Jump to content

ஜெனிவா மாயைகளும், உண்மைகளும் - ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் நினைவேந்தலில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஆற்றிய ஆய்வுரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா மாயைகளும், உண்மைகளும்

March 23, 2019

ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் நினைவேந்தலில்  அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஆற்றிய ஆய்வுரை

  

 

உயிரிழந்த ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.  கிளிநொச்சி ஊடகவியலாளர்களும், நண்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஊடகவியலாளர் கஜனின் தலைமையில் நடைபெற்றுள்ளது

இன்நிகழ்வில், யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளர் திரு.த.சத்தியமூர்த்தி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்கள் முன்னாள் வடமாகான சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, அனந்தி சசிதரன், சு.பசபதிப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதுடன், ‘ஜெனிவா மாயைகளும், உண்மைகளும்’ எனும் தலைப்பில் திரு நிலாந்தன் அரசியல் ஆய்வுரையும் நிகழ்த்தினார்.

நிகழ்வில் அரசியல் ஆய்வுரை நிகழ்த்திய அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் குறிப்பிடுகையில்,

இறுதி யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள், காணாமல் ஆக்கப்பட்டசம்பவங்கள் உள்ளிட்டவை தொடர்பில் குறிப்பிட்டார். ஜெனிவாவில் கிளிநொச்சியிலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஜெனிவா சென்று அங்கு இருவேறு முகங்களை காட்டுவதாகவும், அதே சமயம் அடைக்கலநாதன் தலைமையில் ஐந்து கட்சிகள் இணைந்து ஒப்பமிட்டு ஜெனிவாவிற்கு சென்றமை தொடர்பிலும் கருத்து தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களில் பலர் இளம் பெண்களாக இருந்ததாகவு்ம, அவர்களின் காலம் 10 ஆண்டுகளின் பின்னர் வயதடைந்தவர்களாகவும், அவர்கள் தமது இளமை பருவத்தை தொலைத்து மறுமணம் நோக்கி செல்ல முடியாத நிலையில் தமது வாழ்வை தொலைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இன்று நாம் ஜெனிவா அமர்வுடன் கதை முடிந்தது. இனி அடுத்த ஜெனிவா அமர்வுக்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களை போராட்டங்களிற்கு இழுத்துவிடுவோம். அப்புாது பல தாய்மார் இறந்திருப்பார்கள். இப்போதே 24 பெற்றோர் உயிரிழந்துவிட்டனர் என்ற விடயத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

http://globaltamilnews.net/2019/116743/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.