Jump to content

20 சத குற்றி, 5 சதம் மிச்சம், Domino மற்றும் வைட் சுப்ரீமசி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடயம் பெரிதாக ஒன்றுமில்லை , வீட்டில் சில திருத்தவேலைகள் தற்சமயம் மேற்கொண்டு வருகிறோம் , நிலத்துக்கு tile  மாற்றும்  tradie  ஒரு வியட்னாமியன்.  சுட்டுப்போட்டாலும் ஒரு ஆங்கில வார்த்தை வராது. சொல்லக் சொல்ல    ஓமெண்டு   தலையாட்டிப்   போட்டு,    முழு இடத்துக்கும் primer பூசி விட்டுப் போய் விட்டான் , ஒரு இடமும் கால் வைக்க ஏலாது  .

அளவாகப் புளித்தப் போயிருந்த தோசையையுடன் நல்ல சாம்பலும் குழம்பும் சேர்த்துச் சாப்பிடலாம் என்றிருந்த எனக்கு மனைவியின்இன்றைக்கு நோ சமையல் விரும்பினால் pizza எடுங்கோ இல்லாட்டி சும்மா படுக்கப் போனாலும் ஓகே தான்என்ற வார்த்தைகள் விசரைத் தான்   கொடுத்தது.   இண்டைக்கு இடைக்கிடையே என்ன வேலை செய்யுறாங்கள் என்று supervise  பண்ணி களைச்சுப் போச்சு எண்ட  சாட்டில இரண்டு wine அடிக்கலாம் எண்டிருந்த எனக்கு சும்மா படுக்கப் போனாலும் சரி தான் எண்டால் எப்படி இருக்கும் .

“இல்லையப்பா pizza  எடுப்பம்”  எண்டு சொல்லி மகளைக் கொண்டு இரண்டு vegetarian pizza ஓடர் பண்ணி ( இரண்டும் 10  வெள்ளி ) வாங்கிக் கொண்டு வருவம் என்று போனேன். ஒரு 5 நிமிட டிரைவ் தான் . Pizza  ரெடி ஆக இருந்தது , அவ்வளவு crowd இல்லை  இரண்டு மூன்று வெள்ளை தடியன்கள்    ஆர்டர் குடுத்து விட்டு நின்றார்கள் - வயது 20 க்குள் தான் இருக்கும் .  கார்டு தான் வழமையாக பாவிப்பது.  வொலட்டை திறக்கும் போது ஒரு   10  வெள்ளி தாள் தெரிய அதனை எடுத்து நீட்டினேன் .    கவுண்டரில் இருந்தது  ஒரு  uni மாணவியாக இருக்க வேண்டும் அதனை வாங்கி விட்டு"  ten  dollars  and  fifteen  cents " என்றாள். ஏன் அந்த மேலதிக 15 சதங்கள் என கேட்க வாய் உன்னினாலும் 15 சத்திற்கு இதில இப்ப நின்று நேரத்தை வீணாக்காமல் வீட்டை போய்  wine   அடிக்கிற அலுவலைப் பாரடாப்பா என உள்ளூக்குள் யாரோ எச்சரிக்க, சுதாரித்துக் கொண்டு வாலாட்டிட்குள் இருந்து சில்லறையை எடுத்து வைக்க திறந்தேன்.

 take  this”   எனும் குரல் கேட்டது .. பக்கத்தில் நின்ற தடியன்களில் ஒருவன் ஒரு 20 சத குற்றியை கவுண்டரில் வைத்து விட்டு எடுக்கச் சொல்லி நின்றான். நான் ஒன்றும் சொல்ல முன் அந்த பெண் அதை எடுத்து விட்டு மிச்சம் 5 சதத்தை யாரிடம் தருவது என வினாவி நின்றாள் .

எனக்கு  கொஞ்சமும் பிடிக்கவில்லை.  இவங்கள் யார் எனக்கு 15  சதம் தானம் செய்யிறதுக்கு  , நான் கேட்டேனா  அல்லது என்னைப் பார்த்தால் 15 சதத்திட்கு வழியில்லாத பரதேசி மாதிரி தெரியுதா.  இவனுக்கு  பாகிஸ்தானுக்கு போய் அவர்களை வெகு நல்லம் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளி விட்டு நியூசீலாந்திலே வைத்து போட்டு தள்ளின மாதிரி  வரும் பங்குனி உத்தரத்திற்க்கு பிள்ளையார் கோயிலில் கும்பிட்டுக்  கொண்டிருக்கும் போது உவன் தான் அந்த 15 சத பார்ட்டி என்று  priority basis போட்டு தள்ளுவதற்கான பிள்ளையார் சுழி தானோ etc etc என எக்கச் சக்கமான எண்ண ஓட்டங்கள்.

கவுண்டர் பெண்ணிடம் சொன்னேன் குற்றியை திரும்ப அவனிடமே கொடுத்து விடும்படி.   சில்லறையை நானே கொடுத்தேன் . அவன் பக்கம் திரும்பி நன்றி சொல்லி விட்டு அவனுடைய பணத்தை ஏற்றுக்கொள்ளாமைக்கு வருத்தமும் சொல்லி அவனுடைய நாளின் எஞ்சிய நேரங்கள் நன்றே கழிய வாழ்த்துக்களும் சொல்லி பிஸ்சா வுடன் வெளியே சென்றேன்.

இதனை மகளிடம் சொல்லி இது ஒரு typical  episode of  white supremacy  என்று சொன்னேன்.  சிரித்து விட்டு சொன்னாள் “ அப்பா சும்மா ஓவர் ரியாக்ட் பண்ணாதேயுங்கோ, சின்னப் பொடியங்கள்   15  சதம் எல்லாரிடமும் இருக்கும் சாதாரணமான அலுவல் உங்களிடம் change இருந்திராது என்று எதார்த்தமாக தரப்போக அதற்கு இவ்வளவு வியாக்கியானமா அப்பா”  என்று.  

இப்ப வைன்  மூன்றாவது ரவுண்டு . ஒரே குழப்பம்,

 இவங்கள் நியூஸிலாந்திலே போய் சுட்டு எல்லாத்தையும் குழப்பிப் போட்டாங்கள் ……      

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சாமானியன் said:

இதனை மகளிடம் சொல்லி இது ஒரு typical  episode of  white supremacy  என்று சொன்னேன்.  சிரித்து விட்டு சொன்னாள் “ அப்பா சும்மா ஓவர் ரியாக்ட் பண்ணாதேயுங்கோ, சின்னப் பொடியங்கள்   15  சதம் எல்லாரிடமும் இருக்கும் சாதாரணமான அலுவல் உங்களிடம் change இருந்திராது என்று எதார்த்தமாக தரப்போக அதற்கு இவ்வளவு வியாக்கியானமா அப்பா”  என்று.  

அதுதான் உண்மை.

20 சதத்துக்கு கொஞ்சம் ஓவர் அலம்பறை  தான். அந்த பணத்தினை எடுத்துக் கொண்டு, அதே போல இளையவர்கள், சில்லறைக்கு வேறு ஒருமுறை தடுமாறும் போது கொடுத்திருக்கலாமே.

பார்க்கிங்கில் சில்லறைக் காசு இல்லாமல் £10 நீட்டி  change இருக்குதா என்றால், இல்லை, ஆனால் என்னிடம் 50 பென்ஸ் இருக்கிறது. அதை போட்டு , கிடைக்கும் 10 நிமிச அவகாசத்தில், பதட்டம் இல்லாமல் பக்கத்து கடைக்கு போய் சில்லறை வாங்கி வந்து போட்டுக்கொள்ளுங்கள் என்று 50 பென்சினை கையில் வைத்துவிட்டு, அல்லது மெசினுள் போட்டு விட்டு போவார்கள். இது வெள்ளைகள்  மட்டுமல்ல, அனைவரும் செய்வார்கள்.... காரணம் டிக்கட் வைக்காமல், சில்லறைக் காசுக்கு அலைந்தால், இரை  தேடும் காட்டு நாய்கள் மாதிரி, £80 தண்டப் பண டிக்கெட் வைக்க அலையும் ட்ராபிக் வார்டன்கள்.  

