Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னடா இது ஒருத்தரையும் இந்தப்பக்கம் காணேல்லை. கிழுகிழுப்பா இருந்தாத்தான் வருவினைபோல

இங்க  தான்  நிற்கிறீர்களா??

நான்  நினைச்சன் ஆறுதலா  எழுதலாம் தானே

சுமே  இனி  அடுத்த  வருசம் தானே  யாழ் பக்கம்  வரும்  என்று...☹️

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னடா இது ஒருத்தரையும் இந்தப்பக்கம் காணேல்லை. கிழுகிழுப்பா இருந்தாத்தான் வருவினைபோல

இங்க தானக்கா நிக்கிறம்!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இங்க  தான்  நிற்கிறீர்களா??

நான்  நினைச்சன் ஆறுதலா  எழுதலாம் தானே

சுமே  இனி  அடுத்த  வருசம் தானே  யாழ் பக்கம்  வரும்  என்று...☹️

ஏன் உந்தக் கொலைவெறி அண்ணா😛

1 hour ago, ஏராளன் said:

இங்க தானக்கா நிக்கிறம்!😀

நிண்டாச் சரி😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களோடு நானும் இணைத்திருக்கிறேன் சுமோ....தொடருங்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

உங்களோடு நானும் இணைத்திருக்கிறேன் சுமோ....தொடருங்கள் 
 

நன்றி ரதி 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

இங்க  தான்  நிற்கிறீர்களா??

நான்  நினைச்சன் ஆறுதலா  எழுதலாம் தானே

சுமே  இனி  அடுத்த  வருசம் தானே  யாழ் பக்கம்  வரும்  என்று...☹️

விசுகர் உப்பிடி பானையை போட்டு உடைப்பார் எண்டு நான் கனவிலையும் நினைக்கேல்லை.....🤣 🤣 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

விசுகர் உப்பிடி பானையை போட்டு உடைப்பார் எண்டு நான் கனவிலையும் நினைக்கேல்லை.....🤣 🤣 🤣

விசுகரிடம் நல்ல நகைச்சுவையும் அதுபோன்ற நிறைய சம்பவங்களும் கைவசம் இருக்கு. அவற்றை சரியான முறையில் பதிவதற்கு ஒருவேளை நேரப் பற்றாகுறையும் காரணமாக இருக்கலாம் என நினைக்கின்றேன்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

விசுகர் உப்பிடி பானையை போட்டு உடைப்பார் எண்டு நான் கனவிலையும் நினைக்கேல்லை.....🤣 🤣 🤣

நல்ல சந்தோசமாக்கும் இப்ப🙋🏿‍♀️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

விசுகர் உப்பிடி பானையை போட்டு உடைப்பார் எண்டு நான் கனவிலையும் நினைக்கேல்லை.....🤣 🤣 🤣

எழுத  விரும்பவில்லை என எழுதினா

உங்களை  இங்க  எழுதச்சொன்னனா என  கோபப்படும்  சுமே

இப்படி  பானையை  திருப்பி  போட்டா

அண்ணைக்கு  கொலை  வெறி  என்று சிரிக்குது...?

நானே  குழம்பிப்போய் இருக்கிறன் அண்ணை

3 hours ago, suvy said:

விசுகரிடம் நல்ல நகைச்சுவையும் அதுபோன்ற நிறைய சம்பவங்களும் கைவசம் இருக்கு. அவற்றை சரியான முறையில் பதிவதற்கு ஒருவேளை நேரப் பற்றாகுறையும் காரணமாக இருக்கலாம் என நினைக்கின்றேன்......!  😁

 

எல்லாம்  யாழ்   தந்தது

அதிலும்  குமாரசாமியண்ணையும்

நீங்களும் தந்தது தான் ராசாக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/16/2019 at 11:03 PM, Nathamuni said:

அவர் தானோ.... இவர்... இப்பத்தயன்  அத்தார்? எண்டதை முதலிலேயே சொல்லிப் போடுங்கோ...

