறையிலும் ஆட்டமிழக்க மெஹமட் ஷமி, முருகன் அஷ்வின் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தனர்.

VRP6950.jpg

பந்து வீச்சில் ஐதராபாத்  அணி சார்பில் கலில் அஹமட் மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளையும், சண்டீப் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இந்த வெற்றி மூலம் பிளே ஒப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஐதராபாத் அணி தக்க வைத்துள்ளது.

LC7A2155.jpg

அத்துடன் டேவிட் வோர்னர் இந்தப் போட்டியுடன் நாடு திரும்பவுள்மையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

http://www.virakesari.lk/article/54985

Share this post


Link to post
Share on other sites

முடிவின்றி கைவிடப்பட்டது 49 ஆவது போட்டி

 

பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி எதுவித முடிவுகளுமின்றி கைவிடப்பட்டுள்ளது.

DQ0Q3693.jpg

12 ஆவது லீக் போட்டியின் 49 ஆவது லீக் ஆட்டம் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆரம்பமாவிருந்தது.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய பெங்களூரு அணி மட்டுப்படுத்தப்பட்ட 5 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 62 ஓட்டங்கள‍ை குவித்தது.

A70I3070.jpg

63 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ராஜஸ்தான் அணியினர் முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களை பெற்றனர் (சஞ்சு சம்சன் - 10, லியாம் லிங்ஸ்டன் - 0).

இரணடாவது ஓவருக்காக மொஹமட் ஷமி பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரை எதிர்கொண்ட லிங்ஸ்டன் முதல் பந்தில் 4 ஓட்டத்தையும், அடுத்த பந்தில் 6 ஓட்டத்தையும் விளாசித் தள்ளியதுடன் அந்த ஓவரில் மொத்தமாக 12 ஓட்டம் பெறப்பட்டது.

RON_4488.jpg

இதையடுத்து ராஜஸ்தான் அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களை குவித்ததுடன் வெற்றிக்கு 12 பந்துகளில் 23 ஓட்டம் என்ற நிலையிருந்தது. 

இந் நிலையில் 3.2 ஆவது ஓவரில் சஞ்சு சம்சன் சஹாலுடைய பந்து வீச்சில் 28 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க ராஜஸ்தான் அணியின் முதல் விக்கெட் 41 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட, மீண்டும் மழை குறுக்கிட்டது.

A70I2969.jpg

இதையடுத்து போட்டியானது எதுவித முடிவுகளுமின்றி கைவிடப்பட்டது.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/55070

Share this post


Link to post
Share on other sites

டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடம்

டெல்லி அணியினை 80 ஓட்டங்களினால் வீத்திய சென்னை அணி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

A70I3603__1_.jpg

12 ஆவது ஐ.பி.எல்.லின் 50 ஆது லீக் ஆட்டம் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமானது.

A70I3276.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 179 ஓட்டங்களை குவித்தது.

A70I3558.jpg

179 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி சென்னையின் சுழலில் சிக்கி, 16.2 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால் டெல்லி அணி 80 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

டெல்லி அணி சார்பில் பிரித்வி ஷா 4 ஓட்டத்துடனும், தவான் 19 ஓட்டத்துடனும், ஸ்ரேயஸ் அய்யர் 44 ஓட்டத்துடனும், ரிஷாத் பந்த் 5 ஓட்டத்துடனும், கொலிங் இங்ரம் ஒரு ஓட்டத்துடனும், அக்ஸர் படேல் 9 ஓட்டத்துடனும், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 2 ஓட்டத்துடனும், கிறிஸ் மோரிஸ் டக்கவுட் முறையிலும், ஜகதீஷா சுசித் 6 ஓட்டத்துடனும், அமித் மிஷ்ரா 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க டிரெண்ட் போல்ட் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

A70I3721.jpg

பந்து வீச்சில் சென்னை அணி சார்பில்  இம்ரான் தாகீர் 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் மற்றும் தீபக் சாஹர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

RON_5404.jpg

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 18 புள்ளிகளுடன் மீண்டும் பட்டியலில் முதல் இடத்தைப்பிடித்துள்ளது.

SA-i-KAT83072.jpg

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/55154

Share this post


Link to post
Share on other sites

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சூப்பர் ஓவரில் மூன்றாவது பந்தில் வெற்றி!

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

VRP8150.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரில் 51 ஆவது லீக் ஆட்டம் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமானது.

IMG_9776.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது.

163 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஐதராபாத் அணியும் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை குவித்தது.

SA-i-KAT85064.jpg

ஐதராபாத் அணி சார்பில் விரிடிமன் ஷா 25 ஓட்டத்துடனும், குப்டீல் 15 ஓட்டத்துடனும், கேன் வில்லியம்சன் 3 ஓட்டத்துடனும், விஜய் சங்கர் 12 ஓட்டத்துடனும் அபிஷேக் சர்மா 2 ஓட்டத்துடனும், மொஹமட் நபி 31 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், மணீஷ் பாண்டே 71 ஓட்டத்துடனும், ரஷித் கான் எதுவித ஓட்டமின்றியும் ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

GAZI_7997.jpg

பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் பும்ரா மற்றும் குர்னல் பாண்டியா, ஹர்த்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

VRP7917.jpg

போட்டி சமநிலையில் முடிவடைந்தமையினால் இதையடுத்து சூப்பர் ஓவர் வழங்கப்படட முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

சூப்பர் ஓவரில் 9 ஓட்டங்களை நோக்கிக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணி மூன்று பந்துகளை எதிர்கொண்டு வெற்றியிலக்கை கடந்தது (பாண்டியா -7, பொல்லார்ட் - 2)

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/55209

 

Share this post


Link to post
Share on other sites

கொல்கத்தாவிடம் வீழ்ந்தது பஞ்சாப்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

DMIPL7394.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 52 ஆவது லீக் போட்டி கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு மொஹாலியில் ஆரம்பமானது.

DMIPL6648.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய, பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை குவித்தது.

184 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து பஞ்சாப் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

கொல்கத்தா அணி சார்பில் கிறிஸ் லின் 46 ஓட்டத்துடனும், உத்தப்பா 22 ஓட்டத்துடனும், ரஸல் 24 ஓட்டத்துடனும் அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 65 ஓட்டத்துடனும், அணித் தலைவர் தினேஷ் கார்திக் 21 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

3K1L2146.jpg

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் மொஹமட் ஷமி, ஆண்ரு டை மற்றும் அஷ்வின் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

9S6A5982.jpg

நன்றி : ஐ.பி.எல்.இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/55275

 

Share this post


Link to post
Share on other sites

தோல்வியுடன் வெளியேறியது ராஜஸ்தான்!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

DMIPL8617.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 53 ஆவது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே இன்று மாலை 4.00 மணிக்கு டெல்லியில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்ககப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

DMIPL8150.jpg

அந்த அணி சார்பில் ரியான் பராக் மாத்திரம் 50 ஓட்டங்களை எடுத்ததுடன் ஏனைய வீரர்கள் சொப்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் இஷான் சர்மா மற்றும் அமித் மிஷ்ரா தலா 3 விக்கெட்டுக்களையும், டிரென்ட் பொல்ட் 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

DMIPL8129.jpg

116 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த டெல்லி அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை எடுத்து, ராஜஸ்தான் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

9S6A7096.jpg

டெல்லி அணி சார்பில் பிரித்வி ஷா 8 ஓட்டத்துடனும், தவான் 16 ஓட்டத்துடனும், ஸ்ரேஸ் அய்யர் 15 ஓட்டத்துடனும், கொலின் இங்ரம் 12 ஓட்டத்துடனும், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 11 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் ரிஷாத் பந்த் 53 ஓட்டத்துடனும், அக்ஸர் படேல் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் இஷ் சோதி 3 விக்கெட்டுக்களையும், ஸ்ரேயஸ் கோபால் 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

DMIPL8464.jpg

நன்றி : ஐ.பி.எல்.இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/55293

Share this post


Link to post
Share on other sites

ஆட்டங்களை முடித்து வெளியேறியது பெங்களூரு, ஐதராபாத்

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றிபெற்றுள்ளது.

GAZI0961.jpg

12 ஆவது ஐ.பி.எல். போட்டியின் 54 ஆவது லீக் ஆட்டம் பெங்ளூரு ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே நேற்று இரவு 8.00 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

0U5A2519A.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூரு அணித் தலைவர் விராட் கோலி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து, 175 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணியில் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மாத்திரம் அதிகபடியாக 70 ஓட்டங்களை குவித்தார்.

A70I4115.jpg

176 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டினை இழந்த நிலையில் 178 ஓட்டங்கள‍ை குவித்து, வெற்றியிலக்கை கடந்தது.

பெங்களூரு அணி சார்பில் சிம்ரன் ஹெட்மேயர் 75 ஓட்டங்களையும், குர்கீரத் சிங் மன் 65 ஓட்டங்களையும் அதிபடியாக எடுத்தனர்.

A70I4433.jpg

பந்து வீச்சில் ஐதராபாத் அணி சார்பில் கலில் அஹமட் 3 விக்கெட்டுக்களையும், புவனேஸ்வர்குமார் 2 விக்கெட்டுக்களையும், ரஷித் கான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

A70I4525.jpg

இந்த தோல்வியின் மூலம் ஐதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பினை இழந்து, வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

LC7A2846.jpg

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/55312

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

ராகுலின் அதிரடியுடன் விடைபெற்றது பஞ்சாப்

ராகுலின் அதிரடியான துடுப்பாட்டம் காரணமாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

9S6A8420.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 55 ஆவது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய, சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 170 ஓட்டங்களை குவித்தது.

DMIPL9527.jpg

171 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பஞ்சாப் அணிக்கு கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் நல்லதொரு ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

அதனால் பஞ்சாப் அணி நான்கு ஓவர்களில் 57 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், அதிரடிகாட்டிய ராகுல் 4.1 ஆவது பந்தில் ஆறு ஓட்டத்தை விளாசித் தள்ளி மொத்தமாக 19 பந்துகளில் அரைசதம் கடந்தார். 

இதேவேளை இந்த ஓவரில் ராகுல் தொடர்ந்தும் அதிரடிகட்டா மொத்தமாக அந்த ஓவரலி மாத்திரம் 24 ஓட்டங்கள் பெறப்பட்டதுடன் (4 4 4 6 0 6), 10 ஆவது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 106 ஓட்டங்களை குவித்தது.

9S6A8574.jpg

ராகுல் 70 ஓட்டத்துடனும், கெய்ல் 27 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். இந் நிலையில் 11 ஆவது ஓவருக்காக ஹர்பஜன் சிங் பந்துப் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரின் 3 ஆவது பந்தில் ராகுல் 78 ஓட்டத்துடனும், 3 ஆவது பந்தில் கிறிஸ் கெய்ல் 28 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதுமாத்திரமன்றி அடுத்து களமிறங்கிய மயன்க் அகர்வாலும் 12.2 ஆவது ஓவரில் ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சில் 7 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி 118 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

4 ஆவது விக்கெட்டுக்காக நிக்கோலஸ் பூரண் மற்றும் மண்டீப் சிங் ஜோடி சேர்ந்தாட பஞ்சாப் அணி 15 ஓவரில் 151 ஓட்டங்களை எடுத்தது.

தொடர்ந்தும் நிக்கோலஷ் பூரண் மைதானத்தில் அதிரடி காட பஞ்சாப் அணி ஓவரில் 3 விக்கெட்டினை மாத்திரம் இழந்து சென்னை அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்ததுடன் அதிரடியான துடுப்பெட்டாத்தை வெளிப்படுத்திய நிக்கோலஷ் பூரண் 16.2 ஆவது ஓவரில் 36 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து சாம் கர்ரன் மற்றும் மண்டீப் சிங் ஜோடி சேர்ந்தாட பஞ்சாப் அணி 18 ஓவரில் சென்னை அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது. மண்டீப் சிங் 11 ஓட்டத்துடனும், சாம் கர்ரன் 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுக்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார். 

DMIPL9954.jpg

நன்றி : ஐ.பி.எல்.இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/55348

 

Edited by கிருபன்

Share this post


Link to post
Share on other sites

வெளியேறியது கொல்கத்தா, பிளேஒப்க்குள் நுழைந்தது ஐதராபாத்

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

VRP8578.jpg

12 ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதி லீக் போட்டி (56) ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் வெற்றிபெற்ற மும்ப‍ை அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களை குவித்தது.

134 என்ற வெற்றியில்க்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணி 16.1 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து கொல்கத்தா அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது.

மும்பை அணி சார்பில் டீகொக் 30 ஓட்டத்துடன் ஆட்டமிழந்ததுடன், ரோகித் சர்மா 55 ஓட்டத்துடனும், சூரியகுமார் யாதவ் 46 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

VRP8643.jpg

மும்பை அணி சார்பில் பந்து வீச்சில் பிரசாத் கிருஷ்ணா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார். 

அத்துடன் இந்த தோல்வியன் மூலம் கொல்கத்தா அணி பிளேஒப் சுற்றுக்கான வாய்ப்பினை இழந்ததுடன், அதிர்ஷ்டவசமாக சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணி நான்காவது அணியாக பிளேஒப் சுற்றுக்கு முன்னேற்றியுள்ளது.

 

http://www.virakesari.lk/article/55362

Share this post


Link to post
Share on other sites

large.701443B7-FA24-4EC3-84B5-4F89696839

ஐதராபாத்துக்கு அடித்தது அதிர்ஷ்டம் - பிளேஒப் சுற்று நாளை ஆரம்பம்!

 

ஐ.பி.எல். தொடரின் அனைத்து லீக் போட்டிகளும் முடிவடைந்துள்ள நிலையில், நாளையதினம் பிளேஒப் சுற்றுக்கான போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

IPL-Trophy__2_.jpg

8 அணிகள் கலந்துகொண்ட 12 ஆவது ஐ.பி.எல். தொடரானது கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமானது. இதில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் வெளியேறிய நிலையில், பிளேஒப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் நுழைந்தன.

இந் நிலையில் நேற்று இரவு 8.00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற 56 ஆவது லீக் போட்டி முக்கியமானதொரு ஆட்டமாக இருந்தது. இந்த வெற்றியின் மூலம்தான் பிளேஒப் சுற்றுக்கு நுழையப் போகும் நான்காவது அணி எது என்ற கேள்வி இருந்தது.

இப் போட்டியில் ஏற்கனேவ பிளேஒப் சுற்றுக்கு நுழைந்த மும்பை இந்தியன்ஸ் அணியும், பிளேஒப் சுற்றுக்கு நுழைவதற்கான கனவுடன் கொல்கத்தா அணியும் ஒன்றை ஒன்று எதிர்த்தாடின. இப் போட்டியில் கொல்கத்தா அணியின் வீரர்கள் சொதப்பிய காரணத்தினால் மும்பை அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றது.

லீக் சுற்று முடிவில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன. இருப்பினும் ஓட்ட வீதத்தில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் அதிர்ஷ்டவசமாக ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி (ரன்ரேட் +0.577) நான்காவது அணியாக ‘பிளேஒப்’ சுற்றுக்குள் நுழைந்தது. 

ஐ.பி.எல். வரலாற்றில் 12 புள்ளியுடன் ஒரு அணி அடுத்த சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். அது மட்டுமின்றி புள்ளி பட்டியலில் 4 முதல் 8 ஆவது இடங்களை வகிக்கும் அணிகளுக்கு இடையே வெறும் ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசம் இருப்பது இன்னொரு ஆச்சரியமாகும்.

ipls.JPG

அதன்படி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ், ஐதராபாத்  ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளேஒப்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சென்னை - மும்பை

0U5A7760.jpg

நாளைய தினம் இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள பிளேஒப் சுற்றின் முதலாவது போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணி இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

டெல்லி - ஐதராபாத்

0U5A9430.jpg

எதிர்வரும் 8 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் இடம்பெறும் பிளேஒப் சுற்றின் இரண்டாவது போட்டியில் மூன்றாவது, நான்காவது இடங்களை பெற்ற டெல்லி-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதில் தோல்வியடையும் அணி வெளியேறும். வெற்றி அடையும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வியடைந்த அணியுடன் இரண்டாவது தகுதி சுற்றில் 10 ஆம் திகதி சந்திக்கும். 

அத்துடன் இறுதிப் போட்டி 12 ஆம் திகதி ஐதராபாத்தில் இடம்பெறவுள்ளது.

நன்றி : ஐ.பி.எல்.இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/55375

Share this post


Link to post
Share on other sites

சென்னை சொதப்பல்: மும்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி

Chennai-vs-Mumbai-ipl-2019-first-Play-off-match-6-700x450.jpg

நடைபெற்றுவரும் 12ஆவது ஐ.பி.எல். தொடரின் முதல் பிளே ஓஃப் சுற்றுப் போட்டியில் மும்பை அணி 6 விக்கெட்டுகளால் சென்னை அணியை வென்றுள்ளது.

இதன் மூலம் மும்பை அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

சென்னை, சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி மும்பை அணியின் பந்துவீச்சுக்கு தடுமாறியது.

இந்நிலையில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது.

சென்னை அணி சார்பாக அம்பதி ராயுடு ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும், அணித்தலைவர் டோனி ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, குருணல் பாண்டியா மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், பதிலுக்கு 132 ஓட்டங்களை வெற்றியிலக்காக்கக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி யாதவ்வின் அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றியை பதிவுசெய்தது.

அந்தவகையில், மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலங்கை அடைந்தது. இதன்மூலம் 6 விக்கெட்டுகளால் மும்பை அணி வெற்றிபெற்றது.

மும்பை அணி சார்பாக, யாதவ் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், இம்ரான் தாகிர் 2 விக்கெட்டுகளையும், தீபக் சாகர் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

 

http://athavannews.com/சென்னை-சொதப்பல்-மும்பை-இ/

 

 

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, கிருபன் said:

சென்னை சொதப்பல்: மும்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி

Chennai-vs-Mumbai-ipl-2019-first-Play-off-match-6-700x450.jpg

நடைபெற்றுவரும் 12ஆவது ஐ.பி.எல். தொடரின் முதல் பிளே ஓஃப் சுற்றுப் போட்டியில் மும்பை அணி 6 விக்கெட்டுகளால் சென்னை அணியை வென்றுள்ளது.

இதன் மூலம் மும்பை அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.

சென்னை, சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி மும்பை அணியின் பந்துவீச்சுக்கு தடுமாறியது.

இந்நிலையில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது.

சென்னை அணி சார்பாக அம்பதி ராயுடு ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களையும், அணித்தலைவர் டோனி ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, குருணல் பாண்டியா மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், பதிலுக்கு 132 ஓட்டங்களை வெற்றியிலக்காக்கக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி யாதவ்வின் அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றியை பதிவுசெய்தது.

அந்தவகையில், மும்பை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலங்கை அடைந்தது. இதன்மூலம் 6 விக்கெட்டுகளால் மும்பை அணி வெற்றிபெற்றது.

மும்பை அணி சார்பாக, யாதவ் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், இம்ரான் தாகிர் 2 விக்கெட்டுகளையும், தீபக் சாகர் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

 

http://athavannews.com/சென்னை-சொதப்பல்-மும்பை-இ/

 

 

IPL இல்இ துவரை ஒரே அணியிடம் (MI) அதிக தடவை தோல்வியுற்ற அணி (CSK) என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டது.

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, MEERA said:

IPL இல்இ துவரை ஒரே அணியிடம் (MI) அதிக தடவை தோல்வியுற்ற அணி (CSK) என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டது.

இப்பவும் CSK வெல்லும் என்று நினைத்தால் பிழைப்பில் மண்தான்! நான் MI ஆதரவாளனும் இல்லை. KKR இல்லாததால் DC தான் எனது தற்போதைய தெரிவு😀

Share this post


Link to post
Share on other sites

டெல்லி உள்ளே ஐதராபாத் வெளியே!

ஐதராபாத் அணியை வீழ்த்திய டெல்லி அணி இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

DMIPL12791.jpg

விசாகப்பட்டினத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆர்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணி 162 ஓட்டங்களை குவித்தது.

163 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த டெல்லி அணி 19.5 ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து ஐதராபாத் அணியின் வெற்றியிலக்கை கடந்தது.

VRP9799.jpg

டெல்லி அணி சார்பில் பிரித்வி ஷா 56 ஓட்டத்தையும், தவான் 17 ஓட்டத்தையும், அணித் தலைவர் ஸ்ரேயஸ் அய்யர் 8 ஓட்டத்தையும், முன்ரோ 14 ஓட்டத்தையும், அக்ஸர் படேல் டக்கவுட் முறையிலும், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 8 ஓட்டத்துடனும் ரிஷாத் பந்த் 21 பந்துகளில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 49 ஓட்டத்துடனும், அமித் மிஷ்ரா ஒரு ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன் ஆடுகளத்தில் கீமோ பவுல் 5 ஓட்டத்துடனும் ட்ரண்ட் பொல்ட் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

4K1L0120.jpg

ஐதராபாத் அணி சார்பில் பந்து வீச்சில் ரஷித் கான், புவனேஸ்வர்குமார் மற்றும் கலில் அஹமட் 2 விக்கெட்டுக்களையும், தீபக்ஹுடா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

VRP9723.jpg

இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றதன்  மூலம் டெல்லி அணி எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில், முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/55569

Share this post


Link to post
Share on other sites
23 minutes ago, கிருபன் said:

இப்பவும் CSK வெல்லும் என்று நினைத்தால் பிழைப்பில் மண்தான்! நான் MI ஆதரவாளனும் இல்லை. KKR இல்லாததால் DC தான் எனது தற்போதைய தெரிவு😀

நான் எப்பவும் மும்பை அணிதான், என்ன இவர் மீராவுக்காக கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது......!  😋

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, suvy said:

நான் எப்பவும் மும்பை அணிதான், என்ன இவர் மீராவுக்காக கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது......!  😋

மும்பை, சென்னை எல்லோரையும் ரிஷாத் பந்த் பந்தாடிவிடுவார்!  நீங்கள் அடக்கி வாசித்தாலும் மீரா முஷ்டியை உயர்த்தினாலும் மும்பையோ சென்னையோ வெல்லப்போவதில்லை😂🤣

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, கிருபன் said:

இப்பவும் CSK வெல்லும் என்று நினைத்தால் பிழைப்பில் மண்தான்! நான் MI ஆதரவாளனும் இல்லை. KKR இல்லாததால் DC தான் எனது தற்போதைய தெரிவு😀

MI இடம் 3 தோல்வியும் DC இடம் 2 வெற்றிகள் இதுவரை. T20 இல் எதுவும் நடக்கலாம்.

 

9 hours ago, கிருபன் said:

மும்பை, சென்னை எல்லோரையும் ரிஷாத் பந்த் பந்தாடிவிடுவார்!  நீங்கள் அடக்கி வாசித்தாலும் மீரா முஷ்டியை உயர்த்தினாலும் மும்பையோ சென்னையோ வெல்லப்போவதில்லை😂🤣

பந்திற்கு அனுபவம் போதாது, நேற்றைய அவரது ஆட்டமிழப்பே அதற்கு சான்று. 

Share this post


Link to post
Share on other sites

எப்படி KKR தனி ஒருவரில் தங்கியிருந்ததோ அதே போல் CSK உம்.

இனி CSK இல் செய்வதற்கு ஒன்றும் இல்லை.

Watson, Rayudu, Kedar, Raina ஆகியவர்களுக்கான மாற்றீடு இல்லை. துடுப்பபாட்டத்தில் மட்டுமல்ல களத்தடுப்பிலும் இவர்கள் சொதப்பல்.

அதேபோல் பந்து வீச்சிலும் கெட்டித்தனம் இல்லை.

ஒரே அணியைக் கொண்டு எல்லா களத்திலும் ஜெயிப்பது தொடர்ந்து நடைபெறாது.

Share this post


Link to post
Share on other sites

இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்டவர்களுக்கு எனது ஆதரவு என்ட முறையில் பஞ்சாப்பில் தொடங்கி இப்ப டெல்லியில் வந்து நிக்குது.பார்பம்.

2 hours ago, MEERA said:

 

 

பந்திற்கு அனுபவம் போதாது, நேற்றைய அவரது ஆட்டமிழப்பே அதற்கு சான்று. 

ஆம் உண்மைதான்.என்னுடன் மட்ச் பாத்துக் கொன்டிருந்தவருக்கு சொன்னன் அடுத்த பந்து 6 அல்லது அவுட் என்டு.
ஆனாலும் பையனுக்கு பிரகாசமான எதிர் காலம் உண்டு.

Share this post


Link to post
Share on other sites

டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை!

 

டெல்லி அணியை  6 விக்கெட்டுக்களினால் வீழ்த்திய சென்னை அணி இறுதிப் போட்டியில் மும்பை அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

VRP0275.jpg

12 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டிணத்தில் 2 ஆவது சுற்று வெளியேற்றல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 147 ஓட்டங்களை குவத்தது.

148 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணிக்கு ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய வோட்சன் மற்றும் டூப்பிளஸ்ஸி நல்லதொரு ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

அதன்படி முதலில் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை அணி முதல் 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்களை குவித்தது, அதனையடுத்து டூப்பிளஸ்ஸி அதிரடிகாட்ட சென்னை அணி 7.1 ஓவரில் 50 ஓட்டங்களை கடந்ததுடன், டூப்பளஸ்ஸியும் 9.3 ஆவது ஓவரில் மொத்தமாக 37 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்கைள பெற்றார்.

VRP0267.jpg

எனினும் அவர் 10.1 ஆவது ஓவரில் டிரெண்ட் போல்டின் பந்து வீச்சில் கீமோபவுலிடம் பிடிகொடுத்து 50 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரய்னாவுடன் கைகோர்த்த வோட்சன் அதிரயான ஆட்டத்தை ஆரம்பிகஙக 11.5 ஆவ ஓவரில் ஒரு ஆறு ஓட்டத்தை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஐ கடந்தது. அது மாத்தரமன்றி அந்த ஓவரின் இறுதிப் பந்தில் மேலும் ஒரு ஆறு ஓட்டத்தை பெற அவர் மொத்தமாக 31 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

இருப்பினும் அவர் 12.2 ஆவது பந்து வீச்சில் வோட்சன் 50 ஓட்டத்துடனே ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் சென்னை அணி 109 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்தது.

DMIPL14049.jpg

மூன்றாவது விக்கெட்டுக்காக ரய்னா மற்றும் ராயுடு துடுப்பெடுத்தாடிவர சென்னை அணி 15 ஓவரில் 119 ஓட்டங்களை குவிக்க 15.6 ஆவது ஓவரில் ரய்னா 11 ஓட்டத்துடன் அக்ஸர் படேலின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார் (127-3).

அதையடுத்து தோனி களமிறங்கி துடுப்பெடுத்தாடிவர வெற்றிக்கு இரண்டு ஓட்டங்கள் மாத்திரமே தேவை என்ற நிலையிருக்க 18.4 ஆவது ஓவரில் இஷான் சர்மாவின் பந்து வீச்சில் 9 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து பிராவோ களமிறங்கி துடுப்பெடுத்தாட சென்னை அணி 19 ஆவது ஓவரில் டெல்லி அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது. ஆடுகளத்தில் ராயுடு 20 ஓட்டத்துடனும், பிராவோ 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

நன்றி : ஐ.பி.எல்.இணையத்தளம்

 

http://www.virakesari.lk/article/55713

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • புதிய ஜனாதிபதிக்கு எமது வாழ்த்துகள் மக்களின் ஆணையின் பிரகாரமே நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் அதேவேளை, தமிழ் மக்கள் தமது கொள்கையில் உறுதியாக உள்ளனர் என்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன. அரசியல் ரீதியாக ஸ்திரமான நிலைமை ஏற்பட்டது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே உள்ளோமென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தெரிவு தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் ஆணையின் பிரகாரமே நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். என்றாலும், இனவிடுதலைத் தொடர்பில் தமிழ் மக்கள் உறுதியாகவுள்ளனர். அதனையே தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன. ஸ்திரமான அரசியல் சூழல் மற்றும் அவரது கொள்கைகள் தொடர்பில் தெளிவான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டதும் நாம் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே உள்ளோம் என்றார். சுப்பிரமணியம் நிஷாந்தன் https://www.thinakaran.lk/2019/11/18/உள்நாடு/44029/இனப்-பிரச்சினை-தீர்வு-தொடர்பில்-பேச்சு-நடத்த-தயாராகவே-உள்ளோம்
    • ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியை ஈட்டியிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. 69,24,255 வாக்குகளைப் பெற்றுள்ள அவருக்கு, 52.25 சதவீத பெருவெற்றி கிடைத்திருக்கிறது. அநுராதபுரத்திலுள்ள வரலாற்றுப் பெருமை மிக்க புனிதத் தலமான ருவான் வெலிசயவில் வைத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியாக இன்று திங்கட்கிழமை பதவியேற்றுக் கொள்கின்றார் கோட்டாபய ராஜபக்ஷ. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச இத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளார். சஜித் பிரேமதாசவுக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 55,64,239 ஆகும். இத்தேர்தலில் 41.99 சதவீத வாக்குகளே அவருக்குக் கிடைத்துள்ளன. நீதியாகவும் நேர்மையாகவும், எதுவித மோசடிகள் இன்றியும் நடைபெற்றுள்ள இத்தேர்தலில் ஜனநாயக ரீதியிலான தீர்ப்பை நாட்டு மக்கள் வழங்கியிருக்கின்றனர். நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்ற இத்தேர்தலின் முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக தோல்வியைத் தழுவிய சஜித் பிரேமதாச நேற்றுக் காலையே உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டார். அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார் அவர். மக்கள் ஆணையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக அவர் அறிவித்திருப்பது இலங்கையில் நிலவுகின்ற ஜனநாயக அரசியல் பண்பின் அடையாளமாகும். அதேசமயம், ஜனாதிபதித் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டதில் இருந்து இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் சிறப்பான அரசியல் பண்பு ஒன்று கடைப்பிடிக்கப்பட்டதை இவ்விடத்தில் குறிப்பிடாமலிருக்க முடியாது. அவ்விருவரின் தேர்தல் பிரசாரங்களிலும் ஒருவரையொருவர் தனிப்பட்ட ரீதியில் தாக்குகின்ற வார்த்தைப் பிரயோகங்கள் எதுவுமே இடம்பெற்றிருக்காதது சிறப்பான அம்சமாகும். இவ்விருவரும் தத்தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டபடி எதிர்காலத்தில் முன்னெடுக்கப் போகின்ற திட்டங்களை மட்டுமே மக்கள் முன்னிலையில் வலியுறுத்திப் பேசினரே தவிர, ஒருவர் மீது மற்றொருவர் சேறு பூசும் வகையிலான வார்த்தைகளைப் பிரயோகித்ததைக் காண முடியவில்லை. இது ஜனநாயக அரசியலில் நாகரிக வெளிப்பாடாகும். இத்தேர்தலின் முடிவானது ஜனநாயக பாரம்பரியத்தில் ஊறிப் போன இலங்கையின் மக்கள் அளித்துள்ள தீர்க்கமான தீர்ப்பாகும். நாட்டின் எதிர்கால சுபிட்சத்தைக் கவனத்தில் கொண்டு மக்கள் இவ்வாறான ஆணையொன்றை வழங்கியுள்ளனர். அந்த ஆணையை ஏற்று நாட்டை வழிநடத்த வேண்டிய மிகப் பாரிய பொறுப்பு புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை புதிய ஜனாதிபதி சீரான முறையில் முன்னெடுப்பாரென்பதில் எதுவித சந்தேகமும் இருக்கப் போவதில்லை. இத்தேர்தலில் நாட்டின் பெரும்பான்மை இனத்தவரான சிங்கள மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மிகக் கூடுதலான ஆதரவை வழங்கியுள்ளனர். பொதுஜன பெரமுன வேட்பாளர் மீதான பெரும் ஆதரவு அலை என்றும் அதனைக் கூறலாம். புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மாத்திரமன்றி அவர் சார்ந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் கிடைத்த வெற்றியாகவே இத்தேர்தலின் பெறுபேற்றைக் கருத முடியும். அதேசமயம், நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்து கூடுதலான ஆதரவு எதிர் வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கே அளிக்கப்பட்டிருப்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படையாகவே புலப்படுத்துகின்றன. ஜனநாயக ஆட்சிமுறை நிலவுகின்ற நாடொன்றை எடுத்துக் கொள்வோமானால் ஒருவரின் அரசியல் கொள்கையென்பது அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பாகும். வாக்குரிமையைக் கொண்டுள்ள ஒவ்வொரு குடிமகனும், தனக்குரிய வேட்பாளருக்கு ஆதரவாக அவ்வாக்குரிமையைப் பயன்படுத்தும் உரிமையைக் கொண்டிருக்கின்றான். அது அவனது அரசியல் அபிலாஷையும் உரிமையும் ஆகும். ஆனால், இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்களும் ஒரே தேசத்தின் குடிமக்களாவர் என்பதை மறந்து விடலாகாது. அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைத்து மக்களுமே சமமாக நோக்கப்படுவரென்ற உறுதியை புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நேற்றைய உரை தெளிவாக எடுத்துக் காட்டுவது பாராட்டத்தக்க அம்சமாகும். “எனக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கும், எனக்கு எதிராக வாக்களித்த மக்களுக்கும் ஜனாதிபதியாகவிருந்து சிறப்பாகப் பணியாற்றுவேன்” என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் நேற்றுப் பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் உரையாற்றுகையில் குறிப்பிட்டிருந்தார் கோட்டாபய ராஜபக்ஷ. இக்கூற்றையும் சிறப்பான அரசியல் பண்பாகவே நோக்க வேண்டியுள்ளது. இலங்கையில் காலனித்துவ ஆட்சிக்குப் பின்னரான அரசியல் வரலாற்றில் பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பமொன்றில் இருந்து வந்தவர் கோட்டாபய ராஜக்ஷ. இலங்கை இராணுவத்தில் அதிகாரியாகவும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்த அவர், பாரம்பரிய அரசியல் பின்புலத்தைக் கொண்டவர். ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான அமரர் டி. ஏ. ராஜபக்ஷவின் புதல்வரான அவர், அரசியல் அனுபவங்களில் ஊறித் திளைத்தவர். எனவே, நீண்ட கால அரசியல் அனுபவத்தைக் கொண்டவராக அவர் விளங்குகின்றார். எமது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில், அவர் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கிறார். பொருளாதாரம், இனப்பிரச்சினைத் தீர்வு, வேலைவாய்ப்பின்மை, தேசிய பாதுகாப்பு, அடிப்படைவாதம் என்றெல்லாம் சிக்கல் மிகுந்த பெரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பை கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுள்ளார். இவை அத்தனைக்கும் மேலாக நாட்டில் வாழும் இனங்களுக்கிடையே நிரந்தர ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழிவகைகளும் காணப்படவேண்டும். புகழ்பூத்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவிக் கலத்தில் இவற்றுக்கெல்லாம் சுமுகமான தீர்வைக் கண்டு, சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதே எமது விருப்பம். ஜனாதிபதி கோட்டாபயவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! https://www.thinakaran.lk/2019/11/18/ஆசிரியர்-தலைப்பு/44017/ஜனநாயகத்தின்-தீர்ப்பு
    • Monday, November 18, 2019 - 6:00am தேர்தல் விஞ்ஞாபனங்களில் தெரிவித்த விடயங்களை செயற்படுத்த புதிய ஜனாதிபதியும் தோல்வியடைந்த வேட்பாளர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று கேட்டுக் கொண்டார். காணாமலாக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை நடத்த புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார். 2019 ஜனாதிபதி தேர்தல் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளை அறிவிக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது. இதில் சகல வேட்பாளர்களும் கலந்து கொண்டதோடு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து உரையாற்றிய அவர், தேர்தலை நீதியாகவும் அமைதி யாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வேட்பாளர்கள்,கட்சி செயலாளர்கள்,ஆதரவாளர்கள் பொலிஸார் உட்பட சகல தரப்பினருக்கும் எமது நன்றியை தெரிவிக்கிறோம். போஸ்டர், கட்அவுட் இன்றி ஆரம்பமுதல் ஒத்துழைப்பு வழங்கியதற்கும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். தேர்தல் காலத்தில் நாம் சில துறைகளில் தோல்வியடைந் தோம். அரச தனியார் ஊடகங்களில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாமல் போனது. அரச ஊடகங்களை கட்டுப்படுத்த சட்ட ரீதியான ஏற்பாடுகள் உள்ள போதும் தனியார் துறைக்கு எதுவும் கிடையாது. ஒரு அரச ஊடகமும் சில தனியார் ஊடகங்களும் கட்டுப்பாடின்றி செயற்பட்டன. தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆணைக்குழுவிற்கு அதிகாரம் கிடையாது. சட்டவிரோதமாக செயற்பட்ட அரச நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் ஊடகங்கள் தொடர்பில் சட்டரீதியான ஏற்பாடுகள் அவசியம். அல்லது அவை தாம் எந்த கட்சி சார்பில் செயற்படுவதாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். வெளிப்படையாக தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட மற்றும் அரச சொத்துக்களை தேர்தலுக்கு பயன்படுத்திய அரச ஊழியர்களக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். ஏனைய தேர்தல்களை விட இம்முறை மதத் தலைவர்கள் அரசியல் ரீதியான தலையீடுகளில் கூடுதலாக ஈடுபட்டார்கள் என்றும் அவர் கூறினார். ஜனாநாயகத்திற்கு நீதியான தேர்தலே பலம் சேர்ப்பதாக கூறிய அவர், ஜனநாயக சமூகமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை புதிய ஜனாதிபதியும் தோல்வியுற்ற வேட்பாளர்களும் செயற்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாக கூறிய அவர் ஜனநாயக நாடாக முழு நாட்டையும் வழிநடத்த புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். ஷம்ஸ் பாஹிம் https://www.thinakaran.lk/2019/11/18/உள்நாடு/44021/புதிய-ஜனாதிபதி-கோட்டாபய-மாகாண-சபை-தேர்தல்களை-நடத்த-நடவடிக்ைக-எடுக்க
    • இது போர்க்குற்றவாளிகளுக்கும், கடத்தல்காரர்களுக்கும், படுகொலையாளர்களுக்கும், கொள்ளைக்கார்களுக்கும், அரச பயங்கரவாதிகளுக்கும் கிடைத்த வெற்றி என்பதை உலகம் அறியாமல் இல்லை. மேலும் இது, சிங்கள-பௌத்த கலாச்சாரம் என்பது போர்க்குற்றவாளிகளுக்கும், கடத்தல்காரர்களுக்கும், படுகொலையாளர்களுக்கும், கொள்ளைக்கார்களுக்கும், அரச பயங்கரவாதிகளுக்கும் ஆதரவளிக்கும் மோசமான கலாச்சாரமாக உருவெடுக்கிறது என்பதையும் உலகம் அறியாமல் இல்லை. மேலும் பெரும்பான்மையான சிங்கள-பௌத்தர்கள் போர்க்குற்றவாளிகளுக்கும், கடத்தல்காரர்களுக்கும், படுகொலையாளர்களுக்கும், கொள்ளைக்கார்களுக்கும், அரச பயங்கரவாதிகளுக்கும் ஆதரவளிக்கும் மோசமான சமூகம் என்பதையும் உலகம் அறியாமல் இல்லை.