சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.
 • ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • ஒப்பிடுவதற்கு அடிப்படைத் தகுதிகள் இல்லாதவற்றுடன் ஒப்பிடுவது ஆபத்தானது! இலங்கையிலுள்ள இனமதவெறிப் பேரினவாதமும் திட்டமிட்ட இனச்சுத்தீகரிப்பும் சிங்கப்பூரில் எக்காலத்திலும் இருக்கவில்லை. மேலும் திறமையுள்ள தமிழர்கள் அங்கு முக்கிய, உயர்பதவிகளை வகித்தனர். எந்தப் பாகுபாடும் பார்க்கப்படவில்லை. அங்கு அரச நிர்வாகத்திடம் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு நேர்மை, நியாயம் இருந்தது. அதனால் தமிழர் அங்கு அனுசரித்துப் போகவேண்டிய நிலை ஏற்படவில்லை. அங்கு தமிழர் ஒரு பங்குதாரர்களாலவே இன்றுவரை இருந்து வருகின்றனர். எனவே லாரா! இதுபோன்ற ஒப்பீடுகள் கடைந்தெடுத்த முட்டாள்களால் மட்டுமே செய்யப்பட முடியும். இது ஈழத்து தமிழினத்துக்கு நன்மை பயக்கப்போவதில்லை. ஈழத்து தமிழினத்தை படுகுழியில் தள்ளக்கூடியது.   மலேசியாவில் நிலைமை வேறு. இந்தியாவில் பிஜேபி அரசின் கீழ் நிலைமை வேறு. அங்கு தமிழர் இரண்டு அணுகுமுறைகளையும் (அனுசரித்தல், மோதல்) அவ்வப்போது கையாண்டு வருகின்றனர். மேலும் அனுசரித்தல் என்பது அரச நிர்வாகத்திடமும், பேரினவாதிகளிடம் இல்லாதவரை சிறுபான்மையரின் அனுசரித்தல் என்பது அடிமைத்தனத்திலும், அழிவிலும் தான் முடியும். இலங்கையில் நிலைமை முற்றிலும் வேறு. இனமதவெறிப் பேரினவாதமும் திட்டமிட்ட இனச்சுத்தீகரிப்பும் நடக்கும் சூழலில், தமிழ் மக்கள் அதற்கேற்ப தமக்கென ஒரு உறுதியான, தனித்துவமான  பாதையை வகுக்கவேண்டும். நாம் இதை புத்தகங்களில் தேடியும், ஏனைய இடங்களைப் பார்த்து பிரதிபண்ணியும், விக்கிப்பீடியாவை படித்தும் வகுக்க முடியாது. அவை வழிகாட்டிகளாக இருந்தாலும் சொந்த 100 வருட அனுபவத்தின் அடிப்படையிலேயே ஒரு உறுதியான, தனித்துவமான  பாதையை வகுக்கவேண்டும்.   ஈழத் தமிழரில் உள்ள மாபெரும் குறைபாடு, அனைவரும் ஒரே கொள்கையை நோக்கிய பயணத்தை ஏற்றுக்கொண்டாலும், அதை நோக்கிய பயணத்தை ஒன்றுபட்டு, ஒற்றுமையாக, தம்முள் ஏற்படும் முரண்பாடுகளை அனுசரித்து மேற்கொள்வதில்லை. இந்த குறைபாட்டை களைந்தால் நிலைமை நிச்சயம் மாறும். வெறியுடன் வேட்டையாட வரும் ஓநாயுடன் அனுசரித்துப் போவது நிச்சயம் அழிவில்தான் முடியும். ஒன்றுபட்டு எதிர்த்துப் போராடினால் வெல்லும் சூழல் கிடைக்கலாம்.
  • ஒளித்து வைக்கப்பட்ட நாடு என் கிராமத்தின் பெயரை திரித்தனர் மிக மிக எளிதாக என் தேசத்தின் பெயரை ஒளிக்க முடியுமென நினைத்தனர் என் நாட்டின் அடையாளமோ பாறைகளைப் போல உறுதியானது எனது பெயரின் இறுதி எழுத்தை மாற்றி என்னை அவர்களாக்க முடியுமென நினைத்தனர் சூழச்சிகளால் மறைக்க முடியாத என் நெடு வரலாறோ நதிகளைப் போல நீண்டது எனது அடையாளங்களில் எனது குருதியையே பூசி என் பொருட்களை அழிக்க முடியுமென நினைத்தனர் தந்திரங்களை கடந்து பிரகாசிக்கும் எனது உறுதியான அடையாளங்களோ தீயைப் போலப் பிரகாசமானது கண்ணுக்குப் புலப்படாமலெனை மிக மிக எளிதாக அழிக்க முடியுமென நினைத்தவர் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை காயங்களிலிருந்து சிந்தப்பட்ட குருதியிலிருந்து சாம்பலிலிருந்து நான் எழுவேனென என் முகத்தை சிதைத்துக்கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை வலிய பாலை போன்ற அழிவற்ற என் முகத்தை ஒருத்தி பிரசவிப்பாளென சாம்பலால் யாவற்றையும் மூடியதாக நம்பியவர்  ஒருபோதும் அறிந்திருக்கவில்லை பூமியின் அடியில் புதைக்கப்பட்ட தொன்மச் சிலைபோல ஒளித்து வைக்கப்பட்ட எனது நாட்டின் பெயரை நாளை ஒரு குழந்தை தேடுமென தீபச்செல்வன்     Read more at: http://www.vasagasalai.com/deepachelvan-poems/
  • பொது ஜன பெரமுன  கட்சி ஒரு இனவாதக் கட்சியல்லை. அது அனைவரையும் கொலைசெய்யக் கூடிய  ஒரு பயங்கரவாதக் கும்பல்!
  • இந்தப் பதிவு பலருக்கு உவப்பாக இராது. சிலருக்கு சினம் கூடத் தோன்றலாம். என்றாலும் சொல்வது என் கடமை எனத் தோன்றுவதால் எழுதுகிறேன் இலங்கைத் தேர்தல் முடிவுகளினால் எழுந்த சிந்தனை இது. அங்குள்ள தமிழ் அரசியல்கட்சிகள் பலவாறாகப் பிரிந்து கிடந்தாலும், கோட்டபய, சஜீத் இருவரையும் ஆதரித்துப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டாலும் தமிழ் மக்கள் பெரும்பாலும் ஒரே நோக்கில் வாக்களித்திருக்கிறார்கள். வேண்டாம் கோட்டபய என்பதுதான் அவர்களது முடிவு இலங்கைத் தேர்தல் முடிவுகள் இன்னொன்றையும் காட்டுகின்றன. பெரும்பான்மைச் சமூகம் ஒரு திரளாகத் திரண்டால் சிறுபான்மையரின் வாக்குகள் எவ்விதமாக இருந்தாலும் பெரும்பான்மையினரின் வெற்றியை பாதிக்காது. . இந்தப் பின்னணியில் சிறுபான்மையினர் சூழ்நிலைகளை எவ்விதம் எதிர்கொள்ளவேண்டும்? அவர்கள் முன் இரு அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று மோதல் (Confrontation) இன்னொன்று அனுசரித்தல் (Conciliation) உரிமைகளை முதன்மையாகக் கருதும் சமூகங்கள் ஒரு போக்கையும், வளர்ச்சியை முக்கியமாகக் கருதும் மனோபாவம் மற்றொரு போக்கையும் தெரிவு செய்து கொள்கின்றன. இலங்கைத் தமிழர்கள் மோதல் போக்கையும், சிங்கப்பூர் தமிழ்ச் சமூகம் அனுசரித்தல் போக்கையும் மேற்கொண்டனர். விளைவுகளை உலகம் கண்கூடாகப் பார்க்கிறது இந்தியாவிலும் கூட தமிழர்களது அரசியல் கட்சிகள் நாடு முழுமையும் பரவிக் கிடக்கும் தேசியக் கட்சிகளோடு தேர்தல் கூட்டு உட்பட பலவித அனுசரித்தல் என்ற அணுகுமுறையைப் பின்பற்றி ஆட்சி அதிகாரத்தை அடைந்திருக்கின்றன. தேர்தல் களத்தில், முரண்பட்ட கட்சிகளோடு கூட்டணி என்ற அணுகுமுறையைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர், அதற்கு முன் பிரிவினை கோரிய அண்ணா அவர்கள் என்பது வரலாறு. அதன் பின் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரும் பின்பற்றினர். ஒரு கால கட்டம் வரை ஜெயலலிதாவும் பின்பற்றினார். ஸ்டாலின் பின்பற்றி வருகிறார். இதன் காரணமாக மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் அமைச்ச்ரவைப் பதவிகள், ஆகியவற்றைக் கட்சிக்ள் பெற்றன என்பது மட்டுமல்ல, தமிழகத்தின் வளர்ச்சி தொய்வுறாமல் பார்த்துக் கொண்டன இலங்கையில் மலையகத் தமிழர்களின் ஆதரவைப் பெற்ற கட்சியும், இஸ்லாமியர்களின் ஆதரவைப் பெற்ற கட்சிகளும், கிழக்கிலங்கையில் சில தலைவர்களும் இந்த அனுசரித்தல் போக்கை மேற்கொண்டு வந்திருக்கின்றனர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும் மக்களும் இன்று தீர்மானிக்க வேண்டியது அவர்களின் தேவை வளர்ச்சியா? உரிமையா? என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு திருப்பு முனையாக இருக்கட்டும்   malan naarayanan 
  • பொறுத்திருந்து பாப்போம் காலம் பதில் சொல்லும்.  அண்ணனும் ஒரு காலத்தில்  சொன்னவர், நான் தேர்தலில்  வென்றால் இனப்பிரச்சினையை தீர்ப்பேன் என்று கூறி வென்றார்.  பின் என்ன செய்தார்? கேட்ட குரல்வளையை நசுக்கி குரல் வெளியே வராமல்ப் பண்ணி விட்டு, பிரச்சனையை தீர்த்துவிட்டேன் என்று வீரம் பேசிப் பேசியே வாக்கு கேக்கிறார்.