யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

முட்டிக் கொள்ளும் தமிழ்க் கட்சிகள்

Recommended Posts

முட்டிக் கொள்ளும் தமிழ்க் கட்சிகள்

கே. சஞ்சயன் / 2019 மார்ச் 18 திங்கட்கிழமை, பி.ப. 09:40 Comments - 0

இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த வாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தீர்க்கமான ஒரு வாரமாக இருக்கப் போகிறது.   

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, புதன்கிழமை (20) பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.   

அத்துடன், இலங்கை தொடர்பான புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஏற்கெனவே இந்தத் தீர்மான வரைவு, பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  

இதற்கு, இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதாகக் கூறியிருக்கிறது. அவ்வாறு இணங்கினால், அடுத்தவாரம் வாக்கெடுப்பு நடத்தப்படாது. இணங்காவிடின், வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.  

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையும் ஏற்கெனவே வெளியாகி விட்டது. புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் வரைவும் ஏற்கெனவே பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.  

இப்போது, இந்த வரைவையும் அறிக்கையையும் வைத்து, தமிழ் அரசியல் பரப்பில் சூடான விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை ஒரு தரப்பு வரவேற்றால், இன்னொரு தரப்பு எதிர்க்கிறது. அதுபோலவே, ஜெனீவாவில் முன்வைக்கப்படுவதற்காக பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவை, ஒரு தரப்பு சாதகமாகப் பார்க்க, இன்னொரு தரப்பு, பாதகமானதாகக் காட்டுகிறது.  

தமிழர் தரப்புக்குள்ளேயே, இந்த விடயங்களில் ஒற்றுமையில்லாத நிலை தோன்றியிருக்கிறது.  
ஜெனீவாக் கூட்டத்தொடரில், இம்முறை இலங்கைக்கு அழுத்தங்கள் குறையும் என்று தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா சில நாள்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறியதற்குக் காரணம், ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம், இரண்டு நிலைப்பாடுகளை முன்வைக்கவுள்ளது என்பது தான்.  

எந்த நிலைப்பாட்டை அதிகாரபூர்வமானதாக எடுத்துக் கொள்வது என்ற குழப்பம், பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு ஏற்படும். அவ்வாறான நிலையில், இலங்கைக்குக் குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில், அழுத்தங்களைக் கொடுக்காத தீர்மானமே முன்வைக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.   

அதுபோலவே, ஜெனீவா தீர்மானம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஆகிய விடயங்களில் தமிழர் தரப்பு, இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகளுடன் இருப்பதை, சர்வதேச சமூகம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுமே தவிர, தமிழர்களுக்குச் சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுக்காது.  

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரின் அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. கலப்பு நீதிமன்றத்தை அரசாங்கம் உருவாக்க வேண்டும், உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்கத் தவறினால், உலகளாவிய நியாயாதிக்கத்தின் அடிப்படையில் உறுப்பு நாடுகள் விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் வாய்ப்பை பரிசீலிக்க வேண்டும், இலங்கையில் ஐ.நாவின் கண்காணிப்புச் செயலகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பன போன்ற பல யோசனைகளை அவர் முன்வைத்திருக்கிறார்.  

இந்தப் பரிந்துரைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றிருக்கிறது. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் வரவேற்றிருக்கிறது. இன்னும் பல தமிழ்க் கட்சிகள் வரவேற்றுள்ளன. ஆனாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதை வரவேற்கவில்லை.  

“பொறுப்புக்கூறல் விடயத்தில் 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை, இலங்கை அரசாங்கம், அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில், ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை. இந்தநிலையில், ஐ.நா பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரை செய்கின்ற வகையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை அமைய வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அவரது அறிக்கை அவ்வாறான பரிந்துரைகளைச் செய்யாதது எமக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது” என்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்திருந்தார்.  

ஐ.நா பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரைப்பதால் மாத்திரம், இந்த விவகாரத்துக்குத் தீர்வு கிடைத்து விடப் போகிறதா? அங்கு அது வெட்டுத் தீர்மானங்களில் சிக்கி விடாதா என்பது பற்றிய எந்த யோசனையுமின்றியே, இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.  

இந்த விடயத்தில் மாத்திரமன்றி, புதிய தீர்மானம் தொடர்பான விடயத்திலும் தமிழர் தரப்பு பிளவுபட்டு நிற்கிறது.  

முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில், காலக்கெடு, காலஅவகாசம், காலஅட்டவணை போன்ற எந்தச் சொற்களும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், இந்த மூன்று சொற்களையும் வைத்துக் கொண்டு, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.  

தீர்மான வரைவின் படி, 30/ 1, 34/ 1 தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

இதற்கமைய, இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா, அதன் முன்னேற்றங்கள் என்ன என்பது பற்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில், (2020 மார்ச்) ஓர் அறிக்கையையும் 46ஆவது கூட்டத்தொடரில், (2021 மார்ச்) விரிவான ஓர் அறிக்கையையும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் சமர்ப்பிக்க வேண்டும்.  

இதனைத் தான் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள காலஅவகாசம் என்று கூறப்படுகிறது. 

நேரடியாக இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படுவது பற்றியோ, குறிப்பிட்ட எந்த காலக்கெடுவுக்குள் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றியோ தீர்மான வரைவில் எதுவும் கூறப்படவில்லை.  

இந்தநிலையில் தான், காலவரம்பு ஒன்றைக் குறிப்பிட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் கோருகின்றன. கிட்டத்தட்ட எல்லாத் தமிழ் கட்சிகளுமே இந்த விடயத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன.  

அதாவது, ஜெனீவாவில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தவதற்கு காலக்கெடுவை விதிக்க வேண்டும். அது இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுப்பதாக இருக்கும்.  

ஆனால், அந்தளவுக்கு அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய நிலையில், சர்வதேச சமூகம் குறிப்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.  

அதேவேளை, இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என்று ஐந்து தமிழ்க் கட்சிகள், ஐ.நாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி மாத்திரம், இலங்கைக்கு மேலதிக காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறது,  
முன்னதாக, காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என்று மாவை சேனாதிராசா யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார். பின்னர், சுமந்திரன் அந்த நிலைப்பாட்டை அடியோடு மாற்றியிருக்கிறார்.  

அவரது பார்வையில், 2021 ஆம் ஆண்டு வரை அளிக்கப்பட்டுள்ளது, இலங்கைக்கான காலஅவகாசம் அல்ல; ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற வேலையே அது என்று வாதிட்டிருக்கிறார்.  

அதுமாத்திரமன்றி, 2021 மார்ச் வரை இலங்கை மீதான ஐ.நாவின் கண்காணிப்பு நீடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் வாதத்தை முன்வைத்திருக்கிறார்.  

ஐ.நாவின் கண்காணிப்பில் இலங்கை இருக்கப் போகிறது என்பதைத் தான் இந்த விடயத்தில் சாதகமான ஒன்றாகச் சுட்டிக்காட்ட முனைகிறார் சுமந்திரன்.  

ஐ.நாவின் கண்காணிப்பில் இருந்தால் மாத்திரம் போதுமா, இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விடுமா? என்பது தான் தமிழர்களின் கேள்வி.

ஏனென்றால், 2015ஆம் ஆண்டில் இருந்து இலங்கை அரசாங்கத்துக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் ஐ.நாவின் கண்காணிப்பில் தான் இருந்தது, அந்தக் காலத்தில் கூட, வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.   

அப்படிப்பட்ட நிலையில், காலவரம்பு எதையும் நிர்ணயிக்காமல், வெறுமனே கண்காணிப்பு என்ற பெயரில் காலஅவகாசத்தைக் கொடுப்பதால் என்ன பயன் என்பது தான், சுரேஷ் பிரேமசந்திரன் போன்றவர்களின் கேள்வியாக இருக்கிறது.  

ஐ.நாவும் சரி, சர்வதேச சமூகமும் சரி சில தெளிவான நிலைப்பாடுகளின் இருக்கின்றன. இலங்கைக்கு அதிக அழுத்தங்களைக் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளன. ஆனால், தமிழர் தரப்புத் தான், தமது எதிர்பார்ப்பு என்ன, நிலைப்பாடு என்ன என்பதில் குழப்பமடைந்து போயிருக்கிறது. 

சாதாரண தமிழ் மக்களிடம், ஜெனீவா நகர்வுகள் குறித்து ஏமாற்றங்கள் உள்ளன. ஐ.நா தொடர்பாக, சர்வதேச சமூகம் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் தொடர்பாக அவர்களுக்கு நிறையவே அதிருப்திகளும் இருக்கின்றன.  

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் மீதோ, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைகளின் மீதோ நம்பிக்கையற்ற நிலை தான் உள்ளது.  

இத்தகைய நிலையில், ஜெனீவா விவகாரத்தில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், இரண்டு பிரிவுகளாக முட்டிக் கொள்ளும் நிலையில் இருக்கின்றன.  

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அடுத்த வாரம், நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம், தமிழர் தரப்பின் விருப்பங்களைக் கருத்தில் கொண்டதாக இருக்குமா என்ற வலுவான கேள்விகள் உள்ள நிலையில் தான், இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்று தெரியாமல் முட்டிக் கொள்ளுகின்றன தமிழ்க் கட்சிகள். 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முட்டிக்-கொள்ளும்-தமிழ்க்-கட்சிகள்/91-230905

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • April 25, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமுல்படுத்த பாராளுமன்றம் ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது.  இந்த அவசரகாலச் சட்டம் காலணித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1953 ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஒரு கிலோ அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையினால் 29 நாட்களுக்கு இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  அதனைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட இன கலவரங்கள், உள்நாட்டு போர் போன்ற காரணிகளினால் அவசரகால சட்டம் தொடர்ந்தும் பல தடவைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அவசர கால சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் ரத்து செய்திருந்தது.  எனினும், கடந்த 9 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் அவசர கால சட்ட சரத்துக்களை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த தாக்குதலை அடுத்து, ஏற்பட்டுள்ள அச்ச நிலைமையை நீக்கி, இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்த அவசர கால சட்டம் அமல்படுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  இந்த அவசர காலச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் பாதுகாப்புத் துறையினர் அதிகாரம் மிக்கவர்களாக்கப்பட்டள்ளனர். 1. சந்தேக நபர்களை கைது செய்வதற்கு காவற்துறையினருக்கு மாத்திரம் காணப்படுகின்ற அதிகாரம், தற்போது இலங்கையிலுள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 2. காவற்துறையினர் தவிர்ந்த ஏனைய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள், அவர்களின் தடுப்பு காவலில் 24 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அதிகாரம் காணப்படுகின்றது. 3. 24 மணித்தியாலங்களின் பின்னர் காவற்துறையினருக்கு சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டு, தடுப்பு காவல் கட்டளையின் பிரகாரம், அவரை ஒரு மாத காலம் தடுத்து வைக்க முடியும். 4. ஒரு மாத காலத்திற்கு மேல் சந்தேக நபரை தடுத்து வைத்து, விசாரணை செய்ய வேண்டுமாயின், பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடன் குறித்த சந்தேகநபர் மேலும் ஒரு மாத காலத்திற்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அதிகாரம் காணப்படுகின்றது. 5. கைது செய்யப்படும் சந்தேக நபரிடம் முழுமையான விசாரணை நிறைவடையும் வரை, நீதிமன்றத்திற்கு பிணை வழங்குவதற்கான அதிகாரம் கிடையாது. 6. கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படும் சந்தேக நபர் குற்றமிழைக்காதவர் என்பதனை பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே பிணை வழங்கப்படும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 7. தேவை ஏற்படும் பட்சத்தில், காவற்துறை ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அதிகாரம் காவற்துறை மா அதிபருக்கு இந்த சட்டத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது. #emergency lawlk #srilanka  #Srilanka #EasterSundayAttackLK http://globaltamilnews.net/2019/119389/
    • மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்......
    • இந்தியாவுக்கு போனால் அதிகமாக கோவிலுக்கு போவது வழமை நான் ஒரு கோவிலுக்கு போவம் என்று நினைத்தால் என்ட பெட்டர்காவ் நாலு கோவிலுக்கு போகவேணும் என்று சொல்லுவார்.அது மட்டுமல்லாது இந்த மனித சாமிமார் அவர்களின் ஆச்சிரமம் அது இது என்று போவதும் வழக்கம்.   முதல் தடவையாக புட்டபத்திக்கு போனேன் .காரில் போகும் பொழுதே சாரதி இது சாய் பல்கலைகழகம் ,இது சாய் சங்கீதபாடசாலை,சாய் மருத்துவமனை,சாய் விமான நிலையம் என ஒரு பெரிய நகரத்திற்க்கு தேவையான சகல கட்டமைப்புக்களும்  இருப்பதை காட்டிக்கொண்டே வந்தார் .