குமாரசாமி

அன்புள்ள பரிமளம் அறிவது!

Recommended Posts

சிவமயம் 

பெர்லின் மேற்கு
ஜெர்மனி
15.10.1982

 

அன்புள்ள என்ரை செல்லக்குட்டி பரிமளம் அறிவது!
நான் நல்ல சுகம். அது போலை நீங்களும் நல்ல சுகமாய் இருக்க அரசடி பிள்ளையாரை வேண்டுறன்

நான் புதன்கிழமை விடியப்பறம் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தேன். என்னோடை வந்த இரத்தினத்துக்கு தெரிஞ்ச ஆக்கள் வீட்டிலை இப்ப நிக்கிறன். எப்பிடியும் வாறகிழமையளவிலை பரீசுக்கு ரிக்கற் எடுத்து தல்லாம் எண்டு வீட்டுக்காரர் சொன்னவர். சரியான குளிராய் இருக்கு.....வீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க வேணும்.சாப்பாடுகள்  பரவாயில்லை.சொண்டு வெடிச்சுப்போச்சுது. குளிருக்கு வெடிக்குமெண்டு இஞ்சை சொன்னவை.

இஞ்சத்தையான் குளிருக்கு மெத்தையிலை போர்த்து மூடிக்கொண்டு படுக்க நல்ல சுகமாயிருக்கு.என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை தெரியப்படுத்துறன். உங்களுக்கு நான் கடிதம் போட்டதை என்ரை வீட்டுக்கு சொல்ல வேண்டாம். அவையைப்பற்றி தெரியும் தானே.

என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.💕

இப்படிக்கு
அன்பு அத்தான் குமாரசாமி 💘

 

அடுத்த கடிதம் வரும்......

 

 

 • Like 14
 • Haha 4

Share this post


Link to post
Share on other sites
9 minutes ago, குமாரசாமி said:

வீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க

உடம்புக்கு போடுற கீற்றரைப் பற்றி ஒன்றுமே எழுதல்ல.
காசு முடிந்து போச்சோ?

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, ஈழப்பிரியன் said:

உடம்புக்கு போடுற கீற்றரைப் பற்றி ஒன்றுமே எழுதல்ல.
காசு முடிந்து போச்சோ?

 அவசர குடுக்கையள்...... இப்பவே கிண்ட வெளிக்கிட்டாச்சா.....😄
 அதையும் சொல்லுவன் தானே...😀

Share this post


Link to post
Share on other sites

மற்றவரின் கடிதங்களை ப்படிப்பது நாகரீகமில்லை . எங்களை  படிக்க ச்சொல்லி எழுதுகிறீர்கள். ஆவலுடன் படிக்க  காத்திருக்கிறோம். 

Share this post


Link to post
Share on other sites
19 minutes ago, நிலாமதி said:

மற்றவரின் கடிதங்களை ப்படிப்பது நாகரீகமில்லை . எங்களை  படிக்க ச்சொல்லி எழுதுகிறீர்கள். ஆவலுடன் படிக்க  காத்திருக்கிறோம். 

எல்லாமே கற்பனை உலகம் சகோதரி. நிஜகடலில் மூழ்க வேண்டாம். :)

Share this post


Link to post
Share on other sites

 

அன்புள்ள என்ரை செல்லம் அறிவது!
நான் நல்ல சுகம். உங்கடை சுகத்துக்கும் கடவுள் அருள் புரிவாராக.
நான் போன கிழமை ஒரு கடிதம் போட்டனான்.கிடைச்சிருக்குமெண்டு நம்புறன்.
இப்ப நான் பேர்லினை விட்டு   மேற்கு ஜேர்மனியிலை நிக்கிறன். சுவீஸ் இல்லாட்டி கொலண்டுக்கு போனால் நல்லது எண்டு இஞ்சை எங்கடை ஆக்கள் கனபேர் கதைக்கினம்.எனக்கும் என்ன முடிவெடுக்கிறதெண்டு தெரியேல்லை. பாப்பம்.
உங்கை வீட்டிலை எல்லாரும் சுகமாய் இருக்கினமோ? எல்லாரையும் சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ. தோட்டப்பக்கம் போனனியளோ? பக்கத்து தோட்டக்காரன் சந்திரனோடை கவனம். அவன் என்ன கேட்டாலும் ஒரு பதிலும் சொல்லக்கூடாது. அவன் ஒரு மாதிரியானவன் தெரியும் தானே.கொய்யா கொம்மாவை சுகம் கேட்டதாய் சொல்லவும். தங்கச்சி அதுதான் உங்கடை அன்புத்தங்கச்சியையும் நான் விசாரிச்சதாய் சொல்லவும். வேறை என்னதை எழுத....பிறகு விரிவாய் எழுதுறன். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை  அனுப்புறன். 

இப்படிக்கு
அத்தான்💓

 • Like 7
 • Haha 2

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

 அவசர குடுக்கையள்...... இப்பவே கிண்ட வெளிக்கிட்டாச்சா.....😄
 அதையும் சொல்லுவன் தானே...😀

முதல் கடிதத்தில தானே இதுகளை எழுத வேணும்.நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல கேக்காமல் பரிக்கிப் போட்டாங்கள் என்று.

அடுத்தடுத்த கடிதத்தில் எழுதுவம் என்று இருந்தா அதுக்கிடையில் ஊருக்கு தகவல் போடும்.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

ம்ம்ம்...அந்தக்காலத்திலேயே....இந்த  அடையாளம் ðஎல்லாமே....தூள் பறந்திருக்குது...!
நாங்கள் தான்.....பட்டிக்காட்டுச்  சீவியம்...சீவிச்சிருக்கிறம் போல கிடக்குது...!

தொடருங்கள்....அத்தான்!


மன்னிக்கவும்....அண்ணை...!😀

Edited by புங்கையூரன்

Share this post


Link to post
Share on other sites
47 minutes ago, புங்கையூரன் said:

தொடருங்கள்....அத்தான்!

அக்காவின் கணவன் அத்தான் தானே.தப்பே இல்லை.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

பிள்ளையார் சுழியும்   போட்டு பக்தி முக்தியாய் கடிதம்  எழுதத் தொடங்கியது எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு     

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
5 hours ago, குமாரசாமி said:

சிவமயம் 

பெர்லின் மேற்கு
ஜெர்மனி
15.10.1982

அன்புள்ள என்ரை செல்லக்குட்டி பரிமளம் அறிவது!
நான் நல்ல சுகம். அது போலை நீங்களும் நல்ல சுகமாய் இருக்க அரசடி பிள்ளையாரை வேண்டுறன்

நான் புதன்கிழமை விடியப்பறம் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தேன். என்னோடை வந்த இரத்தினத்துக்கு தெரிஞ்ச ஆக்கள் வீட்டிலை இப்ப நிக்கிறன். எப்பிடியும் வாறகிழமையளவிலை பரீசுக்கு ரிக்கற் எடுத்து தல்லாம் எண்டு வீட்டுக்காரர் சொன்னவர். சரியான குளிராய் இருக்கு.....வீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க வேணும்.சாப்பாடுகள்  பரவாயில்லை.சொண்டு வெடிச்சுப்போச்சுது. குளிருக்கு வெடிக்குமெண்டு இஞ்சை சொன்னவை.

இஞ்சத்தையான் குளிருக்கு மெத்தையிலை போர்த்து மூடிக்கொண்டு படுக்க நல்ல சுகமாயிருக்கு.என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை தெரியப்படுத்துறன். உங்களுக்கு நான் கடிதம் போட்டதை என்ரை வீட்டுக்கு சொல்ல வேண்டாம். அவையைப்பற்றி தெரியும் தானே.

என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.💕

இப்படிக்கு
அன்பு அத்தான் குமாரசாமி 💘

அடுத்த கடிதம் வரும்......

Bildergebnis für balkon schlafen

அன்புள்ள அத்தான்.... குமாரசாமி   அறிவது, ❤️

இப்ப அரசடி பிள்ளையார் கோயிலடியில்... புத்த விகாரை வந்து, கனகாலமாச்சு.
நீங்கள் எனக்கு கடிதம் போட்டது, உங்கடை வீட்டுக்காரருக்கு தெரிந்தால்...
உங்களை,   "பல்கணியில்" படுக்க விட்டுடுவார்கள் என்பதால், நான் அதை வெளியில் சொல்ல மாட்டேன். :grin:

Edited by தமிழ் சிறி
 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

முதலாவது கடிதத்தில் "அன்பு அத்தான் "   இரண்டாவதில் "அன்பை "காணேல்ல அன்புத் தங்கச்சி வந்திருக்கிறா......இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதோ பார்ப்பம்.........!  👍

Share this post


Link to post
Share on other sites

காதல் கடிதங்கள் சுவாரஸ்யமானவை!

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி அதுதான் உங்கடை அன்புத்தங்கச்சியையும் நான் விசாரிச்சதாய் சொல்லவும்

பாசமுள்ள அத்தான்......தூர தேசம் போனாலும் மறக்காமல் சுகம் விசாரிக்கின்றார்

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, குமாரசாமி said:

எனக்கு விலாசம் கிடைச்சவுடனை தெரியப்படுத்துறன். உங்களுக்கு நான் கடிதம் போட்டதை என்ரை வீட்டுக்கு சொல்ல வேண்டாம். அவையைப்பற்றி தெரியும் தானே.

அடுத்த கடிதம் வரும்......

 

 

அந்தக்காலத்தில் கடிதங்கள் மூலம் உறவைப் பேணிய மகிழ்ச்சி தற்போதய மின்னஞ்சல், குறுந்தகவல் தொடர்புகளில் தெரிவதில்லை. 

முப்பது வருஷத்துக்கும் முந்தைய திகதியுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள். கடிதம் படிக்க மேலும் ஆவலாக உள்ளேன். தொடருங்கள் குமாரசாமி அண்ணை. 🙂

 

நம்மட பங்குக்கு ஒரு 'சிற்ருவேஷன் ஸோங்' போட்டாச்சு! 😍

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

 

 

Edited by Shanthan_S

Share this post


Link to post
Share on other sites

குமாரசாமி அண்ணா!

உங்களின் பகிர்வுகள் எல்லாம் நகச்சுவையுடன் இருக்கும். நானும் ரசிப்பேன்.தொடருங்கள்....

Share this post


Link to post
Share on other sites

அசத்தல் குமாரசாமி. நல்ல ஐடியா😂😂

Share this post


Link to post
Share on other sites

பிள்ளையார் துணை

பிறேமன்
மேற்கு ஜேர்மனி 
19,10.1982

அன்புள்ள தேன் பரிமளம் அறிவது!
                                                         நான் நல்லசுகம்.உங்கடை சுகங்கள் எப்பிடி?

என்னையும் இன்னும் கொஞ்ச  ஆக்களையும் நாங்கள் ரயிலிலை பரீஸ் போய்க்கொண்டிருக்கேக்கை பொலிசு பிடிச்சுப்போட்டார்கள்.நீங்கள் பொலிசு எண்டவுடனை  கனக்க யோசிக்க வேண்டாம். அகதியாய் வந்தால் இஞ்சை இப்பிடித்தானாம்.எங்களை விசாரிச்சுப்போட்டு ஒரு பெரிய காம்பிலை விட்டிருக்கினம். இஞ்சத்தையான் பொலிசு நல்லவங்கள்.அடிக்கேல்லை.நல்ல அன்பாய் கதைக்கினம்.

காம்பிலை கனசனம் இருக்கினம்.எல்லாம் வேறை வேறை நாட்டுக்காரர். எங்கடை சனமும் கனபேர் இருக்கினம்.அதாலை ஒரு பயமும் இல்லை. கடியன் கந்தையாவின்ரை மூத்த பெட்டையும் இஞ்சைதான் நிக்குது. நான் திரும்பியும் பாக்கேல்லை.நான் இருக்கிற றூமிலை 8பேர் இருக்கிறம்.புங்குடுதீவு,அரியாலை,கொழும்புத்துறை,மானிப்பாய்,முல்லைத்தீவு,கொழும்பு,பூநகரி எண்டு எல்லாரும் வேறைவேறை இடத்து ஆக்கள்.பழகிறதுக்கு நல்லவை போலை கிடக்கு.

இஞ்சை வரவர குளிர் கூடுது.குளிருக்கு பியர் நல்லதெண்டு அரியாலைப்பொடியன் ஈழக்குமார் சொன்னவர்.ஒரு சில ஆக்கள் பியர் ரின் வாங்கி குடிப்பினம்.நான் குடிக்கிறதில்லை.இஞ்சையெல்லாம் பியர் குடிக்கிறது கெட்டபழக்கம் இல்லையாம்.இஞ்சை காம்பிலை மூண்டு நேரமும் பெட்டிச்சாப்பாடு தருவினம்.மாதம் 75ருபாயும் கைச்செலவுக்கு தருவினமாம்.

நான் உங்களுக்கு கடிதம் போடுறது ஒருத்தருக்கும் சொல்லவேண்டாம்.பீயோன்  ஏகாம்பரம் ஐயாவிட்டை எல்லாம் விபரமாய் சொல்லியிருக்கிறன்.அவர் இரகசியமாய்த்தான் கடிதங்களை கொண்டுவந்து தருவார்.நீங்கள் கடிதம் எனக்கு போடேக்கை அவரிட்டையே குடுத்து விடுங்கோ.அவர் முத்திரை ஒட்டி எனக்கு போடுவார்.என்ரை செல்லம் நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.வேலை கிடைச்சவுடனை நான் எல்லாத்தையும் பாக்கிறன்.கொஞ்ச நாள் போக  ஒவ்வொருத்தருக்கும் வீடடிச்சு விடுவினமாம்.அதுக்குப்பிறகு வேலை தேடி எடுக்கலாமாம்.இல்லாட்டி சுவீஸ் போகலாம் எண்டு கதைக்கினம்.

என்ரை வில்லன்  அதுதான் உங்கடை பொடிகாட் கொண்ணர் என்ன செய்யிறார்? நான் இல்லாதது அவருக்கு ஒருசோலி முடிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறன். நான் என்ரை மாம்பழம் உங்கடை நினைப்பிலை தான் இருக்கிறன்.அதை ஒருத்தராலையும் ஒண்டும் செய்யேலாது.  சரி செல்லலம் கனக்க எழுதிப்போட்டன் போலை கிடக்கு. இப்ப இஞ்சை நேரம் இரவு ஒன்பதரை.மற்றவை காட்ஸ் விளையாடிக்கொண்டிருக்கினம்.நான் படுக்கப்போறன்.என்ரை தற்போதைய விலாசம் பின்பக்கம் எழுதிவிடுறன்.பதில் கடிதத்தை  ஏகாம்பரம் ஐயாவிட்டை குடுத்து விடுங்கோ.உங்கடை பதில் கடிதம் காண வழிமேல் விழிவைத்து காத்திருப்பேன் அன்பே.

என்ரை ராசாத்திக்கு ஆயிரம் முத்தங்கள்.💕

இப்படிக்கு 
அத்தான் குமாரசாமி💘
     

 

 • Like 11
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

கொப்பனும்,கொம்மாவும் உள்ள காணி,வயலை வித்து வெளி நாட்டுக்கு அனுப்பி விட வந்ததும்,வராததுமாய் பரிமளத்திற்கு கடிதம் 🙄
 

 • Thanks 1
 • Haha 3

Share this post


Link to post
Share on other sites
20 minutes ago, ரதி said:

கொப்பனும்,கொம்மாவும் உள்ள காணி,வயலை வித்து வெளி நாட்டுக்கு அனுப்பி விட வந்ததும்,வராததுமாய் பரிமளத்திற்கு கடிதம் 🙄
 

அண்ணரிண்ட  விளையாட்டு, இப்பதான் தங்கச்சியாருக்கு தெரியுது போல...

Share this post


Link to post
Share on other sites

அந்த சிவப்பு நீலக்கரை போட்ட கடிதத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஞாபகங்களை மறக்கக் கூடியதா? அந்த நாளில் செல் போனும் இல்லை கணனியும் இல்லை. கடிதம் ஒன்றுதான் தொலைத் தொடர்பு சாதனம். அசத்தலாகக் கடிதம் எழுதும் குமாரசாமியின் கடிதங்கள் அபாரம். தொடருங்கள் . 

Share this post


Link to post
Share on other sites

துர்க்கை அம்மன் துணை

கரணவாய் சென்ரல்
கரணவாய்
2.11.1982

அன்புள்ள ஆசை அத்தானுக்கு.

நான் இங்கு நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க அம்மனை வேண்டுகின்றேன்.

உங்கள் பொன்னான மூன்று கடிதங்களும் என் கைக்கு கிடைத்தது. உங்கள் முத்து முத்தான  முத்தங்களை அள்ளி பகிர்ந்தேன்.

உவ்விடம்  கடுமையான குளிர் என எழுதியிருந்தீர்கள். நல்ல உடுப்புகள் வாங்கி போடுங்கோ. சாப்பாடுகள் எல்லாம் என்ன மாதிரி?  கூடாத சாப்பாடுகளை சாப்பிட வேண்டாம். புட்டு இடியப்பம் எல்லாம் தருவார்களோ? உங்களுக்கு முட்டுக்காய் தேங்காய் துருவல் போட்ட புட்டு நல்ல விருப்பம் என்று உங்கடை அம்மா சொன்னவ .

செவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிட வேண்டாம்.நான் இப்ப அம்மனுக்கும் முருகனுக்கும் விரதம் பிடிக்கிறன்.      சொண்டு வெடிச்சுப்போச்சுதெண்டு எழுதியிருந்தீர்கள்.டாக்குத்தரிடம் போய் மருந்து எடுங்கோ. உங்கை பாசைப்பிரச்சனை இல்லையோ?

கடியன் கந்தையாவின்ரை மகள் கதை கேட்டாலும் கதைக்க வேண்டாம்.வேறு இடம் மாற முடியுமென்றால் இடம் மாறவும்.அவள் உங்கடை அறைக்கு பக்கத்திலையா இருக்கிறாள்?

அய்யாவும் அம்மாவும் சுகமாய் இருக்கினம்.நீங்கள் சுகம் கேட்டதாய் சொன்னேன். சந்தோசப்பட்டினம். அய்யா உங்கடை அய்யாவோடை எங்கடை கலியாணத்தை பற்றி கதைக்கப்போறன் எண்டு சொன்னார். தங்கச்சி வசந்தி உங்களைப்பற்றியே நெடுக விசாரிச்சுக்கொண்டிருப்பாள்.நீங்கள் சுகம் விசாரிச்சதாய் சொன்னேன். அவளுக்கும் நல்ல சந்தோசம். அத்தான் என்னைத்தான் எண்ட பாட்டை நான் பாட அவளும் சேர்ந்து பாடுவாள். சின்னப்பிள்ளை தானே.  

நீங்கள் இருக்கிற அறையிலை எட்டுப்பேர் என எழுதியிருந்தீர்கள். எல்லாரும் உங்கடை வயதுக்காரார்களோ? எல்லாரும் குடிக்கிறவையோ? நீங்கள் கவனமாய் இருங்கோ.நீங்கள் கெட்ட பழக்கம் பழக என்ரை அம்மன் விடமாட்டா. இருந்தாலும் நீங்கள் கவனமாய் இருக்கவும்.பியோன் ஏகாம்பரம் நல்ல மனிசன்.அய்யாட்டை வாற சாட்டிலை உங்கடை கடிதத்தை என்னட்டை ஒருத்தருக்கும் தெரியாமல் தெரியாமல் தருவார்.

எனது அண்ணா சுகமாக இருக்கிறார்.அண்ணா எங்கள் காதல் விவகாரம் தெரிந்து உங்களை சைக்கிளால் தள்ளிவிட்டு அடித்ததை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன். அதை நினைக்கும் போதெல்லாம் என் இதயம் வெடிக்கும்.எல்லாம் எனக்காகத்தானே தாங்கிக்கொண்டீர்கள்.வசந்தியும்  என்னுடன் சேர்ந்து கவலைப்படுவாள்.

இப்பவும் நோகுதா அத்தான்?

நான் எத்தனை முறை தடவினாலும் அந்த வலி ஆறாது என்பது எனக்குத்தெரியும் அத்தான். இதை எழுதும் போது என்மனம் அழுகின்றது அத்தான்.உங்களை கட்டிப்பிடித்து அழவேண்டும் போலிருக்கின்றது அத்தான். ஆயிரம் முத்தங்கள் என் அத்தானுக்கு.

நீங்கள் எனக்கு கைச்செலவுக்கு தந்த பத்தாயிரம் ரூபாய் அப்பிடியே வைச்சிருப்பன்.அதை செலவழிக்க மாட்டன்.உங்களுக்கு சொந்தமான 85 ஏக்கர் முரசுமோட்டை வயலை உங்கடை தங்கச்சிக்கு எழுதினதை ஊரிலை பெரிசாய் கதைக்கினம். அண்ணா என்றால்  இப்படித்தான் இருக்கோணுமாம். பளையில் இருக்கும் தென்னம் தோப்புகளை என்ன செய்யப்போகின்றீர்கள். அதையும் தங்கச்சிக்கு எழுதி விடுறது நல்லது என நான் நினைக்கின்றேன். அத்தான் உடம்பை கவனியுங்கோ.நேரத்துக்கு சாப்பிடவும். உங்களை காணாதது எனக்கு ஏதோ விடியாதது மாதிரி இருக்கின்றது.இத் துடன் முடிக்கின்றேன். உங்கள் பதில் கடிதம் கண்டதும் முத்த மழை பொழிவேன்.
அன்பு ஆசை அத்தானுக்கு அளவில்லா முத்தங்கள்.