இது  ஒருவருக்கு  ஒருவர் செய்யும் உதவி. தமக்கும் அந்த நிலை வந்தால் உதவி தேவை என்ற பொது நோக்கம். நல்ல பண்பும், மனிதபிமானமும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன் ...

ஒன்று... அந்தப்பக்கம்... அல்லது இந்தப்பக்கம்...

எந்தப்பக்கம் ? 😁

ஆகா ... ஒன்று சிரிப்பு... ஒன்று லைக்கு... சரிதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சாமானியன் said:

இப்ப வைன்  மூன்றாவது ரவுண்டு . ஒரே குழப்பம்,

 இவங்கள் நியூஸிலாந்திலே போய் சுட்டு எல்லாத்தையும் குழப்பிப் போட்டாங்கள் ……      

 

இதனை வாசிக்க சிரிப்பு வந்தது.

 

3 hours ago, Nathamuni said:

இது  ஒருவருக்கு  ஒருவர் செய்யும் உதவி. தமக்கும் அந்த நிலை வந்தால் உதவி தேவை என்ற பொது நோக்கம். நல்ல பண்பும், மனிதபிமானமும்.

இதை வாசிக்க பிடித்தது, லைக்க போட்டன்.
தப்பா?! (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் கார் பார்க்கிங் டிக்கட் மிச்ச நேரம் இருந்தால் காத்திருந்து வருபவரிடம் குடுப்பது வழக்கம்.......பொதுவா எனக்கு டிக்கட் வாங்கிற வழக்கம்தான்.குடுக்கிற சந்தர்ப்பம் அநேகமாய் இல்லை.காரணம் இங்கு குறைந்த 00.30 சதம் டிக்கட்தான் நான் அடித்து வைப்பது.அது 15 நிமிடத்துக்கு.நான் அதோடு ஒரு மணித்தியால வேலை பார்ப்பது வழக்கம்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 வெள்ளிக்கு 2 பீசாவா ? நல்ல மலிவாய் இருக்கு 🙂
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உங்களை போல்தான். என்னிடம் இல்லையா ??? என்றுதான் உடனே கோபப்பட்டிருப்பேன்.
உந்த  சின்னப் பொடிசுகள் நல்ல மனதோடும் தந்திருக்கலாம். ஆனால் உங்களிடம் இல்லை என்று சொன்னால் தந்திருக்கலாம். அதுக்கு முதல் ஏன் தரவேணும்??நான் உங்கட பக்கம் தான்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, suvy said:

இங்கும் கார் பார்க்கிங் டிக்கட் மிச்ச நேரம் இருந்தால் காத்திருந்து வருபவரிடம் குடுப்பது வழக்கம்.......பொதுவா எனக்கு டிக்கட் வாங்கிற வழக்கம்தான்.குடுக்கிற சந்தர்ப்பம் அநேகமாய் இல்லை.காரணம் இங்கு குறைந்த 00.30 சதம் டிக்கட்தான் நான் அடித்து வைப்பது.அது 15 நிமிடத்துக்கு.நான் அதோடு ஒரு மணித்தியால வேலை பார்ப்பது வழக்கம்......!  😁

இங்கே இப்போ கார் இலக்கம் போட வேண்டும்... ஆகவே கை மாத்த முடியாது.

கார் பார்க்கென்பது, உண்மையில் இடத்தினை வாடகைக்கு விட்டு பணம் பறிப்பது. சட்டத்தின் உதவியுடன், பைன் போட்டு அடாவடி பண்ணினாலும், அது இல்லாவிடில், ஒருவருமே  கார் ஓட முடியாதபடி, பார்க் பண்ணி விட்டு போய் விடுவார்கள்.
 

15 minutes ago, ரதி said:

10 வெள்ளிக்கு 2 பீசாவா ? நல்ல மலிவாய் இருக்கு 🙂
 

baby size pizza?

Image result for small kids pizza

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பரிசிலும் சில இடங்களில் அப்படி வந்து விட்டது. தானியங்கி பெற்றோல் நிலையங்களிலும் போன் இலக்கம் முதல் எல்லாம் கேட்கும்  சரியான கரைச்சல் .....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

இங்கே இப்போ கார் இலக்கம் போட வேண்டும்... ஆகவே கை மாத்த முடியாது.

கார் பார்க்கென்பது, உண்மையில் இடத்தினை வாடகைக்கு விட்டு பணம் பறிப்பது. சட்டத்தின் உதவியுடன், பைன் போட்டு அடாவடி பண்ணினாலும், அது இல்லாவிடில், ஒருவருமே  கார் ஓட முடியாதபடி, பார்க் பண்ணி விட்டு போய் விடுவார்கள்.
 

baby size pizza?

Image result for small kids pizza

 

15 minutes ago, suvy said:

இப்போது பரிசிலும் சில இடங்களில் அப்படி வந்து விட்டது. தானியங்கி பெற்றோல் நிலையங்களிலும் போன் இலக்கம் முதல் எல்லாம் கேட்கும்  சரியான கரைச்சல் .....!  😁

New York City imposes fines for violations of various City laws and regulations, including regulations related to parking, building codes, consumer affairs, and public health and safety. In FY 2016, the City collected $993 million in fines, an increase of 3.7 percent over FY 2015. Revenue from fines increased 35 percent in the last decade and 16 percent over the last four years.  As Figure 1 shows, from FY 2012 to FY 2016, fines revenue increased $138 million from $855 million in FY 2012 to $993 million in FY 2016.[1]

By far the largest category of fines continues to be parking violations, raising $565 million in FY 2015 and $545 million in FY 2016, or 59 percent and 55 percent of total revenues from fines in FYs 2015 and 2016 respectively. “Quality of Life” violations such as littering and noise pollution, sidewalk violations and public health and safety violations generated another $184 million. The next largest source of fine revenue is camera fines. Cameras are placed throughout the City to photograph vehicles running through red lights, speeding through school zones or driving, parking or standing in bus lanes. Red light, bus lane and speed camera fines combined, generated $96 million in FY 2016. Building permit penalties and restaurant violations generated $60 million and $27 million respectively.

https://comptroller.nyc.gov/reports/new-york-city-fine-revenues-update/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

தப்பா?! (மாரி2 பட ஹீரோயின் சொல்ற மாதிரி இல்ல!)

மாரி2 பாக்கவா இல்ல அந்த சீனை இங்க போடுறீங்களா?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்.....வயிற் சுப்பிறமேசியிலும்.....பார்க்க....எங்களுக்குத்....தன் மானம் அதிகம் போல உள்ளது!

ஒரு வேளை உங்களிடம் இருபது சதம் இல்லாமல் இருந்திருந்தால்....என்ன செய்திருப்பீர்கள்! 

கார்ட்டைத் தான் கொடுக்க வேண்டி வந்திருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

மாரி2 பாக்கவா இல்ல அந்த சீனை இங்க போடுறீங்களா?😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலே  சில  ethical standard issues உம்  சம்பந்தப்பட்டிருக்கிறதை   அவதானித்திருக்கக்  கூடும்.

  கவுண்டர்  பெண்மணி  5 சதம்  மிகுதி  யாரிடம்   தருவது என்று கேட்ட கணத்திலேயே இந்த issue தொடங்கி விட்டது.     குற்றியை  மேசை  மேல்  வைத்த  பையன்  மிகுதியை  வாங்கும்  நோக்கத்தில்  இருந்த  மாதிரி  தெரியவில்லை  , அவ்வாறாயின்  நான்  தானா   வாங்குவது  ? இது  standards committe க்கு    போட்டு  தீர்மானிக்க  வேண்டிய  விடயமல்லவா.

   
இனிமேல்  வெள்ளை  இளந்தாரி  தடியர்கள்  பக்கத்தில  நிண்டால்  கார்டை  விட  வேறு  ஒன்றும்  பாவிக்கக்  கூடாது  என  அவ்விடத்திலிருந்து  உத்தரவு  வந்திருக்கிறது.   இன்னொரு  கலவரத்தை  தவிர்க்கும்  முகமாக  உத்தரவுக்கு  அடிபணிந்து  போவது   என நானும்  தீர்மானித்திருக்கிறேன்.

 
வாழ்க்கை  என்பது  என்ன  அனுபவக்  கோவைகளின்  தொகுப்புத்  தானே ......

 


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.