யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

உலகக்கிண்ண தொடரில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும்: ஐ.சி.சி. திட்டவட்டம்

Recommended Posts

உலகக்கிண்ண தொடரில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும்: ஐ.சி.சி. திட்டவட்டம்

India-Pakistan-ODI-720x450.jpg

புல்வாமா தீவிரவாத தாக்குதலையடுத்து எதிர்வரும் உலகக்கிண்ண தொடரில் இந்தியா பங்கேற்பது குறித்தும், பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து பல்வேறு வாத பிரதி வாதங்கள் எழுந்திருந்த நிலையில், இதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, காஷ்மீர்- புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இந்திய துணை இராணுவ படையினர் 44 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் ஒவ்வொரு இந்தியரையும் கடுமையாக பாதித்த நிலையில், இதனை பல இந்திய வீரர்களும் கடுமையாக கண்டித்தனர்.

குறிப்பாக இந்த புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இனி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடக்கூடாது எனவும், உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை இந்தியா அணி புறக்கணிக்க வேண்டும் எனவும் இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான கௌதம் கம்பீர், சவுரவ் கங்குலி உள்ளிட்ட வீரர்கள் வலியுறுத்தினர்.

இதேவேளை மறுபுறம் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்றோர் நிதானப்போக்கைக் கடைபிடிக்கவும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து, இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் சபையிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஒப்பந்தத்தின்படி உலகக்கிண்ண தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட்சன் கூறுகையில்,

“ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து நாட்டு உறுப்பினர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்தியிட்டு உள்ளனர்.

உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அப்படி விளையாடமல் போவது விதிமுறைக்கு மாறானது. ஒரு அணி மற்ற அணிகளுடன் விளையாடமல் போனதால் அதற்கான புள்ளிகள் வழங்கப்படும்.

இந்திய வீரர்கள் சமீபத்தில் இராணுவ தொப்பி அணிந்து விளையாடியது கொல்லப்பட்ட வீரர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதாகும். புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களின் குடும்பத்துக்கு உதவுவது அவசியமானது.

நாங்கள் விளையாட்டுடன் அரசியலை கலக்க விரும்பவில்லை. இது ஐ.சி.சி.யின் தெளிவான குறிக்கோள் ஆகும். இந்தியா- பாகிஸ்தான் இடையேயான நேரடி போட்டித் தொடர் இருநாட்டு அரசுகள் மற்றும் இரு நாட்டு கிரிக்கெட் சபைகள் சம்மந்தப்பட்டது” என கூறியுள்ளார்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

 

 

http://athavannews.com/உலகக்கிண்ண-தொடரில்-இந்தி/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு