Jump to content

உங்கள் ஊரவரும் இப்பிடியா????

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணுவையூர் என்று அழைக்கப்படும் என்னூர் இணுவில் அன்றுதொட்டுக் கலைகளுக்குப் பெயர்போனது. அளவுக்கதிகமான ஆசிரியர்களைக் கொண்டது. புகழ்பெற்ற வீரமணி ஜயர் தொடக்கம் தவில் வித்துவான் தட்சணாமூர்த்தி, எழுத்தாளர்கள் இவர்களோடு பல கல்விமான்களையும் கொண்ட கோயில்கள், தோட்டங்கள் என ஊர்முழுதும் செழிப்பான சிறப்பான ஊர். 

அதுமட்டுமல்லாது ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் பட்டப்பெயர்கள் வைத்துக் கூப்பிடுவதிலும் கைதேர்ந்தவர்கள் எம்மூரார். கிட்டத்தட்ட நூறு பட்டப்பெயர்கள். இருப்பதாக என் அம்மா கூறியிருப்பினும் எனக்குத் தெரித்தவை, என்நினைவில் நிற்பவை இவ்வளவே. 

நீங்களும் உங்கள் ஊரவரின் பட்டப் பெயர்களைப் பகிரலாம்.

1.தொய்யில் கணபதிப்பிள்ளை

2. உலுப்பி ராசைய்யா

3. பானைகட்டி ராசா

4. பூனை கந்தைய்யா

5. வடக்கன் பெரியதம்பி

6. சொத்தி வைரவப்பிள்ளை

7. நுள்ளான் பொன்னுத்துரை

8. பினாட்டர் அமிர்தலிங்கம்

9. குடுகுடு மணியம்

10. வெள்ளைத் துரையப்பா

11. கடுக்கன் ரத்தினம்

12. காவோலை செல்லர்

13. கோடாச் சண்முகம்

14. ஒழுக்கர் சண்முகலிங்கம்

15. விசர் மூத்தம்பி

16. அறுதலி தம்பைய்யா

17. உக்கல் செல்லைய்யா

18. பூஞ்சான் கணபதிப்பிள்ளை

19. வண்டில் ராசா

20. கிளாக்கர் பொன்னுத்துரை

21. பட்டினி வேலுப்பிள்ளை

22. பிலாக்காய் பொன்னுத்துரை

23. பிளாட்டர் கந்தைய்யா

24. தோண்டி நடராசா

25. தேங்காய் ஆறுமுகம்

26. மைக்கூடு நாகலிங்கம்

27. பிரால்வாய் நடராசா

28. வளையம் சுப்பைய்யா

29. புட்டர் தம்பையா

30. மாங்கண்டுச் சீவரத்தினம்

31. வடையர் நடராசா

32. பழக்கடை வேலுப்பிள்ளை

33. புக்கை நடராசா

34. பொறியர் பொன்னுத்துரை

35. கூத்துக்காற நாகலிங்கம்

36. இயமன் ராமனாதி

37. உக்கல் நடராசா

38. பாய்க்கடைக் கந்தைய்யா

39. வெடியர் சின்னத்துரை

49. மண்டக்கண் செல்லர்

50. பேய்க்குஞ்சு சின்னத்துரை

51. அகழான் கந்தைய்யா

52. ஏச்சண்டர் கதிர்காமர்

53. அத்தை கந்தைய்யா

54. பண்டாரி செல்லர்

இதைவிட ஞாபகம் வந்தால் எழுதிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இணுவையூர்

சுமே எனது மனைவியின் சின்னையாவும் இணுவில் தான்.செலவநாயகம் ஆசிரியர்.

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்களும் உங்கள் ஊரவரின் பட்டப் பெயர்களைப் பகிரலாம்.

