Jump to content

40 கிலோகிராம் பிளாஸ்டிக்கை உட்கொண்டு உயிரிழந்த திமிங்கிலம் – கடலில் குவியும் கழிவுகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

3-PHILIPPINES-ENVIRONMENT-WHALE-PLASTIC-720x450.jpg

40 கிலோகிராம் பிளாஸ்டிக்கை உட்கொண்டு உயிரிழந்த திமிங்கிலம் – கடலில் குவியும் கழிவுகள்!

பயனற்ற பிளாஸ்டிக் கழிவுகளால் நாளாந்தம் சுற்றுச் சூழல் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது. பிளாஸ்டிக்கின் பாதிப்பு பற்றி அறியாத பல உயிரினங்கள அவற்றை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கின்றன.

அண்மையில் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் ஒரு சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 40 கிலோகிராம் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்ட வளர்ந்த திமிங்கிலம் ஒன்று உயிரிழந்து விட்டது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது பிளாஸ்டிக் பாவனையின் உச்ச கட்ட அழிவு நிலையை உணரக் கூடியதாக இருந்தது.

திமிங்கிலத்தின் குடலில் இருந்து கடல்வள பாதுகாப்பு அதிகாரியொருவர் தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பொருட்களையும், பைகளையும் வௌியில் எடுக்கிறார்.

வயிற்றுக் குடைவு மற்றும் கடும் வலியால் குறித்த திமிங்கிலம் பல நாட்களாக அவதிப் பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. இதன்போது குறித்த திமிங்கிலத்தை கடலில் இருந்து வௌியில் எடுத்து பரிசோதித்த போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

டவாவோ நகரில் இருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் தீவான மின்டனாவ்வில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த திமிங்கிலம் உயிரிழப்பதற்கு முன்னதாக இரத்த வாந்தியெடுத்ததாக கரையோர கடல் உயிரியல் மற்றும் பொருட்காட்சியின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்து அளவில் அடங்காத எண்ணிக்கையிலான பிளாங்டிக் கழிவுகளை அவர் அகற்றியுள்ளார்.

இந்தநிலையில், சீனா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 5 ஆசிய நாடுகள் சுமார் 60 சதவீதமான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை கடலில் கலக்க விடுவதாக 2015 ஆம் ஆண்டு கடல் பாதுகாப்பு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 61 திமிங்கிலங்கள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக கடல் உயிரின பாதுகாப்பு அதிகாரி பிளாட்ச்லே தெரிவித்துள்ளார்.

அவற்’றில் பெரும்பாலானவை மீன்பிடி வலைகள், டைனமைட் மீன்பிடி, மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் காரணமாக 57 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/40-கிலோகிராம்-பிளாஸ்டிக்க/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.