Jump to content

மொசாம்பிக்கில் இடாய் புயல் கோர தாண்டவம்: 150 பேர் உயிரிழப்பு; நூற்றுக் கணக்கானவர்கள் காணவில்லை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மொசாம்பிக்கில் இடாய் புயல் கோர தாண்டவம்: 150 பேர் உயிரிழப்பு; நூற்றுக் கணக்கானவர்கள் காணவில்லை

Published :  17 Mar 2019  15:40 IST
Updated :  17 Mar 2019  15:45 IST

ஏபி

ஹராரே (மொஸாம்பிக்)
 
mozambicjpg

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இடாய் புயல் தாக்குதலினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு

மொசாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இடாய் புயலின் கோரத் தாண்டவத்தால்  இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர்; நூற்றுக்கணக்கானவர்கள் காணவில்லை மறறும் பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அருகருகே உள்ள மூன்று தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1.5 மில்லியன் மக்கள் இடாய் புயலில் சிக்கி கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக ஐநா மற்றும் அரசு உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மொஸாம்பிக்கின் பெய்ரா நகரில் விமானநிலையம் மூடப்பட்டுவிட்டது, இங்கு மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டதோடு, பல வீடுகள் அழிக்கப்பட்டன.

கடந்த வியாழன் இரவு தாக்கத் தொடங்கிய புயல் ஜிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய இடங்களுக்கு மேற்கு நோக்கி நகர்ந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்ப்புக்குள்ளாகினர். குறிப்பாக இதன் தாக்கம் மொஸாம்பிக் கிழக்கு எல்லைப் பகுதிகளில் இருந்தது.

வீடுகள், பள்ளிகள், தொழில்கள், மருத்துவமனைகள் மற்றும் சூறாவளி மூலம் போலீஸ் நிலையங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளப்பெருக்குக்கில் சிக்கியபோது, தங்கள் உயிர்களை மட்டுமே காப்பாற்றிக்கொள்ள மேட்டுப்பாங்கான இடங்களைத் தேடி, தங்கள் உடைமைகளை கைவிட்டனர்

ஐநா அமைப்புகளும், செஞ்சிலுவை சங்கமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஹெலிகாப்டர் மூலம் அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்கி வருகின்றன.

மொஸாம்பிக் அதிபர் பிலிப் நியூஸி வானொலியில் பேசுகையில், வெள்ளம் பாய்ந்துள்ள இடங்களில் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க விமானங்களை தரையிறக்குவது மிகவும் கடினமாகியுள்ளளது என்றும் மிகவும் கவலைக்குரிய வகையில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் என்று குறிப்பிட்டார்.

வெள்ளம்பாதித்த பகுதிகளில் உள்நாட்டு பேரிடர் மீட்பு சேவைகள் வேகமாக செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளதால் இங்கு 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கடும் சிக்கல்களை சந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது.

https://tamil.thehindu.com/world/article26559919.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடாய் சூறாவளியினால் மொசாம்பிக்கில் 1000 பேர் உயிரிழப்பு: ஜனாதிபதி அச்சம்

ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கில் வீசிய இடாய் சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக மொசாம்பிக் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இடாய் சூறாவளியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று (திங்கட்கிழமை) ஹெலிகொப்டரில் சென்று பார்வையிட்ட பின்னரே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நதிகளில் சடலங்கள் மிதப்பதை காணக்கூடியதாக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பெய்ரா துறைமுக நகரை 177 கிலோமீற்றர் வேகத்தில் கடந்த வியாழக்கிழமை சூறாவளி தாக்கியது. ஆனால், நிவாரணக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமையே பாதிக்கப்பட்ட பகுதியை அணுகியுள்ளனர்.

சுமார் 5 இலட்சம் மக்கள் வசிக்கும் பெய்ரா நகரம் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக ஐ.நா. நிவாரண பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சிம்பாப்வேயில் சுமார் 98 பேர் உயிரிழந்துள்ளதுடன், 217 பேர்வரை காணாமல் போயுள்ளனர்.

Idai1-1-428x285.jpgIdai2-428x285.png

 

http://athavannews.com/இடாய்-சூறாவளியினால்-மொசா/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடாய் சூறாவளி: பேரழிவினால் மொசாம்பிக், ஜிம்பாப்வே கடும் பாதிப்பு

பேரழிவை உண்டாக்கிய இடாய் சூறாவளி:1000 பேருக்கு மேல் உயிரிழப்பு?படத்தின் காப்புரிமைZINYANGE AUNTONY

தெற்கு ஆப்ரிக்காவில் பல மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு காரணமான இடாய் சூறாவளி மிகப் பெரிய பேரழிவை உருவாக்கியுள்ளதாக ஐ.நா. (ஐக்கிய நாடுகள் சபை) அமைப்பு தெரிவித்துள்ளது.

தெற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள மொசாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய மூன்று நாடுகளும் பெரும் வெள்ளம் மற்றும் பேரழிவினால் கடந்த சில நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இடாய் சூறாவளியின் தாக்கம் குறித்து மொசாம்பிக்கின் அதிபர் பிலிப் நியூஸி "இது ஒரு பெரும் மனித பேரழிவு" என்று குறிப்பிட்டார்.

கடந்த வாரம் மொசாம்பிக்கை தாக்கிய இடாய் சூறாவளியினால் 1000 பேருக்கு மேல் மொசாம்பிக்கில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்நாட்டின் அதிபர் கூறியுள்ளார்.

பேரழிவை உண்டாக்கிய இடாய் சூறாவளி:1000 பேருக்கு மேல் உயிரிழப்பு?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

வியாழக்கிழமையன்று மணிக்கு 177 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய இந்த சூறாவளி அந்நாட்டின் சோஃபாலா பிராந்தியத்தில் உள்ள துறைமுக நகரமான பேய்ராவில் கரையை கடந்தது.

இடாய் சூறாவளி ஏற்படுத்திய கடும் பாதிப்பில் நாடெங்கும் சிதறிய மரங்கள், உடைந்த மின்சார தூண்கள் மற்றும் மிதக்கும் நூற்றுக்கணக்கான உடல்கள் என பேரழிவு காட்சிகள் காணப்படுகின்றன.

உயிரிழந்தவர்களை தவிர ஏராளமான மக்கள் வெள்ளம் மற்றும் சூறாவளியினால் காயமடைந்துள்ளனர்.

தென்னாபிரிக்க பிராந்தியம் சந்தித்த மிக மோசமான இயற்கை பேரழிவு இடாய் சூறாவளி என்று ஐநா அமைப்பு இதனை வர்ணிக்கிறது.

சென்ற வாரம் கரையை கடந்த இடாய் சூறாவளியின் நேரடி பாதையில் உள்ள மொசாம்பிக்கில் 1.7 மில்லியன் மக்களும், மல்லாவி நாட்டில் கிட்டத்தட்ட 9 லட்சம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஜிம்பாப்வேயில் குறைந்தபட்சம் 20,000 வீடுகள் தென்பகுதி நகரமான சிப்பிங்கில் சேதமடைந்துள்ளன.

பேரழிவை உண்டாக்கிய இடாய் சூறாவளி:1000 பேருக்கு மேல் உயிரிழப்பு?படத்தின் காப்புரிமைAFP

"இடாய் சூறாவளி தென் துருவத்தை பகுதிகளில் தாக்கிய மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது," என ஐ.நாவின் வானிலை மையத்தை சேர்ந்த கிளர் நல்லிஸ், பிபிசியிடம் தெரிவித்தார்.

சூறாவளி பாதிப்பால் பல குடும்பங்களில் பெற்றோர் இருவரில் ஒருவர் இறந்தோ, காணாமல் போய்விட்டதாலோ, ஏராளமான குழந்தைகள் பசியால் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.bbc.com/tamil/global-47634430

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொசாம்பிக்கில் 3 நாட்கள் துக்கதினம் அறிவிக்கப்பட்டது

mosa-720x450.jpg

மொசாம்பிக்கில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாள் துக்க தினத்தை அனுட்டிக்க அந்நாடு தீர்மானித்துள்ளது. இதன்படி இன்று (புதன்கிழமை) தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

மொசாம்பிக்கின் போர்ட் சிட்டி பெய்ராவில் கடந்த வியாழக்கிழமை 170 கே.பி.எச் வேகத்தில் வீசிய இடாய் சூறாவளி மொசாம்பிக் உட்பட சிம்பாப்வே மற்றும் மலாவி நாடுகளை பாதித்திருந்தது.

இந்த அனர்த்தத்தில் மொசாம்பிக்கில் 1000 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இடாய் சூறாவளியினால் சுமார் 2.6 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/மொசாம்பிக்கில்-3-நாள்-துக/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடாய் புயல் – உயிரிழப்பு 300 ஐ தாண்டியுள்ளது

March 21, 2019

idai.jpeg?resize=800%2C533அருகருகே உள்ள மூன்று தெற்கு ஆபிரிக்க நாடுகளான மொசாம்பிக், சிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இடாய் புயலின் தாக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300 தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 350,000 பேர் ஆபத்திலிருப்பதாக மொஸாம்பிக் ஜனாதிபதி பிலிப் நையுசி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இடாய் புயலின் தாக்கத்தினால் மலாவியில் மனிதாபிமான நெருக்கடியொன்று ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள், மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 80,000க்கும் மேற்பட்டோர் அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது

இடாய் புயல் தாக்கிய நான்கு நாட்களுக்குப் பின்னரும் மத்திய மொஸாம்பிக்கில், கூரைகளிலும் மர உச்சிகளிலுமுள்ள உயிர் தப்பித்தவர்களை படகுகள், ஹெலிகொப்டர்கள் மூலம் அவசரகால அணிகள் மீட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மொஸாம்பிக்கில் தேசிய அவரசகாலநிலையொன்றை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் மூன்று நாள்கள் துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி பிலிப் நையுசி தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிம்பாப்வேயில் குறைந்தது 217 பேரைக் காணவில்லை எனவும் 44 பேர் மீட்க முடியாத அளவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

idai-2.jpeg?resize=800%2C600idai-3-1.jpg?resize=800%2C495idai-4.jpg?resize=259%2C194

 

http://globaltamilnews.net/2019/116544/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.