ஒரு தனிநபரால் எப்படி இது சாத்தியம் என்று மனதில் கேள்வி எழுந்தது ,நான் அந்த கேள்வியை கேட்டிருந்தால் நிச்சமாக‌ சாரதியின் பதில் அவர் கடவுள் அவரால் இதுவும் செய்யமுடியும் இதற்கு மேலும் செய்ய முடியும் என்ற பதில் தான் வந்திருக்கும். அதைவிட பின்னுகிருந்த மனிசிட்ட "உங்களுக்கு எங்க போனாலும் குறுக்குபுத்தியும் லொள்ளும்,என்று திட்டு வாங்க வேணும்" பயணம் போன இடத்தில ஏன் வம்பு என்று போட்டு சாரதி சொல்லுவதற்கெல்லாம் ஆச்சரியமாக கேட்பது போல‌ நடித்துகொண்டு பயணித்தேன்.   வெளிநாட்டவர்க‌ள் பதிவு செய்து தங்குவதற்கு என ஒர் க‌ட்டிடம் உண்டு அங்கு போய் பதிவு செய்தேன் ,படம் பிடித்தார்கள் மற்றும் விரல் அடையாளங்களையும் பெற்று கொண்ட பின்பு  பயணப்பொதிகளை எக்ஸ் ரெ பண்ணும் பெல்டில் போடும் படி கேட்டார்கள் அதை செய்து போட்டு,  குளித்து வேஸ்டியை கட்டிக்கொண்டு  தரிசனம் பூஜை போன்றவை நட‌க்கும் மண்டபத்திற்க்கு போனேன்.. எனக்கு புது இடம் என்றபடியால் மண்டபத்திற்கு முன்னால் நின்று  மனைவியுடன் உரையாடிகொண்டிருக்கும் பொழுது, வெள்ளை காற்சட்டையும் செர்ட்டும் அணிந்த ஒருவர் "சாய்ராம்"என்று சொன்னபடி அருகே வந்து ‍ஹிந்தியில் என்னவோ சொன்னார் நாங்கள் முழித்துகொண்டு நிற்கவே ஆண்களும் பெண்களும் இதில் நின்று  கதைக்க வேண்டாம் பெண்கள் இந்த பக்கம் போகவும் ஆண்கள் மற்ற பக்கம் போகவும் என்றார். கூம்பிட்டு முடிந்தவுடன் மொபைலில் கொல்பண்ணுங்கோ என்று மனைவி பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு, நான் ஆண்களுக்குரிய லைனில் போய் நின்றேன் .மொபைல் போன் உள்ளே கொண்டு செல்ல தடை என அறிவிப்பு பலகையில்  இருந்த அறிவிப்பை அப்ப தான் பார்த்தேன். மொபைல் மற்றும் கை பைகள் உள்ளே கொண்டு செல்ல முடியாது ,காரியாலயத்தில் கொண்டு போய் பாரப்படுத்துங்கள் என்று ஒரு சாய்ராம் காவலாளி சொல்ல மீண்டும் பொருட்கள் பாரப்படுத்தும் லைனில் போய் நின்றேன் ,எனது முறை வரவே கையிலிருந்த மொபைல் மற்றும் கைப்பையை கொடுத்து டொக்கனெடுத்து மீண்டும் வந்து ம‌ண்டபத்திற்க்கு போகும் வழியில் நின்றேன் ,எனது முறை வந்தது மெட்டல் டிடெக்கடர் ஊடாக உள்ளே வா என்றார் நானும் போனேன் இரு இளைஞர்கள் கீழே சப்பாணிகட்டிகொண்டு இரு பக்கமும் இருந்தார்கள் .எனது கால்களை வேஸ்டிக்கு மேலால் தடவி உள்ளே மறைத்து சொந்த ஆயுதத்தை தவிர வேறு ஆயுதங்கள் இருக்கா என சோதனை போட்டார்கள் ,சாய்ராம் என்ற சொல்லை மீண்டும் சொன்னார்கள், இதை தாண்டியவுடன் இன்னோரு காவலாளி சாய்ராம் என்று சொன்னபடி சேர்ட்டுக்கு மேலால் மேல் உடம்பை தடவிபார்த்துவிட்டு உள்ளே செல்ல அனுமதி தந்தார்.  உந்த செக்யுரிட்டு செக் எனக்கு பிடிக்கவில்லை என்ன செய்யிறது என்று போய் உள்ளே இருந்தேன்.     நான் போன மாதம் டிசம்பர் என்றபடியால் கிறிஸ்மஸ் பெருநாளுக்காக மண்டபம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது...மண்டபத்தினுள் புத்தர்,சிவன்,ஜேசு உருவங்களும் இஸ்லாத்தை அடையாளப்படுத்த பிறையும் வைக்கப்பட்டிருந்தது....இவர்கள் எல்லா மத சின்னங்களையும் வைத்து வணங்குகிறார்கள் இவரை மற்ற மதத்தவர்கள்  வைத்து கும்பிடுவார்களா என்ற குறுக்கால போன புத்தி எனக்கு வந்திட்டு...   வழிபாடு முடித்துவிட்டு வெளியே வந்து டோக்கனை கொடுத்து மொபைலையும் கைபையையும் வாங்கி கொண்டு விடுப்பு பார்த்து கொண்டிருந்தேன்... மனைவியும் பிள்ளைகளும் வந்தார்கள்..   இஞ்சாரும் நாளைக்கு நான் வரமாட்டன் நீர் வேணும் என்றால் வாரும்,எனக்கு உந்த செக் பண்ணி சாமி கும்பிடுற விளையாட்டுகள் சரி வராது...சிட்னி முருகனிட்ட போனால் எவ்வளவு டிசன்டா கும்பிட்டு போட்டு வரலாம்...   இந்த இந்தியாவில தான் பழணி யாண்டியை தரிசிக்க போற‌து என்றாலும் செக்கியுரிட்டி செக்.... what a shame         வேலையால் வந்தவள் இஞ்சாருங்கோ சிறிலங்கா நியுஸ் பார்த்தனீங்களோ ,செர்ஜ்யில் குண்டு போட்டிட்டாங்களாம் இப்ப விளங்குதோ ஏன் இந்தியாவில கோவில்களிலும் தேவாலயங்களிலும்  செக்குயுரிட்டி செக்   அதிகம் எண்டு   ஓஓ உதுக்குத்தானோ....
    • மற்றவர்களை காக்க உயிர் நீத்த மாவீரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!!