Jump to content

கிழக்குக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு :

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்குக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு :

March 19, 2019

20190319_071702.jpg?resize=800%2C450

காணாமல்போனோரின் உறவினர்களால் ஒழுங்குசெய்யப்பட்டு கிழக்கு மாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்படும் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழ்மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இடம்பெற்றுவரும் ஐ.நா. சபையின் கூட்டத்தொடரில் நாளை 20ஆம் திகதி இலங்கை விவகாரம் தொடர்பில் பேசப்படவுள்ள நிலையில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது, மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதிலளிக்கவும் வலியுறுத்துமாறு கோரும் விதத்தில் இக் கடையடைப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அனைவரதும் ஆதரவுகள் கோரப்பட்டிருந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது

IMG_5823.jpg?resize=800%2C533IMG_5824.jpg?resize=800%2C533IMG_5825.jpg?resize=800%2C533IMG_5827.jpg?resize=800%2C53320190319_071141.jpg?resize=800%2C450

http://globaltamilnews.net/2019/116362/

Link to comment
Share on other sites

நல்லூர், கச்சேரி, கொழும்புத்துறை, அரியாலை பகுதியில் சகல கடைகளும் திறந்தே இருக்கின்றன. நவீன சந்தைப்பக்கம் போகவில்லை. மற்றும் சகல பாடசாலைகளும் வழமை போல இயங்குகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் போராட்டத்திற்கு யாழ்மக்களின் ஆதரவு இல்லையென்பது தெளிவாகிறது. ஆகவே இவர்களின் தேவையில்லாத இப்போராட்டமும் கோரிக்கைகளும் தீர்மானமும் தோற்கடிக்கப்படவேண்டுமென்பதே பெரும்பான்மைத் தமிழர்களின் விருப்பமென்று யாழ்மக்கள் இப்போராட்டத்தை புறக்கணித்து வெளிக்காட்டியிருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

35 minutes ago, ragunathan said:

கிழக்கின் போராட்டத்திற்கு யாழ்மக்களின் ஆதரவு இல்லையென்பது தெளிவாகிறது. ஆகவே இவர்களின் தேவையில்லாத இப்போராட்டமும் கோரிக்கைகளும் தீர்மானமும் தோற்கடிக்கப்படவேண்டுமென்பதே பெரும்பான்மைத் தமிழர்களின் விருப்பமென்று யாழ்மக்கள் இப்போராட்டத்தை புறக்கணித்து வெளிக்காட்டியிருக்கிறார்கள். 

கோரிக்கைகளும் தீர்மானமும் நியாயமானவை. 

ஆனால் ஹர்த்தால் என்று சொல்லி அன்றாடம் உழைக்கும் ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பதைத்தான் இப்போது யாருமே விரும்பவில்லை.

மேலுள்ள படங்கள் நெல்லியடி அல்லது பருத்தித்துறைப் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கலாம். அங்கு கடையடைப்பு நடை பெற்றது உண்மையே தவிர யாழ் நகரில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஜீவன் சிவா said:

கோரிக்கைகளும் தீர்மானமும் நியாயமானவை. 

ஆனால் ஹர்த்தால் என்று சொல்லி அன்றாடம் உழைக்கும் ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பதைத்தான் இப்போது யாருமே விரும்பவில்லை.

மேலுள்ள படங்கள் நெல்லியடி அல்லது பருத்தித்துறைப் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கலாம். அங்கு கடையடைப்பு நடை பெற்றது உண்மையே தவிர யாழ் நகரில் இல்லை.

கடைசியாக உள்ள படத்தில் KKS ROAD என்று உள்ளதே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைக்கப்பட்ட படங்களில் திருநெல்வேலிச்சந்தி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்கள் தெளிவாகத் தெரிகின்றனன். ஏனையவை தெளிவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

கிழக்கின் போராட்டத்திற்கு யாழ்மக்களின் ஆதரவு இல்லையென்பது தெளிவாகிறது. ஆகவே இவர்களின் தேவையில்லாத இப்போராட்டமும் கோரிக்கைகளும் தீர்மானமும் தோற்கடிக்கப்படவேண்டுமென்பதே பெரும்பான்மைத் தமிழர்களின் விருப்பமென்று யாழ்மக்கள் இப்போராட்டத்தை புறக்கணித்து வெளிக்காட்டியிருக்கிறார்கள். 

அது  சரி

இந்தப்போராட்டத்துக்கு  அடங்கமாட்டோம்  என்று  பெயர்  வைத்திருக்கிறார்கள்

அப்படியென்றால்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிழக்கில் முன்னெடுக்கப்படும் மாபெரும் பேரணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைக்கப்பட்ட படங்களில் திருநெல்வேலிச்சந்தி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்கள் தெளிவாகத் தெரிகின்றனன். ஏனையவை தெளிவில்லை. 

கிழக்கில் நடத்தப்பட்ட பேரணிக்கு ஆதரவாக மட்டுநகர் முஸ்லீம் வர்த்தகர்கள் அடங்கலாக  கடையடைப்புச் செய்துள்ளார்கள். வடக்கில் தமிழர்கள் இதுபற்றிக் கவலைப்படவில்லை என்பதோ, ஆதரவு நல்கவில்லையென்பதோ மிகவும் வருத்தமானது. 

ஆனால், யாழிலும் கடையடைப்பு நடந்துதான் இருக்கிறது. அப்படியில்லை என்று நிரூபிப்பதன்மூலம் செய்ய எத்தனிப்பது போராடும் மக்களுக்கான ஆதரவு யாழ் மக்களிடையே இல்லையென்று திருப்திப்பட்டுக் கொள்வதற்கும், சுமூக வாழ்வு பாதிப்படைவதை மக்கள் விரும்பவில்லை எனும் அதே பல்லவியை மீண்டும் உச்சரிப்பதற்கும்தான். 

சுமூக வாழ்வு மீண்டும் திரும்புவதாலும், அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வு மேம்படுவதாலும் மட்டுமே மக்களுக்கான விடுதலையோ மீட்சியோ கிடைத்துவிடப்போவதில்லை என்பதற்கு இன்று மட்டக்களப்பில் நடந்த பேரணி உற்பட தாயகமெங்கும் இன்றுவரை நடந்துவரும் மக்களின் நியாயமான போராட்டங்களே சாட்சி. 

ஆனால், இப்போராட்டங்கள்கூட புலம்பேர் புலிவால்களின் தூண்டுதலால்த்தான் நடக்கின்றன என்று எம்மில்பலர் உரிமைகோரினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.

பாவம் மக்கள், புலம்பேர் புலிவால்களைக் காரணம் காட்டியே அவர்களின் நியாயமான போராட்டங்களும் ஒன்றில் தட்டிக்கழிக்கப்படுகின்றன அல்லது உதாசீனப்படுத்தி இழிவாக்கப்படுகின்றன. ஏனென்றால், எம்மில் பலர் மக்களுக்கு இன்றும் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. ஏனென்றால், புலிவால்களுக்கு மட்டுமே தெரியும் இப்பிரச்சினைகள் மக்களுக்கு இல்லையென்பதே அவர் வாதம்.

Link to comment
Share on other sites

உலகில் உள்ள எந்த மனிதனுக்கும், தனக்கு தெரிந்தவையைவிட, தெரியாதவைதான் அதிகம்.

******* 

தேசியத் தலைவர் அறியாததை,  கருணா அறிந்து வைத்தபடியினால்தான், கிழக்கில் ஒரு முள்ளிவாய்க்கால் வருவதை விவேகமாக தவிர்த்தார்.

Link to comment
Share on other sites

2 hours ago, thulasie said:

தேசியத் தலைவர் அறியாததை,  கருணா அறிந்து வைத்தபடியினால்தான், கிழக்கில் ஒரு முள்ளிவாய்க்கால் வருவதை விவேகமாக தவிர்த்தார்.

அப்படியானால் கருணாவுக்கு பதாகை எழுதி வரவேற்பதைவிட்டு... 'பிரபாகரன் மீண்டும் வரவேண்டும்.' என்பதுபோல் எழுதியிருக்கும் அந்தப் பதாகை...???

batti__11_.jpg

Link to comment
Share on other sites

24 minutes ago, Paanch said:

அப்படியானால் கருணாவுக்கு பதாகை எழுதி வரவேற்பதைவிட்டு... 'பிரபாகரன் மீண்டும் வரவேண்டும்.' என்பதுபோல் எழுதியிருக்கும் அந்தப் பதாகை...???

batti__11_.jpg

அந்தப் பதாதைகளை எல்லாம், புலிவால்களால் எழுதிக்கொடுத்து, அந்த அப்பாவிச் சனங்களின் கரங்களில் ஏந்த வைத்திருக்கிறார்கள்.

அந்த அப்பாவிச் சனங்கள் பாவம்.

Link to comment
Share on other sites

26 minutes ago, thulasie said:

அந்தப் பதாதைகளை எல்லாம், புலிவால்களால் எழுதிக்கொடுத்து, அந்த அப்பாவிச் சனங்களின் கரங்களில் ஏந்த வைத்திருக்கிறார்கள்.

அந்த அப்பாவிச் சனங்கள் பாவம்.

இதை அப்பாவி சனங்கள் வந்து உங்களுக்கு சொன்னார்களா?

Link to comment
Share on other sites

15 minutes ago, thulasie said:

அந்தப் பதாதைகளை எல்லாம், புலிவால்களால் எழுதிக்கொடுத்து, அந்த அப்பாவிச் சனங்களின் கரங்களில் ஏந்த வைத்திருக்கிறார்கள்.

அந்த அப்பாவிச் சனங்கள் பாவம்.

நல்லகாலம் எழுத்துக்கள் சற்று மறைந்து தெரியும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வேறு ஏதாவது எழுதிவிடுவீர்களோ என்று எண்ணியிருந்தேன்..... ஆனாலும் உங்கள் புலிவாந்தி அதற்கு இடம் கொடுக்கவில்லை. 🤮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியிலும் கதவடைப்பு!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, கிளிநொச்சி மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

Kilinochchi-Harthal-15.png?resize=720%2CKilinochchi-Harthal-2.png?resize=720%2C4Kilinochchi-Harthal-7.png?resize=720%2C4Kilinochchi-Harthal-12.png?resize=720%2C

மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

https://newuthayan.com/story/16/கிளிநொச்சியிலும்-கதவடைப.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, thulasie said:

அந்தப் பதாதைகளை எல்லாம், புலிவால்களால் எழுதிக்கொடுத்து, அந்த அப்பாவிச் சனங்களின் கரங்களில் ஏந்த வைத்திருக்கிறார்கள்.

அந்த அப்பாவிச் சனங்கள் பாவம்.

சிலோனிலை புலிவால்கள் இப்பவும் இருக்கா? சுளகாலை அடிச்சு விரட்டேலாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடும் வெய்யிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்காக குரல் கொடுத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

கடந்த சில தினங்களில் வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்ட மக்கள் எழுச்சி தமிழின படுகொலைகாரர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் எடுபிடிகளுக்கும் கசப்பானவை என்பது வெளிப்படையாக தெரிகிறது!

Link to comment
Share on other sites

On 3/19/2019 at 1:06 PM, MEERA said:

கடைசியாக உள்ள படத்தில் KKS ROAD என்று உள்ளதே...

On 3/19/2019 at 1:36 PM, ragunathan said:

இணைக்கப்பட்ட படங்களில் திருநெல்வேலிச்சந்தி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்கள் தெளிவாகத் தெரிகின்றனன். ஏனையவை தெளிவில்லை. 

இந்த இடங்கள் எவை என்பதை கண்டறிய எனக்கு நேரம் தேவை 

ஆனால் படங்கள் எடுக்கப்பட்ட திகதி + GPS  LOCATION + நேரம் exif  file இல் அழிக்கப்பட்டுள்ளன 

Link to comment
Share on other sites

நெல்லியடி + பருத்தித்துறை + அச்சுவேலி பகுதியில் கடை அடைப்பு நடந்தது உண்மையே.

மிகுதி - கப்ஸா 

விதண்டாவாதத்தையும் புலிக்கூச்சலையும் விடுத்து உங்களின் நெருங்கிய சொந்தங்களிடமே கேட்டுப்பாருங்கள்.

அப்பவும் புரியாவிட்டால் - அரோகரா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2019 at 10:37 AM, thulasie said:

அந்தப் பதாதைகளை எல்லாம், புலிவால்களால் எழுதிக்கொடுத்து, அந்த அப்பாவிச் சனங்களின் கரங்களில் ஏந்த வைத்திருக்கிறார்கள்.

அந்த அப்பாவிச் சனங்கள் பாவம்.

புலிவால்கலாலேயே  இதெல்லாம் செய்ய முடிகிறது என்றால் 

உடம்பு மூஞ்சி கை  கால் எல்லாம் வைத்துக்கொண்டு எவ்ளவு நாளும் 
நீங்கள் புடுங்கினது என்ன? 

இப்படி ஒரு கேடு கெட்ட வாழ்க்கை என்றால் 
சாதாரண மனிதர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள். 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இல்லாத இந்தப் பத்து வருடங்களில் குறைகூறிக்கொண்டிருப்பதுதான் புலியெதிர்ப்பாளர்களின் பொழுதுபோக்கு. 

மக்கள் தமக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று அமைதியான வழியில் போராட இருக்கின்ற ஜனநாயக உரிமையையும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் கூட காணமுடியாத அளவிற்கு  சிலரின் கண்ணுக்குள் புலிதான் நிற்கின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.