Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்………..


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்………..

 

எனது  தாயார்   இந்த  பாடலை  அடிக்கடி   சொல்வார்  கோரைக்  கிழங்கு  புடுங்க  கேட்க   கோவிச்சுக்  கொண்டாராம்  பண்டாரம்  , அவிச்சுக்  குவிச்சு  முன்னால   வைக்க  சிரிச்சுக்  கொண்டாராம்  பண்டாரம்  என்று  .

வேறொன்றுமில்லை  , இன்று  காலை  வெந்நீர்க்   குளியலின்  நடுவே  தெறித்து  விழுந்த  எண்ணப்  பாடொன்று  , பகிர்ந்து  கொள்ளலாம்  என  தோன்றிற்று 

யாழ்  திண்ணையில்   கருத்தாடுவது  மனதுக்கு  இதமான  ஒரு  விடயமாக  இருக்கிறது.   

திண்ணை  வாசிகள்  ஒவ்வொருவரின்  தனித்  தன்மையையும்    வெகுவாக  இரசிக்கக்  கூடியதாக  இருக்கின்றது.  உண்மையில்  எல்லோரையும்  கடந்த  2012 இலிருந்து  ரசித்துக்  கொண்டு  வருகிறேன்.   மிக   அண்மைக் காலங்களில்  இருந்து  தான்  குந்தியிருந்து  நாலு  கதை  பேச   வாய்த்திருக்கின்றது.

முகமறியாமல்  உரையாடுவது      என்பது  உரையாடல்களில்     சாதாரணமாக  இருக்கக்கூடிய  பல  தடைகளை  இல்லாமல்  செய்து  ஒவ்வொருவரும்  தத்தமக்கே   உண்மையாக  இருக்கக்  கூடியதாக  இருக்கின்றது. யாழ்  திண்ணையின்   பலன்களில்  இது  முக்கியமானதொன்றாக  அமைகின்றது   என  நினைக்கின்றேன்.

சமூக  கடப்பாடுகள்  பற்றியும்  ஒரு  தனிப்  பகுதி  இருக்கின்றது.   பலர்  பதிவுகள்  இட்டும்,   தனிப்பட்ட  முறையில்  பங்களிப்புகளை  வெளிப்படையாகவும்   மற்றவர்கள்  அறியாமலும்  செய்து  கொண்டிருக்கின்றனர்  அநேகமாக  எங்கள்  எல்லோருமே  ஏதோ  ஒரு  வகையில்  இப்படியான  முயற்சிகளில்  ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்  என  நான்  நம்புகிறேன்.

யாழ்  கூட்டுக்குடும்பமாகவும்   நாங்கள்  இந்த  முயற்சிகளை   முன்னெடுத்தால்  என்ன …..

ஏறக்குறைய 100 அங்கத்தினர்  இருக்கின்றனர்  என  எடுத்துக்  கொண்டால்  (உண்மையில்  எவ்வளவு  என  எனக்குத்  தெரியாது  ஆனால்  இதற்கு  குறையாமல்  இருக்கும்  என  நம்புகிறேன்) , ஒவ்வொருவரும்  ஒரு  கிழமைக்கு  10 வெள்ளி  வீதம்  யாழ்  சல்லி  முட்டியில்  சேமித்தால்  ஒரு  வருடத்தில்  இது   ஏறக்குறைய  52,000 வெள்ளிகளாக  மாறுகின்றது.

உறுப்பினர்கள்  எவராவது   ஒரு  வருடத்தின்  பின்னர்( அல்லது 6  மாதங்களின் பின் )    செயல்  திட்டங்களை  முன்  மொழியலாம்  – உரிய   விபரங்கள் , தரவுகள்  , நன்மைக்கூற்றுகள்  etc ..etc

யாழ்    திண்ணை  வாசிகள்  இதனை  திண்ணையில்  வைத்து  ஆராய்ந்து    ,  ஒரு  வாக்கெடுப்பு  மூலம்  குறிப்பிட்ட  செயல்திட்டத்தை  முன்னெடுப்பதா  இல்லையா  என  தீர்மானிக்கலாம் .

முன்னெடுப்பது  என்று  தீர்மானிக்கும்  பட்சத்தில்  , திண்ணை  வாசிகள்  அந்த  செயல்  திட்டத்தை  செயற்படுத்துவதற்கு   பொறுப்பாக  3 திண்ணை  வாசிகளை தெரிவு  செய்யலாம்  , (விரும்பும்  திண்ணை  வாசிகள்  தங்களின்  ஒத்திசைவை  தெரிவித்ததின்  மேல் ) அம்மூவருமே  இதற்கு  முழுமையான  பொறுப்பாக  இருப்பார்கள்.

இதனை  செயற்படுத்தும்  ஒரு  பொதுக்கணக்கிற்கு  திண்ணைவாசிகள்  தங்கள் தங்கள்  சல்லி  முட்டியை  திறந்து  உரிய  பங்களிப்பை  செய்து  விட  வேண்டும்  ( ஒரு   சிறிய  செயற்திட்டம்  10,000 வெள்ளி  எனில்  திண்ணை  வாசிகள்  ஒவ்வொருவரும்  100 வெள்ளியை  செலுத்தி  விட்டு  தொடர்ந்து  திண்ணைக்   கருத்தாடல்களில்  ஈடுபடலாம்  பொறுப்பான  மூவரிடமும்  எந்த  கேள்விகளையாவது  கேட்பதை  தவிர்த்துக்  கொண்டு )  . எல்லோரும்  பங்களித்து,   தேவையான  முழுத்  தொகையும்  கணக்கில்  சேர்த்த  பின்னரே  அம்மூவரும்   செயற்திட்டத்தை  நடைமுறைப்  படுத்துதலில்  ஈடுபடுவர்.  அந்த  மூவரும்  செயற்திட்டம்  பற்றி  திண்ணையில்  ஒழுங்கான  அடிப்படையில்  தகவல்கள்  வழங்கிக்  கொண்டிருக்க  வேண்டும்.

முதலாவது  செயற்றிட்டம்  எவ்வாறு  முன்னேறுகிறது    என்பதைப்  பொறுத்து  , இரண்டாவது  , மூன்றாவது  என  திட்டங்களை  தொடரலாம்.   

ஒவ்வொரு  புதுத்  திட்டத்திற்கும்  முன்பே  பொறுப்பாக  இருந்த  உறுப்பினர்களைத்  தவிர்த்து  ஏனையவர்கள்  தெரிவு  செய்யப்  படலாம்.   

என்ன,  கோரைக்  கிழங்கு  புடுங்கிப்  பார்ப்போமா …….

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, சாமானியன் said:

கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்……

என்ன சாமானியன் இன்னும் அருவரியிலேயே நிற்கிறீர்கள்.அறிமுகத்துக்கு மட்டும் தான் அரிச்சுவடி .நிறைய பகுதிகள் இருக்கின்றன. தேடிப் பார்த்து அந்தந்தப் பகுதியில் பதியுங்கள்.

சல்லிமுட்டி பாவிக்கும் நல்ல பழக்கம் இருக்கோ?நல்லது சேருங்கோ.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன சாமானியன் இன்னும் அருவரியிலேயே நிற்கிறீர்கள்.அறிமுகத்துக்கு மட்டும் தான் அரிச்சுவடி .நிறைய பகுதிகள் இருக்கின்றன. தேடிப் பார்த்து அந்தந்தப் பகுதியில் பதியுங்கள்.

சல்லிமுட்டி பாவிக்கும் நல்ல பழக்கம் இருக்கோ?நல்லது சேருங்கோ.

நன்றி ஈழப்பிரியன் , முன்பு சில தடவை முயற்சி செயதேன் சுய ஆக்கங்கள் மற்றும் அரிச்சுவடி பகுதிகள் மட்டுமே எட்டக் கூடியதாக இருந்தன ,  இப்போது மாறியிருக்கக் கூடும் , அடுத்த முறை பொருத்தமான பகுதியில் இணைக்க முயற்சிப்பேன்

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • திருமால் பெருமைக்கு நிகர் ஏது ?   
  • போதைப்பொருள் காவல்துறையினரின் கைதுகள் இலங்கையின் போதைப்பொருள் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுகின்றன ஒரு முக்கிய தேசிய போதைப்பொருள் பிரிவைச் சேர்ந்த ஒரு டஜன் அதிகாரிகள் சமீபத்தில் ஒரு போதைப்பொருள் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது.   பல ஆண்டுகளாக, இலங்கையில் அதிகாரிகள் இந்தியப் பெருங்கடல் தீவு நாடான சட்டவிரோத போதைப்பொருட்களை விடுவிக்க முயன்றனர், போதைப்பொருள் குற்றவாளிகளை மரணதண்டனை செய்ய மரண தண்டனை விதிக்க பல தசாப்தங்களாக பழமையான தடையை கூட உயர்த்த முயன்றனர். ஆனால் ஒரு முக்கிய தேசிய போதைப்பொருள் பிரிவைச் சேர்ந்த ஒரு டஜன் அதிகாரிகளை உள்ளடக்கியதாகக் கூறப்படும் ஒரு மருந்து வளையம், அந்த இலக்கு எவ்வளவு சவாலைக் கொண்டுவருகிறது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. 2009 ல் முடிவடைந்த நாட்டின் நீண்ட உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளரான தமிழ் புலிகளுக்கு எதிராக அரசாங்கத்திற்காக பல ஆண்டுகளாக போராடிய பின்னர் தங்கள் பொது உருவத்தை மீட்டெடுக்க போராடிய பொலிஸ் படைகள் மீதும் இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமான போதைப்பொருட்களை கடலுக்குள் கடத்தி, பாதுகாப்பான வீடுகளில் சேமித்து வைத்து, போலி சோதனைகளை நடத்தி, பின்னர் கைப்பற்றப்பட்டவற்றில் ஒரு பகுதியை போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு விற்க, மில்லியன் கணக்கான இலாபங்களை ஈட்டிய காவல்துறை போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகள் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகிறது.   ஏறக்குறைய இரண்டு டஜன் சந்தேக நபர்கள் - அவர்களில் பெரும்பாலோர் போதைப்பொருள் அதிகாரிகள் - இதுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மேலும் வெளிநாட்டில் மறைந்திருப்பதாகக் கூறப்படும் மோதிரத்தின் சூத்திரதாரி என்று இந்த வாரம் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. "எங்கள் காவல்துறை வரலாற்றில் இது போன்ற ஒரு பெரிய சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை" என்று இலங்கையின் அட்டர்னி ஜெனரல் டப்புலா டி லிவேரா ஒரு தொலைக்காட்சி உரையில் கூறினார், இது "காவல்துறை மீதான மக்கள் நம்பிக்கையை அரித்துவிட்டது" என்றும் கூறினார்.   இந்தியாவின் தெற்கு முனையிலிருந்து அமைந்துள்ள இலங்கை சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களால் போக்குவரத்து மையமாக பயன்படுத்தப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், ஆனால் நாடு வழியாக செல்லும் போதைப்பொருள் அவர்கள் எழுந்ததில் கடுமையான போதை பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. 'ஆபத்தான நிலைமை' நீதி அமைச்சர் அலி சப்ரியின் கூற்றுப்படி, சுமார் 553,000 பேர் - மக்கள் தொகையில் சுமார் 2.5 சதவீதம் பேர் - அடிமையாக உள்ளனர், அதாவது நாட்டில் ஒவ்வொரு 40 பேரில் ஒருவர் போதைக்கு அடிமையானவர். இலங்கையின் 30,000 கைதிகளில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் உள்ளனர் என்றும், 11,700 பேருக்கு மட்டுமே இடமளிக்கக் கூடிய கூட்ட வசதிகள் உள்ளன என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். போதைப்பொருள் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் 2015 ல் 6,600 ஆக இருந்து கடந்த ஆண்டு 16,000 ஆக உயர்ந்துள்ளன. "இது ஒரு ஆபத்தான சூழ்நிலை, இந்த நிலத்திலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை நாங்கள் ஒழிப்போம்" என்று சப்ரி கூறினார்.   தலைநகர் கொழும்புக்கு வடக்கே 21 கி.மீ (13 மைல்) தொலைவில் உள்ள வெலிசராவில் உள்ள ஒரு சிறிய நகரத்திலிருந்து மே 15 அன்று 225 கிலோ (496 பவுண்டுகள்) ஹெராயின் ஒரு தனி பொலிஸ் போதைப்பொருள் பிரிவு கைப்பற்றிய பின்னர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மோதிரத்தை கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். நான்கு பொதுமக்கள் சந்தேக நபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். ஐந்தாவது சந்தேகநபர், ஒரு தொழிலதிபர் வளையத்தில் முக்கிய பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது, ஒரு மாதத்திற்குப் பிறகு கொழும்புக்கு வடக்கே 43 கி.மீ (27 மைல்) தொலைவில் உள்ள மினுவாங்கொட என்ற நகரத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் தொழிலதிபர் அதிகாரிகளிடம் மோதிரத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் அதிகாரிகள் குழு பற்றி கூறினார். மொத்தத்தில், பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் 18 அதிகாரிகளும், ஐந்து பொதுமக்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பதாக நம்பப்படும் மோதிரத் தலைவரான உதரா சம்பத்துக்கு திங்களன்று கொழும்பு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. "இது ஒரு புதிய விஷயம் அல்ல" என்று கொழும்பின் அரசியல் ஆய்வாளர் குசல் பெரேரா கூறினார். "முந்தைய சந்தர்ப்பங்களிலும், சில மூத்த பொலிஸ் அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். ஆனால் சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான நேரடி ஆதாரங்கள் எங்களிடம் இருப்பது இதுவே முதல் முறை." விசாரணையின்படி, அதிகாரிகள் இந்தியப் பெருங்கடலில் மீன்பிடி படகுகளில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களைச் சந்தித்து இலங்கையில் பாதுகாப்பான வீடுகளுக்கு போதைப்பொருட்களைக் கொண்டு வருவார்கள். மருந்துகளின் ஒரு பகுதி பின்னர் விற்பனையாளர்களுக்கு விற்கப்படும், மீதமுள்ளவை பின்னர் அதிகாரிகளால் நடத்தப்படும் சோதனைகளில் கைப்பற்றப்படும் என்று அட்டர்னி பொதுத் துறையின் துணை சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் கொழும்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார். மோதிரத்தின் பொதுவானது என்று புலனாய்வாளர்கள் கூறிய ஒரு சோதனையில், போதைப்பொருள் அதிகாரிகள் கடலில் கடத்தப்பட்ட 243 கிலோ (536 பவுண்டுகள்) ஹெராயின் பறிமுதல் செய்தனர், கடத்தல்காரர்களுக்கு விற்க 43 கிலோ (95 பவுண்டுகள்) குறைத்து, 200 கிலோ (441 பவுண்டுகள்) மட்டுமே அதிகாரிகளை முன்வைத்தனர். போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஜாலியா சேனரத்ன. காயத்திற்கு அவமானத்தைச் சேர்த்து, மோதிரம் இயங்கும் மூன்று ஆண்டுகளில், சம்பந்தப்பட்ட போதைப்பொருள் அதிகாரிகள் பண விருதுகளையும், பெரிய போதைப்பொருட்களை தயாரித்ததற்காக அரசாங்கத்திடமிருந்து பாராட்டுகளையும் வென்றனர், அவற்றில் சில அரங்கேற்றப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'சமூக பேரழிவு' நிலம், வாகனங்கள், நகைகள் உட்பட அரை மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களை அதிகாரிகள் சேகரித்ததாக போலீசார் கூறுகின்றனர். சந்தேக நபர்களின் சில நிலங்களின் கீழ் புதைக்கப்பட்ட சுமார் 30 மில்லியன் இலங்கை ரூபாய் (சுமார் 3 163,000) புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். "ஒரு சில அதிகாரிகளால் இந்த செயல்களை நாங்கள் மிகவும் கண்டிக்கிறோம்" என்று தேசிய காவல்துறையின் மூத்த அதிகாரி அஜிதா ரோஹானா கூறினார். "நாங்கள் சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்துவோம், நாங்கள் விசாரணைகளை விரைவுபடுத்துவோம், மற்ற அனைத்து விசாரணைகளுக்கும் முன்னர் இந்த விசாரணையை முடிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்." அதிகாரிகள் குற்றவாளிகள் எனில், அவரது துறை அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் என்று ரோஹனா மேலும் கூறினார். 1976 முதல் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.   இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மரண தண்டனை தொடர்பான பல தசாப்த கால தடைக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், போதைப்பொருள் குற்றங்களில் தண்டனை பெற்றவர்களுக்கு மரண தண்டனையை அமல்படுத்துவதற்கும் ஒரு தோல்வியுற்ற முயற்சியை மேற்கொண்டார், இந்த பிரச்சினையை "சமூக பேரழிவு" என்று அழைத்தார். அவரது வாரிசான கோட்டபய ராஜபக்ஷ கடந்த நவம்பரில் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளனர், சந்தேக நபர்கள் கிட்டத்தட்ட தினமும் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் அது ஒரு மேல்நோக்கிய போராகவே உள்ளது. அரசியல் ஆய்வாளர் பெரேரா, மோதிரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் அதிகாரிகள் தனியாக இல்லை என்று கூறினார். "ஊழல் பரவலாக இருக்கும்போது, போதைப்பொருள் பணியகம் சுத்தமாகவும் நேர்மையாகவும் இருப்பதாக யாராவது நினைத்தால், அது நகைச்சுவையாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.   https://www.aljazeera.com/news/2020/09/arrests-narcotics-police-highlight-sri-lanka-drug-menace-200917075054703.html        
  • மாணிக்க வீணையே மரகதப் பதுமையே வைரத்தில் தோய்ந்த மனமே  மதங்கமா முனிவரின் மாதவச் செல்வியே மாதுளம் சிவந்த விழியே  ஆணிப்பொன் கட்டிலே அரியாசனத்திலே அரசாள வைத்த தேவி  அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி  யார் தருவார் இந்த அரியாசனம்? யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி  அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்  யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி  அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் - அம்மா  யார் தருவார் இந்த அரியாசனம்? பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த  பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்  பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த  பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்  சேரும் சபையறிந்து செல்லாதவன்  சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு  தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு  யார் தருவார் இந்த அரியாசனம்? - புவி  அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்  கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்  காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா? கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா? - உன்  காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா? சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? ஆ.. சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா? - உன்  சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா?    
  • இப்பதான் இந்தப் பிக்குவுக்கு  கொஞ்சம் மூளை வேலை செய்திருக்குது. கண்டிப்பாய் இலங்கை  எதிர்காலத்தில்  சீனாவின் கொலனியாக மாறுவதை எந்த சிங்களவனாலும் மாற்ற முடியாது. எதுக்கும் சீனனை ஏமாற்றி  நாட்டைக் காப்பாற்றுகிற வழியைப் பாருங்கள். பிக்குகளை ஏமாற்ற பவுத்தத்துக்கு முன்னுரிமை, சிங்கள மக்களை ஏமாற்ற சிங்களத்துக்கு முதன்மை, தமிழர் வந்தேறுகுடிகள் என்கிற போர்வையால் மூடிப் போர்த்துவிட்டு, யாருக்கும் இல்லாமல் நாட்டை  விற்று விட வேண்டியான். விற்றவர்கள் அவரவர் தாங்கள்  குடியேறிய நாட்டின் பிரஜைகள் ஆகிவிடுவார்கள். எங்களை அடக்கி ஆள நினைத்தவர்கள் நினைவில் இருந்து  மீளாமலே  சீனனால் ஆளப்படுவார்கள். 
  • உந்த மொட்டைக்கு வெளியே ஒண்டும், இல்லையெண்டால், உள்ளயும் தான். பிக்கரே, இரட்டைக்குடியுரிமை என்றால், அடிப்படையில் அவர் இலங்கையில் பிறந்து, வெளிநாட்டு குடியுரிமை பெற்றதால் அதை இழந்தவர். இந்தியாவில் இரட்டைக்குடியுரிமை திட்டமே இல்லை. சீனாவிலும் இராது. அவர்கள் இலங்கை பிரஜை ஆனால் தமது நாட்டு பிரஜாயுரிமை இழப்பர். சும்மா அலம்பறை பண்ணப்படாது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.