ஆறுமுகநாவலர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான  பெயர்கள்

அவர்களது தொழில் சார்ந்து

அல்லது அவர்களது  உடல் குறைபாடு  சார்ந்து  வந்தாகவே  இருக்கும்

அதனால்  எழுத  விரும்பவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இப்படியான  பெயர்கள்

அவர்களது தொழில் சார்ந்து

அல்லது அவர்களது  உடல் குறைபாடு  சார்ந்து  வந்தாகவே  இருக்கும்

அதனால்  எழுத  விரும்பவில்லை

அண்ணா உங்களை எழுதச்சொல்லி நான் கட்டாயப் படுத்தேல்லை. ஆனால் வடிவா வாசியுங்கோ

உங்களுக்கு தொழிற் பெயர்கள் என்றால் என்னவென்று தெரியாது என்று நினைக்கிறன்

4 minutes ago, ஈழப்பிரியன் said:

சுமே எனது மனைவியின் சின்னையாவும் இணுவில் தான்.செலவநாயகம் ஆசிரியர்.

ஆறுமுகநாவலர்.

4 minutes ago, ஈழப்பிரியன் said:

சுமே எனது மனைவியின் சின்னையாவும் இணுவில் தான்.செலவநாயகம் ஆசிரியர்.

ஆறுமுகநாவலர்.

செல்வநாயகம் ஆசிரியர் கோண்டாவிலா?? இணுவிலா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

6. சொத்தி வைரவப்பிள்ளை

7. நுள்ளான் பொன்னுத்துரை

10. வெள்ளைத் துரையப்பா

15. விசர் மூத்தம்பி

16. அறுதலி தம்பைய்யா

17. உக்கல் செல்லைய்யா

18. பூஞ்சான் கணபதிப்பிள்ளை

21. பட்டினி வேலுப்பிள்ளை

49. மண்டக்கண் செல்லர்

50. பேய்க்குஞ்சு சின்னத்துரை

இதைவிட ஞாபகம் வந்தால் எழுதிறன்

இவை மனித  குறைபாடு  சார்ந்தவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

செல்வநாயகம் ஆசிரியர் கோண்டாவிலா?? இணுவிலா???

என்னம்மா நீங்க இணுவில் என்கிறீர்கள் அவரைத் தெரியாமல் இருக்கிறீர்கள்.அவர் இறந்து பல வருடங்களாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றயவை  தொழில் சார்ந்தவை

11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணா உங்களை எழுதச்சொல்லி நான் கட்டாயப் படுத்தேல்லை. ஆனால் வடிவா வாசியுங்கோ

உங்களுக்கு தொழிற் பெயர்கள் என்றால் என்னவென்று தெரியாது என்று நினைக்கிறன்

செல்வநாயகம் ஆசிரியர் கோண்டாவிலா?? இணுவிலா???

எதுக்கு  கோபிக்கிறீர்கள்???

அப்படித்தான்  பட்டப்பெயர்கள்  அல்லது  சுடடுப்பெயர்கள்  வந்தன

அது  எனது கருத்து  மட்டுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

என்னம்மா நீங்க இணுவில் என்கிறீர்கள் அவரைத் தெரியாமல் இருக்கிறீர்கள்.அவர் இறந்து பல வருடங்களாகிவிட்டது.

நான் ஊரை விட்டு வந்து 34 ஆண்டுகள் முடியுது. நான் நான்காம் வகுப்புப் படிக்கும் போது எமக்கு ஒருசெல்வநாயகம் ஆசிரியர் படிப்பித்தார்.அவர் கோண்டாவிலில் இருந்துதான் வருவார். இன்னும் இரண்டு பள்ளிகள் எம்மூரில் இருந்தன. அங்கு அப்பெயரில் யாரும் கற்பித்தார்களோ தெரியவில்லை.

5 hours ago, விசுகு said:

இவை மனித  குறைபாடு  சார்ந்தவை

நான் இதில் இப்பதிவை இட்டதற்குக் காரணமே வேறு. ஆனால் நீங்கள் சிந்தித்துப் பார்க்காது எங்கே குறை பிடிக்கலாம் என்று போட்டுள்ளீர்கள்.

மற்றவர்களும் வந்து கருத்துக்களை எழுதிய பிற்பாடு ஏன் அந்தப் பட்டங்கள் வந்தன என எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் இதில் இப்பதிவை இட்டதற்குக் காரணமே வேறு. ஆனால் நீங்கள் சிந்தித்துப் பார்க்காது எங்கே குறை பிடிக்கலாம் என்று போட்டுள்ளீர்கள்.

மற்றவர்களும் வந்து கருத்துக்களை எழுதிய பிற்பாடு ஏன் அந்தப் பட்டங்கள் வந்தன என எழுதுகிறேன்.

சொத்தி வைரவப்பிள்ளை அண்ணை வாங்கோ!
உக்கல் செல்லையா அண்ணை  எப்பிடி சுகமாய் இருக்கிறியளே?
விசர் மூத்ததம்பி அண்ணை உங்களை கண்டுகனகாலம்!!!
அறுதலி தம்பையா எங்கை கடைக்கே போறாய்?
ஹாய் நுள்ளான் பொன்னத்துரை கவ் ஆர் யூ?4
பிரால்வாய் நடராசா அண்ணை என்ன இப்பிடி மெலிஞ்சு போனியள்?
இஞ்சை பார் மண்டைக்கண் செல்லரை!!!!!!
டேய் புக்கை நடராசா எங்கை கோயிலுக்கே போறாய்?
பண்டாரி செல்லர் மாலை எல்லாம் கட்டியாச்சோ?

இதெல்லாம் வாசிக்க வடிவுதான்....ஆனால் இதை சம்பந்தப்பட்டவர்களோடை நேருக்குநேர் பகிடிக்கும் கதைச்சுப்பாருங்கோ....அப்ப தெரியும் அதின்ரை விக்கனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

இதெல்லாம் வாசிக்க வடிவுதான்....ஆனால் இதை சம்பந்தப்பட்டவர்களோடை நேருக்குநேர் பகிடிக்கும் கதைச்சுப்பாருங்கோ....அப்ப தெரியும் அதின்ரை விக்கனம்.

ஏன் முன்னர் பட்டப்பெயரில்லாத ஆசிரியர்கள் யார்?

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் ஊரை விட்டு வந்து 34 ஆண்டுகள் முடியுது. நான் நான்காம் வகுப்புப் படிக்கும் போது எமக்கு ஒருசெல்வநாயகம் ஆசிரியர் படிப்பித்தார்.அவர் கோண்டாவிலில் இருந்துதான் வருவார். இன்னும் இரண்டு பள்ளிகள் எம்மூரில் இருந்தன. அங்கு அப்பெயரில் யாரும் கற்பித்தார்களோ தெரியவில்லை.

இவர் இணுவிலில் இருந்தார்.யாழ் இந்துவில் விஞ்ஞானம் படிப்பித்த போது ஒரு புத்தகமும் எழுதியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனை மிரிச்ச அரிய புத்திரன்....!

மனுசன் தப்பினது அருந்தப்பு..!

ஆனால் ஆளின்ர  சேப் தான் கொஞ்சம் மாறிப் போச்சுது....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

...

நீங்களும் உங்கள் ஊரவரின் பட்டப் பெயர்களைப் பகிரலாம்.

'மதுரை பொறியாளன்' ராசவன்னியன்..!  😍 🤣 🤗😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது சிறுவயதில் வீட்டிற்கு சற்று தள்ளி இருக்கும் பலசரக்கு கடைக்கு பொருட்கள் வாங்கி வர தாயார் என்னை அனுப்புவார்.  ஒவ்வொரு தடவையும் மனம் திக்கு திக்கு எண்ட படிதான் போவேன்.  காரணம் இலக்கண வாத்தியான் -  அந்த கடை முதலாளியை ஊரவர் அழைக்கும் பெயர்.

 எப்ப போனாலும் கணக்கு இலக்கணம் ஆங்கிலம் என கேள்வி கேட்டு அழப்பண்ணமால் விடமாட்டார் .

