• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

இயந்திர  மயமான வெளிநாட்டு வாழ்க்கையில் காலம் தொலைந்து போகிறது  இன்று தான்  வெள்ளிக் கிழமை மாலை,  நாளை   சனிக்கிழமை   வார  விடுமுறை ஆரம்பிக்கிறது . வெளி நாட்டு வாழ்க்கையில்  சனி ஞாயிறுக் கிழமைகள்  எப்படி பறந்து போகிறதென்றே தெரியவில்லை. தி ங்கள் மீண்டும்  ஓடத்தொடங்க  வெள்ளி வந்துவிடும். வா ரங்கள்  மாதங்கள் என்றுஆகி  வருடங்கள் உருண்டோடி விடுகின்றன.

அன்று சனிக்கிழமை  விடுமுறை  என்று    காலையில் ஆறுதலாக  பரபரப பில்லாமல் .. எழுந்தாள்  மைதிலி ...கணவனுக்கும் காபி கலந்து  வெளியே இயற்கையை ரசித்தவாறு  பருகிக் கொண்டு  இருந்தார்கள்.  வசந்தத்தின் முடிவும் கோடையின் ஆரம்பமாகவுள்ள உள்ள காலம் . கண்ணாடி ஜன்னலால் பார்க்கும்போது  அழகழகாய் றோஜா க்கள் பூத்திருந்தன . கணவன் மாதவன்  மாலைநேரங்களில் கவனித்து  வளர்த்த பூங்கன்றுகள்.  வெளிநாடுவந்து இருபத்தைந்துவருடங்கள் ...மேனன் ஐந்து   வயதும்  மிதுனன்  மூன்று வயதுமாக இருந்தார்கள்  , புலம்   பெயர்ந்து கனடாவுக்கு வந்த போது ...

ஆரம்பம் மிகவும் கஷ்டமாக   தான் இருந்தது ...சிறுவர் பள்ளி கல்லூரி என்று  என்று படிப்பித்து ஆளாக்கி  விடடார்கள். தற்போது  மூத்தவருக்கு முப்பதுவயது ...நின்று  ஒருகேள்விக்கு பதில் பெறமுடியாது . வயது வந்துவிட்ட்து .கலியாணம் பற்றி ..பேச்சு வந்தது . தட்டிக்   கழித்துக்   கொண்டே இருக்கிறார்.   தாமாக விரும்பி இருந்தால் செய்து வைப்பதற்கும்  பெற்றவர்  தயார். ஆ னால் அவரோ ஒரு முடிவும் சொல்வதாயில்லை . ஆனால் கணவரோ அவர்கள் வீட்டை  விட்டு போக எண்ணம்  வரும்  போது  போகட்டும் நாமாக அனுப்புவதுபோல் ஆகிவிடாதா?  ...இல்லை   அந்தந்த  காலத்தில் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பது மனைவியின் வாதம்.  விடுமுறையில் இருவரும் வாக்குவாதப்படுவதே வேலையாகி விட்ட்து.

தற்கால இளையோருடைய மன நிலையை எப்படி  புரிந்துகொள்ள லாம் ? சில இளையோர்  தாமாகவே துணையை தேடி ... பள்ளிக் கடன் கட்டி ...சேமித்து  ஒரு  இல்லிடத்தை  தேட விழைகின்றனர் ..சிலர்  அப்படித் தேடி வாடகைக்கு விட்டு  பின் தங்களுக்கு தேவை வரும்போது ..பயன் படுத்துகின்றனர் .

சிலர் காதலித்துக் கொண்டே  நாட்களைக்  கடத்துகின்றனர் . திருமணம் செய்ய காசு  சேமிக்கிறார்களாம்.  சிலர்   விரைவில் ஏன் இல்லற பந்தத்தை  அவசரப்பட்டுக்  தேடிக் கொள்வான்   இன்னமும்  காலம் இருக்கிறது  என வாழ்கிறார்கள்.  சடங்கு சம்பிரதாயம்  என்பன எல்லாம்  அர்த்தமற்ற தாகி   போய் கொண்டே இருக்கிறது அவர்களுக்கு . திருமணம் ஆகினாலும் குழந்தை தேவை இல்லை என்ற மனப்பாங்கும் இருக்கிறது ..

