Jump to content

விடுதலைப் புலிகளின் பேரூட் இரகசியத் தளமும், அந்த தளத்தின் பின்னால் மறைந்துள்ள சில உண்மைகளும்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் பேரூட் இரகசியத் தளமும், அந்த தளத்தின் பின்னால் மறைந்துள்ள சில உண்மைகளும்!!

 

987 இன் இறுதிப்பகுதியில் மட்டக்களப்பின் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளம் ஒன்றைச் சுற்றிவளைத்து அழிக்கும் நோக்குடன் இந்தியப்படையின்முக்கியமான ஒரு படைப்பிரிவான மவுன்டன் டிவிசன்(Mountain Division) படைப்பிரிவு பாரிய படை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டது.

'ஒப்பரேஷன் புளூமிங் டுளிப்| (Operation Blooming Tulip)என்று பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அந்தப் படை நடவடிக்கை, விடுதலைப் புலிகளின் மிகவும் முக்கியமான ஒரு ரகசியத் தளத்தை நோக்கிததான் மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு தரவைக் காடுகளின் மத்தியில் இரகசியமாக அமைக்கப்பட்டிருந்த புலிகள் அமைப்பின் முக்கிய தளம் ஒன்றைத் தாக்கி அழிப்பதே அந்த நடவடிக்கையின் குறிக்கோளாக இருந்ததாக இந்தியப்படையின் மட்டக்களப்புத் தலைமை புதுடில்லிக்கு அறிவித்திருந்தது.

விடுதலைப்புலிகளின் அந்த முக்கிய தளத்தின் பெயர் 'பேரூட் பேஸ்' என்று இந்தியப் படையினருக்குதகவல்கள் கிடைத்திருந்தன.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

புலிகளின்ஆயுதக் களஞ்சியங்கள், பிராந்தியத் தலைமை, பயிற்சி முகாம்கள், நடவடிக்கைத் தலைமையகம், தொலைத்தொடர்பு மையங்கள் என்பன இந்த 'பேரூட்' பேசிலேயே அமைந்திருப்பதாகவே இந்தியப்படையினர் நம்பியிருந்தார்கள்.

 

மட்டக்களப்பில்அந்தக் காலத்தில் இருந்த அந்த 'பேரூட் தளம்' அல்லது ‘பேரூட் பேஸ் (Beirut Base) பற்றியும், அந்த தளத்திற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்பது பற்றியும், அந்த முகாம் பற்றி மக்கள் மத்தியிலும், மற்றய போராளிகள் மத்தியிலும், ராணுவத்தினரிடமும் பரவியிருந்த வதந்திகளைக்கடந்த உண்மைகள் பற்றியும்தான் இந்தக் கட்டுரையில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

'பேரூட் தளம்'

மட்டக்களப்பில்அந்தக் காலத்தில் இருந்த புலிகளின் 'பேரூட் தளம்' மக்கள் மத்தியில் மாத்திரமல்ல சிறிலங்காப்படைகள் மத்தியிலும், மற்றய தமிழ் இயக்கங்கள் மத்தியிலும், இந்தியப் படையினர் மத்தியிலும் மிகவும் பிரபல்யமாகவே இருந்தது.

மட்டக்களப்பில்இருந்த புலிகளின் மிகப் பெரியதொரு தளமே 'பேரூட் தளம்' என்றே பலரும் நம்பிக்கொண்டிருந்தார்கள்.

அந்த‘பேரூட் தளத்தில் பலவகையான கனரக ஆயுதங்கள், பயிற்சி முகாம்கள் நிலக்கீழ் சுரங்கங்கள்,பாரிய ஆயுதக் களஞ்சியங்கள் எல்லாம் அமைந்திருப்பதாகவே அனைவரும் நம்பிக்கொண்டிருந்தார்கள்.

மட்டக்களப்பின் தரவை மற்றும் குடும்பிமலைப் பிரதேசித்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியிலேயே புலிகளின் இந்த பாரிய ‘பேரூட் தளம்‘ அமைந்திருப்பதாகவும் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பேச்சடிபட்டுக்கொண்டிருந்தது.

ஆனால் உண்மையிலேயே 'பேரூட் பேஸ் (Beirut Base) என்று புலிகளால் குறிப்பிடப்பட்ட அந்தத் தளம் தரவையிலோ அல்லது குடும்பிமலைப் பிரதேசத்திலோ அமைந்திருக்கவில்லை.

மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசத்தில் உள்ள கொக்கட்டிச்சோலையில் உள்ள காடுகளின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு முகாமையே புலிகள் 'பேரூட் பேஸ்' என்று சங்கேத பாஷையில் அழைத்து வந்தார்கள்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

 

மக்கள் பேசிக்கொண்டது போன்று அல்லது மற்றய தமிழ் இயக்கங்கள் நம்பிக்கொண்டிருந்தது போன்று, அல்லது சிறிலங்காப் படையினர் அச்சப்பட்டுகொண்டிருந்தது போன்று புலிகளின் அந்த பேரூட்முகாமில் கனரக ஆயுதங்களோ அல்லது நிலக்கீழ் சுரங்கங்களோ இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

இன்னும் குறிப்பாகக் குறிப்பிடுவதானால் அந்த பேரூட் தளத்திலும் அதனை அண்டிய கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலும் 48 போராளிகள் மாத்திரமே செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள் என்பதே உண்மை.

பின்நாட்களில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட துணைத்தளபதியாக இருந்த தளபதி ரீகன் தலைமையில், பின்நாட்களில் பிரபல்யமான தளபதிகளான தளபதி ராம், தளபதி ரமேஷ், தளபதி ரமணன் போன்றோர்,அந்தக் காலகட்டத்தில் இந்த ‘பேரூட் பேசிலேயே’ செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் காலகட்டத்தில் இயக்கங்கள் பற்றிய மிகைப்படுத்தல்கள் மக்கள் மத்தியில் மிக மிக வேகமாகப்பரவிக்கொண்டிருந்ததன் ஒரு அங்கமாக இந்த ‘பேரூட் பேஸ்’ பற்றிய மாயை மக்கள் மத்தியில்பெரிய அளவில் உருவாகி அடிக்கடி அச்சத்துடனும், பெருமையுடனும் பேசப்படுகின்ற ஒரு விடயமாகமாறியிருந்தது.

லெபனானின் தலைநகரம்

விடுதலைப்புலிகளின் அந்தத் தளத்திற்கு ஏன் ‘பேருட் பேஸ்’ என்ற பெயர் வந்தது என்பதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை.

அந்தக் காலகட்டத்தில் லெபனானின் தலைநகரான 'பேரூட்' என்ற பெயரானது போராடுகின்ற இனக் குழுமங்களினால்ஆச்சரியமாக நோக்கப்படுகின்ற, பேசப்படுகின்ற ஒரு பெயராகவே இருந்தது.

அந்தநேரத்தில் தமிழ் இயக்க உறுப்பினர்களில் பல முக்கியஸ்தர்கள் லெபனானில் இராணுவப் பயிற்சியினை எடுத்துக்கொண்டிருந்ததால் லெபனானின் தலைநகரான பேரூட்டின் பெயர் போராளிகள் மத்தியில்அதிகம் பிரபல்யமாகியிருந்தது.

இவை அனைத்தையும்விட 1983ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் லெபனான் தலைநகரில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க இராணுவத் தளம் மீது இஸ்லாமிய போராளிகள் மேற்கொண்டிருந்த ஒரு பாரிய தற்கொலைத் தாக்குதலும், அந்த தாக்குதல் பற்றிய செய்தியும் தமிழ் ஈழப் போராளிகள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததாலும் 'பேரூட்' என்ற பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபல்யமாகியிருந்தது.

1983ஒக்டோபர் மாதம் 23ம் திகதி லெபனான் தலைநகரான பெரூட்டில் நிலைகொண்டிருந்த அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் படையினரின் தளம் மீது இஸ்லாமிய ஜிகாத் போராளிகள் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள். அதில் அமெரிக்காவின் 220 சிறப்பு அதிரடிப்படையினர் ( United StatesMarine Corps )உட்பட 299 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அந்தக் காலகட்டத்தில் உலகம் முழுவதும்- குறிப்பாகப் போராடும் இனக்குழுமங்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகப் பேசப்பட்ட தாக்குதல் அது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் அமெரிக்க மரைன் பிரிவுக்கு மிகப் பெரிய இழப்பினை ஏற்படுத்திய தாக்குதல் இடம்பெற்ற பிரதேசம் என்பதால் மக்கள் மத்தியில் 'பேரூட்' என்றபெயர் மிகவும் பிரபல்யமாகியிருந்தது.

குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் இந்த 'பேரூட்' என்ற பெயர் அதிக மரியாதையுடனும், பலத்த எதிர்பார்ப்புடனும் உச்சரிக்கப்பட்ட ஒரு பெயராகவே இருந்தது.

ஆக்கிரமிப்பாளருக்கு அச்சத்தையும், போராடும் இனத்திற்கு விடுதலை உணர்வையும் ஏற்படுத்தும் ஒரு பெயராகவே இந்த "பேரூட்" என்ற பெயர் அந்தநேரத்தில் உலகில் வலம் வந்துகொண்டிருந்தது.