இப்படிக்கு
உங்கள் அன்பு வருங்கால துணைவி
பரிமளம்

 • Like 10

Share this post


Link to post
Share on other sites

ஒரு முடிவோட தான் சாமியார் எழுதிறார்!
தொடர்கிறேன்... தொடருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • Year 2019 is of great significance as it marks ten years since the defeat of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) by the Sri Lankan military forces. People looked forward to enjoying peace after years of conflict and there seemed to be more freedom, economic development and material prosperity in many parts of the country. There were changes within the society where people visibly relaxed with lax security concerns. It seemed as if there were no major threats to national security until the Easter Sunday carnage this April.  While military victory was crucial in ensuring the defeat of the LTTE, it is vital to scrutinise whether peace and positive socio-economic changes were enjoyed by every citizen. The study titled ‘The Forgotten Victims of War: A Border Village Study’ by Marisa de Silva, Nilshan Fonseka and Farah Mihlar proves that this was not the case. Specifically in areas identified as ‘border villages,’ people have suffered more harshly than those in other parts of the country, during both war and post-war periods. Moreover, the emergence of new extremist Islamic terrorist threats and further ethnic disharmony it has caused within the country proves that the society has not fully healed yet.  This is not to say there had not been any positive reconciliation effort since the end of the war in 2009, but the sparks of extremist nationalism and religious ideologies that ignited a fully-blown conflict in Sri  Lanka still remain. New threats have emerged and if same sentiments of extremist thinking are continued, there could be worse repercussions. Hence, the aforementioned study appears at an opportune moment. It looks at the progress we have made in terms of reconciling efforts after the three-decade-long war, the weaknesses and loopholes that need to be addressed in terms of reconciliation, peace-building and development. Moreover, it discusses the possibilities of enhancing ethnic harmony and recommendations that can be initiated by different stakeholders for sustainable solutions.      Children in border villages have less chances of receiving a quality education ‘BORDER VILLAGES’ As represented in this study, ‘border villages’ refer to villages that can be found in the border of the northern and eastern provinces; or in the ‘border’ between the LTTE and military controlled areas; or villages on outskirts of the conflict zone, which were vulnerable to attacks by warring factions. The comprehensive report focuses on selected border villages from six different districts. They had different ethnic and religious breakdowns; the districts of Anuradhapura and Polonnaruwa represented a Sinhalese majority; Mullaitivu and Batticaloa a Tamil majority and Trincomalee and Ampara a Muslim majority. The report analyses the impact of war towards the lives of all three of these ethnic groups and how they are adjusting after the post-war period.  According to the authors, most of the villages represent different distributions of ethnic concentrations, where the majority was used to identify whether it was a Sinhala border village, Tamil border village or a Muslim border village. They often existed side-by-side with a village composed of the religious/ethnic other. Therefore, they become ideal spaces where conditions related to war, ethnicity and reconciliation can be observed.  However, the authors mention that the idea of ‘border’ itself can be problematic as the term can be identified with a stigma attached. They have used this term to “capture the geographical, demographic and territorial dimension of the target group” while recognising “it was often unclear, fluid and shifting where the Tamil militant-controlled territory ended and Sri Lankan military-controlled territory began.” The experiences of residents in Sinhala, Tamil and Muslim border villages highlight how they encountered stigma and how they were victimised by their own communities and by those who were identified as ‘the other.’ While this was not an ideal situation, it also represents a possibility for the future, through their common victimhood. According to Marisa de Silva, Nilshan Fonseka and Farah Mihlar, this common victimhood can even be identified as the greatest strength for Sinhalese, Tamils and Muslims who have suffered during the war and post-war contexts. For instance, the authors mention that the evidence of communities’ ability through common ‘victimhood’ to transcend the association of the ethnic/religious ‘other’ from the perpetrator reach out to understand their suffering and grievances. In this ability to understand, empathise and feel for the ‘other’ lies tremendous hope for reconciliation and peace in Sri Lanka.  Suffering is common despite ethnic or religious divisions. Deaths, disappearances, loss of loved ones, displacement, loss of land and property influence the sanity and standards of living of anyone despite their superfluous divisions or whether they are Sinhalese, Tamils or Muslims. Understanding this reality and learning to empathise with each other will be the way forward. 
  • என்ன இருந்தாலும் ஆம்பள... வா. மணிகண்டன்   கடந்த இரண்டு நாட்களாக திடீரென்று அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆண்கள் தின வாழ்த்துகள் கண்களில் தென்பட்டது. கிழவன் கோவணம் கட்டிய கதையாக. பெரும்பாலும் ஆண்களுக்கு ஆண்களே சொல்லிக் கொண்ட, சிதறிக் கிடந்தத அந்த வாழ்த்துகளைப் பார்த்த போது நினைவுகள் பால்யத்துக்கு போய்த்தான் நின்றது. எனக்கும் தம்பிக்கும் ஒன்றரை வருடங்கள்தான் வயது வித்தியாசம். இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்வது சிரமம் என்பதாலோ என்னவோ பள்ளிக்கூடம் செல்லும் வரைக்கும் அமத்தாவிடம்தான் அதிகமாக இருந்த ஞாபகம். அமத்தா ஓர் ஆணாதிக்கவாதி. பெண்களைவிடவும் ஆண்களே உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் கொண்டவர். ‘என்ன இருந்தாலும் ஆம்பள’ என்கிற எண்ணத்தை விதைத்து வைத்திருந்தார். அதே நினைப்புடன்தான் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினேன்.பள்ளிக்குச் சென்ற முதல் சில வருடங்கள் முழுமையாக நினைவில் இல்லை.   இரண்டாம் வகுப்பு படிக்கும் போது சத்தியமங்கலத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். அங்கேயொரு ராட்சஸி ஆசிரியையாக இருந்தார். சித்ரா. இப்பவும் ஏதாவது முறையற்ற காமக்கதைகள், வில்லியாக யாரைவாயது சித்தரிக்க வேண்டுமானால் நான் பயன்படுத்துகிற பெயர் அது. அந்த ராட்சஸிக்கு எப்படித்தான் அப்படியெல்லாம் தோன்றுமோ தெரியவில்லை- வகுப்பறையில் ஒரு பையன், ஒரு பெண் என்று மாற்றி மாற்றி அருகில் அமர வைத்துவிட்டார். கொஞ்சம் விவரம் வந்த பிறகு அப்படி அமர்ந்திருந்தால் கூட எசகுபிசகாக எதையாவது செய்து பார்த்திருக்கலாம். அப்பொழுதெல்லாம் ‘கேர்ள்ஸ் மேல பாய்ஸ் முட்டக் கூடாது’ என்று தொடை இரண்டையும் சேர்த்து இறுக்கி அமர்ந்து கொள்வேன். இரண்டு பக்கங்களில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களில் ஒரு பெண்ணின் முகம் கூட ஞாபகமில்லை. ஆனால் இன்னொரு பக்கம் அமர்ந்திருந்த பானுவின் ஞாபகம் இருக்கிறது. அவளும் ஒரு ராக்காஸி. அவளுடைய வேலையே என்னைக் கிள்ளி வைப்பதுதான். எப்பொழுது வேண்டுமானாலும் கிள்ளி வைக்கும் உரிமை அவளுக்கு இருந்தது. ஆரம்பத்தில் எதிர்த்துப் பார்த்தேன். மிஸ்ஸிடம் சொல்லி வைத்தேன். ‘தொணதொணன்னு பேசிட்டு இருக்கான் மிஸ்’ என்று அவள் சமாதானம் சொன்னால் போதும். சித்ரா மிஸ்ஸூம் சேர்ந்து அடிப்பார். சித்ராவிடம் அடிவாங்குவதற்கு பதிலாக இவளது கிள்ளலோடு நிற்கட்டும் என்று அவள் என்னதான் கிள்ளினாலும் பொங்கி வரும் அழுகையை அப்படியே அடக்கிக் கொள்வேன்.    பானுவுக்கு ஒண்ணுக்கு வந்தால் கூட என்னைக் கிள்ளி வைப்பாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கர்ண கொடூரி. அப்படி அவள் கிள்ளிக் கிள்ளி, அமத்தா ஊட்டி வளர்த்த ‘என்ன இருந்தாலும் ஆம்பள’ என்பதெல்லாம் தொடை வழியாக வழிந்து கொண்டேயிருந்தேது. ‘அவளை எப்படியாச்சும் கொன்றுவிட வேண்டும்’ என்றெல்லாம் கூட திட்டமிட்டேன். அவளைப் பார்த்தாலே பயமாக இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல சித்ராவும் பானுவும் என் தொடை மீது கதக்களி ஆடி, குண்டம் இறங்கிக் கொண்டேயிருந்தார்கள். ஒருவழியாக அம்மாவுக்கு பணியிட மாறுதல் கிடைக்க அந்த வருடம் பள்ளிக்கூடம் மாற்றிவிட்டார்கள். அதனால் தப்பித்தேன். இல்லையென்றால் வெறியெடுத்த சைக்கோவாகியிருக்கக் கூடும். எப்படிச் சொல்கிறேன் என்றால் இன்று வரைக்கும் எனக்கும் அவ்வப்பொழுது கனவில் வந்து பானு கிள்ளி வைக்கிறாள்; கடிக்கிறாள். கடிக்கிறாள் என்றால் நடிகையொருத்தி நாயகனின் காதை செல்லமாகக் கடிப்பது போல நீங்கள் கருதிக் கொள்ளக் கூடாது.    கடந்த வாரத்தில் வந்த கனவைச் சொல்கிறேன். வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பெண்ணின் உடல் மிதந்து வருகிறது. முகம் நீருக்குள் புதைந்திருக்கிறது. ஒரு நீண்ட குச்சியை எடுத்து உடலை இழுக்கிறேன். ஓர் அசைவுமில்லை. பக்கத்தில் வந்தவுடன் உடலைத் திருப்பினால் தலைமுடி மட்டும் கிராப் வெட்டப்பட்டு பானுவைப் போல இருக்கிறது. முகம் தெளிவில்லை. திடீரென்று எழுந்தவள் என்ன செய்திருப்பாள் என நினைக்கிறீர்கள்?  நன்றி சொல்லியிருப்பாள் என்று சிலர் கருதக் கூடும். தொடையைக் கிள்ளியிருப்பாள் என்று பலர் நினைக்கக் கூடும். இரண்டுமில்லை- முதல் வேலையாக கழுத்துக்குக் கீழாக தோள்பட்டையில் வெறுவெறுவென்று கடிக்கத் தொடங்கிவிட்டாள். ரத்தம் வாய்க்கால் நீரோடு கலந்து பிசுபிசுத்து ஓடுகிறது. எப்படித் தப்பித்தேன் என்று தெரியவில்லை. கனவில் பெண்ணொருத்தி வந்து கடித்து வைத்தாள் என்று மொட்டைத்தலையன் குட்டையில் விழுந்த மாதிரி சொன்னால் அடுத்தவர்களுக்கு எப்படியெல்லாம் கற்பனை ஓடும்? வெளியில் சொல்லவா முடியும்? உங்களிடம்தான் கொட்ட முடிகிறது. பானு இன்னமும் Nightmare என்பதை வேறு எப்படிப் புரிய வைப்பது.    பானு கதை இப்படி என்றால் ஐந்தாம் வகுப்பில் மகேஸ்வரி என்றொருத்தி இருந்தாள். கருகருவென்று வாட்டசாட்டமாக இருப்பாள். ஐந்தாம் வகுப்பு வரைதான் என்னை இருபாலர் பள்ளியில் படிக்க வைத்தார்கள். மகேஸ்வரி ஒரு பெரிய ரவுடி. கையில் சிக்கினால் சாத்திவிடுவாள். அவளிடம் நான் வம்பு செய்ததாக எந்த நினைவுமில்லை. அன்றைக்கும் இப்படித்தான் ஒல்லிப்பிச்சானாக இருப்பேன். அவளிடம் வம்பு செய்கிற அளவுக்கு உடலில் ஓட்டம் போதாது. அப்படி ஓடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு நாள் மதிய உணவு இடைவேளையின் போது வேறொரு பெண்ணிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுது பார்த்து ஓர் ஆசிரியை வந்துவிட்டார். வகுப்பறையில் நான்கைந்து பேர்தான் இருந்தோம். டீச்சர் விசாரணையைத் தொடங்கினார். எல்லோரும் ஒவ்வொரு காரணத்தைச் சொன்னார்கள். முந்திரிக்கொட்டையாக நான்தான் மகேஸ்வரிதான் முழுமையான காரணம் என்று சொல்லிவிட்டேன். அப்பொழுதும் கூட ‘என்ன இருந்தாலும் ஆம்பள’ என்கிற எண்ணம் எனக்குள் உறங்கியிருந்திருக்க வேண்டும். டீச்சர் மகேஸ்வரியை நான்கு சாத்து சாத்திவிட்டுச் சென்றுவிட்டார். மகேஸ்வரி அழுது கொண்டிருந்தாள். அப்பொழுதாவது அமைதியாக இருந்திருக்கலாம். பக்கத்தில் போய் ‘இனிமே யாரையும் அடிக்காத’ என்றேன். சொல்லி வாய் மூடவில்லை. முறைத்துவிட்டு ஒரு தள்ளு தள்ளினாள் பாருங்கள். சுவரோடு சுவராக அப்பினேன்.  வெறியெடுத்து எழுந்தவள் நரம்படி நாராயணனாக இருந்த என் இரண்டு கைகளையும் பின்னால் சேர்த்து அவளது இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு தனது முட்டியை வைத்து முதுகில் நான்கைந்து இடி இடித்தாள். சுவரில் மோதிய போதே கண்கள் இருண்டு, பாதி சிறுநீர் பை நிரம்பியிருந்தது. அவள் முட்டியை வைத்து இடிக்கவும், சிறுநீர் பெருக்கெடுக்க மூச்சே நின்றுவிட்டது. திருப்பி அடிக்காவிட்டாலும் தொலைகிறது. என்னால் தப்பிக்கவும் முடியவில்லை. தனது வெறியெல்லாம் தீர்ந்த பிறகு ‘இனிமே டீச்சர்கிட்ட சொல்லி வைக்காத’ என்றாள். அழுதபடியே கழிப்பறையை நோக்கி ஓடினேன். அவளையும் கொன்றுவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் அவள் முகத்தைக் கூட பார்க்கவில்லை.    இப்பொழுது பானு, மகேஸ்வரியெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சிறு வயதிலேயே ‘என்ன இருந்தாலும் ஆம்பள’ என்கிற எண்ணத்தில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டவர்கள் அவர்கள்தான். ஒருவேளை அவர்களையும் கீழே போட்டு மிதிக்கும் ஆண்கள் கணவனாக வந்திருக்கலாம் அல்லது எவனாவது முரட்டு அடி வாங்கிக் கொண்டிருக்கலாம். பானு, மகேஸ்வரி மாதிரியான பெண்களை எல்லாம் எதிர்கொண்ட வாழ்க்கையில் அடுத்த ஏழு வருடங்களுக்கு பெண் வாசமே இல்லை. சைட் அடித்துக் கொண்டு திரிந்தாலும் பெண்களின் பக்கத்திலேயே போனதில்லை. அதனால் அவர்களும் என்னை அடிக்கவில்லை. ஆனால் பெண்களிடம் போனால் அடி விழும் என்கிற பயம் மட்டும் ஆழ ஒட்டிக் கொண்டது. பெண்கள் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கலாம். ஆனால் எனக்கு இந்த பயம்தான் அதிகம்.இந்த லட்சணத்தில் ‘ஆண்கள் தினம்’ வேறு கொண்டாடுகிறார்கள். ‘ஆணாகப் பிறந்ததற்கே வெட்கப்படுகிறேன் டோலி’ என்று ஆல்பர்ப்பஸ் அங்கிள் ஆவதற்கு முயற்சி செய்யும் போது கூட இந்த பயம்தான் எட்டிப் பார்க்கிறது.  இதையெல்லாம் சொன்னால் ‘கதை விடுறான்’ என்று முகமூடி ராஜேஷ் மாதிரியான ஆட்கள் கலாய்க்கக் கூடும். நீங்களே சொல்லுங்கள் - இந்தக் காலத்தில்  யாரைத்தான் கலாய்க்காமல் விட்டுவைக்கிறார்கள்?    http://www.nisaptham.com/2019/11/blog-post_21.html
  • தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர் இல்லாவிட்டால் என்ன  செய்வதாக உத்தேசம்  ?  இந்தியாவில் இருக்கும் பரந்தன் ராஜன் குழுவினரை இறங்குவீர்களா ?  அல்லது பழிவாங்கும் ஆவேசத்தில் இருக்கும் முன்னாள் போராளிகளை தூண்டி விடுவீர்களா  இந்திய சிதறினால்  மட்டும்தான் தமிழருக்கு விடுதலை.