இவரில்லை அவர். அவரில்லை இவர்.😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவரில்லை அவர். அவரில்லை இவர்.😀😀

அப்பிடியெண்டால் இடையிலை வந்தவர் தான் அவர்....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 4

மதியம் சாப்பிட மீன்குழம்பும் கத்தரிக்காய்ப் பால்க்கறியும் கோவா வறையும் செய்து வைத்திருந்தா தினேஷின் அம்மா. சாப்பிடத்தவுடன் வாங்கோ தாமரைக்கு குளம் பாத்திட்டு வருவம் எண்டு நிசா எங்களைக் கூட்டிக்கொண்டு போனா. மாமிமார் வரேல்லை என்றிட்டு வீட்டிலயே நிண்டினம். குளம்முழுவது தாமரைப் பூ. நான் அன்றுதான் முதல் முதல் ஒரு பெரிய குளத்தை தாமரைப்  பூக்களுடன் கண்டது. எனக்கு இறங்கிப் போய் பூக்களை பிடுங்கவேண்டும் என்ற ஆசை எழ செருப்பைக் கழற்றிவிட்டு குளத்துக்குள் இறங்க வெளிக்கிட ஐயோ அதுக்குள்ள இறங்கக் கூடாது. சேத்துக்க கால் புதைத்து போயிடும். அதோட தாமரைக்கு கண்டின்ர வெறும் காலில சிக்கிடும் என்றும் நிசா பயம் காட்ட நான் என்ன செய்யிறது எண்டு தெரியாமல் நிண்டன். எனக்கோ பூக்களில் மூன்று நான்கைப் பிடுங்கியே தீரவேணும் எண்ட அவா. என்ன செய்யிறது எண்டு யோசிச்சிட்டு உங்கட வீட்டில கொக்கத்தடி இருக்கோ என்று கேட்க நிசா ஓம் எண்டா.

நானும் தம்பியும் நிசாவும் வீட்டைகொக்கத்தடியை எடுக்கப் போக விறாந்தையில் இருந்து எல்லாரும் கதைச்சுக்கொண்டு இருக்கினம். நாங்கள் பூப் பிடுங்குவது பற்றிக் கதைக்க, அன்ரி உவளுக்கு சின்னனில இருந்தே பூக்கண்டுப் பயித்தியம் என்று சொல்லிச் சிரிக்க எல்லாரும் சேர்ந்து சிரிக்க எனக்கு கடுப்பாகுது தினேசும் சேர்ந்து சிரித்தது.

நான் யாரையும் பற்றிக் கவலைப்படாமல் நிஷாவைக்கொண்டு கொக்கத்தடியை எடுத்துக்கொண்டு நானும் நிஷாவும் மட்டும் திரும்பிப் போறம். நாங்கள் றோட்டால கொக்கத்தடி கொண்டு போக எதுக்கு என்று கேட்டுவிட்டு எல்லாரும் சிரிக்கினம். நான் யாரையும்பற்றிக் கவலைப்படாமல் கொக்கத்தடியைக் காவிக்கொண்டு போறன். கொக்கத்தடியால் பூவை ஆய நீட்டினால் இரண்டே இரண்டு பூத்தான் எட்டுது. அதுக்கு மேல கொக்கததடியின் நீளம் போதவில்லை. வீட்டை போய் ஒரு தடியும் கயிறும் எடுத்துவாறீரோ என்று நிசாவைக் கேட்க, நாளைக்குப் பிடுங்குவம். இப்ப வீடடை போவம் வாரும் என்கிறா நிசா.  நிஷாவிடம் கொக்கத்தடியைக் கொடுத்துவிட்டு தங்கப் பதக்கம் வென்று வருமாப்போல அந்தப் பூக்களைக் கொண்டு போகிறேன். என் தங்கைகளும் சின்ன மாமியும் ஓடிவந்து பூ க்களைப் பார்க்க எனக்குப் பெருமிதமாக இருக்கு.
யாரிடமும் கொடுக்காமல் நானே பூக்களை வைத்திருக்கிறன். இரவும் என் படுக்கைக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டே தூங்குகிறேன்.

