குமாரசாமி

அன்புள்ள பரிமளம் அறிவது!

Recommended Posts

காய்ச்சல் வந்தால் துணைவேணும் என்றது உண்மையோ?!

Share this post

Link to post
Share on other sites

அண்ணா,என்ட  அண்ணி பரிமளம் தான் மாத்த வெளிக்கிட்டிங்களோ மகனே தொலைஞ்சிங்கள் 😧

Share this post

Link to post
Share on other sites
On 4/3/2019 at 5:25 AM, ராசவன்னியன் said:

என்ன சார், ரூட் தடம் மாற யோசனை சொல்றீங்க.. ?

கு.சா அவர்களை ஏக பத்தினி விரதனாய் இருக்க விடமாட்டீர்களே..!  lancecoeurs.gif

நீங்க மனுசன் ஐயா மனுசன்....😎

On 4/3/2019 at 7:14 AM, தனிக்காட்டு ராஜா said:

சிங்கன் விசாவுக்காக யாருக்கோ வலைவிரிச்ச செய்தி உள்ளால உ லாவுது என்பது தெரிகிறது . 

என்ன அவள் விசாவுக்கு மட்டுமா ?? அல்லது எல்லாவற்றுக்குமா என கேட்டுவிட்டு கதைக்க மறுத்திருப்பா என்பது உண்மையா இருக்குமே என்ன?

On 4/3/2019 at 9:17 AM, மல்லிகை வாசம் said:

சிவமயத்தோட தொடங்கின கடிதங்கள் இப்ப பிள்ளையாற்ர துணை வேண்டி எழுதியிருக்கு! இதில ஏதாவது clue கிடைக்குமோ?🤔 

(முருகனை வள்ளியுடன் சேர்த்துவைத்த பிள்ளையார் துணை வேண்டுவதும் பொருத்தமானதே!👌🤣)

எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...😂

Share this post

Link to post
Share on other sites
On 4/3/2019 at 9:33 AM, suvy said:

அவர் கல்யாணத்துக்கு அப்புறம்தான் ஏக பத்தினி விரதர்.....அதுக்குமுன் ஏகப்பட்ட பத்தினி விரதர்....!  😁

தெய்வமே.....தெய்வமே..😁 😁 😁

Share this post

Link to post
Share on other sites
On 4/3/2019 at 12:03 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கதை அப்பிடிப்போகுதோ. விசாவுக்காக வேற றூட் யோசிச்சா பிழைதானே. பரிமளம் கோப்பட்டது சரிதான். 

வாவ்....மகளிர் சங்கம் குரல் குடுக்குது..

On 4/3/2019 at 3:11 PM, ஏராளன் said:

கு.சா நம்பரை தரட்டாம்!
போன் எடுக்கிறாராம் வசந்திக்கு.

அதின்ரை சுகம் தெரியாமல் காய்ஞ்ச கருவாட்டு கதை கதைச்சுக்கொண்டு......:grin:

Share this post

Link to post
Share on other sites

தபால் கந்தோர்
கரணவாய்
14.04.1983

தம்பி குரு அறிவது!
                                         யான் நலம் வேண்டுவதும் அதுவே.

தம்பி உங்கள் சுகங்கள் எப்படி? நீங்கள் இவ்விடமிருந்து புறப்படும் போது ஊர்ப்புதினங்களை அவ்வப்போது அறியத்தாருங்கள் என்பதற்கிணங்க இந்த மடலை வரைகின்றேன்.

ஊர் கோவில் திருவிழாக்கள் எல்லாம் தொடங்கிவிட்டது. வெய்யிலும் பரவாயில்லை.சங்கக்கடை தலைவராக திருப்பியும் சின்னையாவையே தெரிவு செய்திருக்கின்றார்கள்.இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. சாதாரணமாக பஞ்சாட்சரம் வாத்தியார்தான் வரவேண்டியவர்.அதோடை சின்னையாவின் கடைசி மகள் சுந்தரத்தின்ரை பெடியனோடை ஓடீட்டுதெண்டு கதைக்கின்றார்கள்.

கடைக்கார மணியத்தின்ரை  மனுசி பொலிடோல் குடிச்சு காலமாகிவிட்டார்.மணியத்துக்கும் இடும்பன் கந்தசாமியின்ரை மூத்த மகளுக்கும் ஒரு இது இருந்தது தெரியும் தானே.

பிள்ளையார் கோவிலில் குருபூசை நடந்தது..அம்பலவாணர் குடும்பம் பத்துவிரலுக்கும் மோதிரம் புலிப்பல்லு சங்கிலியோடை நிண்டு பந்தா காட்டி அன்னதானம் குடுத்தினம்.அம்பலவாணர்ரை மனைவி வரவில்லை.4மாதம் சுகமில்லாமல் இருக்கிறதாய் கேள்விப்பட்டன்.

கல்லு ரோட்டு ராசா மாமரத்தாலை விழுந்து புக்கை கட்டிக்கொண்டு திரியுறார்.உங்கடை தென்னங்காணியில் எல்லாம் இரவிலை கள்ளர்  தேங்காய் புடுங்கிக்கொண்டு போறதாய் உங்கடை ஐயா சொன்னார். முந்தியிருந்த கள்ள விதானையை ஆரோ இரவு நேரம் பார்த்து  அடித்து விட்டார்களாம்.

தியாகராசாவின் மகனும் வேலுப்பிள்ளையின் இரு மகன்மாரும் கனடாவுக்கு ஏஜென்சி மூலம் போய்விட்டார்களாம்.

சில நாட்களுக்கு முன் பரிமளத்தை நல்லதண்ணி கிணத்தடியில் சந்தித்தேன்.உங்களைப்பற்றி சும்மா விசாரித்தேன். ஏன் கடிதம் போடுவதில்லை என்று கேட்டேன்.7,8 கடிதம் போட்டும் ஏன் பதில் எழுதவில்லை என்றும் கேட்டேன். அண்ணை அங்கத்தையான் பண்டி இறைச்சியை திண்டு  திண்டு போட்டு  அவருக்கும் பண்டிக்குணம் வந்திட்டுது எண்டு கோபமாய் சொன்னார்.எண்டாலும் அங்கை தனியவெல்லே இருக்கிறார் குரு பாவம் என்று நான் சொல்ல அங்கையிருந்து காயட்டும் என்று சொன்னார்.

இல்லை பிறதேசம் சூழ்நிலையளும் ஆக்களை மாத்தீடும் கவனமாய் இருக்கோணும் என்று சிறு ஆலோசனை சொன்னேன்.

அதற்கு அவர் ஏகாம்பரம் ஐயா  அப்பிடி ஏதாவது நடந்தால்....... அவர் அங்காலை இஞ்சாலை மாறுவாரெண்டால்  .......நான் இஞ்சையிருந்து ஜேர்மனிக்கு போய் வெட்டுவன்.ஆரெண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறார் எண்டபடி கிணத்து வாளியை கிணத்துக்குள் தொம் என்று போட்டார்.

அப்போது  சைக்கிளை எடுத்து மிதித்த நான் கரணவாய் கந்தோரில் வந்து நிறுத்தினேன். தம்பி குரு கவனம்.

வசந்தியும் வெளிநாடு போக விருப்பமாய் இருக்கென்று சொன்னார்.உங்களுக்கு இது பற்றி கடிதம் போட்டாரா?

வேறு என்ன தம்பி....இன்னும் விடயங்கள் இருக்கின்றது. அடுத்த கடிதத்தில் தொடர்கின்றேன்.
இப்படிக்கு...
ஏகாம்பரம்

 • Like 2
 • Haha 4
 • Sad 1

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, குமாரசாமி said:

அதற்கு அவர் ஏகாம்பரம் ஐயா  அப்பிடி ஏதாவது நடந்தால்....... அவர் அங்காலை இஞ்சாலை மாறுவாரெண்டால்  .......நான் இஞ்சையிருந்து ஜேர்மனிக்கு போய் வெட்டுவன்.ஆரெண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறார் எண்டபடி கிணத்து வாளியை கிணத்துக்குள் தொம் என்று போட்டார்.

இதோட காச்சல் நின்று வயித்தால அடிக்க தொடங்கியிருக்குமே?

வசந்தியின் எண்ணமும் தலைகீழாகியிருக்குமே?

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, குமாரசாமி said:

.....அண்ணை அங்கத்தையான் பண்டி இறைச்சியை திண்டு  திண்டு போட்டு  அவருக்கும் பண்டிக்குணம் வந்திட்டுது எண்டு கோபமாய் சொன்னார்.எண்டாலும் அங்கை தனியவெல்லே இருக்கிறார் குரு பாவம் என்று நான் சொல்ல அங்கையிருந்து காயட்டும் என்று சொன்னார்.

இல்லை பிறதேசம் சூழ்நிலையளும் ஆக்களை மாத்தீடும் கவனமாய் இருக்கோணும் என்று சிறு ஆலோசனை சொன்னேன்.

அதற்கு அவர் ஏகாம்பரம் ஐயா  அப்பிடி ஏதாவது நடந்தால்....... அவர் அங்காலை இஞ்சாலை மாறுவாரெண்டால்  .......நான் இஞ்சையிருந்து ஜேர்மனிக்கு போய் வெட்டுவன்.ஆரெண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறார் எண்டபடி கிணத்து வாளியை கிணத்துக்குள் தொம் என்று போட்டார்.

அப்போது  சைக்கிளை எடுத்து மிதித்த நான் கரணவாய் கந்தோரில் வந்து நிறுத்தினேன். தம்பி குரு கவனம்.

...

தடுமாறும் கு.சா பற்றி மிகச் சரியான அவதானிப்பும்,  அவரின் துரோக(?)  சிந்தனைக்கு ஏற்றாற்போல் பரிமளத்தின் எதிர்வினையும், கோபமும் மிக நியாயமானதுதான்..! 😋

We are with Mrs.Parimalam xxxxxxxxxx  :)

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

பொல்லாத வில்லங்க கேசுக்க மாட்டிட்டாரோ கு.சா?!

Share this post

Link to post
Share on other sites

பனங்காட்டு நரி உந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது......சந்தி சிரிச்சாலும் சரி வசந்தி பெர்லின் வந்து லிப் லிப் லிப்டனில தேத்தண்ணி ஊத்தி குடுக்கிறது குடுக்கிறதுதான் .....!   👍

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, குமாரசாமி said:

பிறதேசம் சூழ்நிலையளும் ஆக்களை மாத்தீடும் கவனமாய் இருக்கோணும் என்று சிறு ஆலோசனை சொன்னேன்.

அதற்கு அவர் ஏகாம்பரம் ஐயா  அப்பிடி ஏதாவது நடந்தால்....... அவர் அங்காலை இஞ்சாலை மாறுவாரெண்டால்  .......நான் இஞ்சையிருந்து ஜேர்மனிக்கு போய் வெட்டுவன்.ஆரெண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறார் எண்டபடி கிணத்து வாளியை கிணத்துக்குள் தொம் என்று போட்டார்.

இந்த வரிகளைப் படித்ததும் இந்தக் கல்லுக்குள்ளும் ஈரம் இருப்பது போல் தெரிகிறது.

பரிமளம் அண்ணி பதில் போடுவா என நம்புறன். 🙂 😃

Share this post

Link to post
Share on other sites
On 4/3/2019 at 7:35 AM, குமாரசாமி said:

என்னக்கே எங்கை போய் முடியப்போகுது எண்டு தெரியேல்லை.....🤣 🤣 🤣

ம்ம்ம்...😃

ச்சீச்சீ.....மரத்தாலைதான் எறினது....அது வேறை பெருங்கதை  🤪

முட்டுக்காய் தேங்காய் போட்டு செய்த புட்டு - இதை வாசித்து மனம் விட்டு சிரித்தேன் 

Share this post

Link to post
Share on other sites
On 4/5/2019 at 8:36 AM, மியாவ் said:

கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண் வரைந்த ஓவியமோ!!!

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா, பல்சுவையும் கொஞ்சுதம்மா...

பழசையெல்லாம் கிளறி விட்டியள்.....இண்டையான் நித்திரை துலைஞ்சுது 😂

On 4/5/2019 at 9:09 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒருகிழமையில திரும்ப இன்னொரு கடிதமே?? இவரை நம்பி பரிமளம் எப்பிடி வாறது??

தாலிகட்டினாப்பிறகு சிங்கம் அடங்கி அமைதியா நடக்கும் எண்டொரு நம்பிக்கைதான் 😎

On 4/5/2019 at 11:00 AM, suvy said:

இது துணைவியாக வசந்தி வாறதுக்கு , காச்சலுக்கு தேத்தண்ணி வச்சு குடுக்க.....!   😁

தெய்வமே! அப்பிடிப்போடு அரிவாளை....👍 😃

Share this post

Link to post
Share on other sites
On 4/5/2019 at 11:27 AM, ஜெகதா துரை said:

வசந்தி படிச்சபிள்ளை,அதோட கச்சேரியில வேலை செய்யிறாதனே.

On 4/5/2019 at 11:27 AM, ஜெகதா துரை said:

வசந்தி படிச்சபிள்ளை,அதோட கச்சேரியில வேலை செய்யிறாதனே.

On 4/5/2019 at 11:27 AM, ஜெகதா துரை said:

வசந்தி படிச்சபிள்ளை,அதோட கச்சேரியில வேலை செய்யிறாதனே.

ஓமோம் வசந்தி படிச்சவ.....நல்ல பிள்ளை..😍

Share this post

Link to post
Share on other sites
18 minutes ago, குமாரசாமி said:

..தாலிகட்டினாப்பிறகு சிங்கம் அடங்கி அமைதியா நடக்கும் எண்டொரு நம்பிக்கைதான் 😎

'சிங்கம் தாலி கட்டுச்சா..? உங்கள் கனவு தேவதை, உங்களிடம் சேர்ந்ததா..?' என்பதையும் உடனே சொன்னால் தேவலை..

இந்த சஸ்பென்ஸை,  'கன்னித்தீவு சிந்துபாத், லைலா கதை' மாதிரி நீட்டக்கூடாது..! 

11-Latest.jpg

('கன்னித்தீவு' என்ற சித்திரக் கதை, தினத்தந்தியில் 1961ம் ஆண்டு முதல் வெளிவரத் தொடங்கியது, இன்னும் 47 வருடங்களாக தொடர்கிறது.)

Edited by ராசவன்னியன்

Share this post

Link to post
Share on other sites
On 4/5/2019 at 12:17 PM, ராசவன்னியன் said:

குரு அத்தான்,

கரணவாய் பரிமளம், ஹைடெக் பரிமளமாய் பரிணமித்து கன நாளாச்சு.. ! :grin:

பெரியவர் அத்தான், நீங்கள் இன்னமும் 'வைகைக் கரை காற்றையும், வசந்தியையும்' தூதுவிடுகிறீர்களே..?

இது தகுமா..? tw_rage:

உங்கள் காணொளிக்கு, என் பதில் காணொளி கீழே..!

பரிமளமா.. கொக்கா..???  :)

பற்ற வைக்கின்றீர்களே....:grin:

Vasantha Maligai Movie Romantic Scene ll Sivaji Ganesan, Vanisree Romantic Songs Of All Time, Old Telugu Songs Collection, Vasantha Maligai Movie, Romantic Scene, Tamil Romentic videos, sivaji Ganesan, vanisree, vanisri romentic videos GIF

Share this post

Link to post
Share on other sites

வெட்டுவன் எண்டு சொன்ன பிறகு அண்ணர் வேறயாரையும் கனவிலயும் நினைச்சிருக்கமாட்டார்!
உப்பிடித்தான் எங்கட ஒன்றுவிட்ட அண்ணர் ஒருத்தர் எங்களோட படிச்ச பிள்ளையை (அவவும் சொந்தம் தான்) விரும்பி இருந்தவர், இன்ஜினியரிங் கிடைச்சு போய் லீவில வரேக்க சொன்னார் தான் இனி அவவை விடபோறன் என்று சொன்னார், உடன நான் சொன்னன் விட்டியள் எண்டால் வீடுபுகுந்து வெட்டுவன் என்று!
அந்தாள் தாயிட்ட போய் சொல்லிப்போட்டுது, இப்ப திருமணம் செய்து இரு குழந்தைகளுடன் இருக்கினம்.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

ஊர்க் கொசிப்😂 எல்லாம் கடிதம் மூலம் கேக்கிற பழக்கம் இருந்திருக்கு 
 
Share this post

Link to post
Share on other sites

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
08.05.1983

வணக்கம் குரு!

                                 நாங்கள் எல்லோரும் நல்ல சுகம்.அது போல நீங்களும் சுகமாக இருக்க வேண்டுகின்றேன். 

உங்கள் கடிதங்கள் கிடைத்தது. சந்தோசம்.அக்கா கடிதம் ஏதும் போட்டாவா? நான் அவவிடம் உங்களைப்பற்றி விசாரிப்பதில்லை.நான் உங்களைப்பற்றி விசாரித்தால் உனக்கென்ன அவ்வளவு அக்கறை என்று என்னை முறைத்து பார்த்து கதைப்பாள்.

காய்ச்சல் என எழுதியிருந்தீர்கள்.இப்போது எப்படியிருக்கின்றது? செல்வரத்தினத்தின் மகள்பாலலக்சுமி கனடா போய்விட்டார்.எப்படி என்ன மாதிரியென்று தெரியவில்லை.

எனக்கும் கனடா போக விருப்பமாக இருக்கின்றது.நீங்கள் குறிப்பிட்ட இத்தாலி முதலாளியிடம் விசாரித்து பார்க்க முடியுமா? இல்லையென்றால் லண்டனுக்காவது போகலாம் என்றிருக்கின்றேன்.

முடிந்தால் உடன் பதில் தரவும்.
இப்படிக்கு 
வசந்தி
 
 • Like 1
 • Haha 1
 • Confused 1

Share this post

Link to post
Share on other sites
45 minutes ago, குமாரசாமி said:

பரிமளம் அண்ணி வெட்டுவேன் என்று சொன்ன பிறகும் , வசந்தியுடன் கடித தொடர்பை தொடர்ந்தீர்கள். இன்னும் அண்ணிக்கு ஏன் கோபம் வந்தது, நீங்கள் அப்பிடி என்ன படம் காட்டினீங்கள்  என்று சொல்லவில்லை.

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, ஈழப்பிரியன் said:

இதோட காச்சல் நின்று வயித்தால அடிக்க தொடங்கியிருக்குமே?

வசந்தியின் எண்ணமும் தலைகீழாகியிருக்குமே?

எப்பிடி ராசா உங்களுக்கெல்லாம் இப்பிடி மூக்கடி வேர்க்குது? ஏதாவது முன் அனுபவம்???????? :grin:

19 hours ago, ராசவன்னியன் said:

தடுமாறும் கு.சா பற்றி மிகச் சரியான அவதானிப்பும்,  அவரின் துரோக(?)  சிந்தனைக்கு ஏற்றாற்போல் பரிமளத்தின் எதிர்வினையும், கோபமும் மிக நியாயமானதுதான்..! 😋

We are with Mrs.Parimalam xxxxxxxxxx  :)

உங்களைப்போலை அவதானிப்புகளை அலைகழிச்சுப்போட்டுத்தான் விடுவன்...😃

19 hours ago, ஏராளன் said:

பொல்லாத வில்லங்க கேசுக்க மாட்டிட்டாரோ கு.சா?!

சீச்சீ....அப்பிடியொண்டுமில்லை..☹️

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, குமாரசாமி said:

எனக்கும் கனடா போக விருப்பமாக இருக்கின்றது.நீங்கள் குறிப்பிட்ட இத்தாலி முதலாளியிடம் விசாரித்து பார்க்க முடியுமா? இல்லையென்றால் லண்டனுக்காவது போகலாம் என்றிருக்கின்றேன்.

உந்த இத்தாலி முதலாளியின் விலாசத்தை எனக்கும் ஒருக்கா தாங்கோ பாப்பம்.

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, குமாரசாமி said:

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
08.05.1983

வணக்கம் குரு!

                                 நாங்கள் எல்லோரும் நல்ல சுகம்.அது போல நீங்களும் சுகமாக இருக்க வேண்டுகின்றேன். 

உங்கள் கடிதங்கள் கிடைத்தது. சந்தோசம்.அக்கா கடிதம் ஏதும் போட்டாவா? நான் அவவிடம் உங்களைப்பற்றி விசாரிப்பதில்லை.நான் உங்களைப்பற்றி விசாரித்தால் உனக்கென்ன அவ்வளவு அக்கறை என்று என்னை முறைத்து பார்த்து கதைப்பாள்.

காய்ச்சல் என எழுதியிருந்தீர்கள்.இப்போது எப்படியிருக்கின்றது? செல்வரத்தினத்தின் மகள்பாலலக்சுமி கனடா போய்விட்டார்.எப்படி என்ன மாதிரியென்று தெரியவில்லை.

எனக்கும் கனடா போக விருப்பமாக இருக்கின்றது.நீங்கள் குறிப்பிட்ட இத்தாலி முதலாளியிடம் விசாரித்து பார்க்க முடியுமா? இல்லையென்றால் லண்டனுக்காவது போகலாம் என்றிருக்கின்றேன்.

முடிந்தால் உடன் பதில் தரவும்.
இப்படிக்கு 
வசந்தி
 
இதென்னப்பா, குறளி வித்தையாயிருக்கு..! 😋

மேற்கண்ட கடிதம்,

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
08.05.1983

யிலிருந்து வந்திருக்கு..!

ஆனால் கடிதத்தை எழுதியிருப்பது, தாயகத்திலிருக்கும் வசந்தி..!

வசந்தி எப்போ கு.சா. அவர்கள் வசிக்கும் முன்ஸ்ரர் நகருக்கு போனார்? :shocked:

ஒருவேளை பரிமளத்திற்கு தெரியாமல், கு.சா. அவர்கள், வசந்தியை ஜெர்மனிக்கு காவிக்கொண்டு சென்றுவிட்டாரா..?

என்ன நடக்குது இங்கே..? :(

சபைக்கு உண்மை தெரிஞ்சாகணும்..! :)

jj-enakku-oru.jpg

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

கடிதம் படி எடுக்கும் போது தவறிற்று போல?!
அண்ணற்ற கனவில மண் விழுந்தத கவனிக்கலயோ ஒருவரும்?!

Share this post

Link to post
Share on other sites

பரிமளம்.. வசந்தி.. வெள்ளைக்காரி..

முக்கூட்டு.. கூத்து...

கொண்டாட்டம்.. குமாரசாமி சார். 😊

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.