உதாரணத்திற்கு ஒண்டு ( இப்பவும்  40 , 45 வருடங்களின் பின்னரும் ஞாபகம் இருக்கு) . " தசமாதானம் என்பதால் நீ விளங்கிக் கொள்வது என்ன"   எண்டு இருந்தார் போல மனிசன் கேட்கும்.  தசமாதானப் பெருக்களிலும் பிரித்தலிலும் அல்லாடிக் கொண்டிருக்கும் 5 ம் 6 ( 7?)  ம்  வகுப்புப் பையனுக்கு     இது வேறு தேவையா . அன்றைய கடை session கடைசியில் அழுகையில் தான் முடியும்.

இப்போது நினைத்துப் பார்த்தால் அடிநாவில் இனிக்கின்றது.      இலக்கண வாத்தியானின் உண்மையான பெயர் என்னவென்று யாரிடமாவது இப்பவெண்டாலும் கேட்டு அறிந்து கொள்ள  வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ராசவன்னியன் said:

'மதுரை பொறியாளன்' ராசவன்னியன்..!  😍 🤣 🤗😜

இதை எங்கடை ஊர்ப்பாசையிலை சொல்லுறதெண்டால்.....
இஞ்சை பார் எஞ்சினியர் ராசர்  அன்னநடை நடந்து போறார்...🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

இதை எங்கடை ஊர்ப்பாசையிலை சொல்லுறதெண்டால்.....
இஞ்சை பார் எஞ்சினியர் ராசர்  அன்னநடை நடந்து போறார்...🤣

ஊரில ஒரு பிரச்சனை
வாத்தியார் என்றால் அவர் வாத்தியாராகவே இறப்பார்.
பாங்கர் என்றால் பாங்கலாகவே இறப்பார்.
அப்படி என்ன தொழில் தொடங்கினாலும் அதிலேயே வாழ்நாளை ஓட்டி விடுவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஊர் காஞ்ச ஊர். ஒருத்தரும் அஞ்சாம் வகுப்புக்கு மேல படிக்கேல்ல. ஆனா ஒண்டு, இப்படி கீழ்த்தரமா எங்கட ஊரில உடல் ஊனத்தை பழிச்சு பட்டம் வக்கிற(ர ) வழக்கம் இல்லை.

We were somewhat cultured in that sense, I suppose.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2019 at 2:00 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

12. காவோலை செல்லர்

"காவோலை செல்லர்" எண்ட பட்டப்பெயர் வந்ததுக்கான காரணத்தை மாண்புமிகு மொசொப்பொத்தேமியா சுமேரியர் அவர்கள் நீண்டதொரு விளக்கத்தை தரவேண்டும் என கள்ளுக்கொட்டில் அவை கோரிக்கை வைக்கின்றது.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிலா பொன்னுத்துரை

பீடி பீதாம்பரம்

கஞ்சா கருப்பு

கொக்கேய்ன் கோபாலபிள்ளை

அபின் அழகுசுந்தரம்

பிரவுன்சுகர் பேரம்பலம்

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

இரும்பு மனிதன் நாகநாதன்.

இது தேப்பன் எல்லே...😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2019 at 10:16 PM, குமாரசாமி said:

சொத்தி வைரவப்பிள்ளை அண்ணை வாங்கோ!
உக்கல் செல்லையா அண்ணை  எப்பிடி சுகமாய் இருக்கிறியளே?
விசர் மூத்ததம்பி அண்ணை உங்களை கண்டுகனகாலம்!!!
அறுதலி தம்பையா எங்கை கடைக்கே போறாய்?
ஹாய் நுள்ளான் பொன்னத்துரை கவ் ஆர் யூ?4
பிரால்வாய் நடராசா அண்ணை என்ன இப்பிடி மெலிஞ்சு போனியள்?
இஞ்சை பார் மண்டைக்கண் செல்லரை!!!!!!
டேய் புக்கை நடராசா எங்கை கோயிலுக்கே போறாய்?
பண்டாரி செல்லர் மாலை எல்லாம் கட்டியாச்சோ?

இதெல்லாம் வாசிக்க வடிவுதான்....ஆனால் இதை சம்பந்தப்பட்டவர்களோடை நேருக்குநேர் பகிடிக்கும் கதைச்சுப்பாருங்கோ....அப்ப தெரியும் அதின்ரை விக்கனம்.

நீங்கள் எழுதினத்தை பார்த்து வயிறு நோகச் சிரிச்சாச்சு.நீங்கள் போய் அவைக்கு முன்னால நிண்டு கூப்பிடுறதுபோல கற்பனை செய்து  பார்த்தன்.😀
பட்டம் எண்டுறதே அவைக்குத் தெரியாமல் வச்சு மற்றவர்கள் கூப்பிடுவதுதானே குசா.

On 3/19/2019 at 10:31 PM, ஈழப்பிரியன் said:

ஏன் முன்னர் பட்டப்பெயரில்லாத ஆசிரியர்கள் யார்?

இவர் இணுவிலில் இருந்தார்.யாழ் இந்துவில் விஞ்ஞானம் படிப்பித்த போது ஒரு புத்தகமும் எழுதியிருந்தார்.

அம்மாவுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும். நான் மறந்துவிட்டேன் என நினைக்கிறான்.
 
On 3/19/2019 at 10:35 PM, புங்கையூரன் said:

ஆனை மிரிச்ச அரிய புத்திரன்....!

மனுசன் தப்பினது அருந்தப்பு..!

ஆனால் ஆளின்ர  சேப் தான் கொஞ்சம் மாறிப் போச்சுது....!

என்ன சொல்லுறியள் எண்டு விளங்கவே இல்லை எனக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ராசவன்னியன் said:

'மதுரை பொறியாளன்' ராசவன்னியன்..!  😍 🤣 🤗😜

4 hours ago, குமாரசாமி said:

இதை எங்கடை ஊர்ப்பாசையிலை சொல்லுறதெண்டால்.....
இஞ்சை பார் எஞ்சினியர் ராசர்  அன்னநடை நடந்து போறார்...🤣

எங்கட ஊர்ல எண்டால் வன்னி இஞ்சினியர் எண்டுதான் சொல்லியிருப்பினை

3 hours ago, goshan_che said:

எங்கட ஊர் காஞ்ச ஊர். ஒருத்தரும் அஞ்சாம் வகுப்புக்கு மேல படிக்கேல்ல. ஆனா ஒண்டு, இப்படி கீழ்த்தரமா எங்கட ஊரில உடல் ஊனத்தை பழிச்சு பட்டம் வக்கிற(ர ) வழக்கம் இல்லை.

We were somewhat cultured in that sense, I suppose.

அஞ்சாம் வகுப்புக்கு மேல படிக்காத ஆட்களுக்கு பட்டம் வைக்கும் திறமை எப்படி வரும்  கோசான்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

"காவோலை செல்லர்" எண்ட பட்டப்பெயர் வந்ததுக்கான காரணத்தை மாண்புமிகு மொசொப்பொத்தேமியா சுமேரியர் அவர்கள் நீண்டதொரு விளக்கத்தை தரவேண்டும் என கள்ளுக்கொட்டில் அவை கோரிக்கை வைக்கின்றது.😂

முன்பு எங்கள் ஊரில் பனங்காணிகள் அதிகம் இருந்தது. இவர் ஊரார் வீட்டுக் காணிகளில் எல்லாம் விழுந்துகிடக்கும் காவோலைகளை பொறுக்கி தன்வீட்டில் கொண்டுபோய் சேர்த்துவிடுவாராம். இவர் வெறுங் காணிகளில் இருந்து அவற்றைப் பொறுக்கும்போது காணிக்குச் சொந்தக்காரர் யாரும் கண்டது கிடையாதாம். ஆனால் வேறு ஊரவர்கள் இவர் வீட்டில் வந்து காவோலை வாங்கிக்கொண்டு போவார்களாம். அவர் போகும்போது அப்பெயரைச் சொல்லி கூப்பிடடாலும் நின்று கோபப்படாமல் பதில் சொல்லிவிட்டுப் போவாராம்.

3 hours ago, goshan_che said:

பிலா பொன்னுத்துரை

பீடி பீதாம்பரம்

கஞ்சா கருப்பு

கொக்கேய்ன் கோபாலபிள்ளை

அபின் அழகுசுந்தரம்

பிரவுன்சுகர் பேரம்பலம்

😂

உது நீங்கள் சினிமாப் படங்களில வாற பட்டங்களை எல்லா சொல்லுறியள் 😂

2 hours ago, ஈழப்பிரியன் said:

இரும்பு மனிதன் நாகநாதன்.

இதாரது ????

2 hours ago, குமாரசாமி said:

இது தேப்பன் எல்லே...😂

ஆற்றை தேப்பன் ???

17 hours ago, சாமானியன் said:

எனது சிறுவயதில் வீட்டிற்கு சற்று தள்ளி இருக்கும் பலசரக்கு கடைக்கு பொருட்கள் வாங்கி வர தாயார் என்னை அனுப்புவார்.  ஒவ்வொரு தடவையும் மனம் திக்கு திக்கு எண்ட படிதான் போவேன்.  காரணம் இலக்கண வாத்தியான் -  அந்த கடை முதலாளியை ஊரவர் அழைக்கும் பெயர்.

 எப்ப போனாலும் கணக்கு இலக்கணம் ஆங்கிலம் என கேள்வி கேட்டு அழப்பண்ணமால் விடமாட்டார் .

உதாரணத்திற்கு ஒண்டு ( இப்பவும்  40 , 45 வருடங்களின் பின்னரும் ஞாபகம் இருக்கு) . " தசமாதானம் என்பதால் நீ விளங்கிக் கொள்வது என்ன"   எண்டு இருந்தார் போல மனிசன் கேட்கும்.  தசமாதானப் பெருக்களிலும் பிரித்தலிலும் அல்லாடிக் கொண்டிருக்கும் 5 ம் 6 ( 7?)  ம்  வகுப்புப் பையனுக்கு     இது வேறு தேவையா . அன்றைய கடை session கடைசியில் அழுகையில் தான் முடியும்.

இப்போது நினைத்துப் பார்த்தால் அடிநாவில் இனிக்கின்றது.      இலக்கண வாத்தியானின் உண்மையான பெயர் என்னவென்று யாரிடமாவது இப்பவெண்டாலும் கேட்டு அறிந்து கொள்ள  வேண்டும்.

நீங்கள் கடைப்பக்கம் போக மாட்டன்  என்று அம்மாவிடம் அடம்பிடிக்காமல் போயிருக்கிறீயளே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் எழுதினத்தை பார்த்து வயிறு நோகச் சிரிச்சாச்சு.நீங்கள் போய் அவைக்கு முன்னால நிண்டு கூப்பிடுறதுபோல கற்பனை செய்து  பார்த்தன்.😀
பட்டம் எண்டுறதே அவைக்குத் தெரியாமல் வச்சு மற்றவர்கள் கூப்பிடுவதுதானே குசா.

அம்மாவுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும். நான் மறந்துவிட்டேன் என நினைக்கிறான்.
 
என்ன சொல்லுறியள் எண்டு விளங்கவே இல்லை எனக்கு.

அரியபுத்திரன் நெடுந்தீவைச் சேர்ந்தவர்.

சிறீமாவோ காலத்தில .....மிளகாய் நடுவதற்காக வன்னிக்குப் போய்...காவலுக்கு இருக்கிற நேரத்தில......அந்தப் பக்கமா....வந்த யானையொன்று  அவரைத் தாக்கி மிதித்து விட்டது!

அதிலிருந்து அவர் தப்பி விட்ட போதிலும்....அவரது மார்புப்பகுதி.....நசிந்து போய் அவரது வடிவம் கொஞ்சம் சப்பையாகி விட்டது!

அவரை...யானை மிதிச்ச அரியபுத்திரன் என்று அழைப்பார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இது தேப்பன் எல்லே...😂

ஆமாம் மகன் பெயர் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.