(புளொட் அமைப்பு இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தனது தளத்தின் ஒரு முகாமிற்கு 'பேரூட் முகாம்' என்று பெயர் சூட்டியிருந்தார்கள். அதேபோன்று யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்குப் பெயர்போன ஒரு விடுதிக்கு 'பேரூட் விடுதி' என்றுபெயரிட்டிருந்தார்கள். 'பேரூட்' என்ற பெயர் அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியிலும்போராளிகள் மத்தியிலும் எந்த அளவிற்குப் பிரபல்யமாக இருந்தது என்பதற்கு இவைகள் சில உதாரணங்கள்)

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

 

சரி. குறிப்பாக மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் இருந்த புலிகளின் இந்த முகாம் அல்லது தளத்திற்கு 'பேரூட் பேஸ்' என்று எவ்வாறு பெயர் வந்தது?

இதற்கானகாரணம் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.

ஆனால் ஊகங்கள், அனுமாணங்கள் பல இருக்கின்றன.

தொலைத்தொடர்புக்கருவி

அந்தக்காலகட்டத்தில் பிரதேசவாரியாக விடுதலைப் புலிகள் தமது தொடர்பாடல்களுக்குப் பயன்படுத்திய சக்திவாய்ந்த பிரதான தொலைத்தொடர்பு கருவிகளை மையப்படுத்தி சில குறியீட்டுகளைப் பயன்படுத்திவந்தார்கள்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தொடர்பாடலை மையப்படுத்தி அவர்சார்ந்த தொடர்பாடல்பிரதேசத்தை 1-4 அதாவது வன்-போர் (One-Four) பேஸ் என்று அழைப்பார்கள்.

புலிகள்தலைவர் இந்தியாவில் தங்கியிருந்த பொழுது இந்தியாவில் இருந்த 'வன்-போர்' தளம் பின்னர்அவர் வன்னியில் அலம்பில் காடுகளில் தங்கியிருந்த பொழுது அங்கு செயற்பட்டது இந்தக் காரணத்தினால்தான்.

இதேபோன்று யாழ்பாணத்தை 2-2 டு-டு (Two-Two) பேஸ் என்றும் வடமாராட்சியை 2-3 டு-திறீ (Two-Three)பேஸ் என்றும் அழைப்பார்கள்.

இவை அனைத்தும் அந்தக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் பிரதான தொலைத்தொடர்பு கருவிகளைஅடிப்படையாக வைத்தே நடைமுறைப்படுத்தப்பட்டன.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

 

ஒருபெரிய தொலைத் தொடர்பு கருவி. ஏதாவது மரமொன்றில் அதன் 'அன்டனாக்களை' உயரத்தில் கட்டிவிட்டால் இலங்கை முழுவதும் மாத்திரமல்ல, இந்தியாவில் உள்ள புலிகளைக் கூட இதனூடாக இலகுவாகத் தொடர்புகொண்டுவிடமுடியும். அந்தக் காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் மாத்திரமேஇருந்த தொலைத் தொடர்பு வசதிகள் அவை.

80களின் நடுப்பகுதியில் தளபதி அருணா மட்டக்களப்பிற்கு வந்தபொழுது அவரால் மட்டக்களப்பு அம்பாறைமாவட்டத்திற்கென்று ஒரு பிரதான தொலைத்தொடர்புக் கருவி கொண்டுவரப்பட்டது. மட்டக்களப்பு வந்தறுமூலைப் பிரதேசத்தில் நிறுவப்பட்ட அந்தத் தொலைத்தொடர்பு கருவியை அடிப்படையாக வைத்து 4-6 போர்-சிக்ஸ் (Four-Six) பேஸ் என்று மட்டக்களப்பு பிரதேசதம் குறியீட்டுப் பெயரில்அழைக்கப்பட்டது.

மட்டக்களப்பு-அம்பாறைமாவட்டத்தில் இருந்து புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட் முதலாவது போராளியும், இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட முதலாவது பயிற்சி முகாமில் பயிற்சிபெற்றவரும், பின்நாட்டகளில் புலிகள் அமைப்பில் மூத்த தளபதியாகப் பல களம் கண்டவரும், தற்பொழுதும் ஐரோப்பிய நாடொன்றில் உயிருடன் இருப்பவருமான தளபதி காந்தன் அவர்களே மட்டக்களப்பின் முதலாவது பிரதான தொலைத்தொடர்புக் கருவியை கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்றுஅம்பாறை மாவட்டத்திற்கான தொலைத்தொடர்புக்கருவி அங்கு அனுப்பிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்பாறைப் பிரதேசத்தை 4-8 போர்-எயிட் (Four-Eight) பேஸ் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் இருந்த புலிகள் அணிகளுக்கான தொலைத்தொடர்புகள் அம்பாறை மாவட்டத்துடனோயே அதிகம் இருந்ததால், கொக்கட்டிச்சோலை புலிகள் அணியின் தளங்களையும் ஆரம்பத்தில் 4-8 போர்எயிட் (Four-Eight) பேஸ் என்றே அழைத்துவந்தார்கள். இந்த 'போர்-எயிட்' - தான் கால ஓட்டத்தில் 'பேரூட்டாக' திரிவடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.png

 

'சிக்காக்கோ '

அதேபோன்று அந்தக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உலகின் பிரபல்யமா நகரங்களின் பெயர்களைச் சூட்டி அழைப்பது வளக்கம்.

யாழ்பாணப் பிரதேசத்தை 'சிக்காக்கோ ' என்றும், வடமாராட்சிப் பிரதேசத்தை 'கலிபோர்ணியா' என்றும் அழைத்ததைப் போன்று மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தை 'பேரூட்' என்று அழைத்திருப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

ஆகமொத்தத்தில் 'பேரூட் பேஸ்' என்பது மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் பிரபல்யமான ஒருமுகாம் என்பதும், இந்த 'பேரூட் பேஸ்' என்பது கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலேயே அமையப்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Niraj David அவர்களால் வழங்கப்பட்டு 22 Mar 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Niraj David என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

 

https://www.ibctamil.com/articles/80/116446?ref=home-imp-flag&fbclid=IwAR0zvgkp67d57eB6TM2B-baS1DY4nUzByb53iwss7drP7Ib-sBqrvOF-5Og

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

விடுதலைப் புலிகளின் பேரூட் இரகசியத் தளமும், அந்த தளத்தின் பின்னால் மறைந்துள்ள சில உண்மைகளும்!!

இணைப்புக்கு நன்றி விசுகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்தேன் .............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை பிரதேசங்களின் குறியீட்டு பெயரில்லை 
தொலைத்தொடர்பு குறியீட்டு பெயர்கள் 
எதிரிகள் எப்போதும் தொலைத்தொடர்பை இடைமறித்து 
ஒட்டு கேட்ப்பார்கள் அதனால் எந்த பகுதி பற்றி பேசுகிறோம் 
என்பதை இனம் காட்டி கொடுக்காது இருக்க இப்படி பெயர்களை பயன் படுத்தினார்கள்.

யாழ் கிட்டுவின்  முகாமில்தான் முன்பு மற்றைய பிரேதேசங்களுடன் பேசும் 
தொலைத்தொடர்பு செட் இருந்தது அதன் பெயர் சிக்காகோ 

கடல்வழி போக்குவரத்தை நிர்வகிக்க வல்வெட்டியில் இருந்த முகாம் கலிபோர்னியா 

மன்னார் விக்டரின் முகாம் லீமா 

மாத்தையாவின் வன்னி முகாம் கராச்சி 

பின்பு இந்திய இராணுவ காலத்தில் இவை பொதுவாக எல்லோராலும் அறியபடத்தால் 
இலக்க குறீடுகளை பயன் படுத்தினார்கள் 
இதை கிட்டுவுடன் கப்பலில் இறந்த வேலன் (மேஜர் மலரவன்)  என்பவர்தான் மாற்றினார் 
அப்போதான்  2-2  1-4 3-7  4-8  என்று மாற்றினார். 
அலம்பில் காட்டில் 1-4 தலைவர் இருந்த முகாமுக்கு அருகாக இன்னொரு முகாம் இருந்தது நாசக்காரி என்னும் பெயரில் 
அங்குதான் தொலைத்தொடர்பை வைத்துக்கொள்வார்கள் ... தலைவர் பிரபாகரன் இருந்த முகாமில் இருந்து 
சாதாரண வோக்கி டோக்கி கூட பாவிக்க மாட்டார்கள்.
இவைகள்கள் மட்டுமல்ல பல விடயங்களுக்கு குறீயீட்டு பெயர்கள் வைத்தே பேசுவார்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Maruthankerny said:

இவை பிரதேசங்களின் குறியீட்டு பெயரில்லை 
தொலைத்தொடர்பு குறியீட்டு பெயர்கள் 
எதிரிகள் எப்போதும் தொலைத்தொடர்பை இடைமறித்து 
ஒட்டு கேட்ப்பார்கள் அதனால் எந்த பகுதி பற்றி பேசுகிறோம் 
என்பதை இனம் காட்டி கொடுக்காது இருக்க இப்படி பெயர்களை பயன் படுத்தினார்கள்.

யாழ் கிட்டுவின்  முகாமில்தான் முன்பு மற்றைய பிரேதேசங்களுடன் பேசும் 
தொலைத்தொடர்பு செட் இருந்தது அதன் பெயர் சிக்காகோ 

கடல்வழி போக்குவரத்தை நிர்வகிக்க வல்வெட்டியில் இருந்த முகாம் கலிபோர்னியா 

மன்னார் விக்டரின் முகாம் லீமா 

மாத்தையாவின் வன்னி முகாம் கராச்சி 

பின்பு இந்திய இராணுவ காலத்தில் இவை பொதுவாக எல்லோராலும் அறியபடத்தால் 
இலக்க குறீடுகளை பயன் படுத்தினார்கள் 
இதை கிட்டுவுடன் கப்பலில் இறந்த வேலன் (மேஜர் மலரவன்)  என்பவர்தான் மாற்றினார் 
அப்போதான்  2-2  1-4 3-7  4-8  என்று மாற்றினார். 
அலம்பில் காட்டில் 1-4 தலைவர் இருந்த முகாமுக்கு அருகாக இன்னொரு முகாம் இருந்தது நாசக்காரி என்னும் பெயரில் 
அங்குதான் தொலைத்தொடர்பை வைத்துக்கொள்வார்கள் ... தலைவர் பிரபாகரன் இருந்த முகாமில் இருந்து 
சாதாரண வோக்கி டோக்கி கூட பாவிக்க மாட்டார்கள்.
இவைகள்கள் மட்டுமல்ல பல விடயங்களுக்கு குறீயீட்டு பெயர்கள் வைத்தே பேசுவார்கள்  

எப்படி எல்லாம்..... முன் எச்சரிக்கையுடன், இரகசியத்தையும்...  பாதுகாப்பையும் எடுத்த புலிகள்,
ஈழப் போரில்... வெல்ல முடியாமை போனமையை...
என்னால்... இன்றும்,  ஜீரணிக்க முடியவில்லை.

அருமையான தலைவனுடன்.. எத்தனை ஆயிரம் போராளிகள் அணிவகுத்து நின்றார்கள்.
எல்லாம்...  காட்டிக் கொடுக்கும், கயவர்களால்,  நாசமாக போய் விட்டதை  நினைக்க, வேதனையாக உள்ளது. 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாசித்தேன்.. பதிவுக்கு நன்றியண்ணா 
 

Link to comment
Share on other sites

மணலாறு நாசகாரி முகாம் அப்பையா அண்ணையின் முகாம்.

ஏன் தலைமை முகாமை 1-4 என அழைத்தார்கள் என யாருக்காவது தெரியுமா ? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

நானும் வாசித்தேன்.. பதிவுக்கு நன்றியண்ணா 
 

பேரூட்ல கும்மான் என்ன செஞ்சவர் எண்டு மருந்துக்கும் எழுதேல்ல. அக்காச்சி கெம்பி எழும்புமெண்டு பார்த்தா, பம்முது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியோ_நக்கீரன் said:

மணலாறு நாசகாரி முகாம் அப்பையா அண்ணையின் முகாம்.

ஏன் தலைமை முகாமை 1-4 என அழைத்தார்கள் என யாருக்காவது தெரியுமா ? :)

சங்கேத மொழியாக எதிரிக்கு புரியாமல் இருக்கவே 
அப்படி இலக்கங்களை வைத்து பேசினார்கள் என்று எண்ணுகிறேன் 
1-4 என்பதுக்கு ஏதும் காரணம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை 

அப்பையாண்ணை மட்டும் இல்லை பொதுவாகவே மணலாறு காட்டின் 
பிரதான முகாமே அதுதான். அப்பையாண்ணை அருள்-89 மற்றும் ஜொனி-மைனஸ் 
எல்லாம் அங்கு வைத்துத்தானாம் தயாரித்தார். 

உண்மையோ பொய்யோ தெரியாது ... விசுவமடு பகுதியில் ஒரு உறவினர் வீட்டுக்கு நான் 
போயிருந்தபோது புலிகள் அங்கே கொஞ்ச சாமான்கள் கொண்டு வந்து வைத்துவிட்டு 
போனார்கள் அது என்ன என்று அவர்கள் போன பின்பு பார்த்தால் வெத்திலை சுருட்டு எல்லாம் 
இருந்தது. உறவினரை கேட்ட போது ... இது காட்டுக்கு போறத்துக்கு என்றார் 
காட்டில் இருக்கும் புலிகள் சுருட்டு பத்துவார்களா? என்று கேட்டேன் 
அவர்தான் அது அப்பையாண்ணைக்கு என்று சொன்னார். 

அவர் சுருட்டு பத்துவாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

எப்படி எல்லாம்..... முன் எச்சரிக்கையுடன், இரகசியத்தையும்...  பாதுகாப்பையும் எடுத்த புலிகள்,
ஈழப் போரில்... வெல்ல முடியாமை போனமையை...
என்னால்... இன்றும்,  ஜீரணிக்க முடியவில்லை.

அருமையான தலைவனுடன்.. எத்தனை ஆயிரம் போராளிகள் அணிவகுத்து நின்றார்கள்.
எல்லாம்...  காட்டிக் கொடுக்கும், கயவர்களால்,  நாசமாக போய் விட்டதை  நினைக்க, வேதனையாக உள்ளது. 😢

சிறீ  , உங்கள்  உணர்வுகளை  நானும்  பகிர்ந்து  கொள்கிறேன்.
போராட்டத்தின்  , முகாமைத்துவத்தில்  தொய்வுகள்  2000 இன்  ஆரம்பகாலங்களில்  ஏற்படத்  தொடங்கி  விட்டது,   அறிவுக்கு  தெரிந்தாலும்   உணர்வுகள்    அதனை  ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவில்லை .   சமாதான  ஒப்பந்தம்  என்பதனை    கையெழுத்து இட்ட   கணத்திலிருந்து  போராட்டத்தின்  வீழ்ச்சி  தொடங்கி    விட்டது . இறுதியாக    மேற்கொண்ட  நந்திக்கடல்  தெரிவும்  ( அப்போதிருந்த  ஒரேயொரு  தெரிவும்  அதுவே ) மிக்க  துயரமான  முறையில்  முடிவடைந்தது.  
இந்த  ஆதங்கத்துடனே    தான்  எங்கள்  வாழ்வும்  ( போராட்டம்  முகிழ்த்ததில்  இருந்து  2009 இல்  கடைசி  முடிவு  என்று  இப்போது  சொல்லப்படுகிற  முடிவை  எட்டும்  வரை  எதோ  ஒரு  வழியில்   அதனுடன்  ஒன்றிப்  போயிருந்த  சந்ததி  )  முடிவடைய  இருக்கிறது  என்பது  ஒரு  கசப்பான  நிதர்சனம் .
ஆனால்  கடைசி  முடிவு  என்பது  முற்றிலும்  வேறு  வகையான  பரிமாணம்  கொண்டது  என்பதில்  எனக்கு  இன்றைக்கும்  அசையாத  நம்பிக்கை  உண்டு.  அதுவரை உரிய வழிகளில் செயற்பட்டுக்கொண்டிருத்தலே தேவையானது । ……


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

சிறீ  , உங்கள்  உணர்வுகளை  நானும்  பகிர்ந்து  கொள்கிறேன்.
போராட்டத்தின்  , முகாமைத்துவத்தில்  தொய்வுகள்  2000 இன்  ஆரம்பகாலங்களில்  ஏற்படத்  தொடங்கி  விட்டது,   அறிவுக்கு  தெரிந்தாலும்   உணர்வுகள்    அதனை  ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவில்லை .   சமாதான  ஒப்பந்தம்  என்பதனை    கையெழுத்து இட்ட   கணத்திலிருந்து  போராட்டத்தின்  வீழ்ச்சி  தொடங்கி    விட்டது . இறுதியாக    மேற்கொண்ட  நந்திக்கடல்  தெரிவும்  ( அப்போதிருந்த  ஒரேயொரு  தெரிவும்  அதுவே ) மிக்க  துயரமான  முறையில்  முடிவடைந்தது.  
இந்த  ஆதங்கத்துடனே    தான்  எங்கள்  வாழ்வும்  ( போராட்டம்  முகிழ்த்ததில்  இருந்து  2009 இல்  கடைசி  முடிவு  என்று  இப்போது  சொல்லப்படுகிற  முடிவை  எட்டும்  வரை  எதோ  ஒரு  வழியில்   அதனுடன்  ஒன்றிப்  போயிருந்த  சந்ததி  )  முடிவடைய  இருக்கிறது  என்பது  ஒரு  கசப்பான  நிதர்சனம் .
ஆனால்  கடைசி  முடிவு  என்பது  முற்றிலும்  வேறு  வகையான  பரிமாணம்  கொண்டது  என்பதில்  எனக்கு  இன்றைக்கும்  அசையாத  நம்பிக்கை  உண்டு.  அதுவரை உரிய வழிகளில் செயற்பட்டுக்கொண்டிருத்தலே தேவையானது । …

மிகத்தெளிவான

உண்மையோடு  ஒற்றிய  பார்வை

நன்றி  சகோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சாமானியன் said:

ஆனால்  கடைசி  முடிவு  என்பது  முற்றிலும்  வேறு  வகையான  பரிமாணம்  கொண்டது  என்பதில்  எனக்கு  இன்றைக்கும்  அசையாத  நம்பிக்கை  உண்டு.  அதுவரை உரிய வழிகளில் செயற்பட்டுக்கொண்டிருத்தலே தேவையானது ।

உங்களுக்கு மட்டமல்ல பலரின் விருப்பமும் கனவும் நினைவும் வேண்டுதலும் அதுதான் காலம் பதில் சொல்லும் .

Link to comment
Share on other sites

Maruthankerny விசுக்கு, ஈழத் தமிழரின் ஆயுதப்போராட்ட வரலாற்றை 1956ல் துறை நிலாவணை விவசாயிகள் பெரும் அணியாக திரண்டுவந்த சிங்கள குடியேற்ற வாசிகளை தடுத்து கல்முனையை காப்பாற்ற துறைநிலவணை விவசாயிகள் இராணுவ ஜீப் வண்டிக்கு க்சுட்டது முதல் முள்ளிவாய்காலில் ஆயுதங்கள் மெளனித்தது வரைக்கும் எழுதப்படவேண்டும். என்பங்குக்கு ஒருபகுதியை எழுத விருப்பம்.

.

போராட்ட இராணுவ வரலாறு தொடர்பாக இதுவரை எழுதப்பட்ட கட்டுரைகளை ஒரு தலைப்பின்கீழ் தேடி தேடி யாழில் ,பதிவிடுவோர்களாயின் பெரும் உதவியாக இருக்கும். 

1960பதுகளில் யாழ்ப்பாணத்தில் பஸ்தொழிலாளர் சம்பந்தபட்ட வன்முறை இருந்தது. அவர்கள் சத்தியாகிரக தோல்வியின்பின் கச்சேரியிலும் பஸ் டிப்போவிலும் கைக்குண்டு வீசி இருக்கிறார்கள். அவர்களது தலைவர்களுள் ஒருவரான  கோண்டாவிலை சேர்ந்த பஸ் தொழிலாளி ஒருவரை என் சின்ன வயசில் இந்து மகளிர் கல்லூரிக்கு பின்பக்கமாக ஒருவீட்டில் சந்தித்து நேர்கண்டிருக்கிறேன்.   

.

1960ல் நிகழ்ந்த பெரிய ஆயுத தாக்குதல்கள் கம்யூனிஸ்ட் கட்ச்சி சண்முகதாசன் அணியினர் தலமை தாங்கிய சாதி ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டம்தான். அப்போராட்டம் என்னை பெரிய அளவில் பாதித்தது. அதன்பின்னர்தான் இராணுவ விஞ்ஞானம்பற்றி தேடி வாசிக்க ஆரம்பித்தேன்.  

.

அதன்பின்னர் 1970 பதுகளில் மாணவர் இளைஞர் போராட்டங்களுக்கு எதிராக அதிகரித்துச் சென்ற சிங்கள பெள்த்த பேரினவாத அரசின் வன்முறைகள் பரவலாக எல்லோரையும் பாதித்தது.  பின்னர் சிவகுமாரன் அதை தொடர்ந்து புதியதொரு அத்தியாயம் ஆரம்பிக்கிறது. சிவகுமாரனில் இருந்து இயக்கங்களின் எழுச்சி விடுதலைப்புலிகளின் போராட்டங்கள் இறுதிப்போர் வரைக்கும் இராணுவ நடவடிக்கைகள் பற்றி அவ்வப்போது செய்திகள் கட்டுரைகள் வெளிவந்துள்ளது. ஆனால்  துறை நிலாவணை தாக்குதலில் இருந்து சிவகுமாரன்வரை பெரும்பாலும் பதிவுகள் இல்லை. 

ஆர்வமுள்ள எங்களைப்போன்றவர்கள்  ஒரு ஆய்வுக் குழுவாக இயங்க முடியுமா?

Link to comment
Share on other sites

4 hours ago, poet said:

ஆர்வமுள்ள எங்களைப்போன்றவர்கள்  ஒரு ஆய்வுக் குழுவாக இயங்க முடியுமா?

நிச்சயமா முடியாது.

உண்மைகள் வெளியே வந்துவிடும் எனும் பயம் (ஆனால் மக்களுக்கு உண்மைகள் இப்பவும் தெரிந்தே இருக்கின்றன) 

பொய்களை வைத்து நிதர்சனத்தை மறுக்கும் மனிதர்களிடம் உண்மைகளை எதிர்பார்க்கிறீர்கள் - கிடைக்காது.

Link to comment
Share on other sites

5 hours ago, poet said:

 

ஆர்வமுள்ள எங்களைப்போன்றவர்கள்  ஒரு ஆய்வுக் குழுவாக இயங்க முடியுமா?

கண்டிப்பாக முடியும் பொயட்.  ஒரு பெரும் படையணியை உருவாக்கி, குறிப்பிட்ட காலம் வரைக்கும் நிழல் அரசை திறம்பட நடத்திய போராளிகளும் அதன் தலைமையும் கூட எம் இதே மண்ணில் இருந்து, இதே சமூகத்தில் இருந்து தான் உருவாகியது. அப்படி இருக்கும் போது எம்மால் ஏன் நீங்கள் குறிப்பிட்ட விடயத்தை செய்ய முடியாது?

இதை எப்படி செய்யலாம் என மூத்தவர் என்ற ரீதியில் உங்கள் எண்ணங்களை தந்தால் எமக்கு உதவியாக இருக்கும் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஜீவன் சிவா said:

நிச்சயமா முடியாது.

உண்மைகள் வெளியே வந்துவிடும் எனும் பயம் (ஆனால் மக்களுக்கு உண்மைகள் இப்பவும் தெரிந்தே இருக்கின்றன) 

பொய்களை வைத்து நிதர்சனத்தை மறுக்கும் மனிதர்களிடம் உண்மைகளை எதிர்பார்க்கிறீர்கள் - கிடைக்காது.

உங்களை போல் எடுத்தவுடன் வாய்க்குள் கொள்ளிக்கட்டை செருகிற ஆளை உலகத்தில் கண்டதில்லை .

Link to comment
Share on other sites

நிழலி, ஜீவன் சிவா, பெருமாள் வரலாறு நெடுந்தொலைவு நகர்ந்துவிட்டது. நாம் செயல்பட காலம் கனிந்துள்ளது. இது புலம்பெயர் தமிழர் பங்களிப்பு செய்ய வேண்டிய துறை. 

.

இன்று நெடுந்தொலை வந்துவிட்டோம். 2019ல்ஜெனீவா படுகொலை விசாரணை பேச்சுகள் ஆரம்பித்தபோது நான் சில சர்வதேச அதிஉயர் இராசதந்தரிகளுடன் பேசினேன். விசாரணை தொடர்பாக துரிதமாக செயல்பட முடியாத சூழலை புலம்பெயர் தமிழர் சிலர் ஏற்படுத்தியுள்ளதாக சொன்னார். எனக்கு அதிற்ச்சியாக இருந்தது. புரியவில்லையென்றேன். விசாரணை தொடர்பான எங்களின் முயற்ச்சிகளின் நலன்களை தட்டிப்பறிக்க சிலர் கொடிகளுடன் களம் இறங்கிவிட்டார்கள். விசாரணையின் நலன்களை நாம் நிராகரித்தவர்கள் பெற்றுக்கொள்ளும் சூழல் உருவாகுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதே அன்று சர்வதேச ராசதந்தரிகளின் நிலைபாடாக இருந்தது. இதனால்தான் இலங்கை அரசு வடகிழக்கில் அதி தீவிரவாதக் குழுக்கள் உருவாகி வளர்வதை விரும்பியது.   அன்று இதுபற்றி நம்மவர்களுக்குப் புரியவைக்க முயன்று தோற்றுப்போனேன். காரியம் ஆகும்வரைக்காவது கூட்டமைப்பை முன்னே விட்டு அடக்கி வாசியுங்கள் என்று   கருத்தை புரிந்துகொள்ளக்கூட யாரும் தயாராக இருக்கவில்லை. ஆனால் இன்று நிலமை மாறியுள்ளது. 
உள்நோக்கமில்லாத கசப்பான உண்மைகளை எதிரியாகப் பார்கிற போக்கு அருகியுள்ளது. இன்று நாம் செயல்பட முடியும் நண்பர்களே/நிழலி நவீன தொழில் நுட்பம் தெரிந்தவர் நீங்கள், 

Link to comment
Share on other sites

இரணைமடு குளத்தை அண்மித்த பகுதியில் தலைவருடன் தொடர்புபட்ட முகாமொன்று விமானதாக்குதலுக்குள்ளாகி முற்றிலுமாக சேதமடைந்தது. (எக்ஸ்ரெ வன் (X1)). இருப்பினும் தொலைத்தொடர்புகளிலிருந்து அந்த முகாம் தாக்கப்பட்டது தெரியாமல் இருக்க உடனடியாகவே உடையார்கட்டில் இருந்த நிலக்கீழ் பதுங்குகுழியுடன் அமைந்த ஒரு முகாமுக்கு எக்ஸ்ரே வன் என்ற பெயர் மாற்றி வைக்கபட்டு தொலைத்தொடர்பில் அடிக்கடி அந்த முகாம் வருமாறு செய்யப்பட்டது. (Virtually keeping the base alive). 

பப்பா ஒஸ்கார் , தாங்கோ சேரா, நவம்பர் விஸ்கி, பப்பா லீமா போன்று எல்லாராலும் அனுமானிக்க கூடிய தளபதிகளின் சங்கேத பெயர்களை போராளிகளின் குரல் வழி (voice over) கசிய விட்டாலும், பெரும்பாலும் தளபதிகளுக்கு எண்களை கொண்ட சங்கேத பெயர்களே தொலைத்தொடர்பு சாதனங்களில் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக மூத்த தளபதிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சங்கேத எண்களும் அமைந்தன. 

முகாம்களுக்கு பெரும்பாலும் ஒரு ஆங்கில எழுத்தும் ஒரு எண்ணும் அமைந்த சங்கேத குறியீடுகளே பயன்பட்டன. சில முகாம்கள் அந்த தளபதியின் சங்கேத எண்களாலும் அமைந்தன. எல்லாம் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டன.

தமிழ்செல்வனின் தொலைத்தொடர்பாளரான சரவணனை எளிதில் யாராலும் மறந்துவிடமுடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.