Jump to content

இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு - திமுக தொடர்பு வெளியானது 

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு - திமுக தொடர்ப்பு வெளியானது 

இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன மொன்றினை ஆரம்பிக்க ஓமான் நாடு $3.85 பில்லியன் முதலீடு செய்ய உள்ளது என்ற செய்தி நேற்று முன்தினம் வெளியாகி, கொழும்பு பரபரப்பாகியது. ஆனால் அது தவறான செய்தி, ஓமானுக்கும் அந்த விசயத்துக்கும்  தொடர்பு இல்லை என்று, ஓமான் மறுத்தது.

இன்று இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளை ஆய்வு செய்து அனுமதிக்கும் board of investment இது தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.

வழக்கமாக ரகசியமாக இருக்கும் இந்த விபரங்களை ஓமான் தொடர்பான விடயங்கள் தவறாக பொது வெளியில் சொல்லப் பட்டுள்ளதால், இதனை வெளியிட்டு உள்ளது என இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கபூரினை சேர்ந்த Silver Park International Pte Ltd, என்ற நிறுவனம் $1887ம் முதலீட்டினை செய்வதாகவும் மிகுதி $2,000m 
கடனாக பெறப் படும் எனவும் அந்த ஆவணத்தில் குறியிடப்படுள்ளது.   

இந்த நிறுவனத்தின் 3 இயக்குனர்களின் பெயர்கள், சென்னை முகவரியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. மூவரும், திமுகவின் அரக்கோணம் பாராளுமன்ற வேட்ப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகதரடசகனின் மகன், மகள், மனைவி ஆவார்கள்.

உடன்படிக்கை பத்திரத்தில் கை எழுத்து இட்டவர் வேறு யாரும் இல்லை, ஜெகதரடசகன் தான்.

இந்த சிங்கப்பூர் நிறுவனத்தின் இந்திய தொடர்பு குறித்து BOI எதுவும் தெரிவிக்காவிடினும், அந்த நிறுவனத்துக்கு அதாவது ஒரு தனிக் குடும்பத்துக்கு இவ்வளவு பணம் வந்த விதம் குறித்து பெரும் ஆச்சரியமான கேள்விகளை உண்டாக்கி உள்ளது என இந்து தெரிவிக்கின்றது.

இலங்கை ஹம்பன்தோட்டா பகுதியில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் அமையவுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இலங்கை வரலாறில் மிக மிக பெரிய தொகை ஆக உள்ள இந்த பெரிய முதலீடு, ஒரு இந்திய, தமிழக அரசியல் வாதியின் குடும்பத்தில் இருந்து வருவதாயின், யாருடைய பணம், எப்படி அவரது குடும்பத்திடம் சிக்கியது என்ற பெரிய கேள்வி எழுகின்றது.
 
http://www.dailymirror.lk/breaking_news/DMK-link-to-controversial-Oman-oil-refinery-project/108-164312

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு முதலீடு - திமுக தொடர்ப்பு வெளியானது 

....  

இந்த நிறுவனத்தின் 3 இயக்குனர்களின் பெயர்கள், சென்னை முகவரியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. மூவரும், திமுகவின் அரக்கோணம் பாராளுமன்ற வேட்ப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகதரடசகனின் மகன், மகள், மனைவி ஆவார்கள்.

உடன்படிக்கை பத்திரத்தில் கை எழுத்து இட்டவர் வேறு யாரும் இல்லை, ஜெகதரடசகன் தான்.

...

இலங்கை வரலாறில் மிக மிக பெரிய தொகை ஆக உள்ள இந்த பெரிய முதலீடு, ஒரு இந்திய, தமிழக அரசியல் வாதியின் குடும்பத்தில் இருந்து வருவதாயின், யாருடைய பணம், எப்படி அவரது குடும்பத்திடம் சிக்கியது என்ற பெரிய கேள்வி எழுகின்றது.

றோ + சி.ஐ.ஏ. பணம்.

சீனாவுக்கு ஆப்பு வைக்கும் திட்டம். முட்டாள் இலங்கை அரசுக்கு எதையுமே காதும் காதும் வைத்தால் போல செய்ய தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

றோ + சி.ஐ.ஏ. பணம்.

சீனாவுக்கு ஆப்பு வைக்கும் திட்டம். முட்டாள் இலங்கை அரசுக்கு எதையுமே காதும் காதும் வைத்தால் போல செய்ய தெரியாது.

இலங்கையரசு வேண்டும் என்று தான் இந்த செய்தியை வெளியே கசிய விட்டு இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2019 at 8:49 PM, ரதி said:

இலங்கையரசு வேண்டும் என்று தான் இந்த செய்தியை வெளியே கசிய விட்டு இருக்கும் 

முதலில் இந்திய பிஜேபி சார்பு ஊடகங்கள் தான் இந்த விடயத்தை கொண்டு வந்தவை .

( நாதமுனி முன்பே போட்டது தெரியாமல் நானும் திண்ணையில் சவுண்டு விட்டு  விட்டன் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2019 at 1:38 PM, Nathamuni said:

ஒரு இந்திய, தமிழக அரசியல் வாதியின் குடும்பத்தில் இருந்து வருவதாயின், யாருடைய பணம், எப்படி அவரது குடும்பத்திடம் சிக்கியது என்ற பெரிய கேள்வி எழுகின்றது.

0020343_old-cask-rum_600.jpeg

அவரிடம் இல்லா ஆலைகளா.. ? ஊரை வாழ வைத்த காசு பூராம் அங்குதான் கொட்டி கிடக்கு.. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Related image

போர் முடிந்து முடியாமல் இருக்கும் வேளையில் இவர்கள் ஏன் ராஜபகசாவை அவசரமாக சந்திக்க வந்தார்கள் என்பதுக்கு விடை இன்று தெரிந்து விட்டது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.