மிகவும் வசதியான வீட்டுப்பெண்  மூன்று பெண்களில் மூத்தவர் .. காதலித்தார் ..பையன் இந்து,  பெண்  கிறிஸ்டியன் சமய துறவியின் முன்னிலையில் நிச்சயாத்தம் நடந்தது . மோதிரம் மாற்றிக் கொண்டார்கள் .  அடுத்த வருடம் தாலிகட்டிக் கலியாணம் என்ற நிலையில் ..பெண்ணுக்கும் தந்தைக்கும் வாக்குவாதம்.  சிங்க பூருக்கு  வா   நகை வாங்க ..என்றார் தந்தை .  பையனும் இந்துமதப்படி தாலிகட்டிடலாம் என்கிறார்.  ஆனால் மணப்பெண்ணோ எனக்கு மினுங்கும்   நகை தேவையில்லை .. ( தாலி உட்பட ) தற்போதும் போடுவதில்லை.  இனியும் போடப் போவதில்லை.   நாங்களும்  கொஞ்சம் சேமித்து வைத்திருக்கிறோம் . மண்டபம் எடுத்து  ஆடம்பரம் தேவையில்லை.   தருவதை தாருங்கள் ஒரு கொண்டோ ( தொடர்மாடிக் கட்டிடம் ) வில்  எங்கள்  வாழ்வை ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள். 

 உற்றார் உறவினர் சூழ  மாலையும் கழுத்துமாய்  மகிழ்வாய் நடத்தி வைக்க ஆசைப்படும் பெற்றோர்   விருப்பம் என்னாவது ? ...  எங்கள் இளையோருடைய வாழ்வு எங்கே போகிறது ...? .உங்களுக்கும்  பிள்ளைகள் இருக்கலாம் ஒரு பெற்றோராக இப்படியான பிரச்சினைகளை எப்ப டிக் கையாளலாம் ?

தற்போதுள்ள அசுர   வளர்ச்சியில் ...தொலைபேசி முக்கிய இடத்தி வகிக்கிறது ..வளர்ச்சியிலும் முன்னேறி கெட்டு சீரழிவதிலும்  முக்கிய இடம் வகிக்கிறது ...பெற்றோர்  பிள்ளைகளின் ... உரையாடல் கூட .. mom what is for dinner ...பிட்டும் ..சிக்கன் கறியும் ...வேண்டுமென்றால் மூடடை  பொரி த்து தருகிறேன். ..  no mom I am not hungry .. Ill eat ..bread and sausage curry .. or Ill go out for dinner...  என்று மெசேஜ் சொல்கிறது.....

உறவுகள் மேம்பட பேசுங்கள் ..அல்லது ..தொல்லைபேசியை   தூர எறி ந்து விடுங்கள்...  எட்டு  மாதக்  குழந்தைக்கு   உணவூட்ட்  தொலைபேசியில் பாட்டு   வே ண்டி இருக்கிறது. குழந்தையை அமைதிப்படுத்த  செல்போன் தேவையாய் இருக்கிறது .

 கால ஓட்ட்த்தில் .இப்படியே இடைவெளிகள்    நீண்டு சென்றால் சந்த திகளின் எதிர் காலம் என்னாகும்...

 

  • Like 10

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, நிலாமதி said:

இயந்திர  மயமான வெளிநாட்டு வாழ்க்கையில் காலம் தொலைந்து போகிறது  இன்று தான்  வெள்ளிக் கிழமை மாலை,  நாளை   சனிக்கிழமை   வார  விடுமுறை ஆரம்பிக்கிறது . வெளி நாட்டு வாழ்க்கையில்  சனி ஞாயிறுக் கிழமைகள்  எப்படி பறந்து போகிறதென்றே தெரியவில்லை. தி ங்கள் மீண்டும்  ஓடத்தொடங்க  வெள்ளி வந்துவிடும். வாரங்கள்  மாதங்கள் என்றுஆகி  வருடங்கள் உருண்டோடி விடுகின்றன.

Bildergebnis für friday gif  Bildergebnis für monday gif

இப்படி...  ஒவ்வொரு வெள்ளிக் கிழமையை... பார்க்க, சந்தோசமாக இருக்கும்.
அதற்கிடையில்... வரும்,  இரண்டு  நாட்களும், பிள்ளைகளுடன்... குசலம் விசாரிப்பதிலும்,
ஊரில்.. மிஞ்சி உள்ள ஆட்களுடன், தொலை பேசியில் கதைப்பதில், போய் விடும்.

விடிந்து பார்த்தால், மீண்டும் திங்கள் கிழமை. 
ஒரு, வட்டத்திற்குள்.... அடங்கியுள்ள வாழ்க்கை,  தான் இது.

(படங்கள்... பகிடிக்கு, இணைக்கப் பட்டது ) :)

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, நிலாமதி said:

உறவுகள் மேம்பட பேசுங்கள் ..அல்லது ..தொல்லைபேசியை   தூர எறி ந்து விடுங்கள்...  எட்டு  மாதக்  குழந்தைக்கு   உணவூட்ட்  தொலைபேசியில் பாட்டு   வே ண்டி இருக்கிறது. குழந்தையை அமைதிப்படுத்த  செல்போன் தேவையாய் இருக்கிறது .

உண்மை தான் தொலைபேசியால் உறவுகள் மாத்திரமல்ல வீட்டிலுள்ளவர்களிடையே கூட விரிசல்கள்.
கதைப்பதை விட நோண்டுவது சுகம் போலும்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான் தொலைபேசியால் உறவுகள் மாத்திரமல்ல வீட்டிலுள்ளவர்களிடையே கூட விரிசல்கள்.
கதைப்பதை விட நோண்டுவது சுகம் போலும்.

 வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் நன்றி 

Share this post


Link to post
Share on other sites

பிள்ளைகளும் யந்திரகதியில் வாழும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விட்டார்கள், அவர்கள் மீதும் தவறில்லை.இன்றைய வாழ்க்கை முறை அப்படி அமைகிறது. நாங்கள்தான் அனுசரித்து போகவேணும்.வேறு வழியில்லை.....கசப்பாய் இருந்தாலும் உண்மையான கதை சகோதரி.......!   😁

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

சிந்திக்க வைத்த தற்கால நிகழ்வுக்கதை. நன்றி சகோதரி.👍

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, suvy said:

பிள்ளைகளும் யந்திரகதியில் வாழும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விட்டார்கள், அவர்கள் மீதும் தவறில்லை.இன்றைய வாழ்க்கை முறை அப்படி அமைகிறது. நாங்கள்தான் அனுசரித்து போகவேணும்.வேறு வழியில்லை.....கசப்பாய் இருந்தாலும் உண்மையான கதை சகோதரி.......!   😁

 வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி

Share this post


Link to post
Share on other sites

வீட்டு நிலவரங்களை யதார்த்தமாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். நாங்கள் அவர்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாட வேண்டியுள்ளது. தொழில்நுட்பத்துடன் பயணிப்பது இளையவர்களுக்கு மாத்திரமல்ல பிறந்த குழந்தைகளுக்கும் பழக்கமாகியுள்ளது. காலமும் மிகமிக வேகமாக ஓடுவதால் இறக்கை கட்டி பறக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு விட்டோம். நல்லதொரு பதிவு நிலாமதி.

Share this post


Link to post
Share on other sites

வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி

Share this post


Link to post
Share on other sites

எங்கும் எம்மவரின் நிலை இதேதான் அக்கா. இடைவெளிகள் குறையாது கூடிக்கொண்டேதான் வரப்போகின்றன .

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this