காலையில் எழுந்து பார்த்தால் என் பூக்களைக் காணவில்லை. படுக்கையைச் சுற்றித் தேடிவிட்டு பார்த்தால் தம்பி தங்கைகள் எழுந்திருக்கவில்லை. முன்பக்கம் விறாந்தையில் தினேஷ் அன்ரி மாமிமார் கதைத்துக்கொண்டு இருக்கினம். அங்கு என் பூக்கள் இல்லை. மாமியாக்கள் வெள்ளணவே எழும்பிவிட்டினம். அவைதான் என் பூக்களை எடுத்திடடினமோ என்ற சந்தேகத்தோட என்ர பூக்களைக் காணேல்லை என்கிறேன்.
உங்கடை பூக்களை யார் எடுக்கப் போயினம் என்கிறார் தினேஷ். நான் பொய்யா சொல்லுறன் என்று மனதில நினைத்தாலும் வெளியில எதுவும் சொல்லாமல் யாழ்ப்பாணம் வந்தபோது நல்லா என்னோட வழிஞ்சவர். இப்ப ஏன் நல்ல பிள்ளை போல் இருக்கிறார் என்று புரியாமல் நான் குசினிக்குப் போய் நிஷாவிடம் என்ர பூக்களைக் கண்டீரா என்று கேட்க நான் காணேல்லை என்கிறா நிசா. மாமிதான் வேண்டுமென்றே எங்காவது எடுத்து ஒளித்து வைத்திருப்பாவோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது. ஆனாலும் எப்பிடிக் கேட்கமுடியும்?  

போய் பல்லைத் தீட்டிப் போட்டு வாங்கோ. நிசா பாத்ரூம்மைக் கொண்டேக் காட்டு, துவாய் குடு என்றும் சொல்கிறார் தினேஷின் அம்மா. துவாய் என்னட்டை இருக்கு என்று சொல்லிவிட்டு கோபால் பற்பொடியையும் லக்ஸ் சோப்பையும் எடுத்துக்கொண்டு போகிறேன். முகம் கழுவிவிட்டு வர கோலுக்குள் வந்த தினேஷ் கவலைப்படாதேயும் நான் நாளைக்கு உமக்கு பூப்பிடுங்கித்தாறன் என்கிறார். மனதுக்குள் சொல்லமுடியாத பூரிப்பு ஏற்பட தாங்ஸ் என்றபடி நான் அறைக்குள் செல்கிறேன்.

அன்று மாலை தினேஷ் அவர்களின் வயலைக் காட்டுகிறேன் என்று எம்மையெல்லாம் அழைத்துக்கொண்டு போகிறார். அழகான ஊர்தான். பார்க்கும் இடமெங்கும் படங்களில் வரும் காட்சிகள் போல் வயல்கள். சில இடங்களில் நெற்போர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. சில வயல்களில் இன்னும் அறுவடை செய்யவில்லை. வாய்க்கால் வரம்புகளில் வல்லாரைக் கீரைகள். தென்னந்தோப்புகள், வாய்க்கால்கள் என்று மனம்மட்டிலா மகிழ்ச்சி கொள்கின்றது. பாம்பு என்று தினேஷ் கூற ஆ என்று கத்தியபடி நாங்கள் சிதறி ஓடுகிறோம். கொஞ்சத் தூரம் ஓடிவிட்டுப் பார்த்தால் தினேஷ் அந்த இடத்திலேயே நின்று சிரிக்கிறார்.  அவர் பகிடிக்கு எங்களைப் பயப்பிடுத்தி இருக்கிறார் என்று அப்பத்தான் தெரிகிறது.

இன்னும் கொஞ்சத் தூரம் போனதும் ஒருசிறிய ஆறு வருகிறது. ஆற்றில் இறங்கிக் கால் நனைக்க எல்லாருக்கும் ஆசை வருது. ஒருத்தரும் இறங்கவேண்டாம். ஆறு ஆழம் என்கிறார் தினேஷ். எனக்கு அவர் சொல்வதில் நம்பிக்கை இல்லாமல் ஏன் ஆறு எண்டால் உங்களுக்குத் பயமோ என்கிறேன் நான். ஏன் உமக்குப் பயம் இல்லையோ? என்று அவர் கேட்க்க நான் இல்லை என்று தலையாட்டுகிறன். வாரும் நிசா நாங்கள் இறங்குவம் என்று கேட்க ஐயோப்பா நான் வரேல்லை என்கிறார் அவர். நீங்கள் வாங்கோ மாமி என்கிறேன். அவரும் மாடுதான் என்று சொல்லிக்கொண்டு இருக்க, எதிர்பாராமல் தினேஷ் என்னை வந்து தூக்கி ஆற்றுக்குள் எறிவதுபோல் கொண்டு போகிறார். அவர் என்னைத் தூக்கியது எனக்கு மகிழ்வு பயம் இரண்டையும் ஒருங்கே தருகிறது. தற்செயலாய் தூக்கிப் போட்டுவிடுவாரோ என்ற பதட்டமும் என்னை ஆட்கொள்ள "என்னை விடுங்கோ, என்னை விடுங்கோ" என்கிறன். என் செருப்பில் ஒன்று ஆற்றுக்குள் விழுந்துவிட என்னை இறக்கி விடுகிறார் தினேஷ். படங்களில் வாற வில்லியள் பாக்கிற பார்வை மாமி என்னைப் பார்க்கிறா. மற்றவை எல்லாம் விழுந்துவிழுந்து சிரிக்கினம். சின்ன மாமியும் சிரிக்கிறாதான் ஆனாலும் அவ ஒண்டைப் பத்தாக்கப் போறாவே என்ற பதட்டமும் மனதில் ஓட தினேஸ் ஆற்றங்கரையில் இறங்கி என் செருப்பைத் தேடுகிறார். செருப்பைக் காணவில்லை.

இப்ப செருப்பில்லாமல் எப்பிடிப் போறது என்று அழுமாப்போல் கேட்கிறேன்.  நாளைக்கு உமக்கு புதுக் செருப்பு வாங்கித்தாறன் இப்ப என்ர செருப்பைப் போட்டுக்கொண்டு வாரும் என்று தனது செருப்பைக் கழற்றித் தருகிறார். நான் போட வெளிக்கிட பெரிய மாமி கிட்ட வந்து  இந்தாடி என்ர செருப்பை நீ போடு. நான் இவற்றை செருப்பைப் போடுறன். எனக்கு உன்னிலும் கால் பெரிசு என்றபடி தினேஷின் செருப்பைப் போட்டுக்கொண்டு முன்னுக்கு நடக்கிறதா. தம்பி தங்கைகளும் போக சொறி நிவேதா என்று என் அருகில் வந்து சொல்கிறார் தினேஷ்.

நாம் வீட்டுக்குச் சென்றதும் என் தம்பி செருப்புக்கு கதையை எல்லோருக்கும் சொல்ல எல்லாரும் சிரிக்கினம். தினேஷின் அம்மா எங்களுக்கு வெள்ளையாக ஒரு இனிப்புப் பண்டம் தருகிறார். மிகவும் சுவையாக இருக்கு அது. என்ன அது என்று கேடடால் மஸ்கற் என்கிறார் தினேஷ். பக்கத்துக் கடையில் சித்து விற்கிறார்கள் என்று அவர் சொல்ல அடுத்த நான்கு நாட்களும் காலையும் மாலையும் அன்ரியிடம் காசுவாங்கி மஸ்கர் உண்டதை இன்றும் மறக்க ஏலாது. அத்தோட அந்தச் சுவை இன்றுமட்டும் நாக்கில் நிற்கிறது.

அடுத்தநாள் காலை எனக்காக அழகான ஒருசோடி செருப்பை தினேஷ் கொண்டுவந்து தர என் மகிழ்வு கட்டுக்கடங்காமல் போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதின்ம வயது சம்பவங்களையும் மன உணர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா.
கடைசியில யாவும் கற்பனை என்று போட்டுவிடாதீங்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

உங்கள் பதின்ம வயது சம்பவங்களையும் மன உணர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா.
கடைசியில யாவும் கற்பனை என்று போட்டுவிடாதீங்க!

போடவேண்டாம் என்று நீங்கள் கவலைப் பட...... போடா விட்டால் இந்த வாழ்க்கையே கற்பனையாகிடுமோ என்று அவ கவலைப்பட ,  அவரா இவர், இவரா அவர், அல்லது எவர் அவர் இடையில வந்தவர் என்று நாங்கள் காலமை கோப்பியும் குடிக்காமல் கவலைப்பட,  சே....ஒரு பெண் எவ்வளவு சோதனைகளைத் தான்  கடந்து போராட வேண்டி இருக்கு.......!  😗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

உங்கள் பதின்ம வயது சம்பவங்களையும் மன உணர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா.
கடைசியில யாவும் கற்பனை என்று போட்டுவிடாதீங்க!

சீச்சீ அப்பிடிப் போடுவனா??

4 hours ago, சுவைப்பிரியன் said:

நானும் இங்கதான் நிக்கிறேன்.

ஆகா சந்தோசம்😀

13 hours ago, குமாரசாமி said:

அப்பிடியெண்டால் இடையிலை வந்தவர் தான் அவர்....😎

முழுக்க வாசியுங்கோ

3 hours ago, suvy said:

போடவேண்டாம் என்று நீங்கள் கவலைப் பட...... போடா விட்டால் இந்த வாழ்க்கையே கற்பனையாகிடுமோ என்று அவ கவலைப்பட ,  அவரா இவர், இவரா அவர், அல்லது எவர் அவர் இடையில வந்தவர் என்று நாங்கள் காலமை கோப்பியும் குடிக்காமல் கவலைப்பட,  சே....ஒரு பெண் எவ்வளவு சோதனைகளைத் தான்  கடந்து போராட வேண்டி இருக்கு.......!  😗

வாசிக்கிற இந்தச்சனங்கள் இப்பிடி நினைப்பினமோ அப்பிடி நினைப்பினமோ எண்டு நினைச்சு நினைச்சே எழுதிற நேரம் வீணாகிது.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2019 at 7:43 PM, ரதி said:

சுமோ,உங்களுக்கு நல்ல கொசிப்புகளை 😂எழுதுற திறன் இருக்கு...தொடருங்கோ ...நானும் விடுப்பறிய🤣 ஆவல்😃 ...20 வயது இளைஞருக்கு ,அவ்வளவு பேருக்கும் செலவழிக்க  அந்தக் காலத்திலேயே நல்ல காசு இருந்திருக்கு....ரியோ கூல் பார் எவ்வளவு காலமாய் யாழில் இருக்கு?
 

முந்தி ஒரு காதற் கதையும்,கல்யாணம் கட்டின கதையும் சுமோ எழுதினவல்லவோ! அது யாற்றை  கதை😕  

 

அது எந்தக் கதை. கனக்க எழுதினது. எனக்கே எதைச் சொல்லுறியள் என்று மறந்துபோச்சு.  😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினேஸ்,இப்ப உங்கட மாமாவா 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எதிர்பாராமல் தினேஷ் என்னை வந்து தூக்கி ஆற்றுக்குள் எறிவதுபோல் கொண்டு போகிறார். அவர் என்னைத் தூக்கியது எனக்கு மகிழ்வு பயம் இரண்டையும் ஒருங்கே தருகிறது. தற்செயலாய் தூக்கிப் போட்டுவிடுவாரோ என்ற பதட்டமும் என்னை ஆட்கொள்ள "என்னை விடுங்கோ, என்னை விடுங்கோ"

தினேஷ் அவர்களின் மனத்தைரியத்தை பாராட்டுகின்றேன்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

தினேஸ்,இப்ப உங்கட மாமாவா 😃

இல்லைங்கோ

12 hours ago, குமாரசாமி said:

தினேஷ் அவர்களின் மனத்தைரியத்தை பாராட்டுகின்றேன்.😎

😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 5 

தினேஸ் வாங்கித்தந்த செருப்பைப் போட்டுக்கொண்டு போய் எல்லாருக்கும் காட்டவேணும் போல இருந்ததுதான் எண்டாலும் காட்டேல்லை. அடுத்தநாள் போடும்போது பெரிய மாமி எங்காலையடி செருப்பு என்று கேட்டபோது நான் திரும்பி தினேசைப் பார்த்தேன். நான் தான் வாங்கிக் குடுத்தனான் என்று தினேஸ் சொல்ல செருப்பு நல்ல வடிவாயிருக்கு எனக்கும் ஒண்டு உதுமாதிரி வாங்கித் தாங்கோ தினேஸ்.  நான் காசைத்தாறன் எண்டா என் பெரிய மாமி. உனக்கு எதுக்கு செருப்பு? யாழ்ப்பாணத்திலதானே நல்ல மலிவு. அங்கு போய் வாங்கு. தேவையில்லாமல் காசைக் கரியாக்கிப் போட்டாய் எண்டு உன் அம்மா சொல்லுவ. அந்தப் பழி எனக்கு வேண்டாம் என்று அன்ரி சொல்ல மாமியின் முகம் கறுத்துச் சிறுத்ததைப் பார்க்க எனக்குப் பயமும் எட்டிப் பார்த்தது. தாமரைப் பூவைப்போல இதுவும் காணாமல் போயிடுமோ என்று. அதனால இரவு செருப்பை ஒரு பேப்பரிலை சுத்தி என் பாக்குக்குள்ள வச்சுட்டுப் படுத்தன்.

