Jump to content

கொத்தணிக் குண்டுகள் தடுப்பு சாசனத்தினை இலங்கையின் சட்டத்துக்குள் உள்ளடக்க அமைச்சரவை அங்கீகாரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொத்தணிக் குண்டுகள் தடுப்பு சாசனத்தினை இலங்கையின் சட்டத்துக்குள் உள்ளடக்க அமைச்சரவை அங்கீகாரம்

March 21, 2019

parliament.jpg?resize=580%2C348கொத்தணிக் குண்டுகள் தடுப்புத் தொடர்பான சாசனமான ஒஸ்லோ உடன்படிக்கையை இலங்கையின் சட்டத்துக்குள் உள்ளடக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையானது மனிதாபிமான ஆயுதக் களைவுகள் மேற்கொள்வதனை வரவேற்க முன்னிற்கும் அரசு என்னும் அடிப்படையில், சர்வதேசத்தில் பொறுப்பான பெயரைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒஸ்லோ உடன்படிக்கையை, இலங்கைச் சட்டத்துக்குள் உள்ளடக்கிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான யோசனை, பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதே இதற்கான அங்கிகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

 

http://globaltamilnews.net/2019/116555/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் எதுக்கு ஒப்பந்தம் போடுறாங்கள்?
அயல் நாடுகளுக்கிடையில் போர் வரும் என்று எதிர்பாக்கினமோ!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சுத்த மொள்ளமாரித்தனம். பாவிக்கக் கூடிய எல்லாவகை அழிவாயுதங்களையும் ஏவி, தமிழர்களை நரவேட்டையாடியபின்னர், ஆயுதங்களைக் களைந்தால் என்ன இல்லாவிட்டாலென்ன? எதுவுமே எமக்கு மீளக் கிடைக்கப்போவதில்லை.

சர்வதேச ஆயுதக் களைவு ஒப்பந்தத்தில் இடம்பெறுவதன் மூலம் நற்பெயரைச் சம்பாதிக்க முடியுமென்றால், இழைக்கப்பட்ட மனித நாகரீகத்திற்கெதிரான கொடூரங்களுக்கு சர்வதேச நீதியுடன் தண்டனை வழங்கலாமே? இது உங்களின் நற்பெயரை இன்னுமல்லவா மெருகூட்டும்? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.