Jump to content

சமஷ்டிக்கான பலத்துக்கு இடமளிக்கப் போவதில்லை - சஜித் பிரேமதாச


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி என்ற பயணத்தை ஆரம்பிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

sajith.jpg

ஆனால் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் தாம் அடிபணிந்த  சமூகம் என்ற உணர்வை ஏற்படுத்தாத வகையில்  அதிகாரங்களை அவர்களுக்கும் வழங்கி தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

ஐக்கிய இலங்கை என்பதே  மஹிந்த -ரணில் இருவரதும் நோக்கமாகும்.  ஆனாலும்  அதனை அடைய முயற்சிக்கும் வழிமுறை வேறு எனவும் அவர் குறிப்பிட்டார். 

புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையில் இந்த நாட்டில் வீட்டுப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண  5.4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு  1இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் கடந்த  2015 தொடக்கம்  2019 ஆம் ஆண்டுவரையில் எமது ஆட்சியில் 3 இலட்சத்து, 56 ஆயிரத்து 540 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளோம். இதற்காக மொத்தமாக 29 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஆகவே எமது அரசாங்கம் இந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம் என்றே கூறவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/52094

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ஆமா இன்னும் கொஞ்சம் குடியேற்றம் செய்துவிட்டால் அந்தப் பலமே இருக்காதில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமஷ்டி தீர்வு பல்லின பல்கலாச்சார இலங்கைக்கு பொருத்தமானது, அதை நீங்கள் யாரும் தரபோவதில்லை.
வரலாறு எப்போதும் ஒரே மாதிரி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

சமஷ்டி தீர்வு பல்லின பல்கலாச்சார இலங்கைக்கு பொருத்தமானது, அதை நீங்கள் யாரும் தரபோவதில்லை.
வரலாறு எப்போதும் ஒரே மாதிரி இல்லை.

50 களில் சிங்கப்பூர்

இலங்கையை  பார்த்து  பொறாமைப்பட்டதாம்

இப்ப  சிங்கப்பூரைப்பார்த்து

இலங்கை  பொறாமைப்படுகுது

சிங்கப்பூர் மலேசியா  சார்ந்து எடுத்த  முடிவை முன்னுதாரணமாக  கருதி

இப்பவும் இப்படி  பேசிக்கொண்டிருந்தால்

இனி  எந்த  நாட்டை  பார்த்து பொறாமைப்பட  வேண்டி  வருமோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

 

இனி  எந்த  நாட்டை  பார்த்து பொறாமைப்பட  வேண்டி  வருமோ??

தாங்களும் அடிமையாகி எங்களையும் அடிமையாக்கிறதில் தான் அவர்களின் கவனம் இருக்கின்றது நாட்டை முன்னேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை ....சமஸ்டி என்ற சொல்லை சொல்லி எத்தனை வருடம் அரசியல் நட‌த்துறாங்கள்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.