குமாரசாமி

அன்புள்ள பரிமளம் அறிவது!

Recommended Posts

2 hours ago, குமாரசாமி said:

ஓமோம்......காடு கரம்பை மேடு பள்ளம் பனங்கந்து வடலியெல்லாம் தாண்டி ஊருக்குத்தான் போகுது...:grin:

இவ்வளவு கஷ்டப்பட்டு  போற காகிதத்துக்கு கட்டாயம் பலன் கிடைக்கும் 

2 hours ago, குமாரசாமி said:

ஓமோம்......காடு கரம்பை மேடு பள்ளம் பனங்கந்து வடலியெல்லாம் தாண்டி ஊருக்குத்தான் போகுது...:grin:

இவ்வளவு கஷ்டப்பட்டு  போன காகிதத்துக்கு கட்டாயம் நல்ல பலன் தான் கிடைச்சிருக்கும் 

6 minutes ago, nilmini said:

Share this post

Link to post
Share on other sites
24 minutes ago, nilmini said:

இவ்வளவு கஷ்டப்பட்டு  போன காகிதத்துக்கு கட்டாயம் நல்ல பலன் தான் கிடைச்சிருக்கும் 

பக்கத்து தோட்டத்து சந்திரனல்லோ வில்லனாக நிக்கிறான்.

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, குமாரசாமி said:

தபால் கந்தோர்
கரணவாய்
06.04.1983

....

உங்களுக்கும் பரிமளத்திற்கும் என்ன பிரச்சனை? உங்கள் கடிதங்களை அவரிடம் கொடுக்கும் போது வேண்டா வெறுப்பாக வாங்குவார். இந்த முறை உங்கள் கடிதம் கொடுக்கும் போது இனிமேல் எனக்கு கடிதம்  எழுத வேண்டாம் என சொல்லுங்கோ ஐயா என என்னிடம்  கூறினார்.

தம்பி! உங்களுக்குள் என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் முடிந்தால் நான் தீர்த்து வைக்கின்றேன்.சென்ற வெள்ளிக்கிழமை பிள்ளையார் கோவிலில் தாயாருடன் பரிமளத்தை கண்டேன். பழைய சந்தோசத்தை முகத்தில் காணவில்லை.

...

இப்படிக்கு
ஏகாம்பரம்

கடைசியில அரசாங்க தபால் ஊழியரை, 'புரோக்கரா'க்கிப் போட்டீங்களே ஐயா..! :)

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

இந்த ம்னுசன் வெளிநாடு வந்ததும் வெளிநாட்டு மாப்பிள்ளை ரேஞ்சுக்கு ஏதாவது எசகு பிசகா அடிச்சிருக்கும் அதான் பரிமளம் ஆச்சிக்கு கோபம் வந்திருக்கும் என நான் நினைக்கிறன் 

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, குமாரசாமி said:

ஓம்....கடிதத்திலை இருக்கிறதின் படி வந்துட்டன்...😂

வரும் போது குறைந்தது 20 வயசு என்டால் இப்ப எத்தனை என்று யோசிக்கிறன் 🤔
 
Share this post

Link to post
Share on other sites
53 minutes ago, ரதி said:

வரும் போது குறைந்தது 20 வயசு என்டால் இப்ப எத்தனை என்று யோசிக்கிறன் 🤔
 
ஏறக்குறைய 60 வயசு தேறும்! :)

Share this post

Link to post
Share on other sites
On 3/30/2019 at 7:39 AM, சுவைப்பிரியன் said:

உதார் குரு புதுசா😶

 ஒரு சில ஆக்கள் சொல்லுற என்ரை பட்டப்பெயரிலை அதுவும் ஒண்டு...:cool:

On 3/30/2019 at 8:02 AM, ஏராளன் said:

என்ன கேள்வி கேட்டிருப்பார்?

எண்டைக்காவது ஒருநாள்  வாற கடிதங்களிலை தெரியவரும் தானே...:(

Share this post

Link to post
Share on other sites
On 3/30/2019 at 8:29 PM, நீர்வேலியான் said:

அண்ணை, தொடர் சூப்பர் ஆக போகுது. நீங்கள் அண்ணி கோபம் கொள்ளும் அளவிற்கு அப்பிடி என்ன சொன்னீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன்

வில்லங்கமாய் நான் ஒண்டும் கேக்கல்லை ராசா....பெண் புத்தி பின் புத்தி எண்டது சரியாய்த்தான் சொல்லியிருக்கினம் போலை கிடக்கு...🤣

Share this post

Link to post
Share on other sites
On 3/30/2019 at 9:09 PM, nunavilan said:

காதல் அனுபவம் இல்லாமல் இப்படி எழுத முடியாது கு.மா அண்ணா. தொடருங்கள்.

பேர்லின், பிறேமன், முன்ஸ்டர் என்று 2 வருடத்துக்குள் பல இடத்தில் அத்தான் குமாரசாமி இருந்திருக்கிறார். 

முந்தியெல்லாம்....காம்ப்...வீடு எண்டு மாத்தி மாத்தி இடம் மாத்துவாங்கள்...
இல்லாட்டி செக்கன்ட் அசூல்!!!!!!!!!
ஏதாவது விளங்குதோ? விளங்காட்டிசொல்லுங்கோ நாலு வரியிலை விளங்கப்படுத்துறன்.😃

On 3/30/2019 at 9:19 PM, ஈழப்பிரியன் said:

ஓ இப்ப உங்களுக்கும் அத்தானாகிப் போனாரோ?

கரவு புடிச்ச மனிசன் ஐயா...... கரவு புடிச்ச மனிசன்....🤣

Share this post

Link to post
Share on other sites
On 3/30/2019 at 9:23 PM, ரதி said:

மாத விடாய் ஒழுங்காய் வருதோ என்றே கேட்டனியல் 🤔
 
அடி செருப்பாலை.....வந்தனெண்டால் தெரியுமே.......🐍 

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, ராசவன்னியன் said:

ஏறக்குறைய 60 வயசு தேறும்! :)

உங்களுக்கு தம்பி தான்.

Share this post

Link to post
Share on other sites

கச்சேரி 
யாழ்ப்பாணம்
03.04.1983

வணக்கம் குரு!
நலம். நலமறிய ஆவல்!

உவ்விடம் நிலைமைகள் எப்படியிருக்கின்றது?

ஜேர்மனியில் இருந்து அகதிகளை அனுப்புகின்றார்கள் என பத்திரிகைகளில் படித்தேன்.உங்கள் நிலவரங்கள் எப்படி?

உங்களுக்கும் அக்காவிற்கும் என்ன பிரச்சனை? அவ இப்போது உங்களைப்பற்றி என்னுடன் கதைப்பதுமில்லை..நீங்கள் அனுப்பிய கடிதங்கள் பற்றி சொல்வதுமில்லை.அக்கா கோபக்காரி என்பது உங்களுக்கு தெரியும் தானே.

நீங்கள் தாடியுடன் அனுப்பிய புகைப்படத்தை அக்கா பலகிழமைகளுக்கு முன் காட்டினார். பார்த்தவுடன் நான் கண் கலங்கி விட்டேன்.தலைமுடியும் அதிகமாக வளர்த்து காவாலிபோல் தெரிகின்றது.தலை முடியையும் வெட்டி நன்றாக சேவ் எடுத்து ஒழுங்கான பிள்ளையாக இருக்கவும்.

அக்காவிற்கு நான் உங்களுக்கு கடித எழுதிய விடயத்தை தெரிவிக்க வேண்டாம்.அக்காவிற்கும் உங்களுக்குமான பிரச்சனையை தீர்ப்பதற்காகவே இந்த கடிதத்தை பியோன் ஏகாம்பரம் மூலம் அனுப்புகின்றேன்.

நீங்கள் எனக்கு கடிதம் எழுத விரும்பினால் கீழுள்ள எனது அலுவலக முகவரிக்கு அனுப்பவும்.
பதிலை எதிர்பார்த்து விடை பெறும்
வசந்தி

  • Like 2
  • Haha 2

Share this post

Link to post
Share on other sites
36 minutes ago, குமாரசாமி said:

உது கதை பிழையா எல்லோ கிடக்கு ? அக்காவுக்கு நீங்கள் ரூட்டைப் போட, தங்கச்சி உங்களுக்கு ரூட்டைப் போடுறா போல கிடக்கு.

கு. சா, என்னதான் நடக்குது? 

இனி ஆருக்குக் கடிதம் எழுதப்போறியள்? அக்காவுக்கோ தங்கச்சிக்கோ ?? அதுக்கும் ஏகாம்பரம் ஐயாதான் பியோனாக்கும். 

அனால், கதை மட்டும் சுப்பரோ சூப்பர். உண்மையாகவ்பே உங்கட கதையெண்டு நம்பவா, அல்லது கு. சா வின்ர கற்பனை என்று நம்பவா எண்டு ஒரே குழப்பம் கண்டியளோ?

கரணவாய்....ம்ம்ம்...என்ர அம்மாவின்ர ஊரும் அதுதான். அருமையான, பச்சைப் பசேல் எண்ட ஊர். ஒவ்வொருமுறை பாடசாலை விடுமுறைக்குத் தவறாமல் போய்விடுவேன். உங்களின் கதையோடு, என்னையும் கரணவாயை எட்டிப் பார்க்க வைத்துவிட்டீர்கள்.

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, ஈழப்பிரியன் said:

பக்கத்து தோட்டத்து சந்திரனல்லோ வில்லனாக நிக்கிறான்.

அது ஒரு பெரிய வில்லங்கம் தான் 

Share this post

Link to post
Share on other sites
On 3/31/2019 at 4:07 AM, ராசவன்னியன் said:

ஆனாலும் கு.சா அவர்களே,

யாழ்ப்பாண வயல்வெளி, பனந்தோட்டம் எல்லாம் பரிமளத்தோடை உலா வந்துவிட்டு, அனுபவித்த அந்த ரகசியமான 'உன்னத உணர்வை' இப்படி அம்பலத்தில் ஏத்தப்படாது கண்டியளோ..? 😍

"சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மரபானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது

வாசனை,வெளிச்சத்தை போல
அது சுதந்தரமானது அல்ல
ஈரத்தை இருட்டினை போல
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

"நீ கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிரானது
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது

நீரினை நெருப்பினைப் போல
விரல் தோடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்

முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரசியமானது காதல்
மிக மிக சுவாரசியமானது காதல்.."

வாவ்......உங்கள் கருத்துக்களும் கவிதையும்  இந்த திரிக்கு இன்னுமொரு சிகரம்.

Share this post

Link to post
Share on other sites

திருப்பத்துக்கு மேல திருப்பமா இருக்கே?! எங்க போய் முடியுது என்று பாப்பம்.

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, குமாரசாமி said:

நீங்கள் எனக்கு கடிதம் எழுத விரும்பினால் கீழுள்ள எனது அலுவலக முகவரிக்கு அனுப்பவும்.
பதிலை எதிர்பார்த்து விடை பெறும்
வசந்தி

மரத்தால ஏறி கொப்பால இறங்கிறது.
கொப்பால ஏறி மரத்தால இறங்கிறது.
இது
கொப்பால ஏறி கொப்பால இறங்கிறது.

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு தம்பி தான்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால்,  'பெரிய அண்ணனாக' இருப்பார் போலிருக்கே..? vil-sourcils.gif

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, குமாரசாமி said:

கச்சேரி 
யாழ்ப்பாணம்
03.04.1983

வணக்கம் குரு!
நலம். நலமறிய ஆவல்!

உவ்விடம் நிலைமைகள் எப்படியிருக்கின்றது?

ஜேர்மனியில் இருந்து அகதிகளை அனுப்புகின்றார்கள் என பத்திரிகைகளில் படித்தேன்.உங்கள் நிலவரங்கள் எப்படி?

உங்களுக்கும் அக்காவிற்கும் என்ன பிரச்சனை? அவ இப்போது உங்களைப்பற்றி என்னுடன் கதைப்பதுமில்லை..நீங்கள் அனுப்பிய கடிதங்கள் பற்றி சொல்வதுமில்லை.அக்கா கோபக்காரி என்பது உங்களுக்கு தெரியும் தானே.

நீங்கள் தாடியுடன் அனுப்பிய புகைப்படத்தை அக்கா பலகிழமைகளுக்கு முன் காட்டினார். பார்த்தவுடன் நான் கண் கலங்கி விட்டேன்.தலைமுடியும் அதிகமாக வளர்த்து காவாலிபோல் தெரிகின்றது.தலை முடியையும் வெட்டி நன்றாக சேவ் எடுத்து ஒழுங்கான பிள்ளையாக இருக்கவும்.

அக்காவிற்கு நான் உங்களுக்கு கடித எழுதிய விடயத்தை தெரிவிக்க வேண்டாம்.அக்காவிற்கும் உங்களுக்குமான பிரச்சனையை தீர்ப்பதற்காகவே இந்த கடிதத்தை பியோன் ஏகாம்பரம் மூலம் அனுப்புகின்றேன்.

நீங்கள் எனக்கு கடிதம் எழுத விரும்பினால் கீழுள்ள எனது அலுவலக முகவரிக்கு அனுப்பவும்.
பதிலை எதிர்பார்த்து விடை பெறும்
வசந்தி

எங்களை கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கிறீர்கள். அண்ணை, நீங்கள் ஏதாவது வெள்ளை அல்லது கறுவல் பெண்ணுடன் பழக்கம் என்று ஏதாவது படம் காட்டினீங்களா? 

Share this post

Link to post
Share on other sites
50 minutes ago, நீர்வேலியான் said:

நீங்கள் ஏதாவது வெள்ளை அல்லது கறுவல் பெண்ணுடன் பழக்கம் என்று ஏதாவது படம் காட்டினீங்களா? 

U5drDcEyAXSfvJgZKt8xfceSqRxjrvb.gif&key=

Wish @ this link:

வாழ்த்துக்கள்.. கு.சா

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, ராசவன்னியன் said:

நன்றி ராசவன்னியன், அங்கு வாழ்த்திவிட்டேன் 

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, ராசவன்னியன் said:

ஏறக்குறைய 60 வயசு தேறும்! :)

அதை விடக் கூட இருக்கும் போல 😄

Share this post

Link to post
Share on other sites
On 3/31/2019 at 9:24 AM, suvy said:

Image associée

என்ன செய்வது முடிந்தவரை முயற்சி செய்தார், முடியல .....!  😩

எப்பிடியெண்டாலும் மாப்பிளை தோழன் எல்லே......பதிலுக்கு நானும் கை நீட்டக்கூடாது எண்டுட்டு பேசாமல் விட்டுட்டன்....:grin:

On 3/31/2019 at 4:49 AM, ராசவன்னியன் said:

கு.சா அவ்வளவுதானா..? :innocent:

"அடைந்தால் பரிமளா தேவி,
இல்லையெனில் மரண தேவி.."

என வீரத்துடன் காதலிக்காக போராடியிருப்பாரென்றல்லவா நினைத்தேன்..! :)

சா ச் சா....அப்பிடி நீங்கள்  நினைக்கிற மாதிரி ஒண்டுமில்லை....😃

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 3/31/2019 at 9:59 AM, வல்வை சகாறா said:

சூப்பர் கு.சா

என்னதான் இருந்தாலும்  இல்லாத அவலுக்கே உரலை இடிக்கிற சனத்திட்ட புது வெள்ளாமை அரிசி பொரிச்சு வெல்லத்தோட குடுத்திட்டியள் கண்டியளோ....😜

உங்கள் வரவிற்கும் கருத்து கூறியதற்கும் நன்றி. :)

On 3/31/2019 at 9:28 PM, ரதி said:

நீங்கள் எழுதின பிறகு தான் நினைவு வருது என்ட அண்ணர் வந்து மாத்து கல்யாணம் தான்...எங்கேயோ முந்தி அவர் எழுதி  வாசிச்ச மாதிரி இருக்கு 

சீச்சீ அப்பிடியொண்டும் இந்த கடிதங்களிலை வராது...😃

Share this post

Link to post
Share on other sites
On 3/31/2019 at 10:19 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒழுங்கா எழுதிக்கொண்டுவந்த குமாரசாமியை பரிமளத்தின்ர ஆட்கள் ஆரோ வெருட்டிப் போட்டினமோ??

என்னை??????  

ஆரும் வெருட்டுறது!!!!!!!!

போய் நடக்கிற வேலையை பாருங்க.....

சும்மா இங்க வந்து டமாசு பண்ணிக்கிட்டு..😎

On 3/31/2019 at 11:01 PM, நிலாமதி said:

நான் ஒரு ராசியிலா  ராசா   என்று தண்ணியை போட்டுட்டு  படுத்துவிடடார் போல  

அல்லது போலீஸ்  பிடிச்சுவிட்ட்து போல 

மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிழக்க பாயாது.....

தெரிவிக்கிறமெல்லே...😂

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.