அடுத்த நாள் நிசா வாய்க்காலில குளிக்க ஆருக்கு விருப்பம் என்று கேட்க என் தம்பி தங்கைகள் சின்ன மாமி எல்லாம் விருப்பம் தெரிவிச்சின. நான் வரேல்லை எண்டா பெரிய மாமி அவதான் ....ரஞ்சி. நானும் வரேல்லை என்றேன். ஏனெண்டா வெளியில அலுவலாப் போன தினேஸ் இன்னும் வரேல்லை. வந்தா அவரோட கதைச்சுக்கொண்டிருக்கிறதுதானே சந்தோசம் வாய்க்காலில குளிக்கிறதைவிட என என் மனம் நினைக்க, என்னையும் ரஞ்சி மாமியையும் விட்டுவிட்டு மற்றவை குளிக்கப் போட்டினம்.

நிவேதா வாவனடி தாமரைக் குளத்துக்குப் போட்டு வருவம் என்று ரஞ்சிமாமி கேட்க நானும் சந்தோசமாத் தலையாட்டிக்கொண்டு வெளிக்கிட்டிட்டன். கனநேரம் அங்கினை நிக்காமல் வாங்கோ என்றுவிட்டு சமையலுக்கு உதவிசெய்ய அன்ரி குசினிக்குள்ள போக நாங்கள் ஓமென்றுவிட்டு ஒழுங்கையில் இறங்கினம். 

அடடா மாமிக்கும் தாமரைக்குளத்தைப் பாக்கிற ஆசை இருக்கு. ஆனால் ஏன் முதல்நாள் வரேல்லை என்று என்மனதில் குழப்பமாக இருக்க எதுவும் பேசாது நடக்கிறேன். நாளைக்கு போனா இனி எப்ப வருவமோ தெரியாது என்கிறேன் நான். ம்.... எனக்கும் கவலைதான். அதிலும் எல்லாரையும் எப்ப பாப்பமோ எண்டுதான் கவலையாய் இருக்கடி என்று மாமி சொல்ல, தினேசை எப்ப பார்பபனோ என்ற கவலை மட்டும் தான் எனக்கு என மனதுள் எண்ணிக்கொள்கிறேன். 

தாமரைக் குளத்துக்கு முன்னால வந்திட்டம். பூக்குகள் எல்லாம் குளம் முழுதும் நிரம்பியபடி பார்க்கவே அழகாக இருக்கு. குளத்துக்குள இறங்கி இத்தனை பூக்களையும் ஒன்றாய் அணைக்கவேண்டும் போல் அத்தனை மகிழ்வாக இருக்குது எனக்கு. 

ஒண்டு சொல்லுவன். ஒருத்தருக்கும் சொல்லமாட்டன் எண்டு சத்தியம் பண்ணடி எண்டு மாமி கேட்க சத்தியமா சொல்லமாட்டன் என்னண்டு சொல்லுங்கோ என்கிறேன் நான். எதுக்கும் உன்ர தங்கச்சியாக்களைக்கொண்டு சத்தியம் பண்ணு. சொல்லுறன் எண்டு ரஞ்சி மாமி கடுப்பேத்திது. என்ன விசயம் என்று அறிய மனம் பரபரக்க என்ர தங்கச்சிமேல சத்தியம். ஆருக்கும் சொல்லமாட்டன். என்னெண்டு சொல்லுங்கோ என்கிறேன். 

எனக்கு தினேஸ் ஒரு லேஞ்சி வாங்கித் தந்தவர். அவருக்கு என்னில நல்ல விருப்பம். எனக்கும் தான். இப்ப ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம் எண்டவர். ஆருக்காவது சொல்லாவிட்டால் என்ர நெஞ்சு வெடிச்சிடும் போல இருந்ததடி. நீதான் எனக்கு நம்பிக்கையான ஆள் அதுதான் உன்னட்டைச் சொன்னனான் என்று சொல்வது ஏதோ அசரீரி போல் எனக்குக் கேட்குது. நெஞ்செல்லாம் ஏதோ அடைப்பதுபோல் ஐயோ என்று கத்தி அழவேண்டும் போலெல்லாம் மனம் ஓலமிட, ஓட்டப்போட்டியில் நான் கடைசியாய் வந்தவளாய் உணர்கிறேன். குளத்தில் இறங்கித் தாமரைப்பூக்களையெல்லாம் பிய்த்துப் போடவேணும் போல் அவற்றிலும் வெறுப்பு வருகிறது. 

மாமி என்னை திரும்பிப் பார்ப்பதை உணர்ந்த நான் படக்கென மற்றப்பக்கம் திரும்பி மாட்டுவண்டிலைப் பாரப்பதுபோல் பார்த்து என் கண்ணீரை அடக்கிக்கொண்டு,  நான் சொல்ல மாட்டன். உங்கட அப்பா ஓமெண்ணுவரோ என்கிறேன். அதைப் பேந்து பாப்பம் என்றுவிட்டு தன் கையை விரித்து லேஞ்சியைக் காட்டுறா. கரைகளில் வேலைப்பாடுடன் ஒரு மரூண் கலர் லேஞ்சி என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. 

வீட்டை போவம் மாமி வெய்யில் சுடுது என்றபடி நகரத் தொடங்க இன்னும் கொஞ்சநேரம் கதைச்சிட்டுப் போவமடி என்ற மாமியை அலட்சியம் செய்தபடி நான் திரும்பி நடக்கிறேன்.

வாசலில் தினேஸ் சிரித்தபடி நிற்பது தெரிகிறது. நான் அவரை நிமிர்ந்தும் பார்க்காது அறைக்குள் செல்கிறேன். மாமி அவருடன் ஏதோ கதைப்பது கேட்கிறது. மண்டை வெடித்துவிடும்போல் இருக்க, பாயை விரித்துப் போர்த்துக்கொண்டு படுக்கிறேன். 

சிறிது நேரத்தில் அன்ரி அறைக்குள் வந்து ஏன் படுத்திருக்கிறாய் என்று கேட்கிறா?? தலையிடிக்குது என்று கண்களைத் திறக்காமலே சொல்கிறேன். மத்தியான வெய்யிலுக்கை திரிஞ்சால் தலை இடிக்காமல் என்ன செய்யும் என்றுவிட்டு வெளியே போகிறா அன்ரி. 

மதிய உணவுக்காக வந்து எழுப்பவும் வேண்டாம் என்றுவிட்டுப் படுத்திருக்கிறேன். சிறிது நேரத்தில் கதவு தட்டுப்பட என்ன என்கிறேன் எரிச்சலுடன். பனடோல் இருக்குப் போடும் தலையிடி குறைஞ்சிடும் என்றபடி பனடோலையும் தண்ணியையும் கொண்டுவந்து எனக்கருகில் வைத்துவிட்டுப் போகிறார் தினேஸ். நான் எதுவும் கூறாமல் இருக்கிறேன். 

அதன்பின் எப்படித் தூங்கினேன் என்று தெரியாது. என் நெற்றியில் கை வைத்துப் பார்த்து என்னை எழுப்புகிறா அன்ரி. பக்கத்தில் என் தங்கைகளும் நிசாவும் நிக்கினம். அவளுக்கு ஒண்டுமில்லை. எழும்பு எழும்பிச் சாப்பிடு என்கிறா. வீம்புக்குப் படுத்திருக்கவேணும் போல் இருந்தாலும் வயிறு எழும்பிச் சாப்பிடு என்கிறது.

எழுந்து வெளியே சென்று முகம் கழுவிவிட்டு வர, இப்ப சுகமோ என்றபடி எனக்கு அருகே வருகிறார்த

 தினேஸ். நான் ஓம் என்று நிமிர்ந்து பார்க்காமல், நிற்காமல் கூறிக்கொண்டு அவரை விலத்தியபடி உள்ளே செல்கிறேன். எல்லாரும் கருவாட்டுப் பொரியலையும் கணவாய்க் கறியையும் புட்டுடன் இரசிச்சுச் சாப்பிட எனக்கு எதுவும் ருசியற்று ஏதோ கடமைக்கு உண்டு முடிக்கிறேன். 

அடுத்தநாள் நாங்கள் திரும்பப் போறதால வெள்ளணப் படுக்காமல் எல்லாரும் அரட்டையடிக்க எனக்கு எதுவுமே பிடிக்காமல் அறைக்குள் செல்ல முயல, தாயம்  அல்லது கரம்போட் விளையாடுவம் நிவேதா இருங்கோவன் என்கிறார் தினேஸ். எனக்கு ஏலாமல் இருக்கு என்றுவிட்டு அறைக்குள் செல்கிறேன். வெளியே விளையாட்டு மும்மரமும் ஆரவாரமும் கேட்க எனக்கு எரிச்சல்எரிச்சலாய் வருகிறது. 

அடுத்தநாள் காலை எல்லாப் பொருட்களையும் எடுத்து என் பையில் அடைந்துவிட்டு எல்லாரும் வெளிக்கிடும் வரையும் அறையிலேயே இருக்கிறன். இடைஞ்சலுக்குள்ள ஏன் இருக்கிறாய். பாக்கை எடுத்துக்கொண்டு வெளிய போய் இரன் என்று அன்ரி சினக்க பாக்குடன் வெளியே வருகிறேன். பெரிய மாமியும் சின்ன மாமியும் ஏற்கனவே வெளிக்கிட்டு கதிரைகளில் இருக்கினம். உனக்குத் தலையிடி இப்ப சுகமோ என்று ரஞ்சி மாமி கேட்கிறா.நான் தலையை மட்டும் ஓம் என்கிறாற்போல் ஆட்டுகிறேன். 

வெளியே இருந்து தினேஸ் இரு பொட்டலங்களுடன் வருகிறார். ஒன்றை மாமியிடம் கொடுக்க மாமி வாயெல்லாம் பல்லாக அதைப் பெற்றுக்கொள்ள என் மனம் பொருமுகிறது. மற்றதை என்னிடம் கொண்டு வந்து நீட்ட என்ன என்று தினேசின் முகத்தைப் பார்த்துக் கேட்கிறேன். மஸ்கற். போகேக்குள்ள சாப்பிட்டுக்கொண்டு போங்கோ என்று கூறியபடி சிரிப்போடு என்னைப் பார்க்கிறார். வேண்டாம் என்று நான் சொல்ல எடும் என்றபடி என் மடியில் வைத்துவிட்டுப் போகிறார். 

பஸ்ரான்டுக்கு நிசாவும் தினேசும் வரீனம். பெரிய மாமி தினேசின் அருகிலேயே வர நான் விடுவிடுவென முன்னே செல்கிறேன். தினேஸ் என்னைப் பாரத்தபடி நின்று அவர்களுடன் கதைக்க, அதுதான் ரஞ்சி மாமிதான் பக்கத்திலேயே நிக்கிறாவே. பிறகேன் என்னைப் பார்ப்பான் என்று மனதுள் கறுவியபடி பஸ் வரும் பக்கமாகப் பார்க்கிறேன். பஸ்சில் முதல் ஆளாக ஏறி தினேஸ் நிற்கும் பக்கத்துக்கு எதிர்ப்பக்கமாக அமர்கிறேன். மற்றவர்கள் அவர்நிற்கும் பக்கமாக இருந்து அவருக்கும் தங்கைக்கும் கை காட்டுகின்றனர். அன்ரி எனக்குப் பக்கத்தில் அமர வண்டி வெளிக்கிடுது. என் மனதில் சொல்லமுடியாத ஒரு வெறுமை படர்வதை உணர்கிறேன். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதை எதிர்பாக்கேல!
மாமி வில்லியா வருவா என்று!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

நான் இதை எதிர்பாக்கேல!
மாமி வில்லியா வருவா என்று!

அவசரக் குடுக்கை 😋

 

 

நன்றி தமிழினி வருகைக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இரவு செருப்பை ஒரு பேப்பரிலை சுத்தி என் பாக்குக்குள்ள வச்சுட்டுப் படுத்தன்.

வாவ்....உங்கள் மனநிலையை புரிந்து கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

வாவ்....உங்கள் மனநிலையை புரிந்து கொள்கின்றேன்.

ஆகா நல்லது 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.