குமாரசாமி

அன்புள்ள பரிமளம் அறிவது!

Recommended Posts

On 1/20/2020 at 1:18 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆகா பரிமளம் குமாரசாமியை கவிஞர் ஆக்கிவிட்டாவே

🤓🤗

குமாரசாமி கள்ளடிச்சால் கவிஞன்.😎

On 1/20/2020 at 2:17 AM, ராசவன்னியன் said:

பரிமளம் அம்மணிக்கு இன்னமுமா கலியாணம் ஆகலை..? vil2_cupidon.gif

பின்னே எப்பிடி இந்த ஐத்தான், பொய்த்தான், பொத்தான் என உருகல் cum மருகல்..?  vil2_envoicoeur.gif

ஒருவேளை பரிமளம் அம்மணி,  கு.சா வுக்கு முறைப்பெண்ணோ? dubitatif.gif

 பரிமளம் பக்கத்துக்கு பக்கத்து வீடு 😂

On 1/20/2020 at 3:40 AM, ஈழப்பிரியன் said:

அப்பாடா ஒரு கடிதத்திலேயே 15 அத்தான்.

அத்தான் செத்தான்.

அத்தான்ரை கெத்து வேறை லெவல் 🏋️‍♂️

19 hours ago, பையன்26 said:

நான் யாழுக்கு வார‌தே தாத்தாவின் எழுத்தை பார்த்து சிரிக்க 😁 , தாத்தா நீ க‌ல‌க்கு 😘

:grin:😀😊

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

குமாரசாமி கள்ளடிச்சால் கவிஞன்.😎

 பரிமளம் பக்கத்துக்கு பக்கத்து வீடு 😂

அத்தான்ரை கெத்து வேறை லெவல் 🏋️‍♂️

 

 

கவிஞர்(?) கு.சா..!

இம்மாதிரி ஏதும் பரிமளம் அம்மணியோடு செய்து போடாதீர்கள்..!  vil-modeste2.gif

யாழ் களம் தாங்காது..! :)

Share this post


Link to post
Share on other sites
On 1/19/2020 at 9:21 PM, குமாரசாமி said:

துர்க்கை அம்மன் துணை

கரணவாய் சென்ரல்
கரணவாய்
05.08.1983

 

அன்புள்ள ஆசை அத்தானுக்கு,

நான் இங்கு நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க அம்மாளாச்சியை வேண்டுகின்றேன்.
நேற்றிரவு ஒரு கனவு கண்டேன் அத்தான்.

ஊர் குறட்டை விடும் சாமத்திலே...
நானுறங்கும் நேரத்திலே...
காத்துப் போல வந்து தொட்டது யார்? 
காதல் தீயை நெஞ்சில் இட்டது யார்?
யார் அது யார் என் அத்தானே?

அது நீங்கள் தான் அத்தான்.
அது நீங்கள் தான் அத்தான்.


நீங்கள் தந்த பட்டுச் சேலை....
கலையாமல் கட்டிபார்த்தேன்....
கலியாண பொம்புளை போல...
கால் விரல் மெட்டிச்சத்தம் ..
காதோரம் உங்கள் மூச்சுச்சத்தம்..

என் அத்தான் அங்கிருந்து தனியே வாட..
இங்கே தென்னந்தோப்பில் தனியே ..
இருந்து நான் பாடும்..
குயில் பாட்டு கேக்குதா அத்தான்..
தூங்காமல் என் மனம் கிடந்து வாடுது அத்தான்..
சொல்ல துணை யாருமில்லை அத்தான்..


சுவரோரம் சாய்ஞ்சிருந்து..
என்னோடை நானே இங்கே...
தனியாக பேசுறேன்.
பாய்கூட முள்ளாப் போச்சு அத்தான்...  
தலையணி கல்லாய்ப்போச்சுது...
தூங்காமல் வாடுறேன்.

அத்தான் உங்கள் பெயரை... 
மணலில் எழுதி கை நோகுது....
கற்பூரமாய் உருகி உருகி...
நாள் போகுது அத்தான்.
தாலி கட்டுவது எப்போது அத்தான்?
மணமேளம் சத்தம் எப்போது அத்தான்?

இப்படிக்கு
உங்கள்
ஆசை
இதய 
பரிமளம்

அண்ணை... பரிமளத்தை, பார்க்க... பாவமாய் இருக்கு. 
சட்டு, புட்டு என்று... ஜேர்மனிக்கு  கூப்பிடுற  அலுவலை,  கெதியாய்.... பாருங்கோ. :grin:

Share this post


Link to post
Share on other sites

நியாயமா குமாரசாமியின் வேஸ்ட் & பேஸ்ட்டில்தான் ஒட்டியிருக்க வேண்டும், மாறி இங்கு வந்திட்டுது......பிறகுதான் பார்த்தால் பரிமளம் ஜெர்மனி வந்தபின் (வந்தால்) இவரின் வாழ்க்கையே இப்படி ஜாலியாய் மாறினானும் மாறலாம் என்று விட்டுட்டன்.....!   😂 

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
On 1/22/2020 at 5:19 AM, தமிழ் சிறி said:

அண்ணை... பரிமளத்தை, பார்க்க... பாவமாய் இருக்கு. 
சட்டு, புட்டு என்று... ஜேர்மனிக்கு  கூப்பிடுற  அலுவலை,  கெதியாய்.... பாருங்கோ. :grin:

 எனக்கு விசா  சரியில்லை....சிங்கப்பூர் போய்.........:grin:

Share this post


Link to post
Share on other sites

கரணவாய்  
15.12.1983

அன்புள்ள தம்பி குரு அறிவது.
நாங்கள் கடவுள் கிருபையாலை சுகமாய் இருக்கிறம்.நீங்களும் சுகமாய் இருக்க அரசடி பிள்ளையாரை கும்புடுறன்.
நான் உங்களுக்கு கடிதம் எழுதுறது ஆச்சரியமாய் இருக்குமெண்டு நினைக்கிறன். மன்னிக்கோணும் தம்பி.நான் உங்களுக்கு கடிதம் எழுத வேண்டிய கட்டாயத்திலை இருக்கிறன்.

வேறை ஒண்டுமில்லை எல்லாம் மூத்தவள் பரிமளத்தின்ரை விசயமாய்த்தான்.உங்கடை அம்மா ஐயாவோடையும் கதைச்சனான். தாங்கள் உங்களை அவசரப்படுத்த மாட்டம் எண்டு சொல்லீட்டினம்.உங்கடை தங்கச்சிக்கு கலியாணம் முடிஞ்சாப்பிறகு உங்கடை கலியாணத்தை பற்றி யோசிக்கலாம் எண்டு சொல்லீனம்.

எண்டாலும் தம்பி எனக்கு மனம் திக்கெண்டமாதிரி இருக்கு.இரண்டு வயதுக்கு வந்த பொம்புளைப்பிள்ளையளை பாதுகாப்பாய் வைச்சிருக்கிறது பெரிய கரைச்சலாய் இருக்கு. ஒவ்வொருநாளும் மடியிலை நெருப்பை கட்டிக்கொண்டு திரியுறமாதிரி பயமாய் இருக்கு.பரிமளத்தை கேட்டால் இப்ப உங்களை கஸ்டப்படுத்தக்கூடாது எண்டுறாள். ஆனால் எனக்கு அப்பிடி இல்லை தம்பி.பயமாய் இருக்கு.ஆமியள் அடிக்கடி ஊருக்கை வந்து செக் பண்ணுறாங்கள்.சில இடங்களிலை விசாரணைக்கெண்டு கூட்டிக்கொண்டு போறாங்கள் எண்டு கேள்விப்பட்டன்.கனகசபையின்ரை மூண்டு பெட்டையளும் இயக்கத்துக்கு போட்டுதுகளாம்.எனக்கு உதுகளை நினைக்க நித்திரையே வருதில்லை.

வசந்தியை அச்சுவேலி அம்பலவாணரின்ரை பொடியனுக்கு கேட்டு வந்தது.நாங்கள் மூத்தவள் இருக்கிறாள் அதுக்குப்பிறகு பாப்பம் எண்டு சொல்லீட்டம்.வசந்தி தான் வெளிநாடு போகப்போறன் நிக்கிறாள்.அதுவும் நல்லதெண்டுதான் இவரும் சொன்னவர்.அதுக்கு எங்களிட்டை வசதியும் இல்லை.இல்லாட்டில் காணியை வித்தாவது  ஏதாவது செய்வம் எண்டு இருக்கிறம்.


உங்கை ஆரும் நல்ல பொடியள் இருந்தால் விசாரிச்சு பாருங்கோ.உங்களுக்கு கரைச்சல் குடுக்கிறன் எண்டு நினைக்க வேண்டாம்.எங்களுக்கு இப்ப இருக்கிற நிலைமையிலை உங்களை விட்டால் வேறை ஆக்களில்லை.தம்பி நீங்கள் கொஞ்சம் கவனமெடுத்து பரிமளத்தை கூப்பிட பாருங்கோ.முடிஞ்சால் வசந்திக்கும் உங்கை ஆரையும் விசாரிச்சு பாருங்கோ. வேறை விசயமில்லை. மறக்காமல் பதில் கடிதம் போடுங்கோ தம்பி.

இப்படிக்கு
பாக்கியம்

  • Like 4
  • Thanks 1
  • Confused 1

Share this post


Link to post
Share on other sites

ஏனுங்க சாமிகளே,

ஆடிக்கொரு வாட்டி அம்மாவாசைக்கு ஒருவாட்டி பரிமளத்துக்கு கடிதம் போட்டால் இப்படித்தான். கொஞ்சமாவது பொறுப்பு வேணாம்..?

 மரத்துப்போன ஒங்களுக்கு கொமாட்டில் நாலு இடி இடித்தால்தான் உறைக்கும்போல தெரியுது..! :)

மாமி கேட்பது நியாயம்தானே..?  அம்மணியை கூப்பிடுற வழியை பாருங்கோ. 🙃

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
5 hours ago, குமாரசாமி said:

---உங்கை ஆரும் நல்ல பொடியள் இருந்தால் விசாரிச்சு பாருங்கோ.உங்களுக்கு கரைச்சல் குடுக்கிறன் எண்டு நினைக்க வேண்டாம்.எங்களுக்கு இப்ப இருக்கிற நிலைமையிலை உங்களை விட்டால் வேறை ஆக்களில்லை.தம்பி நீங்கள் கொஞ்சம் கவனமெடுத்து பரிமளத்தை கூப்பிட பாருங்கோ.முடிஞ்சால் வசந்திக்கும் உங்கை ஆரையும் விசாரிச்சு பாருங்கோ. வேறை விசயமில்லை. மறக்காமல் பதில் கடிதம் போடுங்கோ தம்பி.

இப்படிக்கு
பாக்கியம்

குரு  அண்ணை..... 

பாக்கியம் மாமியிடம்... பியர், கியர் குடிக்காத, 
வெள்ளிக்கிழமை விரதம் இருக்கிற... நல்ல பெடியன் ஒருத்தன், 
ஜேர்மனியிலை இருக்கிறான் எண்டு சொல்லி,

வசந்திக்கு... அவரை செய்ய விருப்பமோ... எண்டு கேளுங்கோவன்.  😛

வசந்தி,  ஓம் எண்டால்... உடனை என்ரை சாதகத்தை அனுப்பி வைக்கிறன்.

நாங்கள்... எண் சாத்திரமும் பாக்கிற படியால், வசந்தியின் பிறந்த திகதி...
என்ரை திகதியுடன்... பொருத்தமாய் இருந்துது எண்டால், 
வாற வைகாசிக்கு, கலியாணத்தை... வைக்கலாம்.   :grin:

Edited by தமிழ் சிறி
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

பரிமளம் சிங்கப்பூருக்கு போக முதல் வசந்தி ஜெர்மனிக்கு வந்திடுவா போல் இருக்கு......!   😂

Résultat de recherche d'images pour "fun wedding gif"

  • Haha 2

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, தமிழ் சிறி said:

நல்ல பெடியன் ஒருத்தன், 
ஜேர்மனியிலை இருக்கிறான் எண்டு சொல்லி,

வசந்திக்கு... அவரை செய்ய விருப்பமோ... எண்டு கேளுங்கோவன்

12 வயசுப் பையனுக்கும் கலியாணம் கேட்குது.

கலி முத்திப் போச்சு

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, தமிழ் சிறி said:

குரு  அண்ணை..... 

...

சரிதான்..!

கிராமங்களில் சகலையை 'அண்ணன்' என்றுதான் அழைப்பார்கள்..
தமிழ் சிறி இப்பவே அடித்தளம் போட்டுவிட்டார். vil-rigole.gif

இவர் அண்ணை என்பதும், அவர் தம்பி என்பதும்...ம்ம்.. நடக்கட்டும், நடக்கட்டும்..
சீக்கிரம் 'குடிமகன்கள்' செட்டிலானால் வாழ்த்தலாம்..!  vil-idee.gif

Share this post


Link to post
Share on other sites

இந்த வருட யாழின் பிறந்த நாள் முடிந்தாலும் என்ர அண்ணரின் கதை முடியாது 😀

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
On 3/5/2020 at 5:32 AM, தமிழ் சிறி said:

குரு  அண்ணை..... 

பாக்கியம் மாமியிடம்... பியர், கியர் குடிக்காத, 
வெள்ளிக்கிழமை விரதம் இருக்கிற... நல்ல பெடியன் ஒருத்தன், 
ஜேர்மனியிலை இருக்கிறான் எண்டு சொல்லி,

வசந்திக்கு... அவரை செய்ய விருப்பமோ... எண்டு கேளுங்கோவன்.  😛

வசந்தி,  ஓம் எண்டால்... உடனை என்ரை சாதகத்தை அனுப்பி வைக்கிறன்.

நாங்கள்... எண் சாத்திரமும் பாக்கிற படியால், வசந்தியின் பிறந்த திகதி...
என்ரை திகதியுடன்... பொருத்தமாய் இருந்துது எண்டால், 
வாற வைகாசிக்கு, கலியாணத்தை... வைக்கலாம்.   :grin:

பாக்கியம் மாமி, 
வசந்திக்கு.... சீதனம் குடுத்தால், ✅
மாப்பிள்ளை வாங்குவாரோ... என்று கேட்டால்.....  :)

ஓம்... எண்டு சொல்லுங்கோ.... :grin:
இல்லையெண்டு மட்டும், சொல்லிப் போடாதேங்கோ அண்ணை. 🤣

Share this post


Link to post
Share on other sites

இந்தக் கொரணோவால் உங்;கள் தபால் சேவையும் நின்று விட்டதா....நல்ல விசயம் தாத்தா.

Share this post


Link to post
Share on other sites
17 minutes ago, யாயினி said:

இந்தக் கொரணோவால் உங்கள் தபால் சேவையும் நின்று விட்டதா....நல்ல விசயம் தாத்தா.

old-couple.jpg

அப்படியல்ல,

பரிமளம் அம்மணி, கு.சா. அவர்களோடு ஜெர்மனிக்கு வந்து இணைந்திருக்கலாம், இனி கடிதாசி தேவைப்படாதுதானே..?

Share this post


Link to post
Share on other sites
On 3/23/2020 at 6:30 PM, ராசவன்னியன் said:

old-couple.jpg

அப்படியல்ல,

பரிமளம் அம்மணி, கு.சா. அவர்களோடு ஜெர்மனிக்கு வந்து இணைந்திருக்கலாம், இனி கடிதாசி தேவைப்படாதுதானே..?

அதுதான் நடக்கப்போகுது 😃

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.