யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
பிழம்பு

ஓரிரு வார்த்தையே பேசிய விஜயகாந்த்: கண்கலங்கிய தேமுதிக நிர்வாகிகள்

Recommended Posts

தேமுதிக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் 13-ம் தேதி நேர்காணல் நடத்தப்பட்டது. விஜயகாந்த் முன்னிலையில் 400-க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் அவர் ஓரிரு வார்த்தைகளே பேசியது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்

நேர்காணலில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர் இதுபற்றி கூறியதாவது:

 

தேர்தலில் சீட் வாங்குவதெல்லாம் அப்புறம். கட்சித் தலைவர் விஜயகாந்தை நேரில் பார்த்து பேசலாம் என்றுதான் நேர்காணலுக்கே வந்தேன். ஆனால், நேர்காணலின்போது, அவரால் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேச இயல வில்லை. இது எங்களை கண்கலங்க வைத்தது.

சிலரிடம் மிகுந்த ஆர்வத்தோடு பேச முயற்சித்துள்ளார். மற்ற வர்களால் இதை எளிதில் புரிந்துகொள்ள முடிய வில்லை. இது மிகவும் கஷ்டமாகவும், வேதனை யாகவும் இருக்கிறது.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய பிறகு, அவர் உடல்நலம் தேறி வருவதாகவும், விரை வில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பார் என்றும் பிரேமலதா கூறியுள்ளார். அந்த நம்பிக்கையில்தான் இருக்கிறோம்.

கூட்டங்களில் விஜயகாந்த் மிகுந்த ரசனையாகவும், இயல்பாகவும் பேசக் கூடியவர். அவர் முழுமையாக குணம டைந்து, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். மீண்டும் அவரது கம்பீரக் குரலைக் கேட்க நம்பிக்கையோடு, ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்.

 

https://www.kamadenu.in/news/politics/20950-vijayakanth-1.html

Share this post


Link to post
Share on other sites

May 18 Banner

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு