Jump to content

இலங்கை பாணந்துறையில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பாணந்துறையில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல்

கோப்புப்படம் Image captionகோப்புப்படம்

பாணந்துறை - சரிக்கமுல்ல - திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாணந்துறை பகுதியில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருந்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

வாகன விபத்தொன்றினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்த நிலையிலேயே, இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

பாணந்துறை - திக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தை அடுத்து, சிங்களவர் ஒருவருக்கும், முஸ்லிம் இனத்தவர் ஒருவருக்கும் இடையிலேயே இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, மோதல் சம்பவம் வலுப்பெற்றதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இலங்கை பாணந்துறையில் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல்படத்தின் காப்புரிமைISHARA S. KODIKARA/AFP/GETTY

சம்பவத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சம்பவ இடத்திற்கு போலீஸ் விசேட அதிரடிபடையினர் வரவழைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

பாணந்துறை பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்தும் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பாணந்துறை வடக்கு போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டி திகண பகுதியில் கடந்த மார்ச் மாதம் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் வலு பெற்றிருந்ததுடன், அதில் பெரும்பாலான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிந்தது.

இவ்வாறு மற்றுமொரு சம்பவம் இடம்பெறுவதனை தவிர்க்கும் வகையில் போலீஸார் விரைந்து செயற்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

https://www.bbc.com/tamil/india-47648252

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸாரின் செயற்பாட்டால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இன மோதல்!

 

பாணந்துறை - சரிக்கமுல்ல - திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியில் இன மோதல் ஒன்று ஏற்படும் அச்சம் ஏற்பட்டது. 

panandura.jpg

எனினும்  இதன்போது சிறப்பாக செயற்பட்ட பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை ஸ்தலத்துக்கு வரவழைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதையடுத்தே தற்போது அங்கு சுமுகமான சூழல் ஒன்று நிலவுவுகின்றது.  

இந் நிலையில் பிரதேசத்தின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும்,  துரதிஷ்டவசமான மோதல் சம்பவம் ஒன்றைத் தவிர வேறு எந்த சம்பவங்களும் அங்கு பதிவாகவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பாணந்துறை பகுதியில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருந் நிலையில், பெரும்பான்மை இளைஞர் ஒருவரும் முஸ்லிம் இளைஞர்கள் இருவருமாக மொத்தமாக  மூவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

இதையடுத்து அவர்கள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்ததுடன் இந்த  மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.http://www.virakesari.lk/article/52413

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் pick me என்பது uber  ஒன்லைன் டாக்ஸி நிறுவனம் போன்றது. இஸ்லாமியர்களுடையது. (uber  மென்பொருள் இலங்கையில் தான் எழுதப் பட்டது )

சிங்களவர்களும் அதில் சேவை வழக்குபவர்களாக உள்ளனர்.

இந்த சிங்களவர்களிடையே ஒரு மனக்கசப்பு. ஒரு புக்கிங் வரும் போது, அதை சிஸ்டம் அடுத்ததாக, அந்த பகுதியில் இருக்கும் ஒரு டிரைவர் வசம் allocate பண்ணி விடும்.

ஆனால், அலுவலகத்தில் உள்ளவர்கள் அதை override பண்ணி, இன்னுமொரு இஸ்லாமியருக்கு allocate பண்ணி, சிஸ்டம் allocate பணியவருக்கு, customer cancelled என்று தகவல் அனுப்பி வைப்பார்கள்.

நம்பி, காசை  போட்டு, மாத கொடுப்பனவுக்கு வாகனங்களை எடுக்கும் அப்பாவிகள் சரிதான் என்று அடுத்த சவாரி வரும் வரை காத்திருப்பார்கள்.

இப்போது, அந்த தகவல் வந்ததும், அவர்கள், சிஸ்டம் அனுப்பிய customer போன் நம்பருக்கு போன் போட்டு, நீங்கள் cancel பண்ணுனீர்களா என்று கேட்க, customer இல்லையே என்று சொல்ல.... அவர் வர, ஆபீஸ் manuval  ஆக allocate பண்ணிய இஸ்லாமிய டிரைவர் வர.... ஒரே கச்சால்.... தான் ....

சனி வெள்ளவத்தையில் இருந்து விமானநிலையம் போக வந்த நண்பருக்கு நடந்திருக்கிறது.

சிங்களவர் வந்து ஆளை ஏத்தி, கிளம்ப , இஸ்லாமியர் வந்துள்ளார்....

இவர், பாருங்க சார்... இப்படி பண்ணுகிறார்கள்.... நானும்... customer cancelled மெசேஜ் கிடைக்கவில்லை, அதனால் customer pickedup என்று  என்று தகவல் அனுப்பி விட்டேன். இப்ப அவருக்கு customer cancelled மெசேஜ் போகும் என்று அலுத்துக் கொண்டாராம்.

இப்படியான விடயங்கள் ஒரு நாள் வெடித்துக் கிளம்பும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.