Jump to content

இலங்கைக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கெதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி

March 20, 2019

sri-lanka-vs-south-africa-1.jpg?resize=6இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளதை அடுத்து சூப்பர் ஓவர் மூலம் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து 135 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்றதனால் போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்ததை அடுத்து இரு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் தென்னாபிரிக்க அணி 14 ஓட்டங்களை பெற்றுக் கொண்டநிலையில் இலங்கை அணி 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டதனால் தென்னாபிரிக்க அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

http://globaltamilnews.net/2019/116457/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.