யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

பிரெக்ஸிற் தாமதத்துக்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ள பிரதமர்!

Recommended Posts

பிரெக்ஸிற் தாமதத்துக்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ள பிரதமர்!

106080002_hi053007968-720x450.jpg

பிரெக்ஸிற்றை ஜூன் 30 ஆம் திகதி வரை பிற்போடுவதற்கான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரதமர் தெரேசா மே முன்வைப்பாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்துக்கு பின்னரும் பிரெக்ஸிற் பிற்போடப்படலாமெனவும் நம்பப்படுகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் இன்னும் 10 நாட்களில் மார்ச் 29 ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறவுள்ளது.

ஆனாலும் இதுவரை ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத காரணத்தால் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

பிரெக்ஸிற்றை தாமதப்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரெக்ஸிற் தாமதத்துக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது.

இந்நிலையில் தமது பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் அங்கீகரித்தால் குறுகியகால தாமதத்தையும் நிராகரித்தால் நீண்டகால தாமதத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவால் முன்வைக்கப்படும் பிரெக்ஸிற்றுக்கான எந்தவொரு கோரிக்கையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அங்கத்துவ நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/பிரெக்ஸிற்-தாமதத்துக்க-2/

 

Share this post


Link to post
Share on other sites

இவையள் படுற இழுபறியை பாத்துட்டு சண்டித்தனம் காட்டின ஐரோப்பிய யூனியன் கொசுறுநாடுகள் இப்ப வலு கப்சிப்.🤣

Share this post


Link to post
Share on other sites

hammond-720x450.jpg

பிரெக்ஸிற் விவகாரம்: கால அவகாசம் கோரும் பிரித்தானியா

பிரெக்ஸிற்றை பாதுகாக்க பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு குறுகிய கால அவகாசம் தேவை என பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹாம்மண்ட் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் 29 இல் பிரெக்ஸிற் இடம்பெறுவது சாத்தியமில்லை என்ற நிலையில் நிதியமைச்சர் இவ்விடயத்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

3 ஆம் கட்ட வாக்கெடுப்பில் ஆதரவு கிடைக்க வேண்டும் எனில் ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என சபாநாயகர் ஜோன் பர்க்கோ தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரெக்ஸிற் உடன்படிக்கையினை மேற்கொள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மேலும் 3 மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் என ஹம்மாண்ட குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான பொருளாதார உறவைப் பேணுவதற்கான திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் ஈடுபட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேறுவதற்கான  பிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பாக  சுமார் இரண்டரை வருடங்களாக பேசப்பட்டு வருகின்றது. எனினும்  இவ்விடயத்தில் ஓர் முடிவை எட்ட முடியாத நிலை காணப்படுகிறது. இது ஒப்பந்தமற்ற பிரெக்சிற்றுக்கு வழிவகுக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பிரெக்ஸிற்-விவகாரம்-கால/

Share this post


Link to post
Share on other sites

ஒப்பந்தத்தை அங்கீகரித்தால் மாத்திரமே பிரெக்ஸிற்றை தாமதப்படுத்த முடியும்: டொனால்ட் ரஸ்க்

donald-tusk-677x450.jpg

பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை பிரித்தானிய நாடாளுமன்றம் அங்கீகரித்தால் மாத்திரமே பிரெக்ஸிற் தாமதத்துக்கு தாம் ஒப்புக்கொள்வோமென ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் ரஸ்க் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தெரேசா மே-யால் முன்வைக்கப்பட்டுள்ள பிரெக்ஸிற் தர்மத்துக்கு பதிலளிக்கும் வகையில் டொனால்ட் ரஸ்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இன்று பிரதமர் தெரேசா மே-யால் முன்வைக்கப்பட்டுள்ள குறுகியகால பிரெக்ஸிற் தாமத்துக்கான கோரிக்கை சாத்தியமானதே.

பிரெக்ஸிற் தாமதத்துக்கான கோரிக்கையை ஏனைய 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொள்ளுமென நான் நம்புகிறேன்.

ஆனால் பிரித்தானிய நாடாளுமன்றம் பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை அங்கீகரித்தால் மாத்திரமே பிரெக்ஸிற் தாமதம் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒப்புக்கொள்ளப்படும்.

 

http://athavannews.com/ஒப்பந்தத்தை-அங்கீகரித்த/

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு