யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் இறுதி இருபதுக்கு இருபது போட்டி இன்று!

Recommended Posts

இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் இறுதி இருபதுக்கு இருபது போட்டி இன்று!

i-5.jpg

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

ஜொஹன்னஸ்பேர்கில் இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளதுடன், தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கைக்கு எதிராக 2 ஆவது போட்டியில் களமிறங்கிய தென்னாபிரிக்க குழாத்தினரே இன்றைய போட்டியிலும் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இலங்கை அணியின் சதீர சமரவிக்ரம மற்றும் ஹசித பெர்னாண்டோ ஆகியோர் இன்றைய போட்டிக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

அவிஷ்க பெர்ணான்டோ மற்றும் ஜெப்ரி வென்டர்சனுக்கு பதிலாக அவர்கள் குழாத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

http://athavannews.com/இலங்கை-தென்னாபிரிக்க-அ/

 

 

Share this post


Link to post
Share on other sites

இலங்கைக்கெதிரான இருபதுக்கு 20 தொடரை 3-0 என தென்னாபிரிக்கா கைப்பற்றியுள்ளது.

March 25, 2019

1 Min Read

south-africa-1.jpg?resize=650%2C433இலங்கைக்கெதிரான இருபதுக்கு 20 தொடரை 3-0 என தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து 199 என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டதன் காரணமான போட்டி 17 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இலங்கை அணி 15.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்துள்ளது

இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு – 20 போட்டியின் முதல் இரு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியிருந்த தென்னாபிரிக்க அணி நேற்று ஜோகன்னஸ்போர்க்கில் இடம்பெற்ற 3 ஆவதும் இறுதியுமான போட்டியில் வெற்றி பெற்றதன் முலம் தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது

இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியிருந்ததுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை தென்னாப்பிரிக்கா 5 – 0 எனக் கைப்பற்றியிருந்த நிலையில் இருபதுக்கு 20 தொடரை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/116883/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு