சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு
-
Tell a friend
-
Topics
-
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் பரவி வரும் வைரஸ் இனத்தைச் சேர்ந்த B.1.258 என்ற புது வகை வைரஸை ஒத்த வைரஸே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். இருப்பினும் இது குறித்த நாடுகளில் தற்போது பரவி வரும் புதிய வைரஸ் வகையைச் சேர்ந்ததல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த வைரஸின் தொற்று வீதம் அதிகமாக காணப்படுவதுடன், தற்போது அதிகளவில் பேசப்படும் பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்காவில் பரவும் வைரஸ் வகையைவிட வேறுபட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://athavannews.com/இலங்கையில்-புதிய-வகை-கொர/ -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
மைத்திரியின் ஊடாக கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள்- பிள்ளையான் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்களென ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் தங்களது தலைவிதியை மாற்றிக் கொள்வதற்கு தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அபிவிருத்தி, அதிகார விடயங்கள் எவை வந்தாலும் உங்களுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற அளவிற்கு நீங்கள் மாற்றமடைய வேண்டும். இதனை கொழும்பிலோ அல்லது யாழ்ப்பாணத்தில் இருந்தோ வருகின்றவர்கள் தீர்மானிப்பதன் காரணமாக பல முறைப்பாடுகள், அழிவுகளை கடந்த காலத்தில் கண்டோம். இந்த கசப்பான அனுபவங்களை வைத்துதான் எமது கட்சி உருவானது. கிழக்கு மாகாணத்தில் உதித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை அழித்து விட வேண்டும் என்பதற்காகத்தான் என்னைக் கூட சிறையில் அடைத்தார்கள். அதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. எந்தவிதமான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாமல் திட்டமிட்ட வகையிலே மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தோம் என்ற நன்றிக் கடனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்,பகிரங்கமாக மைத்திரிபால சிறிசேன வந்தால் என்னை சிறையில் அடைப்பதாக மேடையில் பேசினார். அதை நடாத்திக் காட்டினார்கள். பரவாயில்லை. என்னை சிறையில் அடைத்ததை தவிர அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்றால் அவரது கிராமமான புதுக்குடியிருப்பிலுள்ள பாடசாலையை மூடுவதற்கான நிலைமைக்கு வைத்துள்ளார். நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு எங்களது கிராமத்தினை கட்டியெழுப்பாமல் போனால் ஏனைய கிராமங்களை எவ்வாறு கட்டியெழுப்புவோம். இந்த கேள்வியை அவர்களிடத்தில் கேட்டுப் பார்க்க வேண்டும். எங்களது மாகாணத்தினை நாங்களே நிர்ணயிக்க கூடிய மக்கள் கூட்டமாக ஆவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது” என்றார். http://athavannews.com/மைத்திரியின்-ஊடாக-கூட்டம/ -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
துருக்கியின் சவாலை எதிர்கொள்ள பிரான்ஸிடமிருந்து 18 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் கிரேக்கம்! கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான வளர்ந்து வரும் ஆயுதத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிரேக்கம் மற்றும் பிரான்ஸ் 2.5 பில்லியன் யூரோக்கள் (3 பில்லியன் டொலர்கள்) போர் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஏதென்ஸில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த ஒப்பந்தத்தில், கிரேக்க பாதுகாப்பு அமைச்சர் நிகோஸ் பனகியோடோபஒவுலோஸ் மற்றும் பிரான்ஸ் பிரதிநிதி புளோரன்ஸ் பார்லி கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் ‘பல திசைகளில் ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது’ என்று கிரேக்க பாதுகாப்பு அமைச்சர் கூறினார். இயற்கை எரிவாயு வளங்கள் மற்றும் அந்தந்த கடற்கரைகளுக்கு வெளியே உள்ள கடலில் கடற்படை செல்வாக்கு தொடர்பாக துருக்கியுடனான மோதலில் பிரான்ஸ் கிரேக்கத்தை கடுமையாக ஆதரித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கிரேக்கம் 18 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்குவதைக் காணும், அவற்றில் பிரான்ஸின் வான்படையின் பாவனையில் உள்ள 12 விமானங்களும் அடங்கும். இந்த ஒப்பந்தத்தில் உதிரிப்பாகங்களும், ஆயுதத் தளபாடங்களும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/துருக்கியின்-சவாலை-எதிர்/ -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதி: பைடன் கையெழுத்து! அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதியளிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, மூன்றாம் பாலினத்தவர்கள் இராணுவத்தில் சேர வழிவகை செய்தார். ஒபாமாவின் இந்த உத்தரவை பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் நீக்கினார். தற்போது மீண்டும் ட்ரம்ப் விதித்த தடையை நீக்கி, அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, அமெரிக்க ராணுவத்தில் ஏற்கனவே பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து பணி புரியலாம் ஆனால் இராணுவத்தில் புதிதாக மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜோ பைடன் கூறுகையில், ‘அமெரிக்க இராணுவத்தில் சேவை செய்யத் தகுதியுள்ள அனைவரும் இராணுவத்தில் சேரலாம். தகுதியுள்ள அனைவரும் வெளிப்படையாகவும் பெருமையுடனும் சேவை செய்யும்போது அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கும், அதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது’ என கூறினார். http://athavannews.com/அமெரிக்க-இராணுவத்தில்-மூ/
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.