-
Tell a friend
-
Topics
-
Posts
-
By உடையார் · பதியப்பட்டது
பயணத்தடை, சொத்துக்களை முடக்குதல் – மிசேல் பசெலெடின் பரிந்துரைகள் 29 Views போர்க் குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா அரச அதிகாரிகள் மற்றும் படை அதிகாரிகளின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்குதல் மற்றும் அவர்கள் மீதான பயணத்தடைகளை கொண்டுவருதல் போன்ற விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்டவுள்ள அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரின் அறிக்கையானது சிறீலங்கா அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதற்கான பதிலை சிறீலங்கா அரசு எதிர்வரும் 27 ஆம் நாளுக்கு முன்னர் அனுப்ப வேண்டும். இந்த நிலையில் அறிக்கையில் உள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சிறீலங்கா அரச அதிகாரிகள் மற்றும் படை அதிகாரிகள் மீதான பயணத்தடை மற்றும் அவர்களின் சொத்துக்களை முடக்குதல் போன்ற விடையங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் விசாரணையையும் ஆணையாளர் மிசேல் பசெலெட் பரிந்துரை செய்துள்ளார். அதேசமயம், சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிக்கவும், விசாரணைகளை மேற்கொள்வதற்கும் அனைத்துலக பொறிமுறையை மேற்கொள்வது தொடர்பிலும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரின் அறிக்கையானது புலம்பெயர் சமூகத்தின் கருத்துக்களை அப்படியே பிரதிபலிப்பதாக சிறீலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். முன்னைய அறிக்கையை விட இது மிகவும் மோசமான அறிக்கை அதாவது வெளிநாட்டு நீதிபதிகள் தவிர்ந்த 30/1 தீர்மானத்தின் சரத்துக்கள் அனைத்தையும் நிறைவேற்றவேண்டிய கட்டயத்திற்கு சிறீலங்கா தள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/?p=40151 -
நட்டுவை தவறான முறையில் பந்துவீசுகின்றார் என்று ஓராண்டு பந்து வீச விடவில்லை தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கம், பந்து வீசும் பாணியை மாற்றி இப்போது சாதித்திருக்கிறார்.
-
கோத்தாவின் தலைவலி இரண்டு: ஒன்று லோக்கல் லெவலில், தமிழ் பேசும் மக்களாக இணைகிறார்கள். ஆனால், இப்போது, இஸ்லாமியரோ, தமிழர்களோ, தமக்குள் மோதி, சிங்களவருடன், இணையும் நிலையில் இல்லை. இரண்டாவது தலைவலி, தமிழகம், இலங்கை தமிழர் பகுதியில் நடக்கும் விடயங்களை உன்னிப்பாக கவனிப்பது. இதனை உடைக்க வெறுப்பினை வளர்ப்பது, அதுக்கான ஒரே வழி, கடல் தொழில் அமைச்சினை டக்கரிடம் கொடுத்ததும், பிரச்சனைகளை உருவாக்குவதும். இதன் காரணமாகவே, சிங்கள மீனவர் இந்தப்பக்கம் வருவதை, சிங்கள அரசு தடுத்துள்ளது. சிலவாரங்களுக்கு முன்னர், வல்வெட்டி மீனவரை தமிழக மீனவர் தாக்கியதாகவும், முல்லைத்தீவுக்கு அண்மையாக தமிழக படகுகள் காணப்பட்டன என்றும் செய்திகள் வந்தன. இவை, உண்மையாக நடந்தாலும், வேண்டுமென்றே, தமிழக மீனவர் போல தென்னிலங்கை மீனவரால், நடாத்தப்பட்டது என்ற கதையும் வருகிறது. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. தமிழக படகுகளை பறித்து வைத்திருக்கும் அரசுக்கு, நாலு பேரை, இரண்டு படகில் போட்டு, அனுப்புவது பெரிய விடயமல்ல. சீனன், ஒழுங்கான, போக்குவரத்துக்கு வசதியே இல்லாத, மூன்று தீவுகளுக்கு, தீடீரென மின்சார ஆலைகளை அமைக்க, தேவை என்ன வந்தது? அதுதான் சொன்னேன், மிகப்பெரிய சதிக்குள் தள்ள முயல்வு நடக்கிறது.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.