Jump to content

சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற்றங்களை உறுதிப்பத்தியது RTA


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரமான புல்மோட்டையில் தென்னமரவாடிக்கு அண்மையாகவுள்ள பகுதியில் இரண்டு புதிய சிங்கள குடியேற்றங்கள் சட்டவிரோதமான முறையில் உருவாக்கபட்டு வருகின்றமை (RTI) தகவல் அறியும் உரிமைசட்டம் மூலம் பெறப்பட்ட தகவலுக்கு அமைவாக உறுதிப்படுத்தபட்டுள்ளது .

__________________________.jpg?zoom=1.21

PEARL action என்ற ஆய்வுநிறுவனம் கடந்தவாரம் புல்மோட்டையை அண்டிய பகுதியில் நடைபெற்றுவரும் சிங்கள மயமாக்கல் சம்மந்தமாக ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது .இந்த அறிக்கையில் வடக்கு கிழக்கின் எல்லையில் தமிழ் கிராமங்களை அபகரித்து மேற்கொள்ளபட்டுவரும் திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பு தொடர்பில் பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

தென்னமராவடியிலிருந்து புல்மோட்டை செல்லும் வீதியில் புல்மோட்டை போககவெவ (B60) வீதியில் உள்ள  குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் வரும் இரண்டு தமிழ் கிராமங்களை ஆக்கிரமித்து  பௌத்த பிக்குகளின் ஆதரவுடனும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பாதுகாப்புடனும் வீடமைப்பு அதிகாரசபையால் வீடுகள்  அமைக்கப்பட்டு  குறித்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது .

54428420_266001937655316_824087623471254

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வரும் மாலனூர்(12ஆம் கட்டை)  ,மற்றும் ஏரமடு (10ஆம் கட்டை) ஆகிய தமிழ் கிராமங்களை ஆக்கிரமித்து வீதியின் ஓரமாக பல சிங்கள குடும்பங்கள் காடுகளை வெட்டி தற்காலிக  வீடுகளை அமைத்து குடியேறியுள்ள நிலையில் அவர்களுக்கு வீடமைப்பு அதிகாரசபையால் பிரதேச செயலகத்தின் எந்தவிதமான அனுமதிகளுமின்றி வீட்டு திட்டங்களுக்கான நிதி வழங்கப்பட்டு வீடுகளை அமைக்கும் வேலைகள் நடைபெற்றுவருகின்றது .

இந்த குடியேற்றங்கள் தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்களை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது (கோரிக்கை  பதிவு இலக்கம் 069)  . அதாவது குறித்த குடியேற்றங்கள் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் இடம்பெறுகின்றதா எனவும் ,  இந்த குடியேற்றங்களுக்காக தற்போது மைக்கப்பட்டுவரும் வீடுகள் தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகத்தின் அனுமதி  பெறப்பட்டதா ? இந்த பிரதேசம் குச்சவெளி பிரதேச செயலக ஆடசி பகுதிக்குள்  வருகின்றதா எனவும் கேள்விகள் கேட்க்கப்பட்டது.

இதற்க்கு குச்சவெளி பிரத்தேச செயலகத்தால்  பதில் வழங்கப்பட்டுள்ளது ,

54411868_300605467277409_725914714436219

அதாவது குறித்த பிரதேசத்தில் குறித்த நபர்களால் அத்துமீறல் மேற்கொள்ளப்பட்டே குடியேறினர் எனவும் ,குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் அத்துமீறி ஆட்சி செய்ததன் காரணமாக வெளியேற்றல் கட்டளை  பிறப்பிக்கப்பட்டதாகவும்  காணி பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதிகள் எவையுமின்றி வீடமைப்பு அதிகாரசபையால் வீடுகள் அமைக்கப்பட்டுவருவதாகவும் குறித்த பிரதேசம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குள் வருவதனால்   எமது பிரதேச செயலாகத்தாலேயே  நிர்வகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் அறியும் உரிமைசட்டம்  மூலம் பெறப்பட்ட தகவலுக்கு அமைவாக இங்கே அத்துமீறல் மேற்கொள்ளப்பட்டு குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுவருவது அம்பலத்துக்கு வந்துள்ளது . இந்த குடியேற்றங்களை அண்மையாக 24 மணிநேரமும் சிவில் பாதுகாப்பு திணைக்கள இராணுவத்தினர் இருவர் பாதுகாப்பு அரண் ஒன்றை அமைத்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு மாலனூர் பிரதேசத்தில் மேற்கொள்ளபட்டு வரும் குடியேற்றத்துக்கு “சாந்திபுர” எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

10______________________________________

அத்தோடு ஒவ்வொரு குடியேற்றத்துக்கும் அண்மையாக பௌத்த விகாரை மற்றும் புத்தர் சிலை என்பன அமைக்கப்பட்டுள்ளது. நான்கு பௌத்த பிக்குகளுக்கு மேற்பட்டவர்கள் இந்த பிரதேசத்துக்கு அண்மையாக 13ஆம் கட்டை  பகுதியில் மடம்  ஒன்றை அமைத்து அங்கே தங்கியிருந்து இந்த குடியேற்றங்களை மேற்கொண்டுவருவதாகவும் பௌத்த சின்னங்களை  புல்மோட்டையை சுற்றியுள்ள 30சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில்  அமைத்து வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கையும் கிழக்கியும் இணைக்கும் தமிழர் தாயக பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த குடியேற்றங்கள் தொடர்பில் எந்த தமிழ் மக்களின் மக்கள் பிரதிநிதிகள் எவரும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இந்த பிரதேசங்களுக்கு வந்துகூட பார்க்கவில்லை எனவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். (நன்றி வீரகேசரி)

http://globaltamilnews.net/2019/116492/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியொன்று இடம்பெறுவது தமிழ்ப் பிரதிநிதிகளுக்குத் தெரியுமா? 

இதைத் தடுக்க இதுவரை இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?

அல்லது, இவை அவர்களது செயற்பாட்டுப் பட்டியலில் இல்லையா?

ரணிலின் அரசைத் தக்கவைப்பதுடன் ஒப்பிடும்பொழுதோ அல்லது ஐ. நா வில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் கேட்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக குரல்கொடுப்பதுடன் ஒப்பிடும்பொழுதோ, இது முக்கியமானதாகத் தெரியவில்லையா?

இவற்றைத் தடுப்பது இவர்களின் கடமையில்லை என்றால், இவர்கள் கடமைதான் என்ன? 

அரசியல்க் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தேடுதல்ப் போராட்டம், ராணுவம் ஆக்கிரமித்து நிற்கும் தமது காணிகளிலிருந்து வெளியேற்றும் போராட்டம் என்று மக்கள் தாமே செய்துவரும் போராட்டங்களுடன் சேர்த்து, இந்த சிங்கள ஆக்கிரமிப்பிற்கெதிராகவும் போராடவேண்டுமென்று இந்தப் பிரதிநிதிகள் எதிர்பார்க்கிறார்களா? 

இப்படியே மக்களே தமக்கான போராட்டங்களை முன்னெடுத்தால், இவர்கள் எதற்கு ? மக்கள் போராடிப் பெற்றுக்கொள்ளும் சிறிய சிறிய வெற்றிகளையும் தமது தலையில் சூடிக்கொள்வதற்கா? 

சர்வதேசமே திரண்டிருக்கும் ஐ. நா வில் இன்று மொத்தப் பிரதிநிதிகளும் நிற்கிறீர்களே, ஒருவருக்காவது இந்த திட்டமிட்ட சிங்களப் பேரினவாதிகளின் குடியேற்றம் தொடர்பாகப் பேச வேண்டும் என்கிற எண்ணம் வந்ததா? சர்வதேசத்திற்குக் கொண்டுபோகிறோம், சர்வதேசத்திற்குக் கொண்டுபோகிறோம் என்று அடிக்கடி சொல்வீர்களே, அதை இப்போதாவது செய்யலாமே? எமதுவிடுதலைப் போராட்டத்திற்கான முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான எமது தாயகம் திட்டமிட்ட முறையில் சிங்கள பெளத்த பேரினவாதத்தால் ஆக்கிரமிக்கப்படுவது தெரிந்தும் மெளனமாகவிருந்தால், நீங்களிருப்பதில் தமிழர்கள் கண்ட பயன